எமது பிரயோக விஞ்ஞான பீட சூழலியல் விஞ்ஞான இறுதியாண்டு பட்டதாரி ஆய்வு மாணவர்களுடன் அழிவடைந்த ஒரு சூழல் தொகுதியை எப்படி ஒப்புமை வனவியல் மூலம் மீள்கட்டமைப்பது என்ற அனுபவ களப்பயணத்தை இன்று மேற்கொண்டிருந்தோம்!
இது எமது பீடத்தின் தொழில் வழிகாட்டல் (career guidance) பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வாகும்.
உயிரியல் பல்வகைமையைப்
பேணிக்கொண்டு எப்படி பொருளாதார நன்மைகளை (பலகை, பழங்கள், இலைகள்) பெறுவது என்பது
இயலாது என்றே மனிதன் நினைக்கிறான்.
இதற்கான ஒரு பதில்:
Analog forestry - ஒப்புமை வனவியல்
இந்த காடுவளர்ப்பு முறை
மூன்று நோக்கங்களை கொண்டது;
1. Ecological succession
: எந்தவொரு இயற்கைத் தொகுதியையும் அதன்போக்கில் விட்டால் அது படிப்படியாக தனது
தாவர, விலங்கு வர்க்கங்களை உள்வாங்குவதற்குரிய சூழல் தொகுதியை உருவாக்கும்.
2. Mimicking natural
forests : இயற்கை காட்டினை பிரதிபலிக்கும் சூழல்தொகுதியாக இருப்பது அதிக நன்மையினைத்
தரும்.
3. Landscape ecology; உருவாக்கப்படும் சூழல் தொகுதி ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு உயிர்பல்வகைமையை, சூழலியல் தொழிற்பாட்டினை அதிகரிக்க வேண்டும்.
இந்த மூன்று பண்புகளையும் ஒரு ஒப்புமை வனம் கொண்டிருக்கும்.
தமது நான்கு வருட கல்வியில் தமக்குக் கிடைத்த மிகப்பெரிய அரிய கள அனுபவம் இது என அனைவரும் குறிப்பிட்டிருந்தமை ஒரு ஏற்பாட்டாளனாக, சூழலியலாளனாக மிக மகிழ்ச்சியான ஒரு செய்தி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.