குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 04, 2023

2023 வசந்த நவராத்ரி லகு அனுஷ்டான அனுபவம்

 இந்த அனுபவத்தை எழுதிய சாதகர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சாதனையை தனது முதன்மை நோக்கமாக கொண்டு தனது சாதனையால் பல ஆன்ம, உலக முன்னேற்றங்களைப் பெற்றவர்; குரு மண்டலத்தின் பணிக்காக தன்னனை அர்ப்பணித்தவர்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

________________________________________________




இந்த லஹு அனுஷ்டானத்தில் குருவருள், குருமண்டலம், தேவியின் அன்பும் கருணையினாலும் நன் முறையில் எத்தனித்த ஜெப எண்ணிக்கையை பூர்த்தி செய்த விதம் நமது வீரபாவ சாதனை எண்ணங்களை சீர்செய்து முறுக்கேற்றியுள்ளுது.


காயத்ரி சாதனையில் ஒவ்வொரு அனுஷ்டானம் முடிவிலும் ஒரு நகர்வு வெளிப்படும். அத்தகைய மாற்றத்தில் உடல், மனம், எண்ணம், உள்ளுணர்வு என்று ஒவ்வொரு அல்லது ஒன்றாவது ஒரு பரிமாண மாற்றத்தை உள்ளடக்கியதாக எம்மை வழிநடத்துக்குகிறது.


குருவருளினால் அவருடன் கடந்த செப்டம்பர் மாதம் சந்திப்பு, உபதேசங்கள், மற்றும் தொடரும் நமது அக ஆய்வு சில கேள்விகளை வெளிப்படுத்தியது : 1) காயத்ரி சாதனை சங்கல்பம் என்னவாக இருக்கும்? 2 ) இந்த சம்சார லௌகீக தேவைகள் தாண்டி நம்மால் அன்னையிடம் எதிர்பார்க்கும் விடயங்கள் என்ன ; 3 ) மேலும் பதஞ்சலி யோக சூத்திரம் ஆய்ந்தறிதல் செல்லும் வேளையில், லகு சாதனையில் எந்த ஒரு புள்ளி திருப்த்தி என்ற நிலையை கொடுக்கும்.


கேள்விகளின் விடை நமது சங்கல்பமாக மாறியது - அடுத்த நகர்வு என்ன என்பதின் உள்ளுணர்த்தல் வேண்டுதலுடன் நமது லகு அனுஷ்டானத்தை குருஅறிவுறுத்தலின் படி தொடங்கினோம்.


இம்முறை லகு அனுஷ்டானத்தை ஒட்டியே எமது அலுவலகத்தில் 6 நாட்கள் workshop உள்ளது என்று முன்னரே எமக்கு தெரிந்ததால் எவ்வாறு எமது நேரத்தினை ஒதுக்க வேண்டும் என்ற தெளிவு இருந்தது. மேலும் மன உறுதி ஆனது முழுவதும் தேவி இடம் சரண் என்ற பாவனையுடன் நமது அனுஷ்டானத்தை தொடங்கியாயிற்று


1 ) மூச்சின் அவதானிப்பு , தீர்க்க சுவாச பயிற்சியை நாம் செய்துகொண்டு வருவதால் காயத்ரி ஜெபம் செய்யும் விதமும், முறையும் ..எவ்வாறு எண்ணை ஒரு நூல் போன்று ஒரு வித மெல்லிய கோடு போன்று தங்குதடையின்றி செல்லுமோ ..அது போன்று சுகானுபாவமாய் அமைந்தது .. இம்முறை ஆழ் அமைதி நிலவியது


2 ) கணபதி மூலமந்திரமும் அதன் பின்னர் காயத்ரி ஜெபம் என்று நேரத்தினை நல்ல முறையில் பயன்படுத்தியும் , எந்த ஒரு அலுவலக சம்பந்தப்பட்ட நெருக்கடி எண்ணங்கள் வரவில்லை ; இது ஒரு வித ஸ்திரத்தன்மையை கொடுத்தது. மேலும் ஒவ்வொரு நாளும் இரவு அலுவலகம் சார்ந்த இரவு உணவு மற்றும் சில சந்தித்தால் அட்டவணை இருந்தும் நாம் அதை பெருவாரியாக தவிர்த்து விட்டோம் - காலையில் சாதனையை கருதி இவ்வாறு வெளிமுக நேரத்தினை குறைத்துக்கொண்டாலும் - workshop நிகழ்வுகளில் தனித்துவமாக சில முறைகளை கையாளும் விதம் நமக்கு உதவி வந்தது - இது எம்மை வேலையிலும் எந்த ஒரு குறையின்றி கடந்து செல்ல உதவியது.புத்தியை தூண்டும் பேரொளியாகிய அன்னையின் கருணையாகவே பல ஆலோசானைகள் இந்த அலுவலக விடயங்களில் எம்மால் கொடுக்கும் வாய்ப்பு அமைந்ததால் யாரும் யாம் பொது நிகழ்வுகளை தவிர்க்கிறோம் என்று எண்ணவில்லை

3 ) பண்பு மாற்றம் மற்றும் நமது குரு, குருமண்டலம் அடைந்த நிலை நோக்கிய இந்த பயணத்தில் சென்ற வருடங்களில் முடித்த லஹு அனுஷ்டானத்தில் .."mystical experience" மீது ஆர்வமாய் இருந்ததுண்டு .. இம்முறை நமது சங்கல்பத்தில் ஒரு நிதானமும் , தேவையற்ற உணர்ச்சிவயப்படுதல் இல்லாமல் இருந்தது . மஹாகணபதி மூல மந்திரம் முடித்து காயத்ரி சாதனை வந்த நிலையில் : சில மனக்காட்சிகள் :

- ஒரு பெரிய சிவலிங்கம் ஒரு பெரிய குகையினுள் இருந்தது ; அதன் அருகில் செல்லும் பொழுது மிக ப்ரகாசமானதொரு பிரகாசம்;

- அடுத்த நாட்களில் நமது சாதனை நேரத்தில் இந்த லிங்கம் மனக்கண்களில் வந்து செல்வதாய் இருந்தது. பின்னர் ஒரு நாகம் லிங்கத்தை சுற்றி பின்னி பிணைத்து ஊர்வதான ஒரு காட்சி,

- பின்னர் ஒரு போர்க்களம் அதில் நாம் யாரிடமோ சண்டை செய்யும் வேளையில் , எதிராளியின் வாள் எமது கழுத்து, குறிப்பாக சங்கினை சீவுவது போன்றும், உடன் யாம் அங்கேயே பத்மாசனத்தில் உக்கார்ந்து கண்களை மூட ஐந்து முகத்துடன் காயத்ரி அன்னை தீப்பிழம்பாய் ஆகாயத்தில் முளைத்தவுடன் , உடம்பினுள் இருந்து அந்த தீ பிழம்பினுள் நாம் ஐக்கியம் ஆகும் ஒரு காட்சி

- மற்றொரு நாள் உடல் சுருக்கங்களுடனும், மிகுந்த நெடிய ஜடா முடியுடன் கரிய நிறத்தில் வயதான நிர்வாணா கோலத்தில் அவதூதர் போன்ற ஒரு வயோதிக பெண் துறவி எம்மை பார்ப்பதாக - இவர் தேவிபுரம் சார்ந்த ஒரு இடம் போன்று இருந்து பார்ப்பதாக இருந்தது

- மற்றொரு முறை அதே பழைய சிவலிங்கம் ஆனது ஒரு மின்னல் போன்றதொரு ஒளி வந்து சென்ற பின்பு இம்முறை லிங்கத்தை சுற்றி ஒரு வெள்ளை துணி இருந்தது ..பின்னர் அந்த லிங்கத்தை நோக்க நோக்க அது லிங்கம் இல்லாமல், எமது உள்நாக்கு போன்றும் அந்த குகை ஆனது எமது வாய் பகுதி போன்றும் வென்று சென்றது, மீண்டும் நாகம், அவதூதர்கள் போன்ற காட்சிகள்

4 _ மிக ரம்மியமான மன அமைதி வாய்தததும் அதே நேரம் மிகுந்த வீர்ய பாவம் இருந்ததாய் உணர்கிறோம். எம்மால் சில விடயங்களை முடிக்க முடியும் என்ற மன நிலையும்..எதுவும் செய்யும் நோக்கமில்லாமால் முழு உறுதியுடன், சில கடமைகளை செய்வோம் என்ற தொனியும் இருந்தது

5 _ மேலும் 9 நாள் அனுஷ்டானம் முடிவில் சில எண்ணங்கள் தோன்றியவாறு இருந்தது ; இவை எதை காட்டுகிறது என்று தெளிவாக தெரியாவிட்டாலும் சில அவதானிப்புகள்


- எமது உடல், மற்றும் நரம்பு, எலும்பு அனைத்தையும் உருக்கி நாம் அன்னையினை ஐந்து முகம் தாண்டி தீப்பிழம்பாய் பாப்போம் - ஜ்யோதியாகவே அன்னை இருக்கிறார்கள், அனைத்துமாய் இருக்கிறார்கள் என்ற ஒரு எண்ணம் வந்து சென்றது.மேலும் ஒவ்வொரு சக்ரங்களிலும் இந்த உடல் உருக்கி ஒரு வித ஒளி உருவாகுகிறது என்பது போன்ற ஒரு எண்ணம் - அணைத்து சக்கரங்களில் விந்தானது உருவாகுகிறது என்பது போன்றதொரு உணர்வு

- உச்சிஷ்ட கணபதி (கிட்ட தட்ட 19 வயதில் ஸ்ரீ ராம்பாவு ஸ்வாமிகள் என்று தஞ்சையில் நமது ஸ்வாமிகளிடம் கடிதம் எழுதியே அதே நேரம் அவர்களிடமும் எழுதியிருந்தேன் - அவர் ஒரு விநாயக சதுர்த்தி அன்று வந்தால் எமக்கு உபதேசம் செய்வோம் என்று கடிதம் அனுப்பியிருந்தார்) - பற்றியே எண்ணம் திடீர் என்று வருவதாய் இருந்தது - அடுத்த பரிமாணம் சாத்தியப்பட இதுவும் ஒரு கூறு , என்பது போன்றதொரு ஒரு எண்ணம் வந்த வண்ணமாய் இருந்தது

- லகு அனுஷ்டானமுடன் மேலும் சக்தியை தக்க வைக்க அடுத்த இலக்கினை முன்னேறு ; 24 லக்ஷ ஈடேற யோசனையை தொடங்கி குருவிடம் கேள் என்பது போன்றும் ; ஒரு பெரிய உயிர் சார்ந்த கண்டம் (புற்றுநோய்) நீங்கி காயத்ரி வழி பயணித்தல் காரணம் இதுவும் பிரதானமான ஒன்று ஆக இதை முடிக்கும் நோக்கம் வரை பெருவாரியாக என்ன ஓட்டங்களை சிதறவிடாதே என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது

- எப்பொழுதும் போர்க்களத்தில் யாரிடமோ சண்டை செய்வது போன்றதொரு பாவனை யுடன் நாம் சாதனையை தொடங்குவோம். இம்முறை எதிரிகள் இல்லை ; எண்ணங்களே எதிரிகள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது

-மைதுனம் போன்றதொரு எண்ணம் அனால் உடல் இன்றி ஒளி ரூபமாகவோ இருப்பது போன்றும்.. அல்லது எமது உடல் உள்ளே அது நிகழ்கிறது என்பது போன்றும் அனால் எந்த வித சலனமின்றி அந்த உணர்வு காயத்ரி ஜெபத்தோடு இணைகிறது

- அமைதி, அமைதி, அமைதி - மேலும் தேவி பிரகாசமான ஜ்யோதி மயம் மட்டும் அல்ல அவள் இருட்டாகவும் இருக்கிறாள் ; இருட்டினுள் கரைந்து விட வேண்டும் என்ற ஒரு எண்ணம்



6 - அன்னதானம் நிறைவோடு லகுஅனுஷ்டானம் முடிந்த விதம் ஒரு கனவு போன்றே அமைந்தது. இம்முறை - குடும்பம், அலுவலகம், என்று அனைத்தையும் ஒரு நிதானம், உராய்வின்றி, சீரிய முறையில் ஒரு வித சக்தி யுடன் பயணித்த விதம் நிறைவாய் இருந்தது


குருவருள், குருமண்டல அன்பும் கருணையுடன் எமது பயணத்தை தொடர்கிறோம்

ஸ்ரீ சக்தி சுமணன் அகஸ்திய குலபதி காயத்ரி சாதனை மாணவர்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...