குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 02, 2022

சதுரங்கம் ஏன் ஆடப்பட்டது?

சதுரங்கம் நவீன Game theory இல் Combinatorial game என்ற வகைப்பாட்டிற்குள் வருகிறது. இந்தவகை விளையாட்டின் நோக்கம் எதிராளியின் படை பலம் அல்லது வளங்கள் பற்றிய முழுமையான தகவலைத் தெரிந்துகொண்டு குறித்த தளத்திற்குள் ஆட்டத்தை ஆரம்பித்து படிப்படியாக எதிராளியின் பலத்தினை அழித்து எதிராளி இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவது. 

இந்த விளையாட்டை விளையாட நான்கு விஷயங்கள் அவசியம்;

1) ஆட்டத் தளம் ( 8 x 8 ) 

2) ஆட்டத்திற்கான படைகள் - ரத கஜ துரக பதாதிகள் என்ற சதுரங்க சேனை

3) ஒவ்வொரு சேனையும் ஆட்டத்தை ஆரம்பிப்பவருக்கு மாற்றாக, அதேவேளை எனது படையை இழக்காமல் அவரது படையை இழக்க நான் என்ன ஆட்டத்தை நடத்த வேண்டும் என்ற கணிப்பு

4) இந்த ஆட்டத்தை வேகமாக குறித்த நேரத்திற்குள் முடிப்பது - ஏனென்றால் நீண்ட ஆட்டம் மனச் சோர்வினால் ஆட்ட விதிகளைப் பின்பற்ற முடியாமல் போகும். 

ஆட்டத்தளம், ஆட்டத்திற்கான படைகளின் நிலை இவற்றைப் பற்றிப் புரியாமல் மற்ற இரண்டையும் பூர்த்தி செய்ய முடியாது. 

ஆகவே சதுரங்கத்தில் நான் எப்படி எனது படைகளை நகர்த்தி எதிராளியின் அரசனைக் கைப்பற்றப்போகிறேன் என்ற முழுமையான கணிப்புடன், எதிராளியின் நகர்வு எனது திட்டத்தை எப்படி பாதிக்கிறது என்பதைக் கணித்து அதற்கு அமைவாக எனது நகர்வை மாற்றி எதிரியை பலமிழக்கச் செய்யும் உத்தி தேவைப்படுகிறது. 

ஆகவே எதிரியை பலமிழக்கச் செய்து, இதற்கு மேல் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்ற முடிவினை எட்டவைக்கும் ஆட்டங்கள் எல்லாம் Combinatorial game தான். 

அந்தக்காலத்தில் சதுரங்கம் ஆடுவது அரசர்களுக்கான விளையாட்டாக இருந்ததற்கு காரணம் அரசன் ஒருவன் தனது எதிரியை பலமிழக்கச் செய்யும் வகையில் சதுரங்க சேனையையும், தனது மன உறுதியையும் வைத்திருக்க வேண்டும் என்பதனால் எனத் துணியலாம்!


Monday, August 01, 2022

தலைப்பு இல்லை

இது சதுரங்கத் திருவிழாக்காலம்! நமது புத்தக வாசிப்பிலிருந்து சதுரங்கம் பற்றி சில உளவியல் தகவல்கள். இந்த நூல் Routledge The Psychology of Everything series வந்த சிறிய ஆனால் சுவாரசியமான நூல். 

சதுரங்கம் என்பது புத்திசாலித்தனம் மற்றும் முடிவெடுக்கும் தன்மைக்கான ஒரு குறியீடாக கருதப்படுகிறது. 

சதுரங்கம் விளையாடுவதனால் என்ன பலன் கிடைக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கச் சொல்லி the US Chess Trust கேட்டமைக்காக நூலாசிரியர் கண்டறிந்த சில உண்மைகளை இங்கே தருவது சுவாரசியமாக இருக்கும். 

ஒரு துறையில் பெறும் நிபுணத்துவத்திலிருந்து மற்றொரு துறையினை இலகுவாக கற்கும் ஆற்றலைப் பெறுவதில் இரண்டு வகை இருக்கிறது. கேத்திர கணிதத்தை கற்கும் ஒருவர் இலகுவாக algebra கற்க முடியும். ஏனென்றால் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட துறைகள் என்பதால். ஆனால் கேத்திர கணிதம் கற்கும் ஒருவன் ஆங்கில மொழியில் புலமைத்துவம் பெற வேண்டும் என்றால் அதை ஆங்கிலத்தில் "Far transfer of Skills" என்று சொல்லப்படுகிறது. அதாவது கேத்திர கணிதத்திற்கு ஒருவகையில் தனது மூளையைப் பயிற்றுவித்த ஒருவர் இப்போது மூளைக்கு வேறு ஒரு மையத்தைப் பயிற்றுவிக்க வேண்டும். சதுரங்கத்தில் இந்த "Far transfer of Skills" ஏற்படுவதில்லை என்று கூறுகிறார்; எனினும் சதுரங்கத்தின் உளவியல் தன்மை பற்றிய ஆய்வுகள் வெகு ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். 

சதுரங்கம் game theory இன் அடிப்படையில் Combinatorial game theory (CGT) இன் ஒரு உதாரணமாகக் கொள்ளப்படுகிறது. இந்த Game இல் இரண்டு போட்டியாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக, கணித ரீதியாக கணிப்பிடக்கூடிய முழுமையான தகவலுடன் விளையாடும் விளையாட்டு என்று அர்த்தம். ஒவ்வொரு காயின் நகர்வும் ஒரு ஆட்டமாகக் கருதப்பட்டு ஒவ்வொரு நகர்வின் மூலமும் அடுத்த ஆட்டம் நிர்ணயிக்கப்படுகிறது. இதை இருவரும் தெளிவாக கணித ரீதியாகக் கணிக்க முடியும். 

இன்னுமொரு Combinatorial game தான் Sudoku - one-player combinatorial puzzle; இருக்கும் இலக்கங்களை வைத்துக்கொண்டு இலக்கங்களை நிரப்பி ஆட்டத்தை முடிப்பது; Game theory அடிப்படையில் இரண்டுமே தமது ஆட்டத்தளத்தினை ஒரே போல் வரையறுப்பதால் - {சதுரங்கம் 8x8 grid; Sudoku 3×3 Latin square விரிவாக வரும்) இது Combinatorial games = கூட்டு ஆட்டம். இந்த வகை ஆட்டத்தின் நோக்கம் எதிராளிக்கு ஆடுவதற்குரிய சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வது! சதுரங்கத்தில் check mate! Sudoku இல் ஒரேயொரு சரியான இறுதித் தீர்வு மாத்திரம்தான் இருக்கிறது; சரியாக நிரப்பினால் மாத்திரமே வெற்றி! அல்லது விளையாடுபவர் அந்த sudoku table இனால் check mate செய்யப்படுவார்! இரண்டு விளையாட்டுக்களுமே timing இல் செய்து முடிக்கும் போது மாத்திரமே வெற்றி!

இந்த நூலையும், சதுரங்கம் ஒரு கணித அடிப்படையில் அமைந்த முடிவுசெய்யப்பட்ட நகர்வுகளைக் கொண்ட ஒரு Combinatorial game என்பதைப் புரிந்து கொள்வதன் மூலம் இது கணிப்புகளிற்கும், வேகமாக முடிவெடுக்கும் திறனுக்கும் மூளையைப் பயிற்றுவிப்பதற்கான ஒரு பயிற்சியாக ஆரம்பகாலத்தில் இருந்திருக்க வேண்டும்.

அதாவது தர்ம யுத்தத்தின் போது - விதிகளை இரண்டு சேனைகளும் பின்பற்றி சண்டை பிடிக்கும்போது அக்காலத்தில் ஒவ்வொரு அரசனிடமும் இருக்கும் நான்குவித ரத கஜ துரக பதாதிகள் (சதுரங்க சேனை) அடிப்படையில் எப்படி வேகமாக போர்களத்தில் செயற்படுவது என்று கணிப்பதற்கான ஒரு simulation tool ஆக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


Wednesday, July 27, 2022

தலைப்பு இல்லை

மிகக் சுருக்கமான அறிமுகங்கள் என்ற இந்த புத்தகத் தொகுதிகள் புதிய விஷயத்தைப் பற்றிய அடிப்படைகளைப் பற்றி அறிமுகத்தைத் தருகிறது. மொத்தம் இதுவரை 450க்கு மேற்பட்ட தலைப்புகள் வெளிவந்திருக்கிறது. இதில் சில நூறு எனது வாசிப்பில் இருக்கிறது. இந்த நூல்களைப் பற்றி அவ்வப்போது பதிவு போடலாம் என்பது அவா; தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. எத்தனை தலைப்புகள் உண்டு எனத் தெரியவில்லை. 

முதலாவது அறிமுகம்:

சந்தேகம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம். 

ஒரு குறிப்பிட்ட அளவு சந்தேகம் பெரும்பாலும் ஒரு நல்ல விஷயம். உண்மையில், ஒரு 'ஆரோக்கியமான சந்தேகம்' கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அதாவது ஒருவர் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துக்கொண்டு இருக்காமல் அதற்குரிய மாற்றுக்காரணம் இன்னும் ஆழமாக இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சந்தேகப்படுதல் எனும் பண்பு பாதையை அமைக்கிறது. 

ஒரு விஷயத்தின் காரணத்தை சந்தேகத்திற்கு உட்படுத்தி அதைவிட மேலான ஒரு காரணம் இருக்கிறது என்ற நம்பிக்கைக்குள் புகுந்து அறிவினைப் பெற சந்தேகம், அறிவினை வளர்க்கும் ஒரு ஆரம்ப உத்தியாக ஒருவனுக்கு உதவி செய்யலாம். 

ஒரு ஆரோக்கியமான சந்தேகம் நம்மை ஏமாற்ற விரும்புபவர்கள் எம்மை ஏமாற்றாமல் தடுக்க உதவுகிறது. 

சந்தேகத்தின் அடுத்த பக்கம் தர்க்க சிந்தனை இன்றி "எழுந்தமானமாக சந்தேகப்படுதல் அல்லது தீவிர சந்தேகம்" 

இதற்கு உதாரணம் அறிவியல் அடிப்படையில் சந்தேகப்படுகிறோம் என்பதில் ஒரு அடிப்படை இருக்கிறது. அறிவியலையே சந்தேகப்படுகிறோம் என்பது தீவிர சந்தேகம் எனப்படுகிறது. இந்த நிலைக்குப் போகும்போது அறிவியலை நாம் எமக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைவோம். 

உறவுகளில் இவர் எனக்கு நம்பிக்கையானவரா என்ற ஆரோக்கியமான சந்தேகத்தினை உள்வைத்து அவதானித்து இன்னும் உறவுகளை மேம்படுத்தி புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும்; ஆனால் உறவிற்குள் அதிதீவிர சந்தேகத்தைக் கொண்டுவந்தால் அந்த உறவே இல்லாமல் போகும். 

சந்தேகம் பற்றி சந்தேகமில்லாமல் அறிந்துகொள்ள, சந்தேகபுத்தியில் இருந்து எப்படி எமது அறிவினை, விவேகத்தினை வளர்க்கலாம், அறிவின் ஆதாரம் சந்தேகத்திலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள நல்ல அறிமுக நூல்.


Tuesday, July 26, 2022

தலைப்பு இல்லை

இன்று வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட சூழலியல் விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பிரயோக கணித புதுமுக பட்டதாரி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் வழிகாட்டல் நிகழ்வில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் சுருக்கம்:

181 மாணவர்கள் துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பீடத்தின் பழைய மாணவர்களாக இருந்த தொழில் அதிபர்கள் கலந்து கொண்டார்கள். 

1) முதலாம் ஆண்டில் நான் தொழில் வாழ்க்கையில் என்னவாக வரப்போகிறேன் என்ற இலக்கினை நிர்ணயுங்கள். 

2) ஆங்கிலம் நன்கு உரையாட, எழுத திறனை விருத்தி செய்துகொள்ளுங்கள். 

3) உங்கள் துறையில் வரும் புதிய தகவல்களை எப்போதும் படித்து உங்களை எப்போதும் update இல் வைத்திருங்கள். 

4) படிக்கும் காலத்தில் சவால்களுக்கு முகம் கொடுங்கள்; புத்தாக்க தீர்வினை சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள். 

5) அரசாங்க வேலைக்கோ, வேலை கிடைப்பதற்கோ படிக்காதீர்கள்; வேலையை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக உங்கள் துறையில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தைக் கற்பியுங்கள். 

6) படித்து முடித்தவுடன் பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் உங்கள் துறையில் இருக்கும் வாய்ப்பின் மூலம் உள்நுழைந்து உங்களுக்கான வாய்ப்பினை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். 

7) Do the best with available மனப்பாங்கினை வளருங்கள்;

 முரண்பாடுகளை கையாளக் கற்றுக்கொள்ளுங்கள்; Assertiveness என்ற ஆக்ரோஷமாக இல்லாமல் அல்லது செயலற்ற முறையில் 'தவறானதை' ஏற்றுக்கொள்ளாமல், உங்கள் சொந்த அல்லது மற்றவர்களின் உரிமைகளுக்காக அமைதியான மற்றும் நேர்மறையான வழியில் நிற்கமுடியும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

9) உங்கள் துறையில் உள்ளவர்களுடன் networking வைத்திருங்கள். 

10) மூன்று அல்லது நான்கு வருடங்கள் உங்கள் அறிவையும், திறனையும் விருத்தி செய்ய கடுமையாக உழையுங்கள்.


Saturday, July 23, 2022

தலைப்பு இல்லை

2018 களிற்கு முன்னர் கொழும்பில் மிக பரபரப்பாக, ஒரு நிறுவனத்தின் அதிகாரியாக இருந்து கொண்டு மாலை வேளைகளில் ஒரு குழுவுடன் சித்தர் நூற்களைப் படிப்பது ஒரு கடமையாக இருந்தது. 

அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில படங்களை இன்று Facebook memory காட்டியது.

அகத்தியர் சௌமியசாகரம் என்ற நூலில் அடிப்படையில் தத்துவங்கள் 96 பற்றிய அறிமுகம், 96 தத்துவங்கள் எப்படி யோக சாதனையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சிறு கலந்துரையாடல்!


விவசாய ஆராய்ச்சிகளின் முட்டாள்தனமும் இலங்கை அரசியல்வாதிகளும்

நவீன விவசாயத்துறை ஒரு முட்டாள்தனத்தைச் செய்து வருகிறது; அது என்னவென்றால் எங்கோ வளர்ந்து வரும் நாடுகளின் ஏகபோக உரிமை இருக்கும் இரசாயன உரத்திற்கும், பீடைகொல்லிக்கும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும் விதைகளை மக்கள் மனதில் "நல்ல விதைகள்" என்று நம்பவைத்து, இயற்கையில் காணப்படும் இயல்பான சுதேச இனங்களை, அதிக உள்ளீடு இல்லாமல், அதிக விளைச்சலைத் தரும் இனங்களைக் கண்டுபிடிக்க தகுந்த ஆராய்ச்சி செய்யாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. 

இப்படியொரு முறையான நீண்டகால ஆராய்ச்சியும், உழைப்பும் சிரத்தையும் இல்லாமல் இப்போது உரம் இல்லை, இரசாயனம் இல்லை என்றவுடன் விவசாயத்துறை விழுந்துவிட்டது, அதற்கு காரணம் இது, அது என்று கம்பு சுற்றி அதிகாரத்தில் உள்ளவரைக் கையைக் காட்டி விட்டு, தாங்கள் ஏதோ ஒன்றும் செய்யாதவர்கள் போல் தம்மையும் மற்றவர்களையும் ஏமாற்றலாம் என்று எண்ணிக்கொள்கிறார்கள். 

உண்மையான காரணம் இப்படியான ஒரு சூழலிற்கு பலனளிக்கக் கூடிய விதைகளைக் கண்டுபிடிக்க நாம் எமது ஆராய்ச்சியையும், உழைப்பையும் செய்யவில்லை என்பதாகும். 

இதேபோன்ற ஒரு முட்டாள்தனம்தான் இலங்கை மக்களின் அரசியலும்; அறுபது, எழுபது வருடமாக இனத்துவேஷத்தையும், அழிவையும், குழப்பத்தையும் விரும்புபவர்களையே தமது அரசியல் தலைவர்களாக தெரிவு செய்து பழக்கப்படுத்தி, - (எப்படி இரசாயன உரத்திற்கு துலங்கள் காட்டும் விதைகளை நல்ல விதைகள் என்று கூறி ஏமாற்றிக்கொண்டிருந்தோமோ) - அதையே நல்ல அரசியல் என்று எண்ணிக்கொண்டிருந்த முட்டாள்களுக்கு திடீரென உலக ஒழுங்கு பொருளாதாரம் என்ற ஆணியைப் பிடுங்கியவுடன் குழம்பிப்போன குரங்குகள் போல் தாம் தெரிவுசெய்த முட்டாள் அரசியல்வாதிகளின் மேல் கோபம் பொங்கிக்கொண்டு வருகிறது. 

ஒரு தேசம் வளர வேண்டும் என்றால் இனம், மதம், மொழி இவற்றினால் பிளவுபடாத மனித வளமும், அந்த ஒத்திசைந்த மனித வளத்தினை ஒருங்கிணைத்து உலக ஒழுங்குடன் பொருளாதாரம் வளரக்கூடிய அறிவு, ஆற்றல் சமூகத்தில் வளர்க்கப்பட வேண்டும். 

இலங்கை விவசாயத்துறையில் எப்படி இரசாயனத்திற்கும், பீடைகொல்லிக்கும் நல்ல விளைச்சலைத் தரும் விதைகளை நல்ல விதைகள் என்று விளம்பரப்படுத்தி இன்று உற்பத்தி இல்லாமல் எப்படி தடுமாறுகிறதோ,

அதேபோல்

இனத்துவேஷம் கக்கி, போர் செய்பவர்கள்தான் வீரர்கள், தலைவர்கள் என்று உசுப்பேற்றி தெரிவு செய்த எந்த அரசியல்வாதிகளும் இன்றைய சவாலிற்கு முகம் கொடுக்க முடியாத தலைவர்கள் என்பதை உணராமல் ஜனாதிபதியை, பிரதமரை மாற்றிக்கொண்டிருந்தால் பிரச்சனை தீரும் என்று கனவு காண்கிறார்கள். 

முதலில் ஒவ்வொருவர் மனதிலிருந்தும் சகோதரத்துவம், ஒற்றுமை, இணைந்து செயலாற்றுதல், சவாலுக்கு முகம் கொடுத்தல் என்பன ஒவ்வொரு பிரஜைகளின் பண்பாகவும், அத்தகைய பண்பு உடையவர்களையே அரசியல் தலைவராகவும் கருதும் மனப்பண்பு மக்களிற்குள் உருவாக வேண்டும். 

அரசியல் தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்கவைப்பதை விட தமது மக்களுக்கு, அபிவிருத்திக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கிறோம் என்று உளமாரச் சிந்திக்க வேண்டும். 

உதாரணமாக மலையக மக்களிற்கு வீடு, நிலம் இல்லை என்று ஒவ்வொரு முறையும் மலையக அரசியல்வாதிகள் பேரம் பேசுகிறோம் என்று ஏமாற்றாமல், அரசாங்கம் தருகிறதோ, இல்லையோ எமது சமூகத்தைச் சேர்ந்த பணக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து நிலங்களை வாங்கி ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கலாம் என்ற இலகுவான தீர்விற்கு செல்லாத கபடத்தனம் இல்லாமல் போக வேண்டும். 

இப்படி பிரச்சனையின் ஆணிவேரிலிருந்து தீர்வினை யோசிக்க வேண்டும்!


Friday, July 22, 2022

தலைப்பு இல்லை

President Ranil Wickramasinghe, 08th Executive President of Sri Lanka set the rules of the political game as follows; (on 23 Jun 2014)

Politics is more than chess, its teamwork like cricket; needs stamina like a marathon; you must remember it's a hard game like Rugger, and also a blood sport like boxing

அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது, கிரிக்கெட் போன்ற குழுவின் ஒற்றுமை; மாரத்தான் போன்று ஓடி முடிக்கவேண்டும் என்ற உறுதி தேவை; ரக்கர் போன்ற (முட்டி மோதும்) கடினமான விளையாட்டை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்; மேலும் குத்துச்சண்டை போன்ற இரத்த விளையாட்டு. 

சதுரங்க ஆட்டத்தினால் pawns - நகர்த்தப்பட்டு முன்னாள் ஜனாதிபதி தூக்கி வீசப்பட, சகிப்புடன் மரதன் ஓடிய மனநிலையில் ஒற்றை ஆசனத்துடன் பாராளுமன்றத்திற்குள் வந்து அமர்ந்து, எதிர்த்தவன் எல்லோரையும் குழுவாக ஒருங்கிணைத்து தனக்குச் சாதகமாக வாக்கினைப் பெற்று அனைவரது ஒத்துழைப்புடன் கிரிக்கட் ஆடி அதிகாரத்தைக் கைப்பற்றி ஜனாதிபதியாகி இப்போது முட்டி மோதி ரகர் விளையாடிக்கொண்டிருக்கிறார்! 

அடுத்து இரத்தக்களறியுடனான குத்துச் சண்டையும் இருக்கு. மூஞ்சியில் குத்துவேன் என்றும் சொல்லியிருக்கிறார். 

ஆகவே கவனம் மக்களே!


Tuesday, July 19, 2022

தலைப்பு இல்லை

மக்களே, ஞாபகம் வையுங்கள்! கடன்வாங்கியவனுக்கு எங்கே சுதந்திரம்?

கடன் கொடுத்த பெரிய முதலாளி தனது வேலையைச் செய்ய கையைக் காட்டும் ஒருவர் சின்ன முதலாளி ஆகப்போகிறார் நாளைக்கு! 

அவர் வேலை கடன் கொடுத்த பெரிய முதலாளி சொல்லுவதன்படி கைகட்டி, வாய்பொத்தி, பெரிய முதலாளி மனம் கோணாமல் வேலை செய்வது மாத்திரம்தான்! 

அவ்வளவுதான்!


தலைப்பு இல்லை

ஜனநாயகம் என்பது majority rule; பெரும்பாலான மக்களின் தெரிவு அதிகாரத்தை ஆள்வது! 

இதில் தலைமைகளைத் தூக்கி வீசுவதால் ஒரு பிரயோசனமும் நிகழப்போவதில்லை! 

பெரும்பான்மை முட்டாள்களாக இருந்தால் ஒரு முட்டாளைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்!

திருடர்களாக இருந்தால் திருடர்களைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்! 

சுய நலவாதிகள் என்றால் சுய நலவாதிகளைத் தலைவராகத் தெரிவு செய்வார்கள்! 

இனவாதிகள் என்றால் இனவாதியை தலைவராகத் தெரிவு செய்வார்கள்!

ஆக, இளைஞர்கள் இப்படி பெரும்பான்மை மனதால் தெரிவுசெய்யப்படும் தலைமைகளைத் தூக்கி வீசுவதற்குப் புரட்சி செய்யாமல், இந்த தலைமைகளை உருவாக்கும் "பெரும்பான்மை மனதினைத் தூய்மை செய்வதற்கு புரட்சி செய்யவேண்டும். 

மதம், இனம், சுய நலம், அறியாமை, உழைப்பின்மை, சோம்பேறித்தனம், சரியான பொருளியல் அறிவுஇன்மை, முட்டாள்தனமான அதிகாரத்தின் மீதான பற்று இப்படியான முட்டாள்தனங்களில் இருந்து மக்கள் மனதினை மீட்பதற்கு புரட்சி செய்ய வேண்டும்! 

மண்ணில் இருந்து உற்பத்தியை அபரிதமாகப் பெருக்க புரட்சி வேண்டும்! 

உலகில் உள்ள தொழில்நுட்ப அறிவுகளை பிரயோகித்து உலக தரத்துடன் போட்டிபோடும் அறிவிற்கு புரட்சி செய்யவேண்டும்! 

எவரிடமும் கையேந்தாமல் தற்சார்ப்பு பொருளாதாரத்தை உருவாக்க புரட்சி வேண்டும்! 

இவை எல்லாம் எமது எண்ணத்தை மாற்றுவதால் உண்டாகும் புரட்சி!


தலைப்பு இல்லை

மனிதன் இன்பத்தை அடையப் போராடுகிறான்!

மனிதன் துன்பத்தை நீக்க போராடுகிறான்!

நினைப்பது நடக்கவில்லை என்றால் சலிப்படைகிறான்!

இன்பம் - துன்பம் - சலிப்பு இதுவே மனித வாழ்வின் அடிப்படை! 

எண்ணத்தை மாற்றி, சுய நலத்திலிருந்து விரிந்து இதயத்திலிருந்து செயலாற்ற எவரும் விரும்புவதில்லை!


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...