குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 20, 2020

அறிவும் நதியும் வழிகாட்டலும்

பலர் வழிகாட்டுங்கள், உதவுங்கள் என்று கேட்கிறார்கள்! எப்படி ஒருவர் இன்னொருவருக்கு வழி காட்டுவது! ஒருவர் இன்னொருவருக்கு வழிகாட்டுவது என்பது பொய்யானது! 

வழிகாட்டுவது என்பது அறிவுடன் தொடர்புடையது! ஒரு விஷயம் புரியவில்லை தெளிவுபடுத்துங்கள் என்று கேட்கும் போது அது ஏன் எனக்குப் புரியவில்லை என்பதற்கான காரணம் தெரிந்தால் இது புரியும். 

அறிவை நதியாக எடுத்துக் கொண்டால் நதிக்கு வழிகாட்ட முடியாது, பள்ளத்தை ஏற்படுத்தினால் தானாகப் பாயும்! அது போல் நாம் மேடாக இருந்து கொண்டு நதியைப் பாயச் சொல்ல முடியாது. அது போல் நாம் பலவற்றைச் சேர்த்து வைத்துக் கொண்டு மனதையும் புத்தியையும் மேடாக்கி வைத்துக் கொண்டு அறிவைப் பாயச் சொல்லிக் கேட்க முடியாது! 

காற்று வெற்றிடத்தில் புகும், காற்றை இந்த இடத்திற்குள் புகுந்து கொள், இங்கே ஓடி வா என்று கேட்க முடியாது. அது போல் வெற்றிடம் இருந்தால் காற்றுச் சுழலும்!

ஒவ்வொன்றிற்கும் உள்ள நிபந்தனைகள் சரியாகப் பூர்த்தி செய்தால் மற்றவை தானாக நிகழும்! நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் ஒன்றைப் பெற வேண்டும் என்று உத்வேகப்படுவது எந்தப் பலனையும் தராது!


மேதா க் - 04

சென்ற பதிவில் Cognitive ஆற்றல் தான் மேதா சக்தி என்பதைப் பார்த்தோம். முற்காலத்தில் பாரதீய ரிஷிகள் வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கு ஒருவனுக்கு இந்த மேதா ஆற்றல் இருக்க வேண்டும் என்று கருதியிருந்தார்கள். 

இந்த மேதா ஆற்றலைப் பெற என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்திருந்தார்கள். ஆரம்பத்தில் மனித சமூகம் குழப்பம் குறைவான, வாழ்க்கையின் இலட்சியம் தெளிவாக அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருடார்த்தம் கொண்ட இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த காலத்தில், பூரண உடல் ஆரோக்கியம் இருந்த காலத்தில் அத்தகைய மனிதனிற்கு தனது மனதைப் பயன்படுத்தி மந்திர பாராயணம் போன்றவை இந்த ஆற்றலைப் பெற பயன்படுத்தினார்கள். 

இந்த வகையில் மேதா சூக்தம் எனப்படும் வேத மந்திரத்தொகுதி இந்த ஆற்றலைப் பற்றிப் பேசுகிறது. சூக்தம் என்றால் நன்றாகச் சொல்லப்பட்டது என்று பொருள்படும். மேதா சக்தி பற்றி நன்றாகச் சொல்லப்பட்டது மேதா சூக்தம் எனப்படும். இது பிரம்மத்தை அடைந்து ரிஷியாகும் நோக்கம் உள்ள மாணவர்கள் தாம் மேதா சக்தியை அடையவேண்டும் என்று மேதாவினை அடையத் துதிப்பதாக இருக்கின்றது. 

மேதா சக்தியின் நோக்கம் ஒருவன் பிரம்மத்தை அடைந்து ரிஷியாவதற்குரிய ஆற்றலைப் பெறுவதற்கே என்பது பெறப்படுகிறது. 

வேதங்களில் மேதா சூக்தம் மூன்று காணப்படுகிறது. 

மகா நாராயண உபநிஷதத்தில் காணப்படும் சூக்தம் மேதாவினை அடைய இந்திரன், அக்னி, அஸ்வினி குமாரர்கள், சூரியன், மேதா தேவி ஆகியோரைத் துதிப்பதாக வரும். 

ரிக் வேதத்திலும் வரும் மந்திரங்கள் அங்கிரஸ் முதலான சப்த ரிஷிகள், இந்திரன், அக்னி, பிரம்மா, வருணன், அஸ்வினி குமாரர், சரஸ்வதி ஆகியோரைத் துதிப்பதாகவும், அதர்வண வேத மந்திரங்களில் இந்திரன், அக்னி, வருணன், வாயு, மேதா தேவி ஆகியவர்கள் துதிக்கப்படுகிறார்கள். 

இந்தத் தெய்வங்கள் எங்கோ இருப்பதாக எண்ணத் தேவையில்லை. அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற தத்துவத்திற்கு அமைய எமது மனம் எளிதாக ஒடுங்குவதற்கு இவற்றை வெளிமுகப்படுத்தி புலன் வழி அனுபவமாகப் பெற தெய்வங்களாக வழிபடுகிறோம். அந்த ஆற்றல்களை எமது ஆற்றல்களாக்கிக் கொள்வதே இத்தகைய வழிபாட்டின் நோக்கங்களாகும். 

இந்த மூன்று மேதா சூக்தங்களும் ஒருவன் மேதா சக்தியைப் பெற முயற்சிக்க வேண்டும் என்பதையும், அந்த மேதா சக்தி தன்னையறிந்து தனக்கு மூலமான சக்தி எதுவென்பதை அறிந்து மனித குலத்தின் மேம்பாட்டிற்குப் பயன்படும் ரிஷியாக வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டிருக்கிறது. 

இதற்கு பிறகு வரும் காலத்தில் குருமுகமாய் தந்திர மார்க்கத்தில் இன்னும் பல உபாசனைகள் ஏற்படுத்தப்பட்டது. 

அவைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்...


மேதா சக்தி - 03

மேதா என்ற சொல்லின் விஷேஷ அர்த்தம் பற்றி உரையாடுவதானால் ஆயுர்வேதம், மேதா சூக்தம் ஆகிய இரண்டிலும் இந்தச் சொல் பாவிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் கொள்ளலாம். 

ஆயுர்வேதத்தின்படி மேதா என்பது அறிவினை சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய அறிவின் ஒரு வகை ஆற்றல் என்றும், சுசுருத சம்ஹிதைப் பிரகாரம் புத்தியின் எந்தப்பகுதி ஒரு விஷயத்தைப் பற்றியும் ஒரே நேரத்தில் பல விஷயங்களை அவதானித்து, முழுமையாக, தடையில்லாமல், மிக நுணுக்கமாக, ஆழமாக அறிந்துகொள்ளும் புத்தியின் ஆற்றல்களின் ஒன்றே மேதா எனப்படுகிறது. 

அஷ்டாங்க ஹ்ருத்யத்தின் உரை மேதாவை அறியப்படும் பொருளின் அனைத்து அமிசங்களையும் தடையில்லாமல், தெளிவாக அறிந்து அவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும் அறிவு எனப்படுகிறது. 

இது எமது புத்தியின் விஷேஷ அமிசம். அனைவராலும் எல்லா விஷயங்களையும் புலன்களால் அறிய முடியும். அதுபற்றி முழுமையான அறிவினைப் பெறுவதற்கு ஒருவனுக்கு மேதா சக்தி இருக்க வேண்டும். 

இதை நவீன மூளை - உளவியல் அறிவியலில் புரிந்து கொள்வதானால் Cognition என்று சொல்லப்படும். 

Cognition என்பது ஒருவன் தனது புலன்கள், சிந்திப்பது, ஏற்கனவே பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஆகிய மூன்றின் மூலமும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளும்/உணர்ந்து கொள்ளும் ஆற்றல் எனப்படும். 

மனிதனின் இந்த cognition ஆற்றல் 

1) உணர்வுடன் புரிதல்: ஏன் ஒரு விஷயம் நடக்கிறது என்ற தெளிவுடன் நாம் புரிந்துகொள்வது. 

2) உணர்வில்லாமல் புரிதல்: ஏதோ நடக்கிறது, ஆனால் அது ஏன் நடக்கிறது, எப்படி நடக்கிறது என்ற தகவல் எமது ஞாபகத்தில் இருப்பதில்லை.

3) தெளிவாகப் புரிதல்: ஒரு விஷயத்தைப் பற்றிய முழுமையான புரிதல்

4) சுருக்கமாகப் புரிதல்: கணிதச் சமன்பாடுகள் ஒருவித abstraction 

5) அக உணர்வுடன் புரிதல்: Intuition எனப்படுவது, 

6) மாதிரியுருக்கொண்டு புரிதல்: Model and designs 

என்ற பல நிலைகளில் செயற்படுகிறது. 

மேதா என்பதைப் புரிந்துக் கொள்ள நவீன உளவியல் - மூளை அறிவியலில் Cognition என்ற சொல் பொருந்துகிறது.


Friday, June 19, 2020

மேதா சக்தி - 02

தமிழ் - சமஸ்க்ருதம் இரண்டு மொழிகளிலுமே ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது அது தரும் பலன், கருத்து, அர்த்தம் இவற்றை அது கட்டாயம் குறித்துக்காட்டும். 

தகுந்த காரணம் இல்லாமல் எந்தச்சொல்லும் பயன்படுத்தப்படுவதில்லை. 

ஆகவே சொற்களுக்கு பொருள் காண நான்கு வகை அர்த்தங்கள் பயன்படுத்தப்படும். 

1) வேர்ச்சொல்

2) பொதுப்பயன்பாட்டு அர்த்தம்

3) விஷேட அர்த்தம்

4) சம்பிரதாய அர்த்தம்

இதன் படி மேதா என்ற சொல்லின் பொருளைப் பார்ப்போம். 

1. வேர்ச் சொல்: மேதா என்றால் முழுமை என்பது சமஸ்க்ருத அடிச் சொல்லின் விளக்கம், ஒன்றைப்பற்றிய முழுமையான அறிவு என்று பொருள்; ஒரு விஷயத்தில் மேதை என்றால் அந்த விஷயத்தில் முழுமையான அறிவு உடையவர் என்று அர்த்தம். 

2. பொதுப் பயன்பாட்டு அர்த்தம்:

ஒரு விஷயத்தை மறக்காமல் இருக்கும் ஞாபசக்தியுடையவனை மேதை என்று கூறுவர். அவன் பெரிய மேதாவி என்று கூறுவோமல்லாவா! 

3. விஷேட அர்த்தம்:

இந்தச் சொல் மிக நுணுக்கமாக ஆயுர் வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் சொல்லிற்கான பொருள் இங்கு விஷேட அர்த்தம் என்று சொல்லப்படும். இந்த விளக்கப் பிரகாரம்தான் வரும் பதிவுகள் காணப்படும். 

அதுபோல் மஹா நாராயண உபநிஷத்தில் வரும் மேதா சூக்தத்தின் பொருள் காணும் போது அதன் ஆழ்ந்த பொருள் அறிய விஷேட அர்த்தம் தெரிந்திருக்க வேண்டும். 

4. சம்பிரதாய அர்த்தம்:

அறிவு அனுபவத்தின் மூலம் ஒவ்வொரு தலை முறையிலும் குருபாரம்பரியமாக சேகரிக்கப்படும். இந்த அறிவு அந்த சம்பிரதாயத்திற்குள் கவனமாக இருக்கும். அனேகமாக தகுதி அற்றவர்களுக்கு உபதேசிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் சம்பிரதாயத்திற்குள் தீக்ஷை பெற்றவர்களுக்கு உபதேசிக்கப்படுவது. 

மேதா சூக்தத்திற்கு சம்பிரதாய அர்த்தமும் இருக்கும்.

இந்தப் பதிவுத் தொடர் வாசகர்கள் எந்தளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து மேதா சக்தி பற்றிய ஆயுர்வேத, மேதா சூக்த விஷேட அர்த்த அடிப்படையில் விளக்கலாம் என்று எண்ணியுள்ளோம். 

வெறுமனே Like போட்டு விட்டு கடந்து விடுபவர்களுக்காக எழுத முடியாது, ஆர்வமுள்ளவர்கள் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தி Comment இட்டால் அது தரும் தூண்டலில் அடுத்த பதிவு வரும்!


மேதா சக்தி - 01

மேதா சக்தியே பண்டைய ரிஷிகளின் அடிப்படை இலக்காக இருந்தது என்பது ஸ்ரீ காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவத்தின் மூலம் அறியப்படுகிறது. 
புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை எம்மில் இருத்தி தியானிப்போமாக என்ற பொருளில் பரம்பொருள் எமது புத்தியைத் தூண்டும் ஒளியாகவே அடிப்படையில் இருக்க வேண்டும் என்பது தான் காயத்ரி சாதனை. 
சூரியன் எப்படி தனது கதிர்களை நுண்மையாக செலுத்தி அனைத்தையும் ஊடுருவுகின்றதோ அது போல் அனைத்தையும் நுண்மையாக ஊடுருவி அறிவினைப் பெறும் வகையில் எமது புத்தி இருக்க வேண்டும் என்பது அவசியம். 
இந்த மேதா சக்தி இல்லாமல் போவதால் தான் மனிதன் துன்பம் தரும் செயல்களைச் செய்து துன்பமடைகிறான். 
அறிவினை சேகரித்து மனதில் ஒழுங்குபடுத்தும் ஆற்றல் மேதா சக்தி எனப்படுகிறது. 
காயத்ரி மந்திரத்தில் தீமஹி இல் வரும் தீ என்பது புத்தி என்று பொருள் கொள்ளப்பட்டாலும் அது உண்மையில் புத்தியின் முடிவெடுக்கும் ஆற்றலைக் (deciding factor of knowledge) குறிப்பிடுகிறது. 
இப்படியான மேதா சக்தியைப் பெறுவதற்கு ஆதிகாலத்தில் வேத மந்திரங்களும், மந்திர உட்சாடானங்களும் பயன்பட்டது. 
பின்னர் இந்த ஆற்றலை தரும் தாவர வர்க்கங்களை, மூலிகைகளை பக்குவம் செய்து உண்ணும் மருத்துவ முறை உருவாகியது. 
இப்படியான மூலிகைகள் மேதா மூலிகைகள் என்றும் மேதா சக்தியைத் தூண்டும் மருந்துகள் மேதா இரசாயனங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 
இதுபற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.... 
அறிய வேண்டிய ஆர்வம் உள்ளவர்கள் கீழே உங்கள் விருப்பத்தைப் பதியுங்கள்!

தலைப்பு இல்லை

மலையகத்தின் முக்கியமான குளவி/தேனிப் பாதிப்பு பற்றி தனது அவதானங்களை தம்பி Thilojan VM பதிவிட்டுள்ளார். 

பொதுவாக தேனி கொட்டி இறப்பது என்பதற்குரிய நிபந்தனைகளைப் பற்றிய அறிவியல் காரணத்தை இத்துடன் சேர்த்துப் பதிவிடலாம் என்று எண்ணுகிறேன். 

ஒரு தேனியின் விஷம் எப்போது மரணத்தை ஏற்படுத்தும் என்றால் மனிதனின் ஒவ்வொரு கிலோ கிராம் நிறையிற்கு 2.8 மில்லி கிராம் தேனிக் கொடுக்கின் விஷம் ஏறியிருக்கும் சந்தர்ப்பத்தில். 

ஒரு மனிதனின் நிறை 80 கிலோ என்றால் அவன் தேனி கொட்டிச் சாவதற்கு 80 x 2.8 = 224 மில்லி கிராம் தேனி விஷம் அவனது உடலில் ஏறினால் அவன் இறப்பான். 

சராசரியாக ஒரு தேனியின் கொடுக்கில் இருக்கும் விஷம் 0.059 மில்லி கிராம், 

ஆகவே 80 கிலோ உள்ள ஒருவன் தேனி கொட்டி இறக்க வேண்டுமானால் அவனைக் கொட்ட வேண்டிய தேனிக்களின் எண்ணிக்கை 224/0.059 = 3796 தேனிக்கள், 

ஒரு தேன் அடையில் சராசரியாக இருக்கும் தேனிக்களின் அளவு 75000

ஆகவே ஒரு தேன் அடை கொல்லக் கூடிய 80 கிலோ நிறை உடைய மனிதர்களின் எண்ணிக்கை 19. 

மேலும் தேனிகள் சுவாரசியமான நடத்தை உடையவை. தனது பின்கொடுக்கை உடலில் செலுத்தி apitoxin என்ற விஷத்தை செலுத்தும்  இது, உடலில் கொடுக்கினை செலுத்தி விட்டு உடைத்துக் கொள்ளும். இது 10 நிமிடங்களுக்கு விஷத்தை செலுத்தும் ஆற்றல் இருக்கிறது. அனேகமான தேனிக்கள் (தேன் சேர்ப்பவை) தற்கொலைப் படைதான், கொடுக்கை எவ்வளவு ஆழமாக உடலில் செலுத்திவிடுவதில் உத்வேகமாக இருந்து அவற்றை வெளியே எடுக்கும். அவை உடையும்போது இறந்து விடும்! சிலது மென்மையான தோலுள்ளவர்களில் பிழைத்துக்கொள்ளும். அவற்றின் கொடுக்கின் அமைப்பு உடலிற்குள் நீண்ட நேரம் இருந்து விஷத்தைக் கக்கும்படி அமைந்துள்ளது. தேன் சேர்க்கும் honey bee க்களின் நடத்தை!

ஆகவே தோட்டங்களில் தேனிக்களை முகாமைத்துவம் செய்வது கவனமாகக் கையாளப்பட வேண்டிய அதிமுக்கிய பிரச்சனை! 

இதைவிட குளவிகள் ஆபத்தானவை! 


சூரியக்கிரகண அனுஷ்டானம்

வரும் ஞாயிற்றுக்கிழமை சூரியக்கிரகணம். சூரியக்கிரகணம், சந்திரக்கிரகணம் சார்ந்து பலவித மாய எண்ணங்கள் கலாச்சார ரீதியாக இருக்கிறது. 

இதற்குரிய சரியான விளக்கம் சித்த - தாந்திரீக மரபில் தரப்பட்டுள்ளது. 

எமது உடல் ஆக்கப்பட்டிருப்பது சூரிய, சந்திர, அக்னி கலைகளால், "அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உண்டு" என்ற கோட்பாட்டின் படி அண்டத்தில் சூரியன், சந்திரன், பூமி (அக்னிகுழம்புதானே!) ஆகிய மூன்றின் இயக்கம்தான் எமது பிராணனின் இயக்கம் என்ற தத்துவம் பெறப்பட்டது. 

இந்த மூன்றும் ஒரு நேர்கோட்டில் வரும் போது அந்த நேரம் ஒருவித சமநிலையைத் தரும் என்றும் அந்த நேரத்தை சரியாக மனதை ஒன்றினால் உயர் உணர்வை (Higher consciousness) அடையலாம் என்பதே சூரியக் கிரகண மந்திர சாதனையின் அடிப்படை. 

சாதரண நாட்களில் சூரியனும், சந்திரனும், பூமியும் வெவ்வேறு கோணத்தில் நிற்கும் போது நாம் எமக்குள் இவற்றை (சூரிய, சந்திர, அக்னி கலைகளை) ஒழுங்குபடுத்த எமது மந்திர சாதனையால் முயற்சிக்கிறோம். இதில் வெற்றி கிடைப்பதற்கு அதிகம் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் கிரகண நாட்களில் பிரபஞ்சம் இந்த ஒழுங்கிற்குள் வருவதால் சிறிய முயற்சியிலேயே இதை அடைந்து விடலாம். ஆகவேதான் சூரியக் கிரகண நாளில் மந்திர சாதனை செய்தால் 10000 மடங்கு பலன் என்று கூறினார்கள்.


Thursday, June 18, 2020

தலைப்பு இல்லை

"Knowing is not enough; we must apply. Willing is not enough; we must do"

அறிந்தால் மாத்திரம் போதாது; நாம் அறிந்ததை பிரயோகிக்கும் ஆற்றல் வேண்டும்.

ஒரு செயலில் இஷ்டமிருந்தால் போதாது; அதை நாம் நிச்சயம் செய்ய வேண்டும்!


கூஷ்மாண்டம் - நீற்றுப்பூசணி

இது தேவ அமுதாகப் படைக்கப்படுவது. ஈஸ்வர சம்ஹிதையின் படி மகாவிஷ்ணுவிற்கு கூஷ்மாண்ட நைவேத்தியம் செய்யும் முறை; 

நன்றாக கரையும்படி அவித்த கூஷ்மாண்டத்திற்கு நிறையப் பசு நெய், கருமிளகுப் பொடி, சீரகப்பொடி சேர்த்து நன்றாக கரண்டியால் கிண்டி நெய் மணக்க படைக்க வேண்டும் என்று கூஷ்மாண்ட அமுது கூறப்பட்டுள்ளது. 

இது ஆயுர்வேதத்தில் மேதா இரசாயன வகைப் பொருள். மேதை என்றால் அறிவாளி என்று பொருள், புத்தியைத் தூண்டும் பதார்த்தம் இந்தக் கூஷ்மாண்டம். இதை அறிவியலில் Nootropic herbs (improve cognitive function, particularly executive functions, memory, creativity, or motivation, in healthy individuals) என்று சொல்வார்கள். கூஷ்மாண்டத்தின் Nootropic functionality பற்றி அனேக ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. 

சித்தத்தில் எழும் விருத்திகளைக் குறைப்பதில் இந்த கூஷ்மாண்டம் நல்ல பலனைத் தரும். இது Anxiety Disorder களிற்குரிய மருந்தாக கூஷ்மாண்ட இரசயானம் ஆயுர் வேதத்தில் பயன்படுகிறது.

இது தியானம் செய்பவர்கள் தமது மனச் சலனத்தினைக் குறைப்பதற்குரிய உணவுப் பொருளாக சரியாக பக்குவப்படுத்தி உண்ண முடியும்!


தலைப்பு இல்லை

அட கடவுளே! பூசணி சமைத்து படம்போட்டால் மூன்று வருடத்திற்கு முன்னர் மாங்காய் சமைத்து படம் போட்டிருக்கிறாய் மடையா என்கிறது பேஸ்புக்!

மார்க் சுக்கப்பர் நான் சமையல் செய்வதை கவனமாக கவனிக்கிறான்! 

    


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...