யோகம் பயிலும் மாணவர்களை நான்கு நிலைகளில் வகைப்படுத்தலாம்
1) ஆரம்ப சாதகர்கள்
2) மத்ய நிலை சாதகர்கள்
3) அதிமத்ய நிலை சாதகர்கள்
4) இறுதி நிலை சாதகர்கள்
இங்கு முதல் இரண்டு நிலை சாதகர்களின் குறிகுணங்கள் இங்கே தந்துள்ளோம். ஒவ்வொரு சாதகர்களும் சுய பரீட்சை செய்துகொள்ள வேண்டுகிறோம்.
ஆரம்ப சாதகனின் குறிகள்:
1) மந்தஉத்ஸாகம் - ஆர்வம் குறைவு
2) புத்திசூன்யம் - புரிந்துகொள்வதற்கான அறிவு குறைவு
3) ரோககிரஷ்டா - ரோகங்கள் உடையவனாக இருத்தல்
4) குருதூஷகா - குருவின் வார்த்தைகளில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டிருப்பவன்
5) லொவி - பேராசை கொண்டிருத்தல்
6) பாபகார்யேலிப்த - பாபகாரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது
7) பகுபோஜனசில் - அதிக உணவருந்துதல்
8) ரமன்ப்ரிய - பெண்கள் மீது மையல் கொண்டிருப்பது
9) சஞ்சலம் - பதட்டம் சஞ்சலத்துடன் இருப்பது.
10) பரிஸ்ரமகதர் - சோம்பேறித்தனம்
11) ருக்னதேகம் - பலவீனமான உடல்
12) பராதின் - வேறொருவரில் தங்கியிருப்பவன்
13) அனிந்திரியம் - புலன் கள் மேல் கட்டுபாடு அற்றவன்
14) குஷித்வீர்ய - வக்கிரமான, நெறிதவறிய செயல்களும் எண்ணங்களும் உடையவன்
இந்த 14 குறிகளில் எவை இருப்பினும் அவர்கள் ஆரம்ப சாதகர்களாக கொள்ளப்பட வேண்டும். இவர்கள் தொடர்ச்சியான மந்திர சாதனையின் மூலம் மன, சித்த சுத்திகளை அடைந்து சாதனையில் முன்னேற வேண்டும்.
இப்படி முன்னேறிய சாதகனை கீழ்வரும் குறிகள் கொண்டிருப்பான்
1) சமபுத்தி - குரு சொல்லுவதை சரியாக புரிந்து செய்யும் தன்மை (ஸமபுத்தி)
2) மற்றவர்கள் செய்யும் தவறுகளை, துன்பங்களை எளிதில் மறந்து விட்டு தனது கடமைகளில் முன்னேறிச் செல்லும் பண்பு (க்ஷமாபான)
3) நல்ல காரியங்களை உற் சாகத்துடன் செய்பவன்
4) இனிமையாக பேசும் தன்மை உடையவன்
5) தான் செய்யும் காரியங்களின் பலனை எதிர்பார்க்காமல் மகிழ்ச்சியுடன் காரியங்களை ஆற்றக்கூடியவன்.
இவர்களே உயர் யோகங்களான கும்பகப் பிரணாயாமம், பிரத்தியாகாரம் என்பவற்றிற்கு தகுதியானவர்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.