குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 06, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 26: நாமங்கள் 64 - 67


தேவர்ஷி-கண-ஸங்காத-ஸ்தூயமானத்ம-வைபவாயை (64)
தேவரிஷிகணங்களால் துதிக்கப்படும் ஆத்ம வைபவம் உடையவள்

இந்த நாமத்துடன் தொடங்கி 84வது நாமம் வரை பண்டாசூர வதம் விபரிக்கப்படுகிறது. தேவ+ரிஷி+கண என்றால் தேவர்கள், ரிஷிகள், கணங்கள் என்பன. அக்னிபுராணம் ஏழுவகையான கணங்கள் உள்ளதாக கூறுகிறது. உதாரணத்திற்கு ருத்ர கணம் என்றால் சிவனுடைய உதவியாளர்கள். இதுபற்றி ஸ்ரீ ருத்ரத்தில் தனியாக ஒரு ஸ்லோகம் 11 அவர்களை குறித்து வழிபடுகிறது, ரிஷி என்பவர்கள் வசிஷ்டர், நாரதர் முதலானவர்கள். நாரதன் தேவ ரிஷி எனவும் குறிப்பிடப்படுவார். தேவி தேவர்களால், தேவதைகளால், முனிவர்களால், கணங்களால் வணங்கப்படுபவள். ஸ்தூயமானத்ம என்றாள் வணங்கப்படுதல் என்று பொருள். வைபவா என்றால் எல்லாவற்றிலும் கலந்துள்ளவள் என்று பொருள். பிரம்மம் ஒன்று மட்டுமே எல்லாவற்றிலும் கலந்துள்ள ஒன்று. தேவர்களும் ரிஷிகளும் பிரம்மத்தினை தவிர்ந்த வேறெதனையும் வணங்காதவர்கள். ஆகவே இது மறைமுகமாக தேவியின் நிர்குண பிரம்ம ரூபத்தினை கூறுகிறது.

தேவ ரிஷியான நாரதர் தேவியை அணுகி தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தும் பண்டாஸுரனை அழிக்கும் படி வேண்டிக்கொண்டார். இந்த நாமத்தின் ஆழ்ந்த அர்த்தம் பண்டாஸுரன் என்பது அறியாமையில் எழும் ஆணவத்தினை குறிப்பது, அவர்கள் தமது ஆணவத்தினை கரைப்பதற்காக லலிதையினை அணுகுகின்றார்கள். தேவி மாத்திரமே அதனை கரைப்பதற்கு உரியவள், இந்த அறியாமை கலந்த ஆணவத்தினாலேயே பாபங்கள் செய்யப்படுகின்றன.

பண்டாஸுர-வதோத்யுக்த-சக்தி-ஸேனா-ஸமன்விதாயை (65)
பண்டாஸுர வதத்திற்கு ஆயுத்தமாயிருக்கும் சக்தி ஸேனையால் சூழப்பட்டவள்

தேவி தற்போது பண்டாஸுரனை அழிப்பதற்கு தயாராக இருக்கிறாள். அவளுடைய போர்ப்படை ஸ்ரீ சக்கரத்தில் குறிப்பிடப்படும் பல்வேறு தெய்வங்களை கொண்டிருக்கின்றன. இந்த நாமத்துடன் தொடர்புடைய கதை ஒன்று காணபடுகிறது. மன்மதன் சிவனுடைய கோபத்திற்கு ஆளாகி எரிக்கப்பட்டு விடுகிறான், கணேசர் விளாயாட்டாக அந்த சாம்பலை எடுத்து ஒரு பொம்மையினை உருவாக்குகிறார். இதனைப்பார்த்த படைப்புக் கடவுளான பிரம்மன் கணேசரை பாராட்டுமுகமாக “பண்டா, பண்டா” என் கிறார். அதனால் அவன் பெயர் பண்டாஸுரன் ஆகிறது. மன்மதன் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அக்னியில் எரிக்கப்பட்டதால் பண்டாஸுரன் மிக்க சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான். அவன் எல்லாவித தீய சக்திகளையும் கொண்டிருக்கிறான்.

பண்டா என்றால் பந்தம் என்று பொருள். சிவ சூத்திரம் (1.2) கூறுகிறது; “ஞானம் பண்டாஹ”. இதில் பண்டாஹ என்பதற்கு தரப்பட்ட விளக்கம் எல்லைப்படுத்தப்பட்ட அறிவு என்பதாகும். இதன் பொருள் அறியாமை பந்தத்தினை உருவாக்குகின்றது என்பதாகும். பந்தம் என்பது ஆசை, பற்று என்பவற்றைக்குறிக்கும். அறிவின் குறைபாட்டால் ஏற்படும் இருமை உணர்வும் பந்தம் எனப்படும். ஒருவன் அறிவினை அடையும் போது நானே அது (பிரம்மன்) என்பதனை உணர்கிறான். மனதின் உள்ளார்ந்த அல்லது எதுவித நிபந்தனையற்ற நிலை ஆணவம் மலம் எனப்படும். இது ஒரு மனிதன் அனுபவத்தால் சார்ந்திருக்க கூடிய அறிவின் எல்லையினை குறிப்பிடுகிறது. இந்த அடிப்படை எல்லைப்படுத்தும் காரணி பிரபஞ்சப்பேருணர்வினை ஒரு ஜீவாத்மாவாகவோ, தனி ஆத்மனாகவோ எல்லைப்படுத்துகிறது. இந்த நிலை உள்ளார்ந்த நிலை எனக்குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் மனம் பந்தத்தில் இருந்து விடுபடும் வரை பிரம்மத்தினை அறிவதில்லை. இந்த விடுதலை அறிவினால் மட்டுமே சாத்தியமானது. சிவசூத்திரம் (1.6) இது போன்ற சந்தர்ப்பத்திற்கான இன்னொரு விளக்கத்தினைதருகிறது. அதீத விழிப்புணர்வு நிலையினால் பல்வேறு சக்திகள் (சக்தியின் பல்வேறு நிலைகள்) இணைந்து பிரபஞ்சத்தினை (மாயை, இருமைகள், அறியாமை) இல்லாதாக்கி உயர்ந்த உணர்வாகிய பிரம்மத்தினை அறிய வழி வகுக்கிறது.
இந்த நாமத்தின் இரகசியார்த்தம் என்னவென்றால், லலிதை எமது பிறப்பு இறப்பு ஆகிய சுழற்சியிலிருந்து அகல அருள் புரிய தயாராக இருக்கின்றாள், தன்னை நோக்கி சாய்வதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்துகிறாள். பண்டாஸுரன் அறியாமையினால் செய்யும் தீயகாரியங்களது மொத்த உருவம். தேவி மனிதனைச் சூழ உள்ள அறியமையினயும் அதனால் விளையும் தீயவிளைவுகளையும் அழிப்பதற்கு தயாராக இருக்கின்றாள். சக்தி ஸேனா என்றால் அவளுடைய பல்வேறு செய்கைகள், இது படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய மூன்றை மாத்திரம் குறிப்பதல்ல. தேவியின் பல்வேறு தொழில்கள் ஸ்ரீ சக்கரத்தில் காணப்படும் பல்வேறு தெய்வங்களாக குறிக்கப்பட்டுள்ளன.

ஸம்பத்கரீ-ஸமாரூட-ஸிந்துர-வஜ்ர-ஸேவிதாயை (66)
ஸம்பத்கரீ சக்தியின் யானைப்படையினால் சூழப்பட்டவள்

தேவி யானைப்படைகளாலும் அதன் தலைவியான ஸம்பத்கரீ தேவியாலும் வணங்கப்படுகிறாள். ஸம்பத்கரீ தேவி பற்றி ஏற்கனவே 9வது நாமத்தில் விபரித்துள்ளோம். மிக சக்தி வாய்ந்த ஸ்ம்பத்கரீ வித்தை பற்றியும் கூறப்பட்டுள்ளது. இந்த நாமத்தில் ஸம்பத்கரீ வித்தையில் காணப்படும் மூன்று பீஜாட்சரங்கள் மறைவாக கூறப்பட்டுள்ளது. இந்த பீஜாட்சரம் மிக இரகசியமாக கருதப்படுவது, ஏற்கனவே 9வது நாமத்தில் கூறப்பட்டுள்ளது. க்ரோம் (क्रों) எனும் பீஜம் க+ர+ம வுடன் பிந்து சேர்ந்து உருவாக்கம் பெறுகிறது. க என்ற அட்சரம் இன்பத்தினையும் புகழினையும் தருவது. ர என்ற அட்சரம் மிக சக்தி வாய்ந்ததும் அக்னி பீஜம் எனப்படுவது. எந்த பீஜமும் அக்னி பீஜத்துடன் சேரும்போது அதீத சக்திகளை தரும். ம என்ற பீஜம் இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் சகலவித சௌபாக்கியங்களைத்தரும். க்ரோம் பீஜத்தினை தொடர்ச்சியாக ஜெபிப்பதால் ஒருவனுக்கு இன்பமும் சௌபாக்கியமும் உண்டாகும். ஆயினும் எந்த மந்திரமும் ஆத்ம பீஜம் இன்றி பலனை தராது, அது தக்க குருவின் மூலம் பெறவேண்டியது.

அறிவு, அறியப்படுவது, அறிபவன் ஆகிய மூன்றும் மும்மைகள் எனப்படும். இந்த மும்மைகளில் அறிவு விழிப்படைவது ஸுக ஸம்பத்கரி எனப்படும். சிவ சூத்திரம் (1.9) கூறுகிறது “ஸக்திஸந்தானே ஸரீரோபதி”, இதன் அர்த்தம் ஒருபுள்ளியில் சக்தியுடனான (அதீத விழிப்புணர்வுடனான) இணைவு எனப்படும். ஸக்திஸந்தானே என்றால் என்றால் ஒருவன் தனது தனிப்பட்ட பிரார்த்தனைகளை விருப்புகளை சிவனிடம் பிரார்த்திக்க வேண்டியதில்லை. ஒருவன் தனது எண்ணங்களை வலுப்படுத்தினாலே தான் வேண்டியதை அடையலாம். ஸந்தானே என்பது ஆன்மீகத்தில் மிக முக்கியமான ஒரு விடயம். விழிப்புணர்வுடன் கூடிய ஒருமைப்பாடும் அந்த நிலையினை அடைவதற்கான விருப்பமுமே ஆன்மீக முன்னேற்றத்தில் முக்கியமான ஒன்று. ஸந்தானேக்குரிய பண்புகளை வளர்க்காமல் மந்திர திட்சை பலனளிக்காது, மந்திர ஜெபத்தின் பலனை அனுபவிக்க முடியாது.

லலிதையினை க்ரோம் பீஜத்தினால் தியானிக்க தியானிப்பவன் தான் விரும்பியதை அடையும் பண்பினைப் பெறுவான். இது ஒருவன் தனது ஆன்மீக நிலையில் அடையக்கூடிய உயர் நிலையினையும் குறிக்கும்.

   
அஸ்வாரூடதிஷ்டிதாச்வ-கோடிகோடிபிராவ்ருதாயை (67)
அச்வாரூடா சக்தியின் குதிரைப்படையால் சூழப்பட்டவள்

லலிதை அஸ்வாரூடா தலைமைதாங்கும் குதிரைப்படையால் சூழப்பட்டவள். இவள் 8வது நாமத்தில் விபரிக்கப்பட்ட தேவதையே ஆகும். அஸ்வாருடா தேவியின் படையில் குதிரைப்படையின் தலைவி. இந்த தேவியின் முகம் குதிரை முகம். அஸ்வாருட மந்திரம் 13 பீஜங்களை உடைய மிக சக்திவாய்ந்த மந்திரம். இந்த பதின்மூன்று பீஜங்களில் நான்கு பீஜங்கள் ஆரம்பத்திலும் நேராகவும் முடிவில் மறுதலையாகவும் ஜெபிக்கப்படுகிறது. இது சம்புடீகம் எனப்படும். சம்புட என்றால் கூண்டு என்று அர்த்தம். இப்படி ஜெபிக்கும் மந்திரங்கள் துரிதமாக பலனைதருவன.

புலன் கள் குதிரைகளாக உருவகப்படுத்தப்படுகிறது. அவை கட்டுப்பாடு அற்று வேகமாக ஓடுமானால் ஆபத்தில் முடியலாம். மனமே குதிரைப்பாகன், மனதாலேயே புலன் களை கட்டுப்படுத்தவேண்டும். சிவ சூத்திரம் (1.12) கூறுகிறது; விஸ்மாயோ யோகபூமிகா”. இதன் அர்த்தம் சிறிது சிக்கலானது ஆனால் விளங்கிகொள்ளக்கூடியது. இதன் வார்த்தை சார்ந்த அர்த்தம் யோகத்தின் நிலைகளும் படி நிலைகளும் கவர்ச்சிகரமான ஆச்சரியங்கள்”. நிலைகள் என்றால் சக்கரங்கள் என்று பொருள். இந்த நிலைகளில் (சக்கரங்களில்) உணர்வு பயணித்து உயர்ந்த சக்கரங்களை அடையும் போது உணர்வு உயர்ந்த நிலையினை அடைகிறது. சஹஸ்ராரத்திற்கு வெளியே அல்லது மனித உடலின் வெளியே உணர்வு செல்லும்போது அது தூரிய நிலை எனப்படும். இந்த நிலையில் யோகி தனது அக உணர்வுகளை பூரணமாக கட்டுப்படுத்தும் நிலையினை அடைகிறான். இதனை உயர் உணர்வு எனக்கூறலாம். இந்த நிலையில் யோகி உயர்ந்த இன்பத்தினை அனுபவிக்கிறான். இதனை இன்னுமொரு வார்த்தைகளில் கூறுவதானால் தன்னை அறிவதால் வரும் எல்லையற்ற இன்பம் பேரின்பத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்த நிலை என்ற சொல்பதும் நன்றாக செயற்படத்தொடங்கிய ஆக்ஞா சக்கரத்தினையும் குறிக்கும். இது எல்லாபுலன் களையும் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் தரும். படி நிலை என்பது உணர்வின் வெவ்வேறு நிலைகளை குறிக்கும். உணர்வின் அதிஉயர்ந்த நிலை தூரியம் எனப்படும். தனது இச்ச சக்தியின் துணையுடன் யோகி சிவத்துடன் தொடர்பினை ஏற்படுத்தும் நிலை இது. இதனை உமா அல்லது குமாரி என்பார்கள். இந்த நிலையில் யோகியானவன் எல்லாவற்றையும் சமபாவத்தில் பார்க்கும் தன்மையினை பெறுகிறான். அவன் அகத்தினையும் புறத்தினையும் வேறாக காண்பதில்லை. நான் நீ, நல்லது கெட்டது போன்ற வித்தியாசங்கள் தெரிவதில்லை.

இந்த விவரணைகள் இந்த நாமத்தின் விளக்கத்தில் இருந்து விலகிச்செல்லவில்லை, இது புலன் களை கட்டுப்படுத்துவது குதிரையினை கட்டுப்படுத்துவது போன்றது. புலன்களை கட்டுப்படுத்துவதால் பலவித ஆன்மீக நன்மைகள் கிடைக்கின்றன. சக்தி மட்டுமே ஒருவனை அதியுயர் பிரம்மமான சிவனிடம் அழைத்துச் செல்லும் வல்லமையுள்ளவள். சக்தி மாயாய் வடிவினாள். மாயை அகலாமல் பிரம்மத்தினை அறியமுடியாது. சிவத்துடன் தொடர்புகொள்ளும் இச்சாசக்தியினை கொடுக்ககூடியது சக்தி மட்டுமே, இந்த சக்தியினை உமா என சிவசூத்திரம் குறிப்பிடுகிறது.

ஆகவே லலிதை மனதின் மாயையினை அகற்ற பல்வேறு ரூபங்களுடனும் நாமங்களுடனும் தோன்றி அருள்புரிகின்றாள். அவள் தனியாகவே எல்லவித பதிவுகளையும், மாயைகளையும் அகற்றி உணர்வினை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி சிவத்துடன் தொடர்புற வைக்கிறாள். ஒரு தடவை சிவத்தினை உணர்ந்துவிட்டாம் எல்லையற்ற பேரின்பம் நிலைத்திருக்க தொடங்குகிறது.

கட உபநிஷதம் புலங்களாகவும், உடலினை தேராகவும் அடையவேண்டிய இலக்கே பாதையே சுயமே அனுபவிப்பவனாக (குதிரைகளினதும் தேரினதும் உரிமையாளன்)   உருவகப்படுத்துகிறது. அறிவானது கட்டுப்படுத்தப்படாத மனதுடன் தொடர்பு பட்டிருக்கும் போது எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிய முடியாதது. இது கட்டுப்படுத்தப்பட முடியாத குதிரைகளை கொண்ட தேர்ப்பாகன் போன்ற நிலை. இத்தகைய நிலைகள் தேவிபாகவதத்திலும் ஸ்ரீமத் பகவத் கீதையிலும் விளக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...