விஞ்ஞானத்தின் சமூகப்
பயன்பாடும் அதன் நன்மை தீமைகளையும் பற்றி சிந்திக்க விரும்புபவர்கள் "The
Golem
what you should know
about science" என்ற இந்த நூலை வாசிக்க வேண்டும்.
Golem என்பது யூத
மந்திர தந்திரக்கலையில் மாந்திரீகர் களிமண்ணைக்கொண்டு ஒரு உருவத்தை உருவாக்கி
பிறகு தனது அக ஒளியினைப் பாய்ச்சி தனது காரியங்களைச் செய்துகொள்ளப் பாவிக்கும்
ஒன்று! இது எமது தாந்திரீகப் பிரயோகங்களில் க்ருத்யா என்று சொல்லப்படுகிறது. நவீன
அறிவியலின் mechine, robotic என்பவற்றின் ஆரம்ப வடிவம் இது.
இந்த நூலில் ஆசிரியர்
அறிவியலை Golem என்று குறிப்பிடுகிறார். அறிவியல் சிலரால் அசுரனாகவும், தீமைபயப்பதாகவும்
பார்க்கப்படும்போது அது மனித குலத்திற்கு வரப்பிரசாதம் உடையதாகவும்
கருதப்படுகிறது. இந்த இரண்டும் உண்மையானது.
இதை விளங்கிக்கொள்ள
Golem என்ற உருவகத்தை விளங்கிக்கொள்வது அவசியம். Golem என்பது மனிதன்
உருவாக்கியது; சிறிது காலத்திற்கு பிறகு மனிதன் தான் உருவாக்கினேன் என்பதை மறந்து
விட்டு Golem இனது அடிமையாகிப் போகிறான். இதுதான் அறிவியலிற்கு நடக்கிறது. மனிதன்
தான் உருவாக்கிய Golem இடம் சரணடைந்து விட்டு தான்தான் அதை உருவாக்கியவன் என்ற
உணர்வை இழந்துவிடுகிறான்.
மந்திர சாஸ்திர
விதிகளின்படி இத்தகைய Golem போன்ற ஆற்றல்களை உருவாக்கக் கூடியவர்கள் அதன் மீது
பரிபூரண கட்டுப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும். அப்படி ஆற்றல் இல்லாதவர்கள்
இதைப் பயன்படுத்தினால் ஆபத்து.
இதைப்போலவே அறிவியல்
விஷயங்களின் அடிப்படையும், அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்களும் அறிவியலை
கையிலெடுத்து வியாபாரமாக்கும் போது அறிவியல் கட்டுப்படுத்த முடியாத Golem ஆக
மாறிவிடுகிறது.
இதற்கு நல்ல உதாரணம்
1800 களில் தாவர வளர்ச்சிக்கு இரசாயனப் பொருட்களின் பயன்பாடு பற்றி Liebig என்ற
இரசாயன விஞ்ஞான வியாபாரி கண்டுபிடித்த law of minimum என்ற golem கட்டுப்படுத்த
முடியாத இராட்சசனாக மாறி இன்று உரம் இல்லை என்றால் விவசாயம் செய்ய முடியாது என்று
மக்களைப் புலம்ப வைத்திருக்கிறது. 10000 வருடமாக மனிதன் இயற்கையை நம்பி விவசாயம்
செய்ததை மறந்து விட்டு Liebig இன் golem தான் தனக்கு படியளக்கிறது என்று நம்பியதன்
விளைவு இது!
ஆகவே அறிவியல் சரியாக
புரியப்படாமல், தவறாக பயன்படுத்தினால் golem - அசுரனாக மாறி துன்புறுத்தும் என்பதை
சமூகவியல் அடிப்படையில் இந்த நூலில் விளக்கியுள்ளார்கள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.