மாத்தளையில் பிரதான தமிழ் பாடசாலைகளின் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிவுகளில் பரீட்சைக்குத் தோற்றி பேறுபேறுகள் வெளிவந்த மாணவர்களுடன் இன்று ஒன்றியத்தின் தலைமை ஆலோசகர் என்ற வகையில் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தினேன்.
இதன் பிரகாரம் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினைப் பெறமுடியாமல் இருப்பதற்கான காரணங்களாக கீழ்வரும் காரணிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது;
1) பாடசாலைகளில் பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை; பாடசாலை முழுமையாகக் கற்பிக்கும் என்று மாணவர்கள் உறுதியாக நம்பவில்லை.
2) அனைத்து மாணவர்களும் தமது பாடத்திட்டங்களைப் பூர்த்தி செய்ய டியுசன் ஆசிரியர்களையே நம்பியிருக்கிறார்கள்.
3) தாமாக படிக்கும் ஊக்கமுள்ள மாணவர்களுக்கு சில விடயங்கள் புரிய கஷ்டமாக இருக்கும்போது அதைத் தெளிவு செய்து உதவி செய்யக்கூடியவர்கள் (ஆசிரியர்கள், சிரேஷ்ட மாணவர்கள்) இல்லை.
4) எல்லோரும் பாடத்திட்டத்தில் உள்ள விடயங்களை மீண்டும் மீண்டும் படிப்பதை மாத்திரம் படிக்கிறோம் என்று நினைத்து நேரத்தை வீணாக்கியிருக்கிறார்கள். எவரும் கோட்பாடுகளைப் புரிவதற்கோ, அதை வினாக்களுடன் தொடர்புபடுத்தி எழுதுவற்கோ பயிற்சிக்கவில்லை. பயிற்சி இல்லாததால் பரீட்சையில் குறித்த நேரத்திற்குள் விடை எழுதும் திறன் குறைவாக இருக்கிறார்கள்.
இந்த நான்கு காரணிகளில் முதல் இரண்டு காரணிகளும் கல்வித்திணைக்களம், பாடசாலை நிர்வாகங்கள் கவனிக்க வேண்டியவை.
மற்றைய இரண்டு விடயங்களுக்கு மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.
இதன் பிரகாரம் இரண்டாம் தடவை தோற்ற இருக்கும் ஆர்வமுள்ள சில மாணவர்களுக்கு நான் தொடர்ச்சியாக சில பயிற்சியை வழங்க ஆரம்பித்துள்ளேன்.
இந்தப் பயிற்சி நெறியில் பங்குபெறும் மாணவர்கள் கீழ்வரும் பயிற்சிகளைப் பெறுவார்கள்:
1) ஒவ்வொரு பாட அலகினையும் புரிந்துகொள்வதற்கான உத்திகள்.
2) கேள்விகளைப் பயிற்சி செய்து ஞாபகசக்தியை விருத்தி செய்யும் முறைகள்.
3) தினசரி கற்பதற்கான அட்டவணையை வினைத்திறனாக தயார்படுத்தும் முறைகள்
4) தான் ஒவ்வொரு அலகிலும் எப்படி முன்னேறுகிறேன் என்பதை சுய பரிசோதனை செய்யும் பயிற்சிகள்.
5) பரீட்சை எழுதுவதற்கு ஏற்ற வகையில் உடல் நலம், மன நலம் எப்படிப் பேணுவது
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.