குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, June 05, 2020

இலங்கையும் யானைகளும்

இலங்கை, இந்திய கலாச்சாரத்தில் யானை தெய்வீகத்தின் அடையாளமாகவும், மன்னர் காலத்தில் பலத்தின் அளவீடாகவும் காணப்படுகிறது.

இலங்கை யானைகள் Elephas maximus maximus எனப்படும் இலங்கைக்கே தனித்துவமான உப இனமாகும். 

உலகில் வாழும் யானைகளில் இலங்கை 04 வது முக்கியத்துவமான இடமாக இருக்கிறது. மொத்தம் 2000 - 3000 காட்டு யானைகள் இருப்பதாக அறியப்பட்டிருக்கிறது. 250 - 300 வளர்ப்பு யானை இருப்பதாக தரவுகள் கூறுகிறது. இதை விட அதிகமாக இருக்கலாம் என்பது அனுமானம், 

ஒரு யானைக்கு 01 சதுர கிலோ மீற்றர் என்றால் மொத்த காட்டு யானைகளுக்கு 3000 சதுர கிலோமீற்றர் பரப்பு இவற்றிற்கு தேவைப்படுகிறது. இது இலங்கையின் மொத்த வனத்தின் 15% பரப்பு தேவைப்படுகிறது. 

ஆனால் இந்த மொத்த வனப் பரப்பு என்பது யானையின் நடமாட்டத்தை உள்ளடக் ககூடிய வனப்பகுதி இல்லை. இது சிறு சிறு தீவுக் காடுகளினதும் கணக்கு. யால, உடவளவை, லுணுகம்வெகர, மின்னேரியா, வில்பத்து, வன்னிக் காடுகள் என்ற ஆறு வனப் பரப்புகளில் காணப்படுகிறது. இவற்றில் வசிக்கும் யானைக் கூட்டத்தின் அளவு அதிகமாகவும் வனத்தின் அளவு மிகக் குறைவாகவும் இருப்பதால் யானைகள் ஊரினைக் கடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. 

ஆசியாவில் யானைகள் அடர்த்தியான குடித்தொகை கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. 

ஆகவே யானை - மனிதர் முரண்பாடும் இலங்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.


Thursday, June 04, 2020

யானைகளும் மனிதர்களும்

சூழலியல் விஞ்ஞானத்தில் மிருக நடத்தையியல் பயின்றவன் என்ற அளவிலும், இலங்கையின் வடபகுதி யானைகள் பற்றிய ஆய்வில் பங்கு பற்றியவன் என்ற வகையில் யானைகள் பற்றி தனித்த ஆர்வம் உடையவன். 

எனது விலங்கு நடத்தையியல் ஆசிரியர்களான காலஞ் 

சென்ற யானை பற்றிய ஆய்வாளர் பேராசிரியர் சந்தியாப்பிள்ளை மற்றும் கலாநிதி விஜயமோகன் அவர்களுடன் யானை பற்றிய களஆய்வுகளையும் எமது பண்டைய கஜசாஸ்திரம் பற்றிய ஆய்வுகள் மேற் கொண்டவன் என்ற அளவில் யானைகள் பற்றி சில தகவகளைப் பகிரலாம் என்று நினைக்கிறேன். 

யானை மிகவும் புத்திசாலியான முலையூட்டி; அதன் மூளை விருத்தி மனிதன், குரங்கு, டொல்பின் என்ற வரிசையில் புத்திக் கூர்மையில் மனிதனுக்கு நெருக்கமானது! கற்றல் ஆற்றல் உள்ளது; ஆகவே தனது வழித் தடங்கள், உணவு உள்ள இடங்களை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளும். இது தான் மனிதனுக்குப் பெரும் சவாலான விஷயம். மனிதனைப் போலவே தானும் கற்று சிந்தித்து செயலாற்றக் கூடியது. 

பூமியில்  இருக்கும் விலங்குகளில் மிகப் பெரியது; சாதாரணமாக கூட்டமாக உள்ள யானைகளில் Home rage எனப்படும் அதன் வதிவிட எல்லை 35 - 45 சதுர கிலோமீற்றர். ஒரு நாளில் இவ்வளவு தூரம் நடக்கும் ஆற்றல் உள்ளது. தனியன்களது வதிவிட எல்லை 50 சதுர கிலோமீற்றர். 

ஒரு யானை காட்டில் வசிப்பதற்கு குறைந்தது 01 சதுர கிலோமீற்றர் எல்லை தேவைப்படும். ஒரு இடத்தில் 2000 யானைகள் இருந்தால் 2000 சதுர கிலோமீற்றர் பரப்பு நிலம் யானைகளுக்குத் தேவைப்படும். 

இந்த அடிப்படையில் இன்று நடக்கும் பிரச்சனை அவற்றின் வாழ்விடங்களான காடுகள் குறைய அவை உணவிற்காக நாட்டிற்குள் படையெடுக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை கூடக் கூட பிரச்சனை அதிகமாகும். 

இலங்கையில் கடந்த நான்கு வருடங்களில் குறிப்பாக வன்னியில் குட்டி யானை கொல்லுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக  உள்ளக ஆய்வுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 

படத்தில் இருப்பவர் எனது முன்னைய பணிக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் உடவளவை நீர்த்தேக்கத்தில் சந்திக்கும் குட்டி யானை நண்பர்!


தலைப்பு இல்லை

நாளை உலக சூழல் தினத்திற்காக திரையில் தோன்றுகிறார்,  சூழலியலாளர் ஸ்ரீ ஸக்தி சுமனன்! 

சக்தி தொலைக்காட்சி Good morning Sri Lanka 0700 - 0830 AM. 

காத்திருங்கள்! 

     


Wednesday, June 03, 2020

தலைப்பு இல்லை

விடுபட்டுப் போன நூல் அறிமுகம்! மீண்டும் தொடங்குவோம்! 

ஸ்ரீ தந்திரலோக 

தந்திரம் என்றால் கபடத்தனம் என்று பொது வழக்கில் கூறப்பட்டாலும் உண்மையில் தந்திரம் என்றால் விரிவடைதல் என்று பொருள். 

புலன்களால் சிறைபட்டிருக்கும் மனம் விரிவடையும் உத்தி தந்திரம்! 

அறியாமையால் சிறைபட்டிருக்கும் புத்தி விரிவடைதல் தந்திரம்!

எமது சுயம் எல்லையற்ற ஆற்றலை உணர்வதற்கு தன்னை விரித்துக் கொள்ளுதல் ஸ்வத்தந்ரேயம் இதுவே சிவம் என்கிறார் அபிநவ குப்தர்!

பாரதத்தில் உள்ள அனைத்து தந்திர மார்க்கங்களையும் தொகுத்து தனது magnum opus ஆக அபிநவகுப்தர் தந்த நூல் தான் ஸ்ரீ தந்திரலோக. 

37 அத்தியாயங்களில் அனைத்தையும் தொகுத்து விளக்கியுள்ள இந்த நூலிற்காக உரையை நண்பர் Giriratna Mishra ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்! முழுமையாக முடியவில்லை.

இதுவரை 08/37 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளது! 

குறிப்பு: இந்த நூற்களை வாங்கிப் படிப்பதால் ஒருவன் தந்திர மார்க்கத்தில் செல்ல முடியாது; குரு முகமாய் அறிய வேண்டியவை அனேகம்! எனினும் அறியவேண்டிய ஆவல் உள்ளவர்களுக்கான பதிவு!


தலைப்பு இல்லை

நீயே நான் - ஆத்மன்!

மனமே எனது சக்தி

பிராணனே எனது பணியாட்கள்

உடலே உன் கோயில்

எனது புலன் அனுபவங்கள் அனைத்தும் உனது வழிபாடு!

எனது உறக்கம் உனது சமாதி

நான் நடத்தல் உன்னை பிரதட்சிக்கிறேன்

நான் பேசும் சொற்கள் எல்லாம் உன்னைப் புகழும் கவிகள்!

நான் செய்யும் செயல்கள் எல்லாம் உன்னை வணங்குவதே! 

ஹே கருணாமூர்த்தி! 

ஸ்ரீ ஸக்தி சுமனன் கவிதைகள்

03/06/2020


தலைப்பு இல்லை

எனது சமையலுக்கு மகள் மனமிக மகிழ்ந்து உவந்த பாராட்டுப்பத்திரம்.

சமையல் ஒரு நுணுக்கமான கலை, சுவையாகச் சமைக்க மனதில் சுவையை உருவாக்கி உணர வேண்டும், பின்னர் மனம் சொல்லும்படி பொருட்களை சேர்த்து அக்னியில் பதப்படுத்தினால் சுவையான உணவு தயார்! அந்த உணவு நாம் நினைத்த சுவையில் வந்திருந்தால் வெற்றி! அந்தச் சுவையை மற்றவர்களும் உணரக் கூடியதாக இருந்தால் பெரும் வெற்றி! 

சமையல் நாவின் வழி மனதிற்கு இன்பம் அளிக்கும் ஒரு அரிய கலை!


Tuesday, June 02, 2020

தலைப்பு இல்லை

ஒரே தத்துவப் பதிவுகளாக போடுகிறேனாம்! சிலரது மனக்குமுறல்கள்! 

எமது இயற்கை விவசாய வெண்டித் தோட்டம்! உரம் போடாமல், மருந்து தெளிக்காமல் உண்டாக்கி அமோக விளைச்சல்! ஆனால் கொரோனா கட்டிப் போட்டதால் விற்கமுடியாமல் முற்ற விட்டு விதை எடுக்க வேண்டியதாயிற்று!


பரதமும் சிவயோகமும்

பரதநாட்டியம் வெறுமனே கண்ணுக்கு இன்பம் தரும் உடல் அசைவு இல்லை! உணர்வைப் பேருணர்வாக்கக்கூடிய வித்தை என்பதை பரதமுனிவரின் பரத சாஸ்திரத்திற்கு அபிநவகுப்தர் எழுதிய அபிநவபாரதி என்ற விளக்கவுரை விளக்குகிறது! 
நாட்டியத்தினை எப்படி யோகமாக்கலாம் என்பதை விளக்கியுள்ளார். 
இசை, நடனம், கவிதை, நாடகம் இந்த நான்கும் மனதை துரிதமாக தன்பால் இழுப்பவை. அதனால் மனதின் சலனத்தைக் குறைத்து மந்த நிலையைப் போக்கி உற்சாகத்தை தருபவை. 
இதனாலேயே நல்ல இசை, நடனம், கவிதை, நாடகம் - சினிமா பார்த்தால் மனம் உற்சாகமடைகிறது. இந்த உற்சாகமடைதல் சலனமடையும் மனதை உள்முகமாக திருப்பி உயர் உணர்வு அடைவது எப்படி என்ற இரகசியமே பரத சாஸ்திரம், ஓசை நயம் மிகுந்த கவிதை, இன்னிசை, விறுவிறுப்பான திரைக்கதை உள்ள நாடகம் எல்லாம்! 
இதற்கு இந்தக்கலைகள் உணர்ச்சியைத் தூண்டாமல் மனதை இன்பமடையச் செய்து, உற்சாகமுறச் செய்யக் கூடியவையாகவும் உணர்வை அகமுகமாகத் திருப்பக் கூடியவையாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. 
இரண்டாவது ஒரு நடனத்தை மெய்மறந்து பார்க்கும் உணர்வு ஆங்காரத்திலிருந்து (ego) விலகி நிற்கும். ஒரு சினிமாப் படத்தைப் பார்க்கும் அந்தக் கதையில் நாமும் ஒருவராக இணைந்திருக்கும் நிலை! ஆகவே நல்ல கலையை இரசிக்கும் போது ஆணவம் அற்ற நிலையை நாம் அனுபவிப்போம்! மூன்றாவது இந்தக் கலைகளை ரசிக்கும் போது நாம் எமது மனக் கண்ணில் உருவகித்து அனுபவிப்போம். இப்படி மனம் உருவகம் செய்வதால் உணர்வு படைப்புத் திறன் பெறுகிறது. இப்படி கற்பனையின் மூலம் அனைத்தையும் மனதிலேயே உருவகிக்கக் கூடிய ஆற்றல் பெறுவதால் அவன் தனது நடத்தையில் வீணான செயல்களைக் கொண்டு வருவதைத் தடுக்கும் படைப்பாற்றலைப் பெறுகிறான். உணர்வை தனது அகவயமாக்கும் ஆற்றலைப் பெறுகிறான். 
இதனாலேயே கலைஞர்கள் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனாலேயே கலைஞர்களை நாம் கடவுளாகக் கொண்டாடுகிறோம். 
இந்த அடிப்படையில் அபி நவகுப்தர் பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரத்தின் 36 அத்தியாயங்களையும் 36 சைவ தத்துவங்களுடன் ஒப்பிட்டு அபிநவபாரதி என்ற உரை எழுதியிருக்கிறார். பரதசாஸ்திரத்தின் 36 அங்கங்களும் சைவத் தத்துவத்தின் 36 தத்துவ சுத்திகளைக் குறிப்பதை ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்.

தலைப்பு இல்லை

இன்று அபிநவகுப்தரின் ஜெயந்தி! இந்திய தத்துவ ஞானத்தின் சாரம் அபிநவகுப்தர். 

அபிநவகுப்தரின் தந்திரசாரம் முதல் அத்தியாயத்தில் கூறுகிறார். 

அபிநவகுப்தர் சிவம் பூர்ணப்ரதா என்கிறார். பூரண அறிவே சிவம் என்றார். சிவம் ஸர்வதந்திரய என்ற பூரண ஆன்ம சுதந்திரம் உடையது. ஆணவ மலத்தால் இந்த ஆற்றலை மறந்த ஆன்மா தனது சிவத் தன்மையை மறந்து துன்பத்தில் உழல்கின்றது. 
அபிநவகுப்தர் நேரடி சாதனா அனுபவம் இல்லாமல் நூலறிவால் மட்டும் சிவத்தை அறிந்துக் கொள்கிறோம் என்ற ஆணவ மலமுடையவர்களை இரண்டுவித பிரச்சனையை எதிர்க் கொள்வார்கள்  என்று கூறுகிறார்.
முதலாவது அனிச்சஸ்வபாவம்; நிச்சயமாக/தீர்க்கமாக முடிவெடுக்க முடியாத நிலமை என்று பொருள் , இரண்டாவது விபரீத நிச்சயம் என்பது முரணாக முடிவெடுக்கும் நிலையைக் குறிக்கும். 
இந்த இரண்டு குணமும் ஒருவனை தனது ஸ்வத்தந்திரய சக்தி என்ற ஆன்ம சுதந்திரத்தை தடுத்து உண்மை இயல்பை அடைவதை தடுக்கும். 
பெரும்பாலும் சைவம் காக்கிறோம், மதம் வளர்க்கிறோம் என்பவர்களில் அனேகர் ஆணவமலத்தின் இந்த இரண்டு பண்புகளால் வீண்விவாதம் செய்துகொண்டு தமது உண்மை இயல்பினை அறியாமல் சாதனையில் முன்னேற முடியாமல் இருப்பார்கள்.

Monday, June 01, 2020

தலைப்பு இல்லை

இன்று காயத்ரி ஜெயந்தி 

தென்னாட்டிலும் பொதுவான சம்பிரதாயப்படி காயத்ரி ஜெயந்தி என்பது ஆவணி அவிட்டம்!

ஆனால் வைகாசி சுக்லபக்ஷ தசமி முடிந்து ஏகாதசி ஆரம்பிக்கும் நேரம் விஸ்வாமித்ர மகரிஷி பூமிக்கு காயத்ரியின் பேருணர்வினை (Super consciousnesses) தனது மந்திர திருஷ்டியால் மந்திரப் பூர்வமான காயத்ரி தேவி பூமிக்கு வந்த நாள், ஆகையால் இந்தத் தினம் காயத்ரி சாதகர்களுக்கு சிறப்பானது. 

சென்ற நூற்றாண்டின் இணையற்ற காயத்ரி சாதகர் {24 வருடங்களில் வருடத்திற்கு 24 லட்ச புரச்சரணங்கள் 24 செய்து முடித்த} யுகரிஷி குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சர்யா இந்த நாளை தனது ஸ்தூல உடலை விட்டு காயத்ரி பேருணர்வில் கலக்க தேர்ந்தெடுத்தார்!

இன்றைய தினத்தில் எமது பிரசுரக் குழு சில ஆண்டுகளுக்கு முன்னர் (2017) சாதர்களுக்காக வெளியிட்ட ஸ்ரீ காயத்ரி யக்ஞ விதிகள் என்ற சிறு பிரசுரத்தை மின்னூலாக வெளியிடுகிறார்கள். 

ஆர்வமுள்ளவர்கள் இங்கு தரவிறக்கிக் கொள்ளுங்கள்: https://imojo.in/blm1tj

விலையென்று எதுவும் இல்லை! நீங்கள் விரும்பினால் பிரசுரப் பணிகளுக்கு விரும்பிய தொகை தரலாம்! தராவிட்டாலும் தரவிறக்கி படிக்கலாம்!


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...