இன்றைய காலைப்பொழுது பாக்கியம் தேசியக்கல்லூரி பிள்ளைகளுக்கு ஆங்கில அறிவு, தகவல் தொழில்நுட்ப அறிவு, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள் பற்றிய அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினோம்.
மாத்தளையின் கல்வி முன்னேற்றத்தில் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale உடன் தோளுக்குத் தோள் நின்று செயற்படும் நண்பர் திரு. Jayaprakash Sithambaram அவர்கள் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் பல்வேறு பட்டப்படிப்புகள், சிறு கற்கை நெறிகள், பட்ட மேற்படிப்புகளை தற்போது மாத்தளை கல்வி நிலையத்திலேயே வழங்குகிறது. அதன் இயக்குனர் எனது ஆய்வுப் பேராசிரியரின் இன்னுமொரு மாணவர் என்பது மகிழ்ச்சியான செய்தி. மாத்தளையில் வசிக்கும் மாணவர்கள் அதிக செலவு செய்து தனியார் பல்கலைக்கழகத்திற்குச் சென்று பெற்றோருக்கு செலவு வைக்காமல் இலகுவாக அரச பல்கலைக்கழகத்தில் பயில அரிய வாய்ப்பு!
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 பேருக்காவது இதில் கற்பதற்குரிய செலவை புலமைப்பரிசில் மூலம் வழங்குவதற்கு நிதி சேகரிப்பை நடாத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கு எமது சமூகத்திடமிருந்து பாரிய ஒத்துழைப்புக் கிடைக்கும் என நம்புகிறோம்.
பாக்கியம் தேசியக் கல்லூரியின் அதிபர் திருமதி சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் இந்த நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பும் தந்திருந்தார்!
ஒன்றியத்தின் இயக்குனர்களில் ஒருவராகிய Sathasivam Luxsmi Kanth நிகழ்வை ஒருங்கிணைத்தார். மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.
சாதாரணதரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் விடுமுறையினை வீணாக்காமல் ஆங்கில அறிவையும், தகவல் தொழில்நுட்ப அறிவையும் வளர்க்க இந்தக் கற்கைகள் உதவி செய்யும்.
மாத்தளையில் இருக்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் இந்த நிகழ்வினை நடாத்த முடியும். அதற்கு அதிபர்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும்! இந்த நிகழ்வை நடாத்த விரும்பும் அதிபர்கள் எமது ஆலோசகர் திரு Jayaprakash Sithambaram அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் பாடசாலையில் இந்தக் கற்கைகளைக் கற்க தகுதியுள்ள, ஆனால் வசதியற்ற மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு கற்கைக்குரிய நிதி உதவிகளை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale செய்யும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.