குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 14, 2023

போர்த்துக்கேய யோக வகுப்பு

எனது போர்த்துக்கேய யோக வகுப்பில் நான் கடந்த இரண்டு வருட வகுப்புகளில் ஆற்றிய விரிவுரையை சிறு குறிப்பு எடுத்து மீண்டும் போர்த்துக்கீசு மொழியில் மொழிபெயர்ப்பதற்காக பயன்படுத்திய நோட்டுப் புத்தகங்களின் படங்கள் எனது மாணவர் அனுப்பி வைத்திருக்கிறார். 
மொத்தம் எட்டு நோட்டுப்புத்தகம் ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள்; நான் ஆற்றிய உரையைக் குறித்து வைத்திருக்கும் நோட்டுப்புத்தகங்கள் இவை. 
1) அகத்தியர் ஞானம் முப்பது
2) ஹடயோக பிரதீபிகை விளக்கவுரை
3) சித்த யோக பாடதீக்ஷை
4) பதஞ்சலி யோக சூத்திர விளக்கவுரை 
5) அகத்தியர் சௌமிய சாகர விளக்கம் 
ஆகிய ஐந்து கற்கைகள் கற்றிருக்கிறார்கள்; கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கற்பார்கள். 
மேற்கத்தேய மாணவர்கள் கற்றலில் சிரத்தையும், செம்மையும் மிகுந்தவர்கள்; சொல்லுவதை கிரகித்து உள்வாங்கி சேமித்து அறிவைப் பிரயோகம் செய்ய வேண்டும் என்ற தாகம் உடையவர்கள்! தர்க்க புத்தி நிறைந்திருந்தாலும் அன்பும் பண்பும் நிறைந்தவர்கள்!

அம்மா

எனக்கு பட்டப்படிப்பெல்லாம் அம்மாவின் “மகன் பல்கலைக்கழகம் போக வேண்டும்” என்ற உத்வேகத்தால் தான்; 
இன்று எனது நூலகம் அடுக்கும் போது கிடைத்த படம்;
அம்மா means will power
இந்தப் படம் எடுத்து ஒரு தசாப்தத்திற்கு மேல், பட்டமும் பழைய பட்டம்;

சிவ சீவ ஐக்கியம் - மெய்ப்பொருள் இரகசியம்

சிவஞானசித்தியாரிற்கு மாதவச் சிவ ஞானயோகிகள் எழுதிய உரைப்பாயிரத்தில் "சிவ சீவ சம்பந்தத்திற்கான 13 உவமைகளை இங்கு எளிய தமிழில் காண்போம்:
பண்ணிசைவெம் பரிதிமதி திலதயிலந் 
தீயிரும்பு பாணி யுப்பு
விண்ண நில முடலுயிர் நீர் நிழலுச்சிப் 
பளிங்குபகல் விளக்குப் பானீர்
கண்ணிரவி யுணர்வொளிபோற் பிரிவரிய 
வத்துவிதக் கலவி காட்டித் 
தண்ணளிவைத் தெனையாண்ட துறைசை 
நமச் சிவாயகுரு சரணம் போற்றி! 
சிவமும் சீவனும் - 
உவமை - 01: பண்ணும் ஓசையும் (இராகமும் ஓசையும்)
உவமை - 02: சூரிய ஒளியும் பகல் காலத்தில் காணப்படும் சந்திரனும்
உவ்மை - 03: எள்ளும் அதனுள் இருக்கும் நெய்யும் போல
உவமை - 04: தீயும் அதனால் காய்ச்சப்பட்ட இரும்பும் போல்
உவமை - 05: ஆகாயமும் காற்றும் போல்
உவமை - 06: உடலும் உயிரும் போல
உவமை - 07: நீரும் அதன் நிழலும் போல
உவமை - 08: மத்தியான நேர சூரிய ஒளியும் பளிங்கின் ஒளியும் போல்
உவமை - 09: சூரிய ஒளியும் பகலில் விளக்கொளியும் போல
உவமை - 10: பாலும் அதனுடன் சேந்த நீரும் போல
உவமை - 11: கண்ணொளியும் அதில் காணும் பொருளும் போல்
உவமை - 12: கண்டும் உடனாய் நிற்கும் சூரியனொளியும் போலவும்
உவமை -13: ஆன்மாவின் அறிவும் அவ்வறிவால் பொருளை அறியும் கண்ணொளி போலவும்
இருக்கும் பிரிக்க முடியாத சிவ சீவ கலப்பினை எனக்கு கிருபையுடன் அனுபவமாக அறியச் செய்து என்னை ஆட்கொண்டருளிய திருவாவடு துறையின் கண் எழுந்தருளியிருக்கும் நமச்சிவாய தேசிக குரு மூர்த்திகளின் திருவடிகளைத் துதிப்போம்
********************************
சிவ சீவர்கள் அத்துவிதமாகிய கலப்பைக் கொண்டிருக்கிறார்கள். 
அத்துவிதம் என்பது மூன்று நிலைகளைக் கொண்டிருக்கிறது; 
1) சிவமும் சீவனும் ஒன்றாய் நிற்றல் - நிலைத்தலுக்காக
2) சிவமும் சீவனும் வேறாய் நிற்றல் - அறிதலுக்காக 
3) சிவமும் சீவனும் உடனாய் நிற்றல் - அனுபவித்தலுக்காக 
இதுவே மெய்ப்பொருள், சைவ சித்தாந்த அத்துவிதம். 
மேற்குறித்த 13 உவமானங்களில் ஒன்றாய் நிற்றலுக்கு மூன்று உவமையும், 
வேறாய் நிற்றலுக்கு மூன்று உவமையும், 
உடனாய் நிற்றலுக்கு ஏழு உவமையும் கூறப்பட்டுள்ளது. 
இதன் அர்த்தம் என்னவென்றால் சிவ சீவக்கலப்பு மூன்று பெரும் நிலைகளையும் இந்த மூன்று பெரும் நிலைகளுக்குள் 13 உப நிலைகளிலும் செயற்படுகிறது என்பதாகும். 
இந்த 13 நிலைகளையும் முழுமையாக அறிந்தவன் சிவ சீவ ஐக்கியம் என்ற அத்துவிதத்தின் உண்மைப் பொருள் - மெய்ப்பொருள் அறிந்தவனாவான். 
இதுவே மெய்ப்பொருள் இரகசியம்
சிவனும் சீவனும் ஒன்றாய் நிற்பவை என்பதற்குரிய முதல் உவமானத்தின் விளக்கம் - ஒலியும் பண்ணும்; ஒலி சிறு அதிர்வெண் வேறுபாட்டால் ஸ்வரமாகிறது; சப்த ஸ்வரங்கள் ஒழுங்கில் இசைக்கப்படும் போது இராகம் அல்லது பண் உருவாகிறது. இராகம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட சிறு சிறு அதிர்வெண் வேறுபாடுகளைக் கொண்ட வெளிப்படும் ஒலி. இதுபோன்றே உயிராகிய சீவன் சிவம் என்ற ஒலியிலிருந்து வெளிப்படும் இராகம். எப்படி ஒலி பேதமுறும் போது ஸ்வரங்கள் உருவாகிறதோ, அப்படி உருவாகினாலும் ஸ்வரத்தில் ஒலி இருப்பது போல் சிவத்திலிருந்து பேதித்த உயிர்கள் எல்லாவற்றிலும் - எல்லாச் சீவன் களிலும் சிவம் கலப்புற்று ஆதாரமாக இருக்கிறது என்ற தெளிவு சாதகனுக்கு இருக்க வேண்டும். 
இந்த ஞானம் வாய்க்கும் போது எல்லா உயிர்களிலும் கலப்பு விகிதத்திற்கு தக்க சிவம் வெளிப்படும் என்ற ஞானம் கிட்டும். எல்லா உயிரும் சிவமே ஆனால் அதில் சிவம் வெளிப்படும் கலப்பு விகிதம் வேறுபடுகிறது. 
புல்லாகி, பூடாய் புழுவாகி பல்மிருகமாகி, பறவயாய், பாம்பாகி என்று மாணிக்க வாசகப் பெருமான் சொல்வது பரிணாமத்தில் ஒவ்வொரு உடலிலும் சிவம் உயிராக வெளிப்படும் அளவு விகிதம் வேறுபடுவதையே குறிப்பிடுகிறது. மனித உடலில் இந்த சிவத்தினை முழுமையாக வெளிப்படுத்தவே யோக பாதம் வைக்கப்பட்டது; யோக பாதம் மனம், உடல், உயிர் இவை மூன்றையும் சிவம் வெளிப்படச் செய்ய ஒருங்கிணைக்கும் முறை. 
இப்போது உயிர் சிவத்திலிருந்து வெளிப்பட்டவுடன் வெளிப்பட்ட அந்த உயிரே சிவம் என்று மயங்கிவிடக்கூடாது என்பதற்கு இரண்டாவது "வெம்பரிதி மதி" என்ற உவமையைச் சொல்லுகிறார். 
வெம்பரிதி என்றால் பகல்காலத்தில் தோன்றும் சூரியனைக் குறிக்கும்; மதி என்பது பகலில் சந்திரனின் நிலை என்ன என்பதைக் குறிக்கும். சூரியன் தோன்றும் போது மதி இருந்தாலும் தெரியாது; சூரியன் மறைந்தாலும் சூரியனின் ஒளியைப் பெற்றே மதி தோன்ற முடியும்; அதுபோல் அத்துவித பூரண கலப்பில் வெம்பரிதியில் மறைந்த மதி போன்று சிவம் மாத்திரமே தோன்றும்; சிவத்திலிருந்து பிரிந்து செயற்படும் போதும் உயிரிற்கு ஆற்றலாய் இருப்பது சூரியனாகிய சிவமே. இந்த உவமையில் பரிதி என்பது சிவம், மதி என்பது சீவன்; இந்த உவமை சிவனும் சீவனும் கலப்பு நிலைகளின் வேறுபாட்டையும், பூரண கலப்பையும் விளக்குகிறது. 
இந்த உவமையக் கேட்டவருக்கு அப்படியாயின் சிவமும் சீவனும் சூரிய சந்திரனைப் போல் பிரிந்து இயங்குகிறார்களா என்ற சந்தேகத்திற்கு மூன்றாவது உவமை கூறுகிறார். 
மூன்றாவது உவமை திலதைலம் - எள்ளெண்ணெய்; எள்ளிற்குள் எண்ணெய் இருக்கிறது. எண்ணெய் பிரிந்துவிட்டால் அதை எள்ளென்று சொல்வதில்லை. சீவன் என்ற எள்ளிற்கு ஆதாரமாய் போஷிப்பது நெய்யாகிய சிவம் என்ற தெளிவு இருக்க வேண்டும். இவற்றைப் பிரித்தால் அங்கு உண்மையைக் காணமுடியாது; எள்ளை விதைத்துப் பயன்பெற வேண்டும் என்றால் அதனுள் இருக்கும் எண்ணெயை பிரித்து சக்கையாக்கக் கூடாது; அதுபோல் சீவனைக் கொண்டு சிவத்தை அறிந்து முக்தியுற வேண்டும் என்றால் சீவனிலிருந்து சிவத்தைப் பிரிக்கக் கூடாது. 
இந்த மூன்று உவமைகளையும் சரியாக விளங்கினால் சிவமும் சீவனும் எப்படி ஒன்றாய் நிற்கிறது என்ற அத்துவித மெய்ப்பொருள் புரியும். 
சிவமே ஆதாரமாக இருக்க உயிர் அந்த ஆதார சக்தியில் பலவித இராகங்கள் போன்று பிறப்பெடுத்து அனுபவத்தைப் பெறுகிறது; எத்தனை பிறப்பெடுத்தாலும் சிவத்துடனான ஆதாரம் அறுபடுவதில்லை இது ஓசையும் பண்ணும் போல!
ஈரண்டாவது முக்தி நிலையில் சீவன் என்ற தனித்த நிலையில்லை; பகலில் சூரிய ஒளியில் மறைந்த மதி போல சீவன் தன்னை சிவத்துள் மறைந்துவிடும். ஆனால் சிவமாகிய ஒளி இல்லாவிட்டாலும் ஆன்மா தானே இயங்குவது போல் இருந்தாலும் சிவத்தின் ஒளியைப் பெற்றே இயங்குகிறது. அப்படி இயங்கும் போது அது மதியாகத் தோன்றுகிறது. மதியாக இருக்கும் நிலை இருள் நிலை! வெம்பரிதி நிலைதன் உண்மை நிலை! மதி நிலை இருள் நிலை! இது முக்தி நிலையையும், சீவன் இருள் நிலையில் இருக்கும் தன்மையைம் காட்டுவதற்கான உவமானமே அன்றி இரண்டு வேறு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. 
உயிரை விட்டு சிவம் நீங்கினால் அது உயிர் அல்ல! இதுவே திலதைலம். எள்ளை விட்டு எண்ணெய் நீங்கினால் அது எள்ளு அல்ல. 
இதன் மூலம் சிவமும் சீவனும் ஒன்றாய் நிற்கும் நிலை அறியப்படுகிறது. 
அடுத்து அறியப்படும் நிலை....

அரசியல்

செய்தி: கடும் கோபமடைந்த ஜனாதிபதி! சில மணி நேரங்களில் பதவி விலகிய தொல்பொருள் பணிப்பாளர்
ஜனநாயக அரசியல் அமைப்பில் பெரும்பான்மையே அதிகாரத்தைத் தீர்மானிக்கிறது. இந்தப் பெரும்பான்மை என்ன குணத்தைக் கொண்டிருக்கிறதோ அந்த குணத்திற்கமையவே அரசும் அதன் அதிகாரமும் செயற்படும். உச்சத்தில் இருக்கும் ஜனாதிபதியோ, பிரதமரோ தன்னிச்சையாக தாம் விரும்பிய படி செயற்பட முடியாது. 
இந்த அடிப்படை உண்மையை விளங்காத சிறுபான்மையினர் எப்போதும் தமக்குரிய அபிலாசைகளைப் பெற முடியாது. சிறுபான்மை அரசியல்வாதிகள் தங்களை ஹீரோக்களாக படம் காட்டுவதை நிறுத்தி விட்டு பெரும்பான்மை சமூகத்தை தமக்காக சிந்திக்கும் மனப்பாங்கினை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற உளப்பூர்வ செயல்களில் ஈடுபட வேண்டும். 
உளச்சுத்தமாக பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய வகையில் தீர்க்க வேண்டும் என்றால் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதைச் செய்யும் புத்திசாலித்தனம் தமிழ் அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்பதை நாம் கேட்க வேண்டும். 
தொல்லியல் ஆணையாளரை தமிழ் கூட்டமைப்பு எம் பிக்களுக்கு முன்னால் வைத்துக்கொண்டு பகிரங்கமாக கேள்வி கேட்பது தமிழர்களுக்கு கிளு கிளுப்பை ஏற்படுத்தக்கூடும். ஆனாம் நாம் சிந்திக்க வேண்டியது மற்றைய பக்கத்தை! இதைச் சாக்காக வைத்து பெரும்பான்மை மக்களின் மனதை எப்படித் தூண்டி அரசியல் இலாபம் காணலாம் என்பது! 
தொல்லியல் ஆணையாளரை தமிழ் எம்.பிகளுக்கு முன்னால் வைத்துக்கொண்டு அவமானப்படுத்துவது போல் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு நன்றாக குளோஸப்பில் வைத்து வீடியோ எடுத்து அதை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம் பெரும்பாலான சிங்கள மக்களை மீண்டும் தேவையற்ற சிந்தனைக்குத் தூண்டுகிறார் ஜனாதிபதி! 
அவர் உண்மையிலேயே பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நான்கு சுவருக்குள் கூப்பிட்டு Left & right வாங்கி முடிவை எடுக்கச் சொல்லியிருக்க வேண்டும். தொல்லியல் director general ஐ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக்க ஜனாதிபதி முயற்சிக்கிறாரா? 
அண்ணன் மனோகணேசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழ்பௌத்தத்தை சம நிலைக்கு ஒரு உத்தியாக பயன்படுத்த எண்ணுகிறார்கள். 
தமிழ் பௌத்தத்திலிருந்து சிங்கள பௌத்தத்தை பிரித்து தனித்தன்மையை உருவாக்கும் அடித்தளத்தை அனாகரிக தர்மபால ஆழமாகச் செய்து வைத்திருக்கிறார்; அதிலிருந்துதான் சுதந்திரத்திற்கு பின்னைய சிங்களத் தலைவர்கள் அனைவரும் செயற்படுகிறார்கள். அதன் கட்டமைப்புகளை சரியாகப் புரியாமல் வெறுமனே தமிழ் பௌத்தம் என்ற சொல்லாடலை எடுப்பது எந்தப் பலனையும் தராது. இன்னும் எதிர்ப்பை பிரச்சனையைப் பெரிது படுத்தலாம். 
எவரையும் உசுப்பேத்தாத எல்லோரையும் புரிந்துகொண்டு நம்பிக்கையைக் கட்டமைத்துச் செல்லக்கூடிய முதிர்ச்சியுடைய உறுதியான தலைவரே தேவை!

Tuesday, June 13, 2023

சிந்தாந்தி ஒருவருக்கு நான் எழுதிய பதில்

ஒரு கடும் சிந்தாந்தி ஒருவருக்கு நான் எழுதிய பதில்: அதை அவருக்கு நேரே பதிலிட்டால் வாதம் தொடர்ந்து பித்தமாகி, தொந்தமாகி, ரோகமாகி எனது நேரம் வீணாகி விடும் என்பதாலும் எல்லா கடும் சிந்தாந்திகளுகும் இந்தக் கருத்தை தெரிவிக்க விரும்புவதாலும் இங்கு பதிவிடுகிறேன்:   
"உங்கள் உரையாடலில் சைவசித்தாந்ததைப் பற்றி நீயெல்லாம் உரையாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற மமதையும், நான் ஏதோ சைவசித்தாந்ததைக் கெடுக்க வந்த மாற்று மதத்தவன் என்று சந்தேகமும் முன்துணிபும், உங்களுக்கு மாத்திரமே சைவ சித்தாந்தம் எழுதிக்கொடுக்கப்பட்ட சொத்து என்ற நினைப்பு இருக்கிறது; இப்படியொரு நிலையில் நாம் சுமூகமாக உரையாட முடியாது; எனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது நான் சொல்வதை நீ கேள் என்ற நிலையில்தான் நீங்கள் உரையாடுகிறீர்கள்; இப்படியான நிலையில் நான் பெரிதா நீ பெரிதா என்று மாத்திரம்தான் வாதிட முடியும்; நான் இப்படியான வாதங்களைச் செய்ய விரும்பவில்லை! ஆன்ம அனுபவத்திற்குரிய ஒரு ஞானத்தை - சித்தாந்ததை வெறுமனே மலங்கள் நிறைந்த புத்தியாலும் மனதாலும் தர்க்கிப்பதில் என்ன பயன்?
சித்தாந்தம் என்ற உயர்ந்த ஞானம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றால் பழந்தமிழில் இப்போது உள்ள எவரும் படிக்க முடியாமல் இருக்கும் சிவ ஞான சித்தியார் அறுவர் உரையை எளிமையாக்கி அனைவரும் புரியும் படி தினசரி பதிவிடுங்கள்! 
வாலையானந்தர் நூறு வருடங்களுக்கு முன்னர் concept diagram மூலம் சித்தாந்த பட விளக்கம் என்று ஒரு நூல் மூலம் முயற்சித்தார்; இன்று நவீன animation ஐ பயன்படுத்தி எவ்வளவோ அருமையாக சைவ சித்தாந்தக் கோட்பாட்டினை மக்களின் மனதிற்கு கொண்டுபோய்ச் சேர்க்கலாம்! 
யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த பீடம் இருக்கிறது; தற்கால மக்களின் மனதிற்குப் புரியுமாறு எளிமையாகச் சித்தாந்ததை எடுத்துரைப்பது என்ற ஒரு ஆய்வும் இல்லை! யாருக்கும் விளங்காத பழைய பண்டிதரின் கனைப்புக் குரலில் ஒருவருக்கும் விளங்காமல் பேசினால் எப்படி இளைஞர்களுக்குப் போய்ச் சேரும். 
அதைவிடுத்துவிட்டு ஸமர்த்தர்களை எதிர்க்கிறேன், சாய்பாபாவை எதிர்க்கிறேன் என்று எப்போது பார்த்தாலும் குரோதமும், குழப்பமும், எதிர்ப்பேச்சும் பேசி ஒரு உயர் ஞானமரபினை குழாயடிச் சண்டை ஆக்குவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். 
சிவ ஞானசித்தியாரிற்கு மாதவச் சிவ ஞான யோகிகள் எழுதிய உரைப்பாயிரத்தில் "சிவ சீவ சம்பந்தத்திற்கான 13 உவமைகளையும் படித்து சிந்தித்தால் இன்றைய குவாண்டம் இயற்பியலில் கோட்பாட்டுக் கூறுகள் இருப்பதை உணரலாம். இப்படி உயர் ஞானத்தை அனுபவித்து உணர்ந்து மற்றவர்களும் உணரக்கூடிய வகையில் நாம் சுவையாக பரிமாற வேண்டும்; தூண்ட வேண்டும். இப்படி இந்த ஞானம் அனைவருக்கும் சென்றடையும் போது தான் இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Monday, June 12, 2023

சிருஷ்டியின் நவீன மனதிற்கான புராதன ஞானம்

அன்பு நண்பர் Mike Magee இனது Yakṣiṇī Magic & Kali Magic ஆகிய இரண்டு நூல்களை நாம் எமது சிருஷ்டியின் நவீன மனதிற்கான புராதன ஞானம் ஆய்வு நூலகத்திற்கு வாங்கியிருந்தோம். எமது சிருஷ்டியின் பணியிற்கு வாழ்த்துத் தெரிவித்து தான் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் கஜுராஹோ யோகினி ஆலயத்தை எடுத்த படத்தை தனது கையெழுத்தும் ஆசியும் இட்டு அனுப்பியுள்ளார். 
Mike ஐ மேற்கத்தேய உலகம் ஒரு பத்திரிகையாளனாகவும், occult and esoteric religions பற்றிய எழுத்தாளனாகவும் அறியும். 
பல சமஸ்க்ருத தாந்திரீக நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்; கௌலஜ்ஞானநிர்யா, வாமகேஸ்வரிமதம், மாத்ரிகாபேத தந்திரம், கௌலோபநிஷத் என்பவை சிலவாகும். 
2009 ஆம் ஆண்டில், டெய்லி டெலிகிராப் மேகியை பிரித்தானியாவின் தொழில்நுட்பத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க முதல் 50 பிரித்தானியர்களின் பட்டியலில் 35 ஆகப் பட்டியலிட்டுள்ளது.
நன்றி Mike Magee  

வகுப்பு

முதலாவது அணிக்குரிய இருக்கைகள் பூர்த்தியாகியது.
இந்தப்   பதிவினைக் காண்பவர்கள் கற்கையில் இணைய விருப்பம் இருந்தால் வாட்ஸப் +94776271292 செய்யுங்கள்: அடுத்த அணியில் இணைத்துக் கொள்ளப்படுவீர்கள்.

மாணவருக்கு கடிதம் # 01

எனது மாணவர் ஒருவருக்கு எனது நூல்கள், சிந்தனைகள் தனது தொடர்பில் இருக்கும் சமூகப் பிரபலங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று பெருவிருப்பம். இதுபற்றி எனது சிந்தனையை அவருக்கு நான் அனுப்பினேன். இங்கும் பதிவிட்டுள்ளேன். உங்கள் கருத்தையும் சொல்லலாம். 
_____________________________________________
அன்புக்குரிய மாணவரே
உங்கள் குருவின் சிந்தனைகள் சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் சென்றடைய வேண்டும் என்ற முயற்சிக்கு நன்றி! எனது அன்பும் உரித்தாகட்டும். 
குருதேவர் கண்ணைய யோகீஸ்வரர் கூறுவார் - என் மாணவன் எந்தக் காரியம் செய்தாலும் அதை ஏன் செய்கிறோம் என்று சிந்தித்து செயலாற்றுபவனாக இருக்க வேண்டும்! 
உங்கள் விண்ணப்பம் தொடர்பாக எனது மனதில் பட்டவற்றை உங்கள் சிந்தனைக்கு கீழே தொகுத்துள்ளேன்; 
நீங்கள் நூறு புத்தகங்கள் இப்படி இலவசமாக மற்றவர்களுக்குக் கொடுத்தால் அதில் ஒன்று இப்படிப் பிரபலமானவர்களுக்கு கொடுக்கலாம். மிகுதி எதிர்காலச் சந்ததியினரான இளைஞர்களுக்குக் கொடுக்க வேண்டும். பிரபலமானவர்கள் எப்போது தமது துறையில் உச்சம் அடைந்துவிட்ட பூரிப்பில் இருப்பவர்கள்; மரியாதை நிமித்தம் இவற்றை ஏற்றுக்கொள்வார்கள்; அதேவேளை தமது பிரபலத்துவத்தை நல்லது நடக்க பயன்படுத்துதற்கு அஞ்சுவார்கள். 
உதாரணம் ஒரு பெருந் தலைவர் நினைத்தால் எத்தனையோ இலட்சம் மக்களை நல்வழிப் படுத்த முடியும்! ஆனால் அவர்கள் சிந்தனை முழுக்க தான் தனது வியாபாரத்தைப் பெருக்குவது, புகழை அடைவது என்ற சிந்தனையிலேயே இருக்கும். நீண்ட ஆயுள் பெறலாமா? இன்னும் எப்படி பெயர், புகழ் பெறமுடியும் என்றே சிந்தனை ஓடும்; பொதுவாக இறைவன் எம்மை வாழ்வில் உயர்த்துவது அவனது தொழிலாகிய மற்றைய ஆன்மாக்களை உயர்த்த நாம் பெற்ற உயர்வு, பணம், ஆற்றல் என்பவற்றைப் பயன்படுத்துவோம் என்ற எண்ணத்தில்; ஆனால் அதிகாரம், பணம், புகழ் அடைந்தவர்கள் இலகுவில் அதை மற்றவர்களுக்காகச் செய்ய மாட்டார்கள்; அப்படிச் செய்தாலும் அதற்குள் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்ற எண்ணமே இருக்கும்,. 
நாம் அன்பாகக் கொடுப்பதையும் இவன் எனது பிரபலத்துவத்தை வைத்து தன்னைப் பிரபலமடையப் பார்க்கிறானோ என்ற சந்தேகத்துடனேயே பார்ப்பார்கள். 
இப்படிப் பிரபலமானவர்களுக்குக் கொடுப்பதை விட நாம் எதிர்காலச் சந்ததியினரின் சிந்தனையை மாற்ற, உத்வேகப்படுத்த இளைஞர்களுக்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு, உங்கள் அலுவலகத் தோழர்களுக்கு கொடுத்து அதனால் அவர்கள் ஆர்வமுற்று அவர்கள் எமது சிந்தனையால் பயன்பெற்றால் அதுவே உண்மையான நன்மை! 
உண்மையான குருபணி களத்தில் தேவையானவர்களுக்கு நாம் இவற்றைக் கொண்டு சேர்க்கிறோமா என்பதே! 
இப்படிப் பிரபலமானவர்கள் தம்மைப் புகழ்வதையும், மதிப்பதையுமே அதிகம் விரும்புவார்கள்! 
இத்தகையவர்களை நாம் கந்தர்வ சத்துவ குணம் உடையவர்கள் என்று சொல்லுவோம்; அவர்களைத் திருப்திப்படுத்த அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டும். 
அவர்கள் விரும்பாததைத் திணிக்கும் போது அவர்கள் எண்ணச் சுழல்கள் எம்மைப் பாதிக்கலாம்! 
இதுவும் மோக நாசன சாதனையின் ஒரு அங்கமாக தேவி தரும் ஞானமாக ஏற்றுக்கொள்ளவும்! 
உண்மையான குரு பணி என்ன என்பதை ஆழமாகச் சிந்திக்கவும்! நான் விரும்புவதைச் செய்வதல்ல! தேவையானதைச் செய்வது! 
நான் எழுதுவது ஒரு ஆத்மார்த்த குரு பணி! இதன் மூலம் எனக்கு என்ன நன்மை என்று எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை! மற்றவர்களது சிந்தனையை தெளிவிக்க குரு இட்ட பணியைச் செய்கிறேன்; இது தேவையானவர்களுக்கு சென்றடைய வேண்டும். 
அன்புக்குரிய மாணவனாக இந்தப்பணியை முன்னெடுக்க நீங்கள் மேற்கூறிய வழியில் செயற்படுவீர்கள் என்று நம்புகிறேன். 
இதை வாசித்து சிந்தித்து பின்னர் அழைக்கவும்
அன்புடன் 
ஸ்ரீ ஸக்தி சுமனன்

உயர்கல்வித் துறை

இலங்கையின் பொறுப்பற்ற உயர்கல்வித் துறை எப்போது மாறுவார்கள் என்பது தெரியவில்லை. 
பல்கலைக்கழகங்களும், தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களும் மிகப்பெரிய தவறினை நாட்டிற்குச் செய்து கொண்டிருக்கிறது. 
ஒரு நாட்டின் தொழிற்துறை வளர்வதற்குத் தேவையான மனித மூளைத் திறன் வளத்தை உருவாக்குவதுதான் இந்த உயர் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு! 
இந்தப் பொறுப்பை பொறுப்பற்றதனத்தில் செய்வதில் இவை சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவை. 
தம்மிடம் பயிலும் மாணவர்கள் கற்கையின் பின்னர் தொழில் புரிவதற்குரிய நிறுவனங்கள் எவை? அவை எதிர்பார்க்கும் திறன் கள் எவை? அவை எமது பாடத்திட்டத்தில் இருக்கிறதா? எமது மாணவர்கள் குறித்த தொழில் துறையில் வெற்றியீட்ட எல்லாப் பயிற்சிகளையும் கொடுக்கிறோமா என்று இல்லாமல் அங்கிருக்கும் விரிவுரையாளர்களின் வசதிக்கும், அறிவிற்கும் தகுந்த படி கற்கைகளை உருவாக்கி வெளிவிடுகின்றனர். 
Job market இனது demand இற்கு supply என்ற விதியைப் பின்பற்றாமல் நான் உற்பத்தி செய்வதை வாங்கிக் கொள் என்ற திமிர்தனமே இருக்கிறது. 
பெரும்பாலான IT கம்பனிகள் இந்த அரைகுறை உற்பத்திகளை மட்டம் பண்ணி polish செய்ய இன்னுமொரு இடை நிலை பயிற்சிக் கற்கையை வைத்திருக்கிறது. 
நல்ல தொழில் நுட்ப பயிற்சியைத் தந்தாலும் அவற்றை பிரயோகித்து தொழில் பெறக்கூடிய நிறுவனங்கள் வடகிழக்கில் உள்ளதா? பயிற்றுவிக்கப்படும் மனித வளத்தை உள்வாங்க நிறுவனங்கள் இருக்கிறதா?

Sunday, June 11, 2023

தந்திரசாஸ்திரத்தில் பசுபலி - விலங்குகளைப் பலியிடுதலும் யாழ்ப்பாணத்து வேள்வியும்

ஒரு அறிவிலி இரகசியமாக பாரம்பரியமாகச் செய்ய வேண்டிய சடங்கினை தனது பிரபலத்திற்காக முக நூலில் பதிய அது இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. இதைப்போல் KFC slaughter house வீடியோ வெளியாகியவுடன் உருக்கமாக KFC ஐ மூடச்சொல்லி போராடுவார்கள் என்று நம்புவோம். 
யாழ்ப்பாணத்து மரபில் கிடாய் - சேவல் பலியிடுதல் வேள்வி என்று சொல்லப்படும். 
பலியிடுதல் என்பது தொன்று தொட்டு மனிதகுலத்தில் இருந்து வரும் மரபு.
பலி என்பதன் அடிச் சொல்; பலம் என்பதாகும்; ஒருவன் தான் உண்மையான பலத்தைப் பெற எல்லையற்ற பலமுடைய இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்று யோக தந்திர சாஸ்திரம் கூறுகிறது; எம்மிடம் இருக்கும் உயர்ந்த ஒன்றை ஈஸ்வரனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் நாம் பலத்தைப் பெறலாம் என்பதே அடிப்படைக் கோட்பாடு. 
இந்த பலியிட்டு படைத்தல் என்பது இந்த அடிப்படையில்.. 
பலியிடுதல் பைரவ - சக்தி வாமாச்சார தந்திர முறையினைச் சார்ந்தது; இது மிகவும் procedural ஆக எப்படிச் செய்ய வேண்டும் என்ற விதி இருக்கிறது. காளிகா புராணம் எப்படி முறைப்படி மகிஷ (எருமை) பலி தேவிக்குத் தருவது என்பதைப் பற்றி விபரிக்கிறது. 
ஒரு மகிஷ பலியின் கட்கம் - வாள் மந்திரங்களால் சுத்திகரிக்கப்பட வேண்டும். வெட்டப்படும் மகிஷத்தின் முதல் இரத்தம் ஒரு துளியும் தரையில் சிந்தக்கூடாது; நைவேத்திய பாத்திரத்தில் பிடித்து தேவியின் கர்ப க்ரஹத்தில் எடுத்துச் சென்று தகுந்த மந்த்ரம், முத்திரைகளுடன் அர்ப்பணிக்க வேண்டும். பலிதருபவன், பூசாரி, அனைவரது தகுதிகள் ஒவ்வொன்றும் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணத்தின் அனேக கோயில்கள் வேள்வி எனப்படும் அஜ - ஆட்டுக் கிடாய், குக்குட - சேவல் பலி என்று தந்திர சாஸ்திர மரபு இருந்திருக்கிறது. குறிப்பாக வைரவர் கோயில்களிலும், அம்மன் கோயில்களிலும். இருந்தவை ஆறுமுக நாவலர் காலத்தில் ஆகம முறைப்படி வைதீக முறைகள் புகுத்தப்பட்டன. 
முற்காலத்தில் போர்க்குணம் பெறுவதற்கும் தன்னை தற்காத்துக்கொள்வதற்கு குறித்த ஒரு வீர பாவத்திற்கு தனது மனதைப் பழக்கும் ஒரு சடங்காக நாம் இதை கருதலாம். 
காளிகா புராணம் அரசர்களுக்கே உரியதான நரபலி பற்றிக் கூறுகிறது. இதன் அடிப்படை களத்தில் உணர்ச்சிகளற்று எதிரியைக் கொல்ல மனவலிமையைப் பெறுவதற்கான ஒன்றாகும். 
ஒன்றை எதிர்த்து வெல்லும் போர்க்குணம் பெற பலி அவசியம், இப்படி இல்லாவிட்டால் அந்த சமூகம் வத்தையும் சொத்தையுமாக ஆற்றல் அற்று அடிமைப்பட்டு விலங்குகளாக இருப்பார்கள் என்று சொல்கிறது தந்திர சாஸ்திரம்; 
நாம் பரிணாம முன்னேற்றத்தில் புத்தியின் ஆற்றல் பெருகும் போது இப்படி பலியிட்டு பலம் பெறத்தேவையில்லை என்று அறிந்துகொண்டதால் யோக ஞான மார்க்கங்கள் உருவாகியது.

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...