குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 06, 2019

தலைப்பு இல்லை

தேவிபுரம் கட்டுரைத் தொடர் 09 பாகம் இன்றைய வீரகேசரி சங்கமம் இதழில்!

நுண்ணறிவும் ஞானமும் Intelligence and wisdom

1. நுண்ணறிவு தர்க்கத்திற்குத் தள்ளுகிறது, ஞானம் தெளிவினைத் தருகிறது

2. நுண்ணறிவு இச்சா சக்தியின் ஆற்றல், ஞானம் இச்சா சக்தியை வெல்லும் ஆற்றல்

3. நுண்ணறிவு எரிக்கும் சூடு, ஞானம் கதகதப்பைத் தரும் வெம்மை

4. நுண்ணறிவு தகவலின் தேடல், தேடுபவனை சோர்வாக்கும், ஞானம் உண்மையின் தேடல், தேடுபவனைத் தூண்டும்.

5. நுண்ணறிவு ஒன்றைப் பற்றிக்கொள்வது, ஞானம் கடந்து செல்வது

6. நுண்ணறிவு உன்னை தன் வழியில் இழுத்துச் செல்லும், ஞானம் சரியான வழியில் வழி நடாத்தும். 

7. நுண்ணறிவுள்ளவன் தனக்கு எல்லாம் தெரியுமென நினைப்பான், ஞானமுள்ளவன் இன்னும் கற்பதற்கு இருக்கிறது என்று நினைப்பான்.

8. நுண்ணறிவுள்ளவன் எப்போதும் தனது கருத்தை நிருபிக்க முயல்வான், ஞானமுள்ளவன் தர்க்கங்களில் எந்த உண்மையும் இல்லை என்பதை அறிவான்

9. நுண்ணறிவுள்ளவன் எப்போதும் தேவையில்லாத அறிவுரைகளைத் தருவான், ஞானமுள்ளவன் எல்லா விதமான தீர்வுகளின் சாத்தியங்களை ஆராய்வான்.

10. நுண்ணறிவுள்ளவன் கூறப்பட்டது எதுவென்பதை புரிந்து கொள்வான், ஞானமுள்ளவன் எது கூறப்படவில்லை என்பதையும் அறிவான். 

11. நுண்ணறிவுள்ளவன் தான் கூறவேண்டும் என நினைக்கும் போது பேசுவான், ஞானமுள்ளவன் கூறுவதற்கு ஏதும் இருந்தால் பேசுவான். 

12. நுண்ணறிவுள்ளவன் எல்லாவற்றுடனும் தனக்கு தொடர்பு உள்ளது என நினைப்பான், ஞானமுள்ளவன் எல்லாவற்றுடனும் தான் எப்படி தொடர்பு பட்டுள்ளேன் என்பதைப் புரிவான்.

13. நுண்ணறிவுள்ளவன் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த நினைப்பான், ஞானமுள்ளவன் எல்லாவற்றையும் சரியான திசையில் வழி நடாத்துவான் 

14. நுண்ணறிவுள்ளவன் உபதேசித்துக்கொண்டு இருப்பான், ஞானமுள்ளவன் அடையவேண்டிய இடத்தை அடைந்திருப்பான்

நுண்ணறிவு நல்லதாக இருந்தாலும் ஞானமே நல்ல பலனதைத் தருகிறது. 

Translated from Sai Ramji's wall post


Friday, July 05, 2019

தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் நூலிற்கு தமிழகத்தின் எழுத்தாளர், ஸ்ரீ அன்னையினது பக்தர், மகாயோகி ஸ்ரீ அரவிந்தர், ரமண மகரிஷி வாழ்க்கை வரலாறு இன்னும் பல நூற்கள் எழுதியவர், சித்திரக் கவி முதலிய தமிழின் ஆழமும் அகலமும் அறிந்த பரம்பரையில் வந்த Arvind Swaminathan அவர்களது கருத்துரை!

இயற்கை விவசாயம் இயற்கையைப் பேணும் விவசாயம்!

மண் எல்லா வளங்களையும் கொண்ட அன்னப் பூரணி என்பார் சுபாஷ் பாலேக்கர்! சூழலியல் விஞ்ஞானம் (environmental science) படித்து விட்டு Commercial plantation நிர்வாகத்தில் வேலை பார்த்த எனக்குரிய துறை ஆன்மார்த்தமான தொழில் இயற்கை விவசாயம் என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர் ஒருவருடன் கடந்த எட்டு மாதங்கள் திட்டமிடலும் முயற்சியுமாக ஒரு ஆய்வுப் பண்ணையை உருவாக்கினோம். முதல் படி மூன்று பயிர்கள் பலன் தந்திருக்கிறது. 
பூச்சிக் கொல்லி இரசாயன உரம் பாவிக்காமல் ஜீவாமிருதம் மாத்திரம் தெளித்து பரீட்சார்த்தமாக செய்யப்பட்ட இயற்கை விவசாயத்தின் முதல் விளைச்சல்!
கத்தரி
கௌபீ
கீரை
சம்பிராதயப் பூர்வமாக இன்று, இயற்கை அன்னை விளைவித்தவை எம்பெருமான் ஈசனுக்கு நிவேதிக்கப்பட்டது!

தலைப்பு இல்லை

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம்...
மாத்தளையில் உள்ள பல்கலைக்கழக பட்டதாரிகளை ஒன்றிணைத்து மாத்தளை தமிழ் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு! 
மலையக தமிழ் சமூகம் கல்வியால் பலம் பெற வேண்டும் என்பதே இவர்களது இலக்கு! 
இவர்கள் சில வருடத்திற்கு முன்னர் எம்மை தமக்கு ஆலோசகராக பணியாற்றும் படி கேட்டிருந்தார்கள். நானும் மனமுவந்து ஒப்புக் கொண்டேன். 
இவர்கள் செயலாற்றும் விதம் ஒரு முன் மாதிரியான உதாரணம். இவர்களின் திட்டங்களில் எந்த படோபமும், ஆடம்பரமும், முகஸ்துதிகளும் இருப்பதில்லை, எவரிலும் தங்கியிருப்பதில்லை! கிடைக்கும் சிறிய நிதியில் எப்படி சிறப்பாக திட்டங்களை முடிக்கலாம் என்று திட்டமிட்டு செயலாற்றுகிறார்கள். 
மாணவர்களுக்கு கருத்தரங்குகள் வைக்கும் போது தம்மை உயர்வானவர்களாக காட்டி மாணவர்களின் உளவியலைப் பாதிப்பதில்லை, நண்பர்களாக எளிதாக மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 
ஒரு சிலர் இவர்கள் தமது சொந்த புகழிற்காகச் செய்கிறார்கள் என்று புறம் பேசினாலும் அவற்றை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு தமது சமூக கடமையை செய்யாமலிருப்பதில்லை!
ஒரு முறை நண்பர் ஒருவர் நிகழ்ச்சிகளை பெரிய ஹோட்டலில் சிறப்பாக நடாத்த வேண்டும் என்று முன் மொழிந்த போது அதற்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டுவிட்டு, அண்ணா இந்தப் பணத்திற்கு நாம் 100 நிகழ்ச்சிகளில் எங்களது வழமையான style இல் செய்யலாம், இது வீண் ஆடம்பரச் செலவு என்று முடிவெடுத்த போது எனக்கு பெரிய ஆச்சரியம்! எவ்வளவு மனப் பக்குவத்துடன் நடக்கிறார்கள் என்பதை இட்டு.  
சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் தமது பொறாமை, காழ்ப்புணர்ச்சிகளை விட்டு இத்தகைய இளைஞர்களுக்கு உதவுவது ஒரு பெரிய சமூகப் பணி! 
அவர்களின் அண்மைய பணி....

Thursday, July 04, 2019

தேவி உபாசனையும் ஸ்ரீ லலிதையின் தந்திர மார்க்கமும்

1. நாம் எமது புலன்களின் இயற்கையைப் புரிந்துக் கொண்டால், 
2. புலன்களுடனான பற்றை விட்டு விட வேண்டிய அவசியத்தை உணர்ந்தால்,
3. எம்மைத் தடுக்கும் எல்லைகளையும், தடுப்புகளிலிருந்தும் விடுபட்டு சுதந்திரமாக வேலை செய்ய எம்மைப் பழக்கிக் கொண்டால்,
4. கடைசியாக இது சரி, இது பிழை என்ற முடிவெடுக்கும் இருமை நிலையிலிருந்து விடுபட்டு புலன்களின் எல்லைகளிலிருந்து விடுபட்டால் ,
அகங்காரம்/ஆணவம் உடையும், 
இவையே தேவி உபாசனையின் நோக்கங்களும் ஸ்ரீ லலிதையின் தந்திர மார்க்கமும்! 
- ஸ்ரீ அம்ருதானந்த நாத ஸரஸ்வதி -
(Dr. Prahaladha Sasthry, Nuclear Physicist and Former Scientist of Tata Institute of Fundamental Research)
சுருங்கச் சொல்லின் தேவி உபாசனையின் நோக்கமும் ஸ்ரீ லலிதையின் தந்திர மார்க்கத்தின் நோக்கம் அகங்காரம்/ஆணவம் அழிதல்! தேவி உபாசனையின் முக்கிய நோக்கம் நான் என்ற நிலை விரிந்து எல்லாவற்றிலும் தெய்வீகத்தை உணர்தல்!
Translated from William Thomas wall post

தலைப்பு இல்லை

வாராஹி உபாசனை என்ற இந்த நூல் நான் சிறுவனாக இருக்கும் போது கைக் காசு (அது தாங்க pocket money) சேர்த்து வாங்கிய புத்தகங்களில் ஒன்று! வாங்கும் போது எதற்காக வாங்கினோம் என்று தெரியவில்லை! ஆனால் பிற்காலத்தில் குருமண்டலத் தொடர்பால் தெரிந்துக் கொள்ள வேண்டியதற்கான முன்னறிவிப்பு என்பது புரிந்தது. 

வாராஹியைப் பற்றி தேடுபவர்களுக்கு இந்த நூலில் கடைசியில் துர்க்கைச் சித்தர் பெருமான் சொல்லும் ஒரு அரிய செய்தி; 

"மஹாவராஹி தேவியைப் பற்றி மந்திர சாஸ்திர நூல்களில் பல செய்திகள் உள்ளன. சில இடங்களிலும், சில விஷயங்களிலும் ஒரே செய்தி ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்கும். சாஸ்திரங்களைப் படிப்பதில் ஒரு வகையான சிறந்த பழக்கம் உண்டு. இதை குருமுகமாக கற்க வேண்டும். தெரிந்த விஷயம் இதுவே தெரியாத விஷயத்துடன் கலந்து போய்விடும். மந்திரங்கள் அதன் செயல் தன்மை, அதன் பரிமாணம், அதன் பயணகாலம், பயணதூரம் இவைகளைப் பற்றி எல்லாம் குருவருளால் தான் சித்திக்கும். புரச்சரணை நெறியில் இருந்து வழுக்கி விழுந்துவிடக் கூடாது. இது தன்னைத் தானே கீழே தள்ளுவதுடன், தன்னால் உதவிபெற வந்தனவையும் சேர்த்துத் தள்ளிவிடும்.

எல்லா தேவி மந்திரங்களையும் தானே குருவாக இருந்து தனக்கே ஜெபம் செய்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த பரதேவியான வாராஹியிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது. கருணை நிறைந்தவள் இவள்,  அத்துடன் கடுமையும் கொண்டவள். அருளைத் தரும் இவளே அழிவையும் செய்பவள். குளிர்மையானவள் இவள், அதே சமயத்தில் கொடும் தணலாகச் சுடுபவள். எனவே தான் வாராஹி தேவியை நன்கு ஞானம் பெற்றவர்களிடத்தில் உபதேசம் பெற வேண்டும் என்று குருமார்கள் சொல்லிக் கொண்டு வந்துள்ளார்கள். பழைய கால குருமார்கள் தங்கள் சீடர்களின் நல்ல சந்தோஷத்தை கேட்கவும் அதைக் கண்களால் பார்க்கவும் ஆசைப்பட்டார்கள், அவர்கள் மஹனீயர்கள் - மஹான்கள்! 

ஆகவே ஆர்வமுள்ளவர்கள் விஷய ஞானத்தைத் தேடாமல் குருமுகமாய் அறிய வேண்டும் என்பது இந்த ஆஷாட நவராத்ரியில் உபாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை!


Wednesday, July 03, 2019

ஆஷாட நவராத்ரி

தஞ்சைப் பெருங்கோயில் வாராஹி சன்னதி!

வாராஹி பிரபஞ்ச மூல ஸக்தியின் சேனாதிபதி! சாதகனின் அந்தக் கரணங்களை சுத்தி செய்து அன்னையை நெருங்க வைப்பவள்! இவள் ஆற்றலால் மனம் ஸ்திரப்படாதவர்கள் எவரும் ஸ்ரீ லலிதையை நெருங்க முடியாது! 

பிரபஞ்சத்திலுள்ள நல்லவை, தீயவை ஆகிய இரு சக்திகளினையும் கட்டுப்படுத்துபவள்! 

ஸாதகனில் ஆக்ஞா சக்ரேஸ்வரியாக புருவ மத்தியில் வீற்றிருந்து மனோன் மணியை அறிவிப்பவள்!


Monday, July 01, 2019

சாதகனின் இச்சை

ஒரு சாதகன் நேர்மையுடன் இருப்பது அவசியமானது! தனது ஆழ்மன ஆசைகளைப் புரிந்து கொண்டு அந்த ஆசைகளில் நிறைவேற்றி திருப்தி காணமுடிந்தால் அதற்குரிய முயற்சியை சரியாக அறிவுத் திறனுடன் செய்து அதனால் ஏற்படும் வெற்றியால் திருப்தியினை மனதிற்கு உண்டாக்க வேண்டும். இதுவே எல்லோருக்கும் பயன்படக் கூடிய இலகுவான வழி! வைராக்கியம் உள்ளவர்கள் அந்த ஆசைகளை தமது அறிவுத்திறத்தாலேயே வெல்ல முடியும். 
ஆகவே சாதனை தொடங்கும் ஒருவன் ஆரம்ப காலத்தில் தனது ஆழ்மன ஆசைகள், விருப்பங்கள் எவை என்று அறிந்து அதை தனது குருவினது ஆலோசனையுடனும் ஆசியுடனும் இஷ்ட தெய்வத்தின் அருளுடனும் தனது மனச் சக்தியை உபயோகித்து நிறைவேற்றிக் கொள்ளலாம். 
தெய்வ உபாஸனை எம்மை தெய்வ உருமாற்றம் செய்வதற்குரியவையே அன்றி எமது இச்சைகளைப் பூர்த்தி செய்யும் சாதனங்கள் இல்லை! 
உபாஸனை செய்து வருவதால் சாதகனது இச்சா சக்தியும் மனச் சக்தியும் பிராண சக்தியும் வலுப்பெறுவதால் இவற்றை பிரயோகித்து தனது ஆழ்மன ஆசைகளை பூர்த்தி செய்துக்க் கொள்ளலாம். இப்படிப் பூர்த்தி செய்வது தனது ஆழ் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தி தெய்வ உருமாற்றத்திற்கு நாம் முன்னேறுவதை தடைப்படுத்தும் மனதின் கீழ் இயல்புகளை ஏமற்றுவதற்கு பயன்படுத்தும் உத்தியாக இருக்க வேண்டுமே அன்றி மீண்டும் மீண்டும் இவ்வாறு செய்து மனதின் விளையாட்டில் மாட்டிக்கொள்ளக்கூடாது. 
பலர் உபாசனை சாதனை செய்து சில காரியங்கள் சித்தியானவுடன் தமது எல்லையற்ற ஆசைகளைப் பூர்த்தி செய்யும் வேலைக்காரர்கள் போல் உபாசனை சாதனையை கருதத் தொடங்குகிறார்கள். இதனால் அவர்களது ஆன்ம முன்னேற்றம் தடைபடத் தொடங்குகிறது. 
ஆகவே சாதனைப் பாதையில் அறிவுத் தெளிவும் குருவின் வழிகாட்டலும் அவசியமான ஒன்று!

தலைப்பு இல்லை

யோக சாதனையிற்கு இருக்கும் இடையூறுகள் பற்றி ஸ்ரீ அரவிந்தர் கீழ்வரும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார். 

ஒரு சாதகன் தனது முயற்சியை யோக சாதனையில் செய்து கொண்டு தன்னை தெய்வீக உருமாற்றத்திற்கு உள்ளாக்க விரும்பினால் அவனிற்கு குறுக்கே நிற்கக் கூடிய தடைகள் மூன்றே:

1) நம்பிக்கையின்மை அல்லது நம்பிக்கை போதிய அளவு இல்லாமை. இதனால் தாம் எதற்கு முயற்சிக்கிறோம் என்ற தெளிவு இல்லாமல் சிரத்தை குறையும். 

2) தன் முனைப்பு: தன்னைப் பற்றி பெரிதாக எண்ணிக் கொள்ளுதலும், தனது மனம் கூறும் விஷயங்களையே நம்பிக் கொண்டு இருத்தலும், இறை சக்தியின் மேல் உண்மையான சரணா கதியினைச் செய்யாமல் தனது ஆழ்மன ஆசைகளை நிறைவேற்றப் பாடுபடுவது. 

3) உணர்வில் ஒரு மந்தம் அல்லது அடிப்படையில் மாற விரும்பாமல் இருப்பது. பலருக்கு சாதனை செய்யச் சொன்னால் தமது அன்றாட வியாபாரம் குழம்பிப் போய் விடும், அல்லது தமது தற்போதைய வாழ்க்கை மாறிவிடும் என்ற பயம் என்பவை உணர்வில் ஒரு மந்த கதியை ஏற்படுத்தும். 

யோக சாதனையில் தெய்வீக உருமாற்றம் வேண்டுபவர்கள் இந்த மூன்று காரணிகளையும் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...