நாம் காமம் எனும் சக்தியால் இயக்கப்படுகிறோம். இந்த சக்தியின் இயல்பு சுயநலம். ஒன்றின் மீது தீராத இச்சை கொள்பவன் அதனைத் தனதாக்க முயல்வான். இப்படிச் செய்யும்போது அது நிலைத்திருக்க முடியாமல் போய்விடும்.
காமத்துடன் உறவைத் தொடங்குபவர்கள் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தி உறவை மதிப்பில்லாமல் ஆக்கி விடுகிறார்கள். இது காதலாக மாறினால் இல்லறம் செழித்து குடும்பம், பிள்ளைகள் என இன்பம் நிலைக்க ஆரம்பிக்கும்.
தான் கற்று பெரிய அறிஞனாக வர வேண்டும் என்று சுயநலமாக பட்டங்கள், பதவிகளை நாடுபவர்களால் ஒழுங்கான கல்விச் சமூகத்தை உருவாக்க முடியாது; நான் பெற்றது போதும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பணியாற்ற அந்தப் பணி நிலைத்து நிற்க ஆரம்பிக்கும்.
இப்படி காமத்தை காதலாகவும், சுயநலத்தைப் பொது நலமாகவும் மாற்றும் ஆற்றலை லக்ஷ்மி என்கிறோம். இந்த லக்ஷ்மித்துவம் வாய்த்தால் மாத்திரமே எதுவும் நிலைத்து நிற்க ஆரம்பிக்கும்!
அன்னையைப் பற்றி எனது குருநாதர் கூறிய கருத்து வருமாறு;
காமம் - இச்சை எனும் ஆற்றல் உங்களை இந்த உலகத்திலிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் சிந்தனையை உருவாக்கும். இந்த காமம் அன்பாக மாற்றப்பட்டால் இந்த உலகம் நிலைத்திருக்கும். இதையே ஸ்திதி - காத்தல் என்கிறோம். பிரபஞ்சத்தின் பராமரிப்பு இப்படியே நிகழ்கிறது. இதை நிகழ்த்துவிக்கும் சக்தியை மகாலக்ஷ்மி என்கிறோம்.
ஸ்ரீ அம்ருதாந்தந்த நாத சரஸ்வதி
(Dr. N. Prahaladha Sastri - former nuclear scientist)
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.