குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, June 18, 2020

தலைப்பு இல்லை

நேற்றுக் காலை 03:30 இற்கு எழுந்து எமது கையால் சக்கரைப் பூசணிச் சமையல்! பின்னர் பண்ணைக்கு விஜயம்; கறியின் சுவை பற்றி மூவர் Review தருவார்கள்! {Nishānthan Ganeshan Thava Sajitharan & Jenojan Kanthasamy}

பூசணியை சுவையாகச் சமைப்பதில் நுட்பம் இருக்கிறது! அது சமையல் இரகசியம்  அம்மாவுடன் போட்டி போடுவதற்காக இன்னும் அதை தனிப்பட்ட இரகசியமாகவே வைத்திருக்கிறேன். 

பூசணி தாவரங்களில் மிகப்பெரிய காயைத் தரும் தாவரம். இதனால் காய்களில் உயிர் சக்தி (பிராணன்) நிறைந்ததாக கருதப்பட்டது. இதனால் சடங்குகளில் உயிர் பலிக்குப் பதிலாக பாவிக்கப்படுகிறது. 

சித்தாயுர் வேதத்தில் பூசணியின் குணத்தை அதன் சுவை, வீரியம், விபாகம் என்ற அடிப்படையில் முத்தோஷங்களிலும், எப்படி தாதுக்களிலும் வேலை செய்யும் என்ற விளக்கத்தை கீழே தருகிறோம். 

இது இயற்கை விவசாயத்தில் விளைந்த சக்கரைப் பூசணி 

பூசணிக்காயின் குணம் பற்றி பதார்த்த குணம் கூறுவது! 

இயற்கை விவசாயத்தில் விளைந்த பூசணி என்றால் நீங்கள் சித்த ஆயுர் வேதத்தில் கூறப்பட்ட பலன்களை எதிர்பார்க்கலாம். ஏனெனில் அந்த காலத்தில் உரமும், பீடை கொல்லிகளும் தெளிக்கவில்லை! 


பெரும்பூசனிக் காய்க்குப் பித்தமோடு காய்ச்ச

லருஞ்சார நீர்க்கட் டருமே - மருந்திடுதற்

பித்தசுர மஸ்திசுரம் பேற்வறட்சி மேகமும் போம்

மெத்த வனிலமூறும் விள்


அனலழலை நீக்கு மதிபித்தம் போக்குங்

கனலெனவே வன்பசியைக் காட்டும் - புனலாகு

மிக்கவைய முண்டாக்கு மென் கொடியே யெப்போதுஞ்ச்

சக்கரப் பறங்கிக்காய் தான்

மென் கொடியாளே! 

(எமது அனேக சாஸ்திரங்கள், சிவனார் தனது மனைவியான பார்வதிக்கு உபதேசித்ததாகவே எழுதப்பட்டுள்ளது}


பூசணிக்காய் பித்தத்தைத் தணிக்கும், உட்காய்ச்சல், உடல் சூடு இருந்தால், மூத்திர எரிச்சல் இருந்தால் நீக்கும்.  உடலில் விஷங்கள் இருந்தால் அவற்றை நீக்கும். பித்தம் அதிகரிப்பதால் வரும் காய்ச்சல், எலும்பு தாது வலுவிழப்பதால் வரும் காய்ச்சல், உடல் வரட்சி என்பவை நீங்கும்! 

உடல் சூட்டைக் குறைக்க பூசணி நல்ல மரக்கறி! 

அதைச் சுவையாக சமைத்து - பக்குவமாக்கி உண்பது நோய் தீரும் மருந்து! 

இறுதியாக அறிவியல் பிரியர்களுக்கு, 

health benefits of pumpkin என்று Google செய்யுங்கள்; தேவையான தகவல் கிடைக்கும்.


Wednesday, June 17, 2020

தலைப்பு இல்லை

இன்று யானை - மனித முரண்பாடு, விவசாயத்தில் யானைப்பாதிப்பு, அவற்றைக் கட்டுப்படுத்தல் தொடர்பாக சிறு கள ஆய்வு! 

கலாநிதி. விஜயமோகன், கலாநிதி. நிசாந்தன், விவசாய ஆலோசகர். திரு. ரஜிந்தன், பண்ணை மேற்பார்வையாளர். திரு. ஜெனோஜன், வனவிலங்கு இலாக்கா உதவி இயக்குனர். திரு எதிரிசிங்க, GTZ நிறுவனத்தின் குழு ஆகியவர்களுடன்....

யானைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக அவதானிப்பதன் மூலம், அவற்றின் Behavioral pattern இனை ஆராய்ந்து அறிவதற்குரிய சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.


Tuesday, June 16, 2020

ஆச்சார்யன் + பட்டாரகர் + தேசிகர் = குரு

இன்று காண்பவர்கள் எல்லாரையும், பேஸ்புக்கில் எழுதுபவர்கள் எல்லாரும், அறிவுரை கூறுபவர்கள் எல்லோரையும் "குரு" என்று விளிப்பது ஒரு fashion!

இது முற்காலத்தில் எல்லோருக்கும் கடவுளின் பெயரான சுப்பிரமணியன், பரமசிவன் என்று பெயர் வைப்பது அந்த உயர்ந்த தத்துவத்தை நாளாந்தம் நினைவில் வைத்திருக்க ஏற்படுத்திய ஏற்பாடு என்ற நிலை போய் கொலையும், களவும் செய்யும் சுப்பிரமணியனும், வில்லன் பரமசிவமும் அதன் தத்துவங்களாக மாறிப் போனது போன்ற முட்டாள் தனம் இது. 

என்.டி ராமராவ் கிருஷ்ணன் வேடம் போட்டார் என்பது மறந்து போய் என். டி ராமராவ் தான் கிருஷ்ணன் என்று நம்பும் மடையர் கூட்டம் போன்றது. 

குரு என்ற தத்துவம் தந்திர சாஸ்திரத்தில் எப்படிப் பொருள் கொள்ளப்பட்டது என்பதை உபாச சிரேஸ்டர் அருட்சக்தி நாகராஜ ஐயா அவர்கள் தனது ஸ்ரீ வித்யா உபாசக தர்மம் என்ற நூலில் விளக்கியுள்ளார். 

ஆச்சார்யன் = யார் தனது நடத்தையாலும், பண்பாலும், செயலாலும் வழிகாட்டுகிறாரோ அவர் ஆச்சார்யன். 

பட்டாரகர் = யார் உலக பந்தங்களில் இருந்து எம்மை விடுவித்து, எம்மைத் துன்பங்களிலிருந்து ரட்சித்து கவருபவர். 

தேசிகர் = சீடனின் உபாசனா தெய்வத்தின் ரூபத்தில் கருணையைப் பொழிந்து வணங்கத்தக்க தகுதியுள்ளவர். 

மேற்குறித்த மூன்று வடிவங்களின் சேர்கையே குரு என்ற தத்துவம். யார் ஒருவரிடம் எமது ஆணவம், அகங்காரம் கரைந்து பரிபூரண சரணாகதி ஏற்படுகிறதோ, ஆன்ம முன்னேற்றத்தைத் தருகிறாரோ, அதனூடாக தன்னை உணர வைத்து பிரபஞ்ச உணர்வினை அடையச் செய்விக்கிறாரோ அவரே குரு எனப்படுவார். 

இப்படியில்லாமல் தகவல் களஞ்சியங்கள், அறிவாளிகள் எல்லோரையும் குரு என்று அழைப்பது அதன் உண்மையான பொருளிற்கு மாறானது. எம்மில் குழப்பத்தை தந்து உண்மை ஆன்ம முன்னேற்றத்தை தடுத்து விடும்.


Sunday, June 14, 2020

வாழ்க்கையை, எமது இருப்பை எது தீர்மானிக்கிறது?

நாம் எதற்காக வாழ வேண்டும் என்ற எமது எண்ணம்!
இதை ஜப்பானியர்கள் Ikigai (生き甲斐) இக்கி காய் என்று கூறுகிறார்கள். 
இதை எமது கலாச்சாரம் வாழ்விற்கான நோக்கம் அறம், பொருள், இன்பம், வீடு என்று கூறுகிறது. 
அறம் எமது இருப்பிற்கு நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம். 
பொருள் நாம் வாழ்வதற்கு தேவையான அடிப்படைத் தேவைகள்!
இன்பம் வாழும் காலத்தில் நாமும், எம்மைச் சூழ உள்ளவர்களும் இந்த உலகமும் இன்பமாக வாழ செய்ய வேண்டிய செயல்கள். 
வீடு எங்கிருந்து வந்தோம், எது எமது உண்மையான வீடு என்பதை அறிந்து அங்கு செல்வதற்குரிய வழியை வாழும் காலத்தில் ஒழுங்காகச் செய்து வைத்து விட்டு இறுதியாக சந்தோஷமாக மன அமைதியுடன் உடலை விடுதல். 
இதைச் சொல்லிக்கொடுப்பதை விட்டு விட்டு மருத்துவர் ஆவது தான் எமது இலக்கு என்று முட்டாள் தனமாக பள்ளிக் கூடத்தில் உசுப்பேத்தி விட்டால், மருத்துவக் கல்லூரிக்குச் சென்று முதாலாண்டில் நான்கு பாடம் சித்தியடையாவிட்டால் வாழ்க்கை இருண்டு சாகவேண்டும் என்று எண்ணம் வந்துவிடும். 
அல்லது மருத்துவனாகிவிட்டோம் என்ற ஆணவம் வந்து விடும்; இரண்டும் ஆபத்தானது. 
ஏன் மருத்துவன் ஆகவேண்டும் என்ற எண்ணம் தெளிவாக்கப்பட வேண்டும்; 
மருத்துவனாவது என்பது என்னையும், என்னைச் சூழ உள்ளவனையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, அது பெருமையல்ல, கடமை என்ற எண்ண எண்ணத்தை, அறத்தை விதைக்காமல் விடும் போதே எமது இருப்பிற்கான தேவையைக் குறுக்கி கொள்கிறோம்.
அதிலிருந்து வரும் பொருள் எனது வாழ்க்கையை இன்பமாக வாழப்போதுமானது மட்டுமே எனும் போதும் வாழ்க்கைக்கான இருப்பினை குறைத்துக்கொள்கிறோம். 
இறுதியாக வாழ்க்கை என்பது எல்லையற்ற ஒன்றை அடைவதற்கு என்ற எண்ணம் இல்லாதபோது வரும் சிறு சிறு துன்பங்கள் எல்லாம் நாம் எதற்காக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும். 
ஒருவன் தான் எதற்காக வாழ்கிறோம் என்ற தனது வாழ்க்கையின் பெறுமதியை நிர்ணயிக்காமல் விடும்போது தனது வாழ்க்கைக்கான இருப்பினைத் தொலைத்து விடுகிறான்.

தற்கொலை

திடீரென முக நூல் பிரபலங்கள் சிலர் தற்கொலை பற்றி பதிவிடுகிறார்கள்; என்ன காரணம் என்று உரையாடினால் அவர்களுடைய நண்பன் ஒருவன் அதுவும் மருத்துவ பீட மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான் என்ற சோகமான செய்தி கிடைத்தது. 

தற்கொலை எங்கே ஆரம்பிக்கிறது என்பதற்கு நவீன அறிவியல் உளவியல் பிரச்சனை என்று பல கதைகள் சொல்லும். 

யோக மனவியல் தனது ஆங்காரம் சார்ந்த பிரச்சனை என்று விளக்கம் சொல்லும். ஆங்காரம் என்றால் மனம் உருவாகுவதற்குரிய மையம் (center) என்று பொருள். 

உதாரணமாக நான் மருத்துவன் என்ற ஆங்காரத்தை - மையத்தை உருவாக்கினால் அந்த மையம் சார்ந்து எனது எண்ணங்கள், ஆழ்மனம், புத்தி என்பன உருவாகத் தொடங்கும். இப்படி உருவாகத் தொடங்கியதை மனம் இறுகப் பற்றிக்கொள்ள களிம்பாக ஆணவம் தொற்றிக் கொள்ளும். பிறகு இந்தக் களிம்பினைக் காப்பாற்ற யதார்த்தத்தை மீறி செயல்பட ஆரம்பிக்கும் போது அது வெற்றி பெறவில்லை என்றவுடன் துக்கம் வரும்.

இது social status இனை முதன்மையாகக் கொண்ட சமூகங்களில் வீட்டிற்கொரு வைத்தியர், பொறியியலாளர் உருவாக வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கும் சமூகங்களில் காணலாம். இந்த அழுத்தத்தால் உருவாக்கப்படும் பிம்பத்தை காப்பாற்ற முடியாத போது வேறு என்ன செய்வது என்று தெரியாமல் மனம் ஸ்தம்பித்துப்போய் தற்கொலையாக முடியலாம். 

அடிப்படையில் சந்தோஷமாக வாழ்வது என்பது தான் வாழ்வின் இலக்கு என்று சொல்லிக் கொடுக்காமல், முயற்சிப்பதில் தோல்வி அடைவது இயல்பானது என்பதை சொல்லிக் கொடுக்காமல் போட்டி போடுவதற்கும், தற்பெருமை பேசுவதை, பணச் செருக்கை தம்பட்டம் அடிப்பதை, சாதிச் செருக்கை ஊட்டி வளர்க்கும் சமூகங்களில் இப்படியான ஆணவங்கள் உடைபடும் சந்தர்ப்பங்களில் கொலையும், தற்கொலையும் நடைபெறுவதை அவதானிக்கலாம். 

தாவோயிசத்தின் மூன்று நியதிகளில் ஒன்று வெற்றியின் அபாயம்; அதீத வெற்றி என்பது உச்சி; உச்சிக்குச் சென்றால் விழாமல் இருக்க முடியாது என்பது தான் நியதி. 

இன்று இளைஞர்களிற்கு தேவை அக வாழ்க்கை! மனம் எப்படி இயங்குகிறது? எது உண்மையான வாழ்க்கையின் இலக்கு? இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்ற தெளிவு?

சமூகம் திணித்த வீண் பிம்பங்களுக்காக விலைமதிப்பற்ற உயிரை வீணாக்குவதல்ல!


Saturday, June 13, 2020

தலைப்பு இல்லை

நான் நூல்களைப் பற்றி நிறையப் பதிவு போடுவதால் நான் நூலறிவு நிரம்பப் பெற்றவன் என்ற நினைப்பில் என்னிடம் அந்தப் புத்தகம் இருக்கிறதா, இந்தப் புத்தகம் இருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்;

நான் அடிப்படையில் பிரயோக அறிவை எல்லாத் துறைகளிலும் தேடுபவன்; அதைத் துரிதமாகப் பெற ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ள அறிவைப் படித்தறிந்து கொள்ள வேண்டும், அல்லது நேரம் வீணாகிவிடும் என்பதற்காக நூல்களை துணை நாடுகிறேன். 

வாழ்க்கையினை செம்மைப்படுத்தாத, பிரச்சனைகளைத் தீர்க்க உதவாத எதுவும் தேவையற்ற அறிவு தான்! அவை வீணான குப்பைகள்! 

மனதிற்கு வேலை கொடுக்காவிட்டால் அது ஒரு குரங்காக அல்லது பேயாக மாறி விட்டால் ஆபத்து என்பதால் அதற்கு ஒரு நல்ல பழக்க வழக்கத்தை ஏற்படுத்தி ஒழுங்கிற்குள் வைக்க வேண்டும் என்ற பயிற்சிக்காக நூல் படிப்பதை முதல் தெரிவாக வைத்திருக்கிறேன். 

இதுதவிர இந்த நூலில் அப்படிச் சொல்லியிருக்கிறது, அந்த நூலில் அப்படிச் சொல்லியிருக்கிறது என்று உரையாடும் வகை அறிவாளி நான் அல்ல! 

எனது தனிப்பட்ட அனுபவத்தினை அறிவாக மாற்றி அழகு சேர்க்கும், உறுதிபடுத்தும் அறிவினைப் பெறுவதே நான் நூற்கள் படிப்பதன் நோக்கம். 

படிக்கும் விஷயங்களில் எனது புரிதலை அனைவருக்குமாக பகிர்ந்து கொள்கிறேன். 

ஆகவே என்னை ஒரு நூலகராக எண்ணிக் கொண்டு அந்த நூல் இருக்கிறதா? இந்த நூல் இருக்கிறதா என்று கேட்பதை நீங்கள் தாராளமாகக் கேட்கலாம், தவறில்லை, ஆனால் பதிலளிப்பது எனது சுதந்திரம் என்பதை அறிந்திருப்பது அவசியம் என்பதற்கே இந்தப்பதிவு!


சமையல் என்றால் என்ன?

சமப்படுத்தும் இயல் சமையல்; அதாவது சமப்படுத்தும் கலை சமையல்; நாம் உணவு சமைக்கிறோம் என்று கூறுகிறோம். உணவில் போடும் பதார்த்தங்களை அதன் குணங்களுக்கு ஏற்ற வகையில் சமப்படுத்தி உண்ண வேண்டும் என்ற அறிவு தான் சமையல். 

இன்று சமையற் கலை என்பது வாய்க்கு ருசியாக உண்பது என்பது; கண்கள் காட்டும் விளம்பரம் மனதைத் தூண்ட மனம் அதுவே நல்ல உணவு என்று நம்பும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் உணவை நல்ல உணவு என்று எண்ணுகிறோம். 

ஆனால் எமது உடல் ஆக்கப்பட்டுள்ள பொருட்களும், அந்த உடலுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய பொருட்களும் நாம் வாழும் இடம், காலநிலை, எமது  உடலின் ஆரோக்கியம் அறிந்து அதற்கு சமப்பட உண்ண வேண்டும் என்பதே சமையற் கலை. 

இதற்கு முற்காலத்தில் தினசரி உணவை சமைத்து புசிக்கும் முறையை நான்கு விதமாகக் கூறியுள்ளார்கள். 

சித்த பாகம் - யோகிகளுக்கும் சாதகர்களுக்குமுரிய தமது யோக சாதனை கெடாத உணவு முறை

வீமபாகம் - பஞ்ச பாண்டவர்களில் வீமன் இயற்றிய பொதுவான சைவ, அசைவ உணவு முறைகள்

நளபாகம் - பொதுவான சைவ அசைவ உணவு முறைகள்

தேவபாகம் - தெய்வங்களுக்கு நைவேத்தியம் செய்யும் முறைகள்

இவற்றில் குருநாதர் கூறிய ஒரு சித்த பாக உணவு உதாரணத்தைக் கூறி இந்தக் கட்டுரையை முடிப்போம் . 

பொதுவாக வெங்காயம் யோக சாதகர்களுக்கு ஒவ்வாத தாமஸ-ராஜச உணவு; தியானம் செய்யும் அனேகர் வெங்காயம் உண்ணக் கூடாது என்று கூறுவதைக் கேட்டிருப்பார்கள். ஆனால் இந்த தாமஸத்தை முறிக்கும் ஒரு இரகசியம் சித்த பாகத்தில் இருக்கிறது. அதுவேறொன்றும்  இல்லை - பசுத்தயிர்/மோர்; பசுத்தயிரில் சேர்த்துச் சாப்பிடப்படும் வெங்காயம் தமோ ராஜஸ குணத்தை உண்டு பண்ணாது. பசுத்தயிர் (எருமைத் தயிர் அல்ல!) வெங்காயத்தின் குணத்தை முறிக்கும்! 

இப்படி சித்த பாகம் அறிந்த யோகி தனது இக்கட்டான காலத்தில் பொதுவாகப் புசிக்கக் கூடாது என்று விலக்கப்பட்ட உணவுகளை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புசித்து அதன் குணத்தால் தனக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக இப்படியான அறிவினை பெற்றிருக்க வேண்டும்.


தலைப்பு இல்லை

எனது அப்பப்பா (தந்தையின் தந்தை) ஒரு சித்த ஆயுள்வேத வைத்தியர். ஆம் இப்போது உள்ளவர்கள் பாகுபடுத்தி நான் சித்த வைத்தியர் நீ ஆயுள்வேத வைத்தியர் என்ற பாகுபாடு எல்லாம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கவில்லை, அவரைப் பொறுத்தவரை மனிதனைக் குணப்படுத்த, ஆரோக்கியமாக வைத்திருக்கத் தேவையான அறிவினை பெற வேண்டும் என்ற அடிப்படையில் சரக சம்ஹிதையில் உள்ளவற்றையும், அகத்தியர் வைத்திய காவியத்தையும் குரு முகமாகப் படித்திருந்தார். நாடி நிதானத்திலும், மரணக் குறியிலும் வல்லவர்; வேதாரண்யம் சோமஸ்கந்த குருக்களிடம் முறையாக குரு குலவாசம் செய்து வைத்தியம் பயின்றவர்; சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கை ஆயுர்வேத சட்டம் வந்த போது மருத்துவ சபையின் பரீட்சை எழுதி சித்தி பெற்ற வைத்தியர். 

அவரிடமிருந்த யோக, வைத்திய நூற்களில் போர்ச் சூழல் அழித்தது போக எனது கையில் வந்து சேர்ந்தவை மிகச்சிலது. 

அவற்றில் இரண்டு 

போகர் சப்த காண்டத்தின் பழைய பதிப்பு

பதார்த்த குண சிந்தாமணி


Wednesday, June 10, 2020

வார்த்தைகளும் உணர்ச்சிகளும்

வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கங்களை அறிய முடியாத மனிதர்களுடன் வார்த்தைகளால் உரையாடுவது மிகக் கடினமானது! இறுதியில் தர்க்கத்தில் போய் முடிந்து பகையாகும்! 

ஒரே சொல் பலருக்கு அவரவர் அனுபவத்திற் கேற்ப வெவ்வேறு அக அனுபவங்களை ஏற்படுத்தி பலவித அர்த்தங்களைக் கற்பித்திருக்கும். இப்படியான சந்தர்ப்பத்தில் நாம் சரி என்று நினைத்துப் பிரயோகிக்கும் வார்த்தை அவர்களுக்குப் பிழையாகத் தெரியும்! 

எம்மை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் புரியாமல் அவர்களுக்கு நாம் உதவுகிறோம்; உபதேசிக்கிறோம்; வழிகாட்டுகிறோம்; நன்மை செய்கிறோம் என்று ஏதாவது செய்வதும் தவறாக முடியும். அவரவர் தம்மைச் சிறப்பாக தாமே நினைக்கும் போது நாம் அவர்களுக்கு உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்று நினைப்பது அவர்களை எரிச்சலூட்டும், சங்கடத்திற்குள்ளாக்கும். 

மனிதன் வார்த்தைகளால் தனது உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளவே தன்னைப் பழக்கப்படுத்தியிருக்கிறான். 

கொடுப்பதை வாங்கிக் கொள்ளவும், கூறுவதை ஏற்றுக் கொள்வதுமான மனநிலை இருக்கும் போது மாத்திரமே நாம் உதவுகிறோம், வழிகாட்டுகிறோம் என்பது ஆக்கத்தை உண்டு பண்ணும். 

அப்படி இல்லாவிட்டால் கல்லின் மேல் தெளிக்கும் நீர்ப் போல் இறுகிய மனத்துடன் உரையாடும் போது எண்ணங்கள் தெறித்து விழும்! 

ஆனால் மனிதனாகப் பிறந்த யாரும் பூரணமானவர்கள் இல்லை! அனைவரும் குறைகளுடன் பிறந்து தமது குறைகளைச் செம்மைப்படுத்தவே இந்த வாழ்வு என்ற புரிதலும் மற்றவர்கள் எம்மைச் செம்மைப்படுத்த உதவுகிறார்கள் என்ற புரிந்துணர்வும் எமது வாழ்வை சரியான கோணத்தில் பார்க்க உதவி செய்யும்!


தலைப்பு இல்லை·

Balkumar Marthi had tagged me to post covers of seven books, one a day each for a week. No reviews, just the cover page. Each day, I will ask a friend of mine to do the same. Today, I nominate Imith Udara to carry the fun forward  

Day#01


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...