நேற்று ஒரு
விவசாயப்பட்டதாரியுடன் உரையாட நேரிட்டது. அரசாங்கம் சேதன விவசாயத்திற்கான விதைகளை
பரிந்துரைப்பதில்லை. ஏனென்றால் சேதன விவசாய உள்ளீட்டினால் எவ்வளவு விளைச்சல் வரும்
என்று கணிக்க முடியாது என்றார்; இந்தக்கூற்று முற்றிலும் தவறானது.
மேலே உள்ள பிரச்சனையைப்
புரிந்துகொள்ள hybrid விதைகள் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். hybrid
விதை என்பது ஒரு தாவரத்திற்கு இரசாயன உள்ளீட்டினைக் கொடுக்கும்போது ஒரு சில
தாவரங்கள் உற்சாகமாக விளைச்சல் காட்டும். போதை மருந்து கொடுத்தால் கொடுக்கும்
முதலாளிக்காக ஆக்கிரோஷமாக வேலைசெய்யும் நபர் போல. இப்படி நல்ல துலங்கலைக் காட்டும்
தாவரங்களில் உள்ள மகரந்தங்களை மனிதர்கள் எடுத்து செயற்கையாக காய் உருவாக்கிப்
பெறப்படும் விதைகள்தான் இந்த ஹைபிரைட் விதைகள். இவர்கள் போதையில் பிறந்த பேதைகள்
என்பதால் இவர்களும் அவர்கள் பெற்றோர்களைப் போல் இரசாயன உரம் என்ற போதை இல்லாமல்
வளர முடியாது.
இதைப் பற்றியெல்லாம்
ஆராயாமல் வெறுமனே பத்திரிகை படித்துவிட்டு இயற்கை விவசாயத்தில் ஆறுமாதத்தில் ஆறு
இலட்சம் என்ற கவர் ஸ்டோறி படித்து உசுப்பேறி விவசாயம் செய்யப்போகிறேன் என்றும்
சொல்கிறவர்களிற்கு, விவசாயிக்கு இந்த விதைகளைக் கொடுத்து அவற்றை பயிரிட்டு பயிர்
வரவில்லை என்றால் சேதனவிவசாயம் சரிவராது என்று சொல்லி ஏமாற்றிவருகின்றனர்.
சேதன விவசாயத்திற்குரிய
முறை மண்ணிற்கு சேதனப் பசளை, ஜீவாம்ருதம் போடும்போது இயற்கையாக மகரந்த
சேர்க்க்கையில் அல்லது ஹைபிரைட் மூலமாகவோ நல்ல விளைச்சல்களைக் காட்டும் பண்பான
பயிர்ப் பிள்ளைகளைத் தேர்வு செய்து அவர்களிடமிருந்து விதைகளைப் பெற வேண்டும். இதை
நாம் செய்யவில்லை என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாமல் வலுவற்ற கருத்துக்களுடன்
விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.
இங்கு குறை கூறி
விவாதிப்பதால் உணவுப் பிரச்சனை தீராது; எங்கு உண்மையான பிரச்சனை இருக்கிறது என்பதை
அறிவியல் கண்கொண்டு பார்க்கும் கூர்மதி வேண்டும்.
இயற்கையை நாம் அன்னையாக
வழிபடுவதற்குக் காரணம் எமக்குத் தேவையான அனைத்தையும் உருவாக்கி வைத்திருப்பதால்.
ஒரு தாவர இனத்திற்குள்
இரசாயன உரத்திற்கு அதிக விளைச்சலைக்காட்டும் ஜீன்கள், வரட்சிக்கு
தாக்குப்பிடிக்கும் ஜீன்கள், சேதன மண்ணிற்கு, உள்ளீட்டிற்கு அதிக விளைச்சலைக்
காட்டும் இனங்கள் என்று எல்லாம் இருக்கும். நாம் இரசாயன உரத்திற்கு துலங்கல்
காட்டுவதை மாத்திரம் அறிவியல் என்று நம்பிக்கொண்டிருக்கும் முட்டாள்களாக
இருக்கிறோம்.
விவசாயத்துறையில்
இருப்பவர்கள் இவற்றையெல்லாம் ஆராய்ந்து தொகுத்து இப்படியான சூழல் வரும் போது
அதற்கு தீர்வு இதுதான் என்று சொல்லும் ஆற்றலுடையவர்களாக இருக்க வேண்டும்.
இலங்கையின் தற்போதைய
நிலவரத்தில் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிரச்சனைகளுக்கு
புத்தாக்கமாக - innovative ஆக மாற்றுத்தீர்வினை கண்டுபிடிக்கத் தெரியாமல் அரைத்த
மாவை அரைத்தால், அதுவும் விவசாயத்துறையில் நடந்தால் மக்களின் உணவிற்கு என்ன நடக்கும்?
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.