துரியசந்தியில் காசிகாபுராதி நாத தரிசனம்
சுரபானம் என் கையால் ஏற்று அனுக்கிரகம்
அதிரும் உடுக்கைச் சத்தம் கர்மமெல்லாம்
உதிர்வித்து மூலாதார பைரவியை விழிப்பித்து
சகஸ்ராரம் சேர்ப்பித்து தூங்காமல் தூங்கும் நிலை
தந்தீர் ஆனந்த பைரவா
கோடிப் சூரியப் பிரகாச ரூபம்
தேடியும் கிடைக்காத ஜோதியாக
விஸ்வரூபம் கொள்ளும் விஸ்வ நாதர்
ஸப்த ரிஷிகள் பூஜை ஏற்கும் நேரம்
அகஸ்திய குலம் தழைக்க அகத்தில்
ஒளியாக நிலைத்து நிற்பீர்
அதிர்வுறும் பிரபஞ்சம் உம்மிருப்பு
இதையறியும் ஞானம் உம் கருணை
சிவரூப பைரவா நீயே என் ஆத்மா
எம்குரு சித்த நாகரை பைரவ சித்தராக்கினீர்
உம் கருணையால் பைரவ சித்தி அருளுவீர்
எமக்கு,
கர்மத்தால் மனதில் எழும் விருத்தியை
உமக்கும் சம்ஸான புருவமத்தியில் ஆகுதியாக்குகிறேன்
நீரே பிரபஞ்சத்தில் எல்லாமாக இருக்கும் போது
ஆரிங்கு பயம் தரமுடியும் எனக்கு
காசி எனும் புருவமத்தியில்
வாசி எனும் கயிறு கொண்டு
அக்ஷங்கள் இரண்டையும் நிறுத்தி
பிராணன் எனும் நெய்யூற்றி
எண்ணம் எனும் சமித்து இட்டு
பைரவ ஒளியில் ஆகுதியிட
பைரவ ஸித்தி எனும் அனுக்கிரகம் தந்தீர்
ஸ்ரீ ஸக்தி சுமனன்
துரிய சந்தி, வாரணாசி
09-Oct-2022
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.