குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, May 03, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 23: நாமங்கள் 49 - 53


ஸர்வாருணாயை (49)
(ஆடை, ஆபரணம்,உருவம்) எல்லாவற்றிலும் சிகப்பு வர்ணமானவள்

ஸர்வ – எல்லாவற்றிலும், அருணம் – சிவப்பு, தேவியுடன் தொடர்புடைய அனைத்தும் சிவப்பு வர்ணமானவை. இந்த விடயம் பல நாமாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சௌந்தர்ய லஹரி (96) கூறுகிறது கருணா காஞ்சித் அருணா என்று, இதன் பொருள் தேவியின் கருணை சிவந்த நிறமுடையதும், சாதாரண அறிவினால் அறியப்படமுடியாததுமாகும்.

இதே நாமம் லலிதா திரிசதியில்(138) காணப்படுகிறது. யஜூர் வேதம் (4.5.1.7) ஸய்ஸசௌ யஸ்தம்ரோ அருண உத பப்ருஹ் சுமங்கலா (இது ஸ்ரீ ருத்ரம் 1.7 இல் வருகிறது) எனக் குறிப்பிடப்படுகிறது. இது அருணா (சூரியன் உதிக்கும் போது உள்ள நிறம்) என்பது செம்பு உருகும் போதுஉள்ள நிறம் இது மிகவும் புனிதமானது. சிவப்பு நிறம் புனிதமானது என ஸ்ருதி(வேதங்கள்) சொல்கிறது. இதனால் அவளது நிறத்தின் மகிமைபற்றி மேலதிகமாக கூறத்தேவையில்லை.

அநவத்யாங்க்யை (50)
குறைவற்ற அழகு வாய்ந்த அங்கங்களையுடையவள்

 தேவியினுடைய அனைத்து அங்கங்களும் சாமூத்திரிகா லட்சண சாஸ்திரத்திற்கமைய பூரணமானவை, நிர்குண பிரம்மம் (குணங்கள் எதுவுமற்ற) சகுண பிரம்மம் (குணங்கள் உடைய) ஆகிய இரண்டும் தேவியின் வடிவம். சகுணபிரம்மம் பற்றி அறியும் போது உருவமும் குணங்களும் கூறப்படுகிறது. இங்கு சகுணப்பிரம்மம் பற்றியே கூறப்படுகிறது. பிரம்மம் எப்போதும் பூரணமானது.

ஸர்வாபரண-பூஷிதாயை (51)
ஸர்வாபரண பூஷிதையானவள்

எல்லவித ஆபரணங்களும் அணிந்திருக்கிறாள். காளிகா புராணம் நான்கு வகையான ஆபரணம் பற்றி குறிப்பிடுகிறது. ஸ்ரீ சக்ர பூஜையினைப் பற்றி குறிப்பிடும் பிரதான நூலான பரசுராம கல்பசூத்திரம் பலவித ஆபரணங்கள் பற்றி குறிப்பிடுகிறது. லலிதா திரிசதி 140 நாமம் அதே பொருளினையே தருகிறது.

பல உரையாசிரியர்களும் அறிஞர்களும் இந்த நாமாவுடன் தேவியில் உருவ வர்ணனை முடிவுறுகிறது என்றே கூறுகின்றனர். சில அறிஞர்கள் 55 நாமாவரை உள்ளது எனக்குறிப்பிடுகின்றனர். எப்படியாயினும் 48 முதல் 51 வரை தேவியின் பிரகாச விமர்ச ரூபம் விபரிக்கப்பட்டுள்ளது.

சிவ-காமேஸ்வராங்கஸ்தாயை (52)
காமேசுவரனான சிவனுடைய துடை மேல் அமர்ந்தவள்

அவளுடைய அமர்வு பற்றிய விபரணை இந்த நாமத்துடன் தொடங்குகிறது. தேவி சிவனின் இடது தொடையில் அமர்ந்திருக்கிறாள். இது சகுண பிரம்மத்தின் வடிவம். சிவன் ப்ரகாச வடிவம் – சுய ஒளியுடைய வடிவம், சக்தி அவருடைய விமர்ச வடிவம். அவர்கள் இருவரது வடிவத்தையும் தியானிப்பது இவ்வாறு தியானிப்பது ஒரு உயர்ந்த தியான முறையாகும். ஏன் தேவி இடது துடையில் அமர்ந்திருக்கிறாள்? இதயம் இருப்பது இடது புறத்தில், தேவி சிவனின் இதயத்திற்கு அருகில் அமர்ந்திருக்கிறாள்.

காம என்றால் அழகான, ஆசை, காதல் தேவதையான மன்மதன் என்பவற்றை குறிக்கும் சொல். அத்துடன் காம என்றால் அறிவையும் குறிக்கும். சிவா என்றால் மங்களம் என்று பொருள், ஈஸ்வரன் என்றால் எல்லவற்றையும் ஆழ்பவன் என்று பொருள். அறிவு என்பது சிவனுடைய ஒரு வடிவம். இதயத்தினாலும் மனதினாலும் அறியப்படுவது அறிவு. இதில் சகுணப் பிரம்மத்தின அனைத்து தன்மைகளும் அடக்கப்பட்டுள்ளது. இது சகுணபிரம்ம வடிவம், ஏனெனில் இது வடிவையும் குணத்தினையும் பற்றி கூறுகிறது. நிர்குணபிரம்மம் எதுவித வடிவோ குணமோ அற்றது. மாயா சக்தி அல்லது மயக்கம் பிரம்மத்துடன் இணைந்து இருக்கும் போது அது சகுணபிரம்மமாகிறது. இந்த சகுணப்பிரம்மமே சக்தி அல்லது ப்ரகாச விமர்ச மஹா மாய ஸ்வரூபிணி எனப்படுகிறது. ஏன் காம என்று இங்கு கூறப்படுகிறது. காம என்பது இங்கு காதல் தேவதையான மன்மதனை குறிப்பிடவில்லை. இது உலகஆசையிலும் மேலான உயர்ந்த ஒரு ஆசையினை குறிப்பிடுகிறது, பிரம்மத்தின் சக்தியின் ஊடாக உலகைபடைத்து ஆளும் விருப்பத்தினை குறிக்கிறது. இது சிவத்தின் மிக உயர்ந்த புனிதமான வடிவம். உண்மையில் இயக்க நிலைப்பண்பு சக்திகளைப்பற்றியே இங்கு பேசப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் ஆக்கம்பற்றியும் கூறுகின்றது.

சிவாயை (53)
சிவவடிவானவள்

சிவனிற்கும் சக்தியிற்கும் இடையில் எதுவித வேறுபாடும் இல்லை. ஆதலால் சக்தி சிவாயை என அழைக்கப்படுகிறாள். சிவம் என்றால் மங்களம் என்று பொருள்.  தேவி உடலுடன் உள்ள மங்கள வடிவானவள். தேவி சிவனின் இச்சா சக்தி வடிவானவள். மூன்று வகையான சக்திகள் காணப்படுகிறது. இச்சா (ஆசை) ஞானா (அறிவு) க்ரியா (செயல்) என்பனவே அவை. சிவனே பிரம்மன் ஆதலால் சிவனிற்கு எதுவித ஆசைகளும் கிடையாது. ஆனால் அவனது இச்சாசக்தி லலிதையினூடாக பிரதிபலிக்க செய்கிறது. அந்த இச்சை தன்னை அறிதலுக்கான ஆன்ம இச்சை. “யதா சிவா ததா சக்தி, யதா சக்தி ததா சிவா” என்பது வாக்கியம். எங்கு சக்தியுள்ளதோ அங்கு சிவம் இருக்கும், எங்கு சிவம் உள்ளதோ அங்கு சக்தி இருக்கும். ஆதலாலேயே சிவத்திற்கும் சக்தியிற்கும் வேற்றுமை இல்லை எனப்படுகிறது. பார்வதியும் பரமேஸ்வரனும் பிரிக்க முடியாதவர்கள் எனக்கூறப்படுகிறது. இது ஒரு வார்த்தையையும் அதன் அர்த்தத்தினையும் பிரிக்க முடியாதது போன்ற தன்மை. இவர்கள் இருவரையுமே பிரபஞ்சத்தின் தாயாகவும் தந்தையாகவும் கூறப்படுகின்றனர். சாஸ்திரங்கள் உமை(சக்தி)யிற்கும் சங்கரனுக்கும் (சிவன்) வித்தியாசம் இல்லை எனக்கூறுகிறது. சங்கரி சிவனின் மனைவி அதனால் சிவ சங்கரி என அழைக்கப்படுகிறாள்.

அவளே மாயாசக்தி, ஒருவனுடைய உணர்வுடன் தொடர்புடைய சக்தி. அவள் பார்ப்பதற்கு எப்படி இருப்பாள்? அவள் அறிவு வடிவானவள், சுய பிரகாசம் உடையவள், தன்மைகள் அற்றவள், சம்ஸாரத்தினை அழித்து பேரானந்தத்தினை அளிப்பவள். அவளே சிவமாகிய உயர்ந்த தேவி, சமுத்திரமளவு கருணையினதும் இரக்கத்தினதும் வடிவானவள். மனிதன் பெறக்கூடிய அறிவெல்லாம் அவளிலிருந்தே வருகிறது.

இங்கு முக்கியமான இரு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று லலிதா சிவனில் இருந்து வேறானவள் இல்லை என்பது. சிவம் சக்தி ஆகிய இருவரும் ஒரே வடிவினை உடையவர்கள். அறியாமயினாலேயே நாம் இருவரையும் வேறானவர்கள் என்று கருதி வழிபடுகிறோம். இரண்டாவது இந்த நாமத்தில் கூறிய வடிவினை தொடர்ச்சியாக தியானித்து வருவோமானால் அந்த நபர் வாழ்வில் எல்லாவித மங்களங்களையும் பெறுவார் எனபது. இந்த விடயம் அடுத்துவரும் நாமத்திலும் விபரிக்கப்படுகிறது. 


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...