நான் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வேலை நிமித்தம் (அப்போது யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்) காரில் பயணித்துக் கொண்டு மிகிந்தலையில் ATM இல் காசு எடுத்துவிட்டு மின்னஞ்சலை பரிசோதித்தால் ஒரு மேற்கத்தேய நபரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. செய்தி இதுதான்; எனது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை முனைவர் திருமதி கீதா ஆனந் இனது மொழிபெயர்ப்பினூடாக தான் கற்றதாகவும் தனக்கு தமிழ் சித்தர் இலக்கியங்களில் உள்ள யோக நுணுக்கங்களைக் கற்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார்.
சரி, தனியே ஒரு நபரிற்கு கற்பிப்பது கடினம், ஒரு சிறுகுழுவாக ஆர்வமுள்ளவர்களை ஒன்று திரட்டுங்கள் என்று கூற அகத்தியர் குருகுலம் பிரேஸில் நாட்டில் உருவாகியது.
சிரத்தையாக, பொறுமையாக இரண்டரை வருடங்களாக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு விடயமாக கற்று வருகிறார்கள். மிகுந்த தேடல் உள்ளவர்கள்; கற்பவர்களில் பலர் ஆயுர்வேதம் முறையாகப் பயின்றவர்கள்; பல்கலைக்கழக விரிவுரையாளர், இசைக் கலைஞர், சூழலியலாளர் என்று பலவித துறைகளில் நிபுணர்கள்.
அவர்களுடன் உரையாடிய உரைத்தொகுப்பை சில மாணவர்களின் முயற்சியால் edited video ஆக ஒவ்வொரு வாரமும் புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் ஹடயோக பிரதீபிகை உரை வெளிவருகிறது.
யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஹடயோக சாதகர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பாருங்கள்!
பார்த்தபின் like பண்ணுங்க, share பண்ணுங்க, இப்படி எல்லோரும் support பண்ணினாதான் channel வளர்ந்து இந்த வீடியோ செய்யும் முயற்சி எடுப்பவர்களுக்கு அவர்கள் வேலைக்குத் தகுந்த சன்மானம் கொடுக்க முடியுமாம்.
ஆகவே மறக்க வேண்டாம்.
மூன்றாவது பாகம்: முதல் கொமெண்டில்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.