தாவோவைப் பின்பற்றி
மக்களை வழி நடத்துவோர் தங்கள் ஆணைகளை
நிறைவேற்ற ஆயுதங்களைக்
கைக்கொள்வதில்லை
படைகள் செல்லும்
இடங்களில் முள்ளும் புதரும் வளரும் பூக்கும்.
படைகள் போர்க்களம்
புகுந்தபின்னர்
பட்டினி காலம் பின்
தொடரும்.
ஆற்றல் மிக்க தளபதி
ஒற்றைத் தாக்குதலில்
வெற்றிக்கு வழி காண்பான்
பிறகு தாக்குதலை அவன்
தொடர்வதில்லை
எதிரியை போரில் வெற்றி
கண்டபின்
அது
பெருமைபட்டுக்கொள்ளும் விஷயமில்லை
போர் முடிந்த பின்
மூர்க்கத்தனமே
புதிய பகைவன்.
மாற்று இல்லாதபோது போர்
பலனளிக்கும்
எனவே பகைவனை வென்றவன்
அவன் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.
காலம் எப்போதும்
பலசாலியைப் பலவீனப்படுத்தும்.
லாவோட்சு
தாவோ தே ஜிங்
{தமிழில்: சந்தியா
நடராஜன் மொழிபெயர்ப்பு}
*****************************
பதின்மூன்று
வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போரினால் தீர்வு என்றவர்களுடன் போரிட்டு வெற்றி
கொண்டவர்கள் தமது புதிய பகைவன் மமதை மூர்க்கம் என்பவர்களிடம் சிக்கி வெல்ல
முடியாமல் காலம் இன்று வலிமையற்று கோமாளியாக்குகிறது!
இவர்களை மூர்க்கமாய்
வெல்பவர்களை அடுத்த சுற்றில் மீண்டும் காலம் வீழ்த்தும்!
தாவோ இயற்கையின் நியதி!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.