ஸ்ரீமத் சாந்தானந்த சுவாமிகளின் கந்தகுரு கவச வரிகள்
அஜபை வழியிலே அசையாமல்
இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும்
ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே
செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை
அகத்துள்ளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும்
அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120
அனுக்கிரகித்திடுவாய்
ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா
ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து
தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும்
நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு
பரலோகம் மறந்திடச்செய் ...... 125
அருள் வெளிவிட்டு இவனை
அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய்
ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய
ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய்
சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி
சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130
சிவனைப் போல் என்னைச்
செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத்
குருநாதா
ஸ்கந்த குருநாதா
கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன்
தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத்
தந்தாட் கொண்டிடுவாய்
- சாந்தானந்தா சுவாமிகள் அருளிய ‘கந்த குரு கவசம்’
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.