குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 02, 2019

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 01

ஆதி காண்டம்
முதற் சர்க்கம்
சங்கேத வைகறை - முதல் 09 வரிகள்
It was the hour before the Gods awake. 
Across the path of the divine Event 
The huge foreboding mind of Night, alone 
In her unlit temple of eternity, 
Lay stretched immobile upon Silence' marge. 
Almost one felt, opaque, impenetrable, 
In the sombre symbol of her eyeless muse 
The abysm of the unbodied Infinite; 
A fathomless zero occupied the world. 
கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது
திவ்விய நிகழ்ச்சியின் பாதை நடுவே
நிமித்தம் காணும் நிசியின் மாமனம்
தீபமேற்றா திருண்டதன் நித்திய கோயிலில் 
தனியே தன்னை விரித்து நீட்டி
மௌனத் திருவின் விளிம்பினை யடுத்து
அசையாது குறுக்கே கிடந்த தாமே. 
அவள்தன் கண்ணிலாச் சிந்தனையின் மங்கிய
சின்னந் தன்னில் வடிவிலா அனந்தமதன்
ஒளிபுகா அடர்ந்த அதலக் குழியினை
உணரலாகும்: ஆழங்காணா வொரு 
சூன்யம் அவனி தன்னைப் பற்றியது.
(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)
ஸாவித்ரி யோக காவியம் சாதகனின் மரணமில்லாப் பெரு வாழ்வினைப் பற்றிய பாதையை ஸ்ரீ அரவிந்தர் தனது அனுபவத்தை மகாபாரதத்தில் உள்ள சத்தியவான் ஸாவித்ரி கதையை காவியமாக்கியுள்ளார். 
யோக சித்தியை நெருங்கும் சாதகனின் அனுபவத்தை சங்கேத வைகறை எனும் முதல் சர்க்கத்தில் குறிப்பிடுகிறார். 
முதல் இரண்டு வரிகளும் "கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது திவ்விய நிகழ்ச்சியின் பாதை நடுவே" இன்னும் தெய்வ சக்தி அவனில் முழுமையாக விழிப்படையவில்லை, அதுவே கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது; சாதகன் அந்த விழிப்பிற்கான திவ்விய நிகழ்ச்சியின் பாதையின் நடுவில் இருக்கிறான். தெய்வ 
சக்தியை தன்னில் விழிப்பிக்கும் முயற்சியில் உள்ள சாதகன் அதை அடையும் பாதையில் நடுவில் இருந்தாலும் தான் அடையப்போகும் நிலையிற்கான நிமித்தக் குறிகளை காண ஆரம்பிக்கிறான். என்றாலும் அந்த மாமனம் நிசியின் இருள் சூழ்ந்து தான் இருக்கிறது. நாம் சாதனையில் பூர்த்தி செய்து சித்தி செய்துவிடுவோமா இல்லை தவறாகிவிடுமா என்ற சிந்தனையுடன் கூடிய மனம் (foreboding mind)
தெய்வ சாதனையின் நடுவில் இன்னும் தான் அடைய வேண்டிய நிலையை அடையாத அந்த சாதனை செய்யும் மாமனம் அவளது இந்த எல்லையற்ற அண்டம் எனும் கோயிலில் தெய்வ ஞானம் எனும் விளக்கை ஏற்றவில்லை. {In her unlit temple of eternity,}
மாமனம் அந்த மௌனம் நிறைந்த திருவின் விழிப்பினை காண்பதற்கு அசையாமல் தெய்வ சக்தியின் உதயத்தைக் காணக் காத்திருக்கிறது. மனம் ஏகாக்கிர சித்தமாக தெய்வ சக்தியின் உதயத்தைக் காண காத்திருக்கிறது. 
இந்த நிலையில் சாதகன் ஒளி துளைக்க முடியா இருளையும், தனது மனதில் வீணான கற்பனைகளையும் பெறுவான் {Almost one felt, opaque, impenetrable, In the sombre symbol of her eyeless muse }
இந்த நிலை ஒரு ஆழம் காண முடியாக் காரிருளில் இருக்கும் சூன்ய நிலை!
இது யோக சாதனையில் ஒருவன் தனது கண்களை மூடி சாதனைக்கு அமர காரிருள் சூழ்ந்த நிலை வரும், மனம் ஏகாக்கிரமடைய அடைய அந்த இருள் இன்னும் அதிகமாகும். ஒரு நிலையில் இருளில் மூழ்கி இருக்க மனம் நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்று குழம்பும்! அதே வேளை சின்னஞ் சிறு ஒளிக் கீற்றுகளாக சாதனையின் சித்தியும் தெரியும். சாதகன் தன்னில் தெய்வ சக்தி விழிப்பு நடைபெறும் என்ற எண்ணமும் வரும், அதே வேளை தியானசாதனையில் ஒளி கிடைக்காமல் காரிருள் சூழ்ந்து குழப்பவும் செய்யும். இந்த நிலையையே முதல் ஒன்பது வரிகளில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 
தொடரும்.... 
Disclaimer: இது எனது தனிப்பட்ட ஸாவித்ரி படிப்பின் மீதான புரிதல்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...