குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 13, 2019

ஏன் பாரதம் புண்ணிய பூமி, இலங்கை சிவபூமி மெய்ஞானம் விஞ்ஞானம்

மனித குலத்திற்கு தேவையான அக வாழ்க்கையை விந்தியமலைக்கு தெற்கே உள்ள தென் இந்திய சமூகமும், இலங்கையும் அடக்கம் - ஆதி தமிழர்கள், சீனாவும், மாயன் நாகரீகமும், ஆபிரிக்க பழங்குடிகளும் கொண்டிருந்ததற்கு ஒருவித புவியியல் காரணம் இருப்பதாக நம்புகிறேன். 

மனித குலம் தோன்றியதாக அறிவியலால் நிருபிக்கப்பட்ட ஆபிரிக்க கண்டத்தில் புவியின் அதி குறைந்த ஈர்ப்பு விசை உள்ள இடம் இருக்கிறது. 

மனித குலத்தின் அகவயப்பட்ட சிந்தனைக்கும் புறவயப்பட்ட சிந்தனைக்குமான வளர்ச்சி புவிக்கும் அண்டத்திற்குமான தொடர்பில் தங்கியுள்ளது என்பதே இதன் அடிப்படைக் கருதுகோள். 

இதனை நிருபிக்க புவியீர்ப்பு விசை வரைபடத்தை உற்று நோக்க மிக தர்க்க ரீதியான விடை கிடைத்தது. 

நான் மேற் குறிப்பிட்ட நாகரீகங்கள் தோன்றிய இடங்கள் எனப்படுபவை அதி குறைந்த புவியீர்ப்பு விசை உள்ளவை. படம் பார்க்க நீல நிறத்தால் குறிப்பிடப்படும் இடங்கள். https://en.wikipedia.org/wiki/Gravity_of_Earth...

புவியீர்ப்பு குறைவு என்பதை அண்டத்தின் தாக்கம் குறைவு என்று இன்று ஏற்றுக் கொள்ளக் கூடிய General Relativity Theory இன் படி கூறலாம். ஆக அண்டத்தினால் அதிக விசை தாக்காத இடத்தில் இருக்கும் மனிதன் சூழலின் பாதிப்பிலிருந்து அகவயத்தை நோக்கி செல்லுவதற்கு ஏதுவான வெளிச் சூழலின் உதவியை இலகுவாகப் பெறுகிறான். ஆகவே இந்த இடங்களில் தியானம், தவம் போன்ற அகவாழ்க்கை மேம்பட்ட மனித குலம் உருவாகியது எனலாம். 

மற்ற இடத்தில் உள்ளவர்கள் பூமியிடம், அண்டத்தின் விசையிடம் அடி வாங்குபவர்கள்! ஆகவே அவர்கள் இயற்கைக்கு எதிராகவும், இயற்கையை வெல்லவும் முயற்சிக்கும் சிந்தனைப்போக்கை உடையவர்கள்! 

இலங்கையின் பழங்குடி கர்ண பரம்பரை இராவண கதையில் இராவணனிடமிருந்த சந்திர ஹஸ்தம் என்ற வாள் அவன் விண்ணுலகம் சென்று வர உதவியதாக கதைகள் உண்டு! இராவணன் புஷ்பக விமானம் இலங்கையில் வைத்திருந்தான் என்ற கதையிற்கும் இந்த குறைவான ஈர்ப்பு விசைக்கும் தொடர்பு இருக்கலாம்! 

மேலும் இந்த இடங்களில் புவி ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால் விண்வெளிக்கு தப்பிச் செல்லுதல் இலகுவான விஷயம். 

இப்படி அண்டத்தின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்பி அகவாழ்க்கையில் முன்னேறக்கூடிய புவி ஈர்ப்பு விசை குறைந்த இடங்கள் என்பதால்தான் பாரதத்தை புண்ணிய பூமி என்றும் இலங்கையை சிவபூமி என்றும் எழுதி வைத்தார்களோ? 

எதிர்காலத்தில் இந்தக் கோட்பாடு நிருபிக்கப்படும் போது ஸ்ரீ ஸக்தி சுமனனின் பூவி ஈர்ப்பு சக்தியின் மனித சிந்தனை பரிணாமத் தூண்டலுக்கான கோட்பாடுகள் (Theory of Earth Gravitational force Induced Human thinking evolution) என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்படலாம்!    


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...