குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, December 12, 2022

தலைப்பு இல்லை

எனக்கு பாரதியின் யோக சித்தி பற்றி நிறையக் கருத்து உண்டு! பாரதியைப் பற்றி உரையாடுபவர்கள் பலர் இதைக் கருத்தில் எடுப்பதில்லை! 

எல்லோருக்கும் கவிஞன், சுதந்திரப் போராட்ட வீரன், அறிஞன்! நான் புரிந்த வகையில் ஸ்ரீ அரவிந்தருடன் பூரண யோகம் முயற்சித்த யோகி! 

பாரதியின் யோக வாழ்க்கையை எல்லோரும் சகோதரி நிவேதிதையுடன் தொடர்புபடுத்திக் கூறினாலும் செம்மையுற்றது ஸ்ரீ அரவிந்தரால்! ஸ்ரீ அரவிந்தர் எவருக்கும் தன்னை குருவென்று பிரகடனப்படுத்தியவர் அல்லர்! தன்னை ஒரு சக யோக சாதகனாகவே எப்போதும் நடத்தியவர்! பாரதியார் ஸ்ரீ அரவிந்தரின் உற்ற நண்பராகவும், அதேவேளை அவரது யோக சாதனைக்குரிய உத்வேகத்தையும் பெற்றார்! 

ஸ்ரீ அரவிந்தரை பாண்டிச்சேரியில் வரவேற்கும் பணியை பாரதியார் செய்தார்; அது போல் ஸ்ரீ அரவிந்தர் பாரதியாரிடமிருந்து தமிழ் பாசுரங்கள், இலக்கியங்களும் கற்றுக் கொண்டார். 

ஸ்ரீ அரவிந்தர் திருவுருவமாற்றம் எனும் பூரண யோகம் செய்தார். இந்த யோகத்தினைச் செய்யும் போது சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்தி இருக்கா விட்டால் உடல் நோயுற்று அழியும் அபாயம் நிறைந்தது. இது பற்றி ஸ்ரீ அரவிந்தர் ஸாவித்ரி காவியத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த யோகத்திற்காக 12 வருடங்கள் மௌனம் காத்திருக்கிறார். ஸ்ரீ அகத்தியர் அந்தரங்க தீக்ஷா விதியில் இத்தகைய உயர் யோகத்தினைச் செய்யும் போது உடலில் உருவாகும் பயங்கர நோய்களையும் அதிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்குரிய கற்பங்களையும் கூறுகிறார். சுவாமி விவேகானந்தரும் உயர் யோகத்தின் ஆற்றல் காரணமாக உடல் கெட்டு ஒளி சரீரம் ஏற்க வேண்டிய நிலை வந்தது! இதை அவரே பதிவுசெய்திருக்கிறார்.

இந்த வகையில் பாரதியின் உடல் அவரது ஆன்ம வளர்ச்சியைத் தாங்காது சிதைந்தது என்பதே சரி! அதற்கு அவர் இளமைக் காலத்திலிருந்து சில பழக்கங்களும், கட்டுக்கடங்காது சித்த விருத்திகளை உருவாக்கி கவிதை பாடும் ஆற்றலால் வீணாகிய உயிர் ஆற்றலும் காரணமாக இருந்திருக்கலாம்! 

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா, 

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே’ 

என்ற வரிகள் கவித்துவத்திற்கான வரிகள் மாத்திரமல்ல! பாரதியாரின் யோக சாதனையின் உறுதியையும் கூறுகிறது. 

பாரதியின் ஒளியான்மா வேண்டியதன் படி வரைந்த குறிப்பு இது!

ஸ்ரீ ஸக்தி சுமனன்

11-12-2022


Saturday, December 10, 2022

தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale முறையான ஒரு கல்வியல் ஆய்வினை முன்னெடுக்கிறது. மாத்தளை மாவட்டத்தில் வசிக்கும் பெருந்தோட்ட, இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றம் எந்தளவில் இருக்கிறது என்பதை க. பொ. த இந்த வருட (2021) பெறுபேறு அடிப்படையில் எப்படி வரைபு படுத்துவது என்பது இதன் நோக்கம். இதன் விரிவான அறிக்கைகள் உத்தியோக பூர்வமாக இவற்றுடன் தொடர்புடைய அதிபர், திணைக்களம், ஆசிரியர்களுடன் விரிவுரையாளர் Dr. Nishānthan Ganeshan தலைமையில் உரையாடப்படும். இந்தப் பதிவின் நோக்கம் சமூக விழிப்புணர்வாகும். 

மாத்தளை கல்வி வலயத்தில் மொத்தமாக 83 பாடசாலைகள் இருக்கிறது. இவற்றில் 59 சிங்கள மொழி மூல பாடசாலைகள்; தமிழ் மொழி மூல பாடசாலைகள் மொத்தம் 24; தமிழ் மொழி மூலப் பாடசாலைகளை நாம் மலையகத் தமிழர்களின் கல்வி முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு பாகுபடுத்தினால் 

முஸ்லீம் பாடசாலைகள் - 10

தமிழ் (இந்து/கத்தோலிக்க/கிருஸ்தவ) பாடசாலைகள் - 14 

அதாவது மலையக/பெருந்தோட்ட தமிழ் சமூகத்திற்கான பாடசாலைகளின் எண்ணிக்கை 14 ஆகும், 

இந்த 83 பாடசாலைகளிலிருந்தும் க.பொ. த சாதாரண தரத்திற்கு தோற்றிய மொத்த மாணவர்கள் 3918 ஆகும். இவற்றில் 

சிங்கள மொழி மூல மாணவர்கள் 2796. 

தமிழ் மாணவர்கள் - 539

முஸ்லீம் மாணவர்கள் - 583

இவற்றில் மொத்தமாக சித்தி அடைந்த மாணவர்கள்

சிங்கள மொழி மூல மாணவர்கள் 2198. 

தமிழ் மாணவர்கள் - 278 

முஸ்லீம் மாணவர்கள் - 391

சதவீதப்பிரகாரம் ஒப்பிட்டால்,

பரீட்சைக்குத் தோற்றிய மொத்த சிங்கள மாணவர்களில் 79% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள். 

பரீட்சைக்குத் தோற்றிய மொத்த முஸ்லீம் மாணவர்களில் 67% ஆன மாணவர்கள் உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள். 

பரீட்சைக்குத் தோற்றிய மொத்த தமிழ் மாணவர்களில் 52% ஆன மாணவர்கள் மாத்திரமே உயர்தரம் செல்வதற்கு தகுதியுடையவர்கள் ஆகியிருக்கிறார்கள். 

மாத்தளை தமிழ் சமூகம், பெருந்தோட்ட மலையகச் சமூகம் இந்தப் புள்ளி விபரவியலை நன்கு உள் வாங்கிக் கொள்ள வேண்டும். 

"எமது சமூகத்தில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடிப்படைக் கல்வித் தகுதி அற்றவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள்" 

சித்தி விகிதத்தை அதிகரிக்க மாத்தளையில் இருக்கும் சைவ, இந்து அமைப்புக்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் எப்படி பாடசாலைகளுக்கு உதவலாம்? 

சித்தி விகிதம் குறைவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன என்பது பற்றிய action research உம் அவற்றிற்கான தீர்வினை எப்படி அடைவது என்ற திட்டங்கள் இவற்றை கலந்தாலோசிக்கலாம். 

இந்த ஆய்வு முற்றிலும் எமது சமூகத்தின் கல்வியில் நிலவரத்தை தெளிவுபடுத்துவதற்கான சமூக அக்கறைப் பதிவுகளாகும். 

கல்வி முன்னேற்றம் தொடர்பான திட்டங்களை மாத்தளையில் முன்னெடுக்க மாத்தளைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் கலாநிதி நிசாந்தனை அணுகலாம்.

சிறந்த புரிதலைப் பெறுவதற்கு தரவுகளைப் பகுக்கும் போது பயன்படுத்தப்பட்ட அனுமானங்கள்:

1) முஸ்லீம் பாடசாலைகள் என்பதன் அர்த்தம் அங்கு பெரும்பான்மையான மாணவர்களும், பாடசாலை நிர்வாகமும் இஸ்லாமிய மத முன்னுரிமை தரும் பாடசாலைகளாகும். அங்கு சிறு விகிதமான இந்து தமிழ் பிள்ளைகள் பயில்கிறார்கள். 

2) தமிழ் பாடசாலை எனும்போது அங்கு பெரும்பாலும் மலையகத் தமிழர்களும் மிகச் சிறியளவில் இஸ்லாமிய மாணவர்களும் இருப்பார்கள்.

3) சிங்களப்பாடசாலைகள் எனும்போது அங்கு மிகச்சிறிய அளவில் மலையகத் தமிழர்களும், இஸ்லாமியரும் கற்கிறார்கள். 

4) தமிழ் பாடசாலைகளில் கற்கும் அனைவரும் மலையக இந்திய வம்சாவளித் தமிழர்கள் இல்லை; வட கிழக்கினைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும் இதற்குள் அடங்குவார்கள். 

5) தமிழர்கள் எனும் போது கிருஸ்தவ, இந்துக்கள் தம்மைப் பிரித்துக்காட்டுவதில்லை என்பதும் இங்கு நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

6) சமூகமாக கூட்டிணைந்து வளங்களைப் பெறுவதற்கு மிக அவசியமானது என்பதால் மேற்குறித்த பகுப்புகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் தமது சமூகம் என்ற உத்வேகத்துடன் கல்வி வளர்ச்சிக்கு தம்மால் இயன்ற உதவியை நன்கு செய்கிறார்கள் என்பது மிகச்சிறப்பான விடயம். 

7) மேற்குறித்த சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற சொற்பதங்கள் 100% பகுப்பாய்விற்கானதும் சமூகமாக கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளோம் என்பதை ஆராய்வதற்கான பகுப்பு என்பதையும், கல்வியில் விளிம்பு நிலையில் இருக்கும் மலையக தமிழ் சமூகத்தை உத்வேகப்படுத்தி தலைமைத்துவங்களை உருவாக்குவதற்குமான ஒரு கருவியாகவே புலமை அடிப்படையில் முன்வைத்துள்ளார்கள்; ஆய்வாளர்கள் எந்தவித இன, மதப் பாகுபாட்டினை தனிப்பட ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும், தமது ஆய்வுகளில் புலமைத்துவ அறத்தையும் முழுமையாகப் பின்பற்றுகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறார்கள்.


Thursday, November 03, 2022

தலைப்பு இல்லை

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய

நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு

அயஓளி யாயிருந் தங்கே படைக்கும்

பயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. (திருமந்திரம் - 392) 

இந்த பாடல் இரண்டாம் தந்திரத்தில் சர்வ சிருஷ்டி எனும் தலைப்பின் கீழ் வருகிறது.

இதனை தமிழறிவு, சைவ சித்தாந்த அடிப்படை கொண்டு பொருள் நோக்கின் முதலில் சந்தி பிரிக்க 

பயன் எளிதாம் பருமாமணி (செய்ய)

நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு

வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்

வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே. 

பதப்பொருள்: 

பருமாமணி=சிவபெருமான்

நயன்=இன்பம்

"ஆகிய" என்பது "செய்யிய" என்னும் வினையெச்சம்

நம்புதல்=விரும்புதல்

வயன்=வெற்றி 

வயணம்=காரணம்

பொருள்:

படைக்கும் ஆற்றல் (பிரம்மா) வெற்றியுடன் செயலாற்றும் காரணத்தை நான உணர்ந்து தெளிந்தேன் (வயனெளி தாம் வயண(ம்)ந் தெளிந்தேனே) அது என்னவென்றால் படைப்பினை நடத்துவதற்கான மூல காரண ஒளி படைப்பிக்கும் இடத்தில் அந்த சக்தியாக திரிந்து நிற்கிறது.  (வயன் ஒளியாயிருந் த(அ)ங்கே படைக்கும்) அதாவது சிவம் என்ற போராற்றலே பிரம்மா எனும் படைக்கும் சக்திக்கு மூலமாக இருக்கிறது என்கிறார் திருமூலர் பெருமான். அதற்கு மேல் உள்ள வரியில் அது என்னவென்று கூறுகிறார்; இன்பமான ஒன்று எல்லோராலும் விரும்பப்படுவது ஒன்று உண்டு (நயன் எளி(தாகிய) நம்ப ஒன்றுண்டு), அது யாரெனில் பருமாமணியான சிவனே!அவனைப் பற்ற எல்லாம் எளிதாகும். 

இந்தப்பாடலை பொருள் கொள்ள தனியே இந்த பாடலை மட்டும் கொண்டு விளங்கவியலாது என்பதறிதல் வேண்டும். 

சர்வ சிருஷ்டி அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து திருமூலர் சிவம் எப்படி ஒன்றாயிருந்து பலவாகி பராபரையாகி, பிரம்மாவாகி, விஷ்ணுவாகி ஆறாதாரங்களில் உறைந்து, பஞ்ச பூதங்களில் கலந்து செயல்கொள்கிறது என்பதனை விளங்குதல் வேண்டும்.

பழைய பதிவு

எழுதியது August 05, 2012

**************

#திருமந்திரம் #திருமூலர்


Tuesday, November 01, 2022

சித்த சம்ஸ்காரம்

பதஞ்சலி யோகத்தில் சித்தம் என்ற சொல் மிக முக்கியமானது. சித்தம் என்ற மனதின் பகுதியில் எழும் விருத்திகளை நிரோதம் செய்வதுதான் யோகம் என்று பதஞ்சலி வரையறுக்கிறார். 

சித்தம் என்பது எமது புலன்களால் பெற்ற அனுபவங்கள் அனைத்தையும் பதிவு செய்துகொள்ளும், கணனியில் hard disk போன்ற ஒரு பகுதியாகும். இந்த சித்தத்தில் ஏற்படுத்தும் பதிவுகள் அனைத்தும் சம்ஸ்காரங்கள் எனப்படும். சம்ஸ்காரங்கள் என்றால் நாம் பெற்ற அனுபவங்கள் விதை வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலை. 

இந்த சம்ஸ்காரம் ஒருவனில் ஐந்து விதமாக சேருகிறது;

1) ஆன்மாவின் சுய இயல்பான ஸத், சித், ஆனந்தம்

2) முற்பிறவியில் ஐம்புலன்கள் மூலம் பெற்ற அனுபவங்கள்

3) தாய், தந்தை குடும்பத்தினரால் புகுத்தப்பட்ட சம்ஸ்காரங்கள்

4) வாழும் சூழல் புகுத்தும் சம்ஸ்காரங்கள்

5) தனது இச்சசக்தியால் சிந்தித்து தானே உருவாக்கிக்கொள்ளும் சம்ஸ்காரங்கள். 

இந்த ஐந்து சித்தப்பதிவுகளின் அடிப்படையிலேயே ஒருவனின் மன எண்ண ஓட்டம் ஆரம்பமாகி, பின்னர் அது அவனது பழக்கமாக மாறி அவனது வாழ்க்கையை முன்னேற்றவோ தாழ்த்தவோ வைக்கிறது. 

ஒரு மனிதன் நல்ல வாழ்க்கையைப் பெற வேண்டும் என்றால் அவன் மேற்குறித்த ஐந்து வழிகளிலும் நல்ல சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல் தேவையற்ற சம்ஸ்காரங்களைப் பதித்துக் கொள்வதால் தவறான பழக்கவழக்கத்திற்கு உள்ளாகி வாழ்க்கையில் துன்பம் அனுபவிக்கத் தொடங்குவான். 

இப்படி தம்முள் ஏற்றுக்கொண்டு பதிப்பிக்கப்பட்ட சம்ஸ்காரங்களால் எழும் எண்ண விருத்திகளை நிரோதம் செய்து தமது சித்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெறுவதே பதஞ்சலி கூறும் அந்தரங்க யோகம் - தாரணை, தியானம், சமாதி! 


Saturday, October 29, 2022

தலைப்பு இல்லை

நான் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு வேலை நிமித்தம் (அப்போது யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்) காரில் பயணித்துக் கொண்டு மிகிந்தலையில் ATM இல் காசு எடுத்துவிட்டு மின்னஞ்சலை பரிசோதித்தால் ஒரு மேற்கத்தேய நபரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. செய்தி இதுதான்; எனது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலை முனைவர் திருமதி கீதா ஆனந் இனது மொழிபெயர்ப்பினூடாக தான் கற்றதாகவும் தனக்கு தமிழ் சித்தர் இலக்கியங்களில் உள்ள யோக நுணுக்கங்களைக் கற்க விரும்புவதாகவும் எழுதியிருந்தார். 

சரி, தனியே ஒரு நபரிற்கு கற்பிப்பது கடினம், ஒரு சிறுகுழுவாக ஆர்வமுள்ளவர்களை ஒன்று திரட்டுங்கள் என்று கூற அகத்தியர் குருகுலம் பிரேஸில் நாட்டில் உருவாகியது. 

சிரத்தையாக, பொறுமையாக இரண்டரை வருடங்களாக அர்ப்பணிப்புடன் ஒவ்வொரு விடயமாக கற்று வருகிறார்கள். மிகுந்த தேடல் உள்ளவர்கள்; கற்பவர்களில் பலர் ஆயுர்வேதம் முறையாகப் பயின்றவர்கள்; பல்கலைக்கழக விரிவுரையாளர், இசைக் கலைஞர், சூழலியலாளர் என்று பலவித துறைகளில் நிபுணர்கள். 

அவர்களுடன் உரையாடிய உரைத்தொகுப்பை சில மாணவர்களின் முயற்சியால் edited video ஆக ஒவ்வொரு வாரமும் புதன், ஞாயிற்றுக் கிழமைகளில் ஹடயோக பிரதீபிகை உரை வெளிவருகிறது. 

யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், ஹடயோக சாதகர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் பாருங்கள்! 

பார்த்தபின் like பண்ணுங்க, share பண்ணுங்க, இப்படி எல்லோரும் support பண்ணினாதான் channel வளர்ந்து இந்த வீடியோ செய்யும் முயற்சி எடுப்பவர்களுக்கு அவர்கள் வேலைக்குத் தகுந்த சன்மானம் கொடுக்க முடியுமாம். 

ஆகவே மறக்க வேண்டாம். 

மூன்றாவது பாகம்: முதல் கொமெண்டில்


Tuesday, October 25, 2022

தலைப்பு இல்லை

பேராசிரியர் தேஷ்பாண்டே அவர்களை ஸ்ரீ அன்னை ஶ்ரீ அரவிந்தர் சன்னதியில் சந்திப்பு! 

அவர் ஒரு இயற்பியல் பேராசிரியர் - He worked as Scientist in Tata Institute of Fundamental Research, Mumbai (1955-57); at Bhabha Atomic Research Centre, Mumbai (1957-80); at the Lawrence Berkeley Laboratory, Berkeley, California USA (1964-65); headed several Atomic Energy and Space Projects in Advance Technology, apart from being the Examiner for a number of PhD thesis in the field of Solid State Physics.

தனது ஓய்விற்குப் பின்னர் பாண்டிச்சேரியை வசிப்பிடமாக்கிக்கொண்டு ஸ்ரீ அன்னையினதும், ஸ்ரீ அரவிந்தரது ஸாவித்ரி காவியத்தினையும் ஆராய்ந்து வருவதை தனது வாழ்நாள் பணியாகச் செய்து வருகிறார். 

யோகத்தில் உடலில் நடைபெறும் மாற்றங்கள் - body transformation பற்றி ஸ்ரீ அரவிந்தரின் குறிப்புகளை தொகுத்து வருகிறார். நான் அவரது நூல்களைப் படித்திருக்கிறேன் என்று அது பற்றி உரையாடியபோது மிகவும் இரசித்துக் கேட்டார். பின்னர் நெகிழ்ந்து இரு நூல்களை அன்பளித்தார். 

வர இருக்கும் எமது அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை முழுமையாக review செய்து தருவதாகவும் கூறினார். தன்னுடன் வந்து ஒரு வாரம் தங்கி தனது ஆய்வுகளை உரையாடும்படி அழைத்திருக்கிறார்.


Monday, October 24, 2022

தலைப்பு இல்லை

மனம் பற்றிய யோக விளக்கம் இரு வருடங்களுக்கு முன்னர் ஆற்றிய உரையின் பதிவு. 

மொத்தமாக மானச யோக வித்யா என்ற தலைப்பில் YouTube இல் 05 பாகங்கள் தினசரி தரவேற்றப்படுகின்றன. இணைப்பு முதல் கொமெண்டில்...

மனம் பற்றிய யோக சாத்திர விளக்கம் வேண்டுபவர்கள் பார்வையிடுங்கள். 

மறக்காமல் Like பண்ணுங்க Subscribe பண்ணுங்க...


தலைப்பு இல்லை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

பண்டிகைகள் மனதிற்கு மகிழ்வைக் கொடுத்து மனித ஆற்றலை ஒன்றிணைக்கும் பொறிமுறைகள்! 

இதைக் காண்போர் அனைவருக்கும் அருளோடு செல்வம் ஞானம் ஆற்றலும் அன்பும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா! ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா! 

என்று பிரார்த்தித்து எமது மக்கள், சமூகம், நாடு, உலகம் உயர எமது அறிவு, ஆற்றல், அதிகாரத்தை பயன்படுத்துவோம் என்ற சங்கல்பத்துடன் இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்.


Sunday, October 23, 2022

தலைப்பு இல்லை

ஸ்ரீ ஸக்தி சுமனன் ஆற்றிய சுப்பிரமணிய யோக ஞானத் திறவுகோல் உரைகளின் தொகுப்பு அவரின் மாணவர்களின் முயற்சியால் இந்த இதழில் தொகுக்கப்பட்டுள்ளது. 

முருக உபாசனை பற்றிய பல அரிய கருத்துக்கள் வீடியோ கோப்புக்களாகவும் இணைக்கப்பட்டுள்ளன. 

தீபாவளியும் மகாலக்ஷ்மி அருளும் 

******************************************

திருப்புகழ் கூறும் சக்தி நிபாதம்

****************************************

திருப்புகழ் கூறும் அருணகிரி நாதரின் யோக நிலைகள்

************************************************

மந்திர சாதனைக்கு மகத்தான திருத்தலம் திருப்புகழ் போற்றும் ஆவினன் குடி

************************************************

முருகனின் உருவ யோக தத்துவத்தை விளக்கும் வள்ளலாரின் சுப்பிரமணியம் 

******************************************

கந்தக்குரு கவசம் மெய்ப்பொருள் விளக்கம்

************************************************** 

போன்ற சுவாரசியமான கட்டுரைகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த மாத சிருஷ்டி இதழ்.

படிக்க விரும்புபவர்கள் இந்த இலக்கத்திற்கு வாட்ஸப் செய்யுங்கள் +94776271292/+917200081475 PDF கிடைக்கும்.


Sunday, October 16, 2022

தலைப்பு இல்லை

சென்னையில் நடிகர் ஜீவாவுடன் ஒரு சிறு சந்திப்பு! காமராஜர் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவராக மிகத்தீவிரமாக சமூக முன்னேற்றம் பற்றிய சிந்தனையும் செயலும் கொண்டிருக்கிறார். 

ஸ்ரீ அரவிந்தரின் மனிதச் சக்கரம் பற்றிய கோட்பாடுகள், சமூக மனம் எப்படி உருவாகிறது, மக்களின் தன்மைக்கு ஏற்பவே தலைவர்கள் உருவாகிறார்கள் என்பது பற்றி உரையாடினோம். 

மிகச்சிறிய உரையாடல், எனினும் பிரயோசனமாக இருந்தது!

மக்களின் மனதைக் கட்டியெழுப்புவதே மிக உயர்ந்த சமூகப்பணி!


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...