குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, May 04, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 24: நாமங்கள் 54 - 58


ஸ்வாதீன-வல்லபாயை (54)
தன்வயப்பட்ட பர்த்தாவையுடையவள்

தேவியினுடைய கணவராகிய சிவன் அவளுக்கு மாத்திரமே உரியவர். இது முதல் நாமத்தின் விளக்கத்தினை உறுதிப்படுத்துகிறது. முந்தைய நாமத்தில் சிவன் தன்னுடைய மூன்று தொழில்களை செய்வதற்கு சக்தியினை படைத்தார் என்பதனைப் பார்த்தோம். இந்த தனிக்காரணத்திற்காக இயக்க சக்தியான சக்தியினை நிலைச்சக்தியான சிவத்திற்கு எதிராக படைத்தார். அவள் மட்டுமே சிவத்தினுடைய ஒரேயொரு படைப்பு, ஆதலால் சிவம் அவளுக்கு மட்டுமே உரித்தான ஒருவர். சிவம் இந்த பிரபஞ்சத்தின் மூலகாரணம், அவருடைய ஆற்றல் சக்தி. இந்த ஒருங்கிணைப்பு இல்லாமல் இந்த பிரபஞ்சம் இயங்கமுடியாது. இது சௌந்தர்ய லஹரியிலும் (01) உறுதி செய்யப்பட்டுள்ளது. சக்தியுடன் இணையாமல் சிவனால் ஒரு அங்குலமும் அசைய முடியாது.

இதனை கீழ்வருமாறு விளக்க முடியும்; பிரம்மன் எல்லாமும் ஆன ஆதிப்பொருள். ஆன்மா உயிரினையும் கர்மங்களையும் உள்வாங்கி ஜீவாத்மாவாகிறது. பிரம்மனோ ஆன்மாவோ தனாகவே உயிரினை உண்டாக்க முடியாது. பிரம்மத்திற்கு தனது முழுமையை செயற்படுத்த ஆன்மா தேவை, ஆன்மாவிற்கு பிறப்பெடுக்க பிரம்மம் தேவை. சௌந்தர்ய லஹரி (01) கூறுகிறது, சிவம் தனியே செயற்பட முடியாது, அதுபோல் சிவமின்றி சக்தி செயற்படமுடியாது என்று,  என்று. இவை சக்தியைப்பற்றி குறிப்பிடப்படும் வார்த்தைகளாக இருப்பதால் இப்படிக்கூறப்படுவது ஒரு கவித்துவமான வர்ணனையாகும்.

இந்த நாமத்துடன் லலிதையின் பௌதீக உருவ வர்ணணை முடிவுறுகிறது. 53வது நாமத்தில் இருந்து 64வது நாமம் வரை லலிதை வசிக்கும் ஸ்ரீ நகரத்தின் வர்ணணை ஆரம்பமாகிறது. 13 தொடக்கம் 54 வரையிலான நாமங்களை அவதானித்து பார்த்தால் தேவியினுடைய அங்கங்களை வர்ணிப்பதைக் காணமுடியும். இந்த சஹஸ்ர நாமத்தில் மட்டும் அல்லாது சௌந்தர்ய லஹரியிலும் இத்தகைய வர்ணணைகளைக் காணமுடியும். பொதுவாக தேவியினுடைய அங்க அழகு பற்றிய இத்தகைய வர்ணணைகள் அனுமதிக்க கூடியதா? என்ற கேள்வி எழும். இது பற்றி இரண்டு வகையான பதில்களை கூறலாம். ஒன்று கவித்துவம், கவிதைகளில் இத்தகைய சிருங்கார ரஸவர்ணணைகள் இருப்பதற்கு அனுமதி உண்டு. அப்படியாயின் அது ஆதிசங்கரன் அருளிய சௌந்தர்ய லஹரிக்கு மட்டுமே பொருந்தும். எப்படி மிக உயர்ந்த ஞானியான சங்கரர் இப்படியான வர்ணணைகளை கூறமுடியும்? சங்கர் சாதாரண மனிதர் அல்ல, சிவனின் அவதாரமாக கருதப்படுகிறார். இது உண்மையானால் இந்த வர்ணணைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. அப்படியாயினும் ஏன் எல்லோரும் அறியும் வண்ணம் பொதுவில் இத்தகைய வர்ணனைகளை கூறினார் என்பது கேள்வியாகிறது. இதற்கான பதிலினை அறிவது கடினம். இதற்கான பதில் மிகவும் சூட்சுமமானதாக இருக்கும். சாதாரண நிலையில் அறிந்துகொள்ள கடினமாக இருக்கும்.

இந்த சஹஸ்ர நாமத்தினை எடுத்துக்கொண்டால் வாக்தேவிகளால் உருவாக்கப்பட்டது. வாக்தேவிகள் எப்போதும் லலிதாம்பிகையுடன் வசிப்பவர்கள். மேலும் இந்த சஹஸ்ர நாமம் லலிதாம்பிகை முன்னிலையில்படித்து காண்பிக்கப்பட்டு அவளின் அனுமதி பெறப்பட்டது. ஆகையால் அதில் ஏதும் பிழைகள் இருப்பின் அந்தக்கணமே லலிதை வாக்தேவிகளை கடிந்திருப்பாள். அதனை செய்யவில்லை. ஆகவே இந்த நாமங்கள் லலிதாம்பிகையின் அனுமதி பெற்றவை என்பது தெளிவாகிறது. அதுபோல் பஞ்சதசி மந்திரத்தினை தேவியின் உடலுடன் இணைத்து தியானிக்கும் தியானம் மிகவும் இரகசியமானது, அதனை முற்பகுதிகளில் வெளியிட்டிருந்தோம்.

கீழ்வருவனவே சஹஸ்ர நாமத்திலோ அல்லது வேறேங்கோ இத்தகைய வர்ணணைகளுக்குரிய காரணமாக இருக்க முடியும். முதலாவது கவித்துவ அடிப்படையில் இந்த வர்ணணைகளை ஏற்றுக்கொள்ள முடியும். கவித்துவத்தினை காட்டுவதற்கு இத்தகைய வர்ணணைகளை கூறுவது இயல்பானது. இரண்டாவது இவற்றைப்படிக்கும் பக்தர்களின் மன நிலையினை எவ்வாறு எழுச்சி அடைகிறது என்பதினை சோதிப்பது. உயர்ந்த விழிப்புணர்வு நிலையினை அடைவதற்கு முன்னர் இத்தகைய சோதனைகளை தாண்டுதல் அவசியம். முன்றாவது அத்தகைய வர்ணணைகள் மாயா சக்தியின் விளையாட்டுகளில் ஒரு பாகம். ஒருவனிலிருந்து மாயா சக்தி நீங்கும் வரை பிரம்மத்தினை அறிய முடியாது. இந்த முயற்சியினை மாய சக்தியின் பார்வை எப்போதும் தடுத்துக்கொண்டு இருக்கும். அத்துடன் இது குண்டலின் சக்தியினையும் அது பயனிக்கும் பாதைகளையும் குறிப்பிடும். இவற்றுக்கெல்லாம மேலாக இதன் உள்ளர்த்ததினை அறிவது மிகக்கடினமான ஒன்றாகும். ஒருவன் இந்த மாய உலகின் நடனத்தினை நன்கு புரிந்துகொண்டு, அது ஆசைகளால் நிரம்பியது என்றும் ஒருவன் அந்த ஆசைகளை கடந்து உயர்ந்த உணர்வு நிலைக்கு செல்ல இந்த உண்மைகளை புரிந்துகொண்டே கடக்கவேண்டும் என்பதனை நன்கு அறிந்து கொள்ளவேண்டும். அதன் பின்னரே பிரம்மத்தினை அறியமுடியும். இந்த விடயத்தினைப்பற்றிய உரையாடலினை முடிப்பதற்கு முன்னர் ஒருவர் நிர்குண பிரம்மம் என்பது குணங்களும் உருவமும் அற்றது என்பதனையும் நிர்குண பிரம்மத்தினை உணர்வதற்கு  முதலி சகுண பிரம்மத்தினை உணரவேண்டும் என்பதனையும் மறக்கக்கூடாது. இந்த வர்ணணைகள் இந்த விடயம் பற்றி பூரண அறிவு அற்றவர்களுக்கு (பிரம்மம் என்றால் என்ன என்று அறியாதவர்களுக்கு) குறைந்தது சகுணபிரம்மத்தினை உருவகப்படுத்தி ஆன்மீகப்பாதையில் முன்னேற உதவும் என்பதனை அறிதல் வேண்டும்.

ஸுமேரு-மத்ய-ஸ்ருங்கஸ்தாயை (55)
மேருமலையன் நாலாவது சிகரத்தில் இருப்பவள் (மற்றை மூன்று சிகரங்களுலும் மும்மூர்த்திகள் வசிக்கின்றனர்)

இந்த நாமத்தில் இருந்து 63வது நாமம் வரை தேவியின் வசிப்பிடம் வர்ணிக்கப்படுகிறது.

ஸுமேரு என்பது மேரு மலையின் நடுப்பகுதியினை குறிக்கும். தேவி மேரு மலையின் மத்தியில் வசிக்கிறாள். வாக்தேவிகள் 52 நாமத்தில் லலிதா சிவனின் இடது துடையில் இருக்கிறாள், அது இயக்க சக்தியினதும் நிலைச்சக்தியினதும் இணைவினைக்குறிக்கும். தற்போது அவளது வசிப்பிடம் பற்றிக்குறிப்பிடுகிறார்கள். மேரு மலை மூன்று சிகரங்கள் கொண்ட மலைத்தொடர், அந்த மூன்று மலைச்சிகரங்களையும் இணைத்தால் ஒரு முக்கோணமாக காணப்படும். இந்த மூன்றுக்கும் நடுவில் மற்றைய சிகரங்களை விட உயரமாக இருக்கும் சிகரத்தில் லலிதை வசிக்கிறாள். துர்வாசக மகரிஷி தனது லலிதா ஸ்தவரத்ன எனும் நூலில் “ நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் வசிக்கும் மூன்று சிகரங்களை வணங்குகிறேன், இவற்றுக்கு நடுவே உயர்ந்த சிகரம் ஒன்று காணப்படுகிறது. அதனை தங்க நிறம் அழகுபடுத்துகிறது, அதனை நான் வணங்குகிறேன் என்று.

இது ஸ்ரீ சக்கரம் பற்றிய வர்ணணையாக இருக்கும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் முக்கோணமும் அந்த முக்கோணத்திற்கு நடுவே பிந்துவும் காணப்படுகிறது. இந்த பிந்துவிலேயே லலிதையும் கணவரான மஹா காமேஸ்வரரும் இருக்கின்றனர். 52 நாமம் பிந்துவின் தியானம் பற்றி குறிப்பிடுகிறது.

ஸ்ரீமந் நகர-நாயிகாயை (56)
ஸ்ரீ நகரத்தின் நாயகி
தேவி புனிதமான எல்லா செல்வவளங்களும் குவிந்த ஸ்ரீ நகரத்தினை அதிபதியாக இருக்கிறாள். ஸ்ரீ நகரத்தினைப்பற்றி இரண்டு வர்ணணைகள் காணப்படுகின்றன. ஒன்று துர்வாசக மஹரிஷியின் லலிதா ஸ்தவரத்னம், மற்றையது ருத்ரயாமளம் (சிவனால் பார்வதிக்கு கூறப்பட்டது). முன்னையது ஸ்ரீ நகரம் தேவஸ்தபதியான விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது என்று கூறுகிறது. ருத்ரயாமளம் ஸ்ரீ நகரம் பாற்கடலுக்கு மத்தியில் காணப்படும் ரத்தினதுவீபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ நகரத்திற்கு மத்தியில் இன்னுமொரு நகரம் காணப்படுகிறது, அது ஸ்ரீ வித்யா எனப்படும். இது இருபத்தியைந்து சுவர்களால் ஆனது, ஒவ்வொரு சுவரும் ஒவ்வொரு தத்துவத்தினை குறிக்கும். அவள் அதற்கு பேரரசி, அதனுள் இருந்துகொண்டு தன்னுடைய படைத்தல் முதலிய தொழில்களை செய்கிறாள்.
சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தாயை (57)
சிந்தாமணி கிருகத்திலிருப்பவள்

மிகவும் விலையுயர்ந்த இரத்தினமான சிந்தாமணி இரத்தினத்தால் கட்டப்பட்ட மாளிகையில் வசிப்பவள். இந்த மணி மனதில் நினைப்பதை தரக்கூடிய வல்லமை வாய்ந்தது. இது ஸ்ரீ நகரத்தின் வடக்கு திசையில் அமைந்துள்ளது. எல்லா தேவ தேவியரும் இந்த இடத்திற்கு தேவியை வணங்குவதற்காக வருகை தருகின்றனர். இந்த இடமே எல்ல மந்திரங்களும் உற்பத்தியாகும் இடம். இந்த இடத்தினை தியானிப்பதால் மனதின் எல்லாவிதமான உபாதைகளும் நீங்கும்.

பஞ்ச-ப்ரஹ்மாஸன-ஸ்திதாயை (58)
பஞ்ச பிரம்மங்களையும் ஆசனமாக உடையவள்
தேவி ஐந்து பிரம்மங்களை ஆசனமாக கொண்டவள். ஐந்து பிரம்மங்களும் பிரம்மா, விஷ்ணு, சிவன், மஹாதேவன், சதாசிவன் ஆகிய ஐவர். சிவன், மஹாதேவன், சதாசிவன், காமேஸ்வரன் ஆகிய நால்வரும் வெவ்வேறானவர்கள். சௌந்தர்ய லஹரி (92) கூறுகிறது “பிரம்மா, விஷ்ணு, சிவன், மஹாதேவன் ஆகிய நால்வரும் உனது ஆசனத்தின் கால்களாகவும் சதாசிவன் ஆசனமாகவும் இருக்கிறார்கள். இந்த நாமம் அவளுடைய பிரபஞ்சத்தின் அதியுயர் தன்மையினைக்குறிக்கிறது. ஆனால் வாக்தேவிகள் பிரம்ம, விஷ்ணூ முதலியவர்கள் ஆசனத்தின் காலகளாகவும் சதாசிவன் ஆசனமாகவும் இருக்கிறார்கள் என்று கூறவில்லை. இந்த பஞ்சப்பிரம்மன் என்பதற்கு இன்னொருவித விளக்கமும் காணப்படுகிறது. இவை பஞ்சபூதங்களை குறிக்கின்றது என்று. எமது உடலில் (மூலாதாரம் தொடக்கம் விசுத்தி வரை) ஐந்து சக்கரங்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு பூதத்தினைக் குறிக்கிறது. மூலாதாரம் – மண், சுவாதிஷ்டானம் – நீர், மணீப்பூரகம் – நெருப்பு, அநாகதம் – வாயு, விசுத்தி – ஆகாயம். லலிதை இந்த ஐந்து பூதங்களின் மேலும் அமர்ந்திருக்கிறாள். இந்த விவரணம் சரியானதாகவும் பொருந்துவரக்கூடிய வகையிலும் காணப்படுகிறது. இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டிருப்பது பஞ்சபூதங்களால், அவற்றை ஆளவது லலிதையே என்பதனைக்குறிக்கிறது. இந்த ஐந்து சக்கரங்களும் தாண்டிய பின்னர் வரும் ஆறாவது சக்கரம் ஆக்ஞா எனப்படும், இது மனதினால் ஆளப்படுவது. இதனைக்கடக்கும் போது சிவனும் சக்தியும் இணையும் இடமான சஹஸ்ராரம் காணப்படுகிறது. இதுபற்றி சில நாமங்களில் குறிப்பிடப்படுகிறது. நாமம் 249 உம் 947 உம் இந்த விடயம் பற்றி பேசுகின்றன.


*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...