யோகத்தில் நினைத்ததை அடையும் சித்தி ஒன்று உள்ளது! எனக்கு இந்த ஆற்றல் புத்தகங்களில் மாத்திரம் உள்ளது என நினைக்கிறேன்! ஏதாவது ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால், அடுத்த சில நாட்களில் அது எங்கிருக்கிறது, அங்கிருந்து எப்படி என்னிடம் வந்து சேரவேண்டும் என்பது தெரிந்து விடும்!
கடந்த எட்டாம் திகதி தம்பி கார்த்திக் தியாகராஜன் “யானைகளும் அரசர்களும்” நூல் பற்றி வாட்ஸப்பில் அறியத்தந்தார். இன்று கைகளில் கிடைத்தது.
மானிடவியல் ஆய்வாளரான தாமஸ் ஆர். டிரவட்மன் பாரதத்தின் போர் யானைகள் பற்றி எழுதிய ஒரு அரிய படைப்பு!
நான் எனது இளமானிப்பட்டத்தில் பேராசிரியர் சந்தியாப்பிள்ளையிடமும் கலாநிதி விஜயமோகனிடமும் யானைகள் பற்றி கற்றுக்கொண்டவன்; களவிஜயங்களிலும் ஆய்வுகளிலும் பங்குபற்றியவன். பேராசிரியர் சந்தியாப்பிள்ளை கஜா என்று ஒரு journal எடிட்டராக இருந்தார். அவருடன் கஜசாஸ்த்திரம் பற்றிய் ஆய்வுகளைச் செய்யலாம் என்றெல்லாம் உரையாடியிருக்கிறேன்.
இந்த நூல் யானைகளின் சமூக பரிமாணத்தைக் கூறுகிறது. யானைகளின் சமூகத்தேவை அற்றுபோனதால் பல நூற்றாண்டுகளாக இந்திய உபகண்டத்தின் மதிப்புமிக்க பேராற்றல் கொண்ட சமூக விலங்கான யானை இன்று தொல்லை தரும் விலங்காக மாறிவிட்டது என்பதை இந்த நூல் அருமையாக விளக்குகிறது.
யானை சமூக இடைத்தொடர்பு பிரச்சனைகள் பற்றி சிந்திக்கும் சமூக சிந்தனையாளர்களுக்கு இந்த நூல் மிக அரிய தகவல்களைத் தருக்கிறது.
குறிப்பாக கலாநிதி Kumaravelu Ganesan ஐயாவுடன் சேர்ந்து நாம் கட்டுமுறிப்பு கிராமத்தின் யானைத்தொல்லைகள் பற்றி உரையாடியிருந்தோம். கணேசன் ஐயா மேற்கத்தேய குடித்தொகை கட்டுப்பாட்டு முறைகளை இலங்கையில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது என்ற கேள்வியை உறுதியாகக் கேட்பவர்; அதற்கு இந்த நூல் ஆசிரியர் மானிடவியல் ரீதியாக யானை எப்படி இந்திய உபகண்டத்தில் மனிதனுடன் உறவு கொண்டு வாழ்ந்து இராஜ சின்னமாக மனிதர்களின் மனதில் குடிகொண்டிருக்கிறது என்று இந்த மானிடவியலாளர் விளக்கியிருக்கிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.