மிகக் சுருக்கமான அறிமுகங்கள் என்ற இந்த புத்தகத் தொகுதிகள் புதிய விஷயத்தைப் பற்றிய அடிப்படைகளைப் பற்றி அறிமுகத்தைத் தருகிறது. மொத்தம் இதுவரை 450க்கு மேற்பட்ட தலைப்புகள் வெளிவந்திருக்கிறது. இதில் சில நூறு எனது வாசிப்பில் இருக்கிறது. இந்த நூல்களைப் பற்றி அவ்வப்போது பதிவு போடலாம் என்பது அவா; தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. எத்தனை தலைப்புகள் உண்டு எனத் தெரியவில்லை.
முதலாவது அறிமுகம்:
சந்தேகம் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்.
ஒரு குறிப்பிட்ட அளவு சந்தேகம் பெரும்பாலும் ஒரு நல்ல விஷயம். உண்மையில், ஒரு 'ஆரோக்கியமான சந்தேகம்' கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம், அதாவது ஒருவர் எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துக்கொண்டு இருக்காமல் அதற்குரிய மாற்றுக்காரணம் இன்னும் ஆழமாக இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு சந்தேகப்படுதல் எனும் பண்பு பாதையை அமைக்கிறது.
ஒரு விஷயத்தின் காரணத்தை சந்தேகத்திற்கு உட்படுத்தி அதைவிட மேலான ஒரு காரணம் இருக்கிறது என்ற நம்பிக்கைக்குள் புகுந்து அறிவினைப் பெற சந்தேகம், அறிவினை வளர்க்கும் ஒரு ஆரம்ப உத்தியாக ஒருவனுக்கு உதவி செய்யலாம்.
ஒரு ஆரோக்கியமான சந்தேகம் நம்மை ஏமாற்ற விரும்புபவர்கள் எம்மை ஏமாற்றாமல் தடுக்க உதவுகிறது.
சந்தேகத்தின் அடுத்த பக்கம் தர்க்க சிந்தனை இன்றி "எழுந்தமானமாக சந்தேகப்படுதல் அல்லது தீவிர சந்தேகம்"
இதற்கு உதாரணம் அறிவியல் அடிப்படையில் சந்தேகப்படுகிறோம் என்பதில் ஒரு அடிப்படை இருக்கிறது. அறிவியலையே சந்தேகப்படுகிறோம் என்பது தீவிர சந்தேகம் எனப்படுகிறது. இந்த நிலைக்குப் போகும்போது அறிவியலை நாம் எமக்கு பயன்படுத்த முடியாத நிலையை அடைவோம்.
உறவுகளில் இவர் எனக்கு நம்பிக்கையானவரா என்ற ஆரோக்கியமான சந்தேகத்தினை உள்வைத்து அவதானித்து இன்னும் உறவுகளை மேம்படுத்தி புரிந்துணர்வினை ஏற்படுத்த முடியும்; ஆனால் உறவிற்குள் அதிதீவிர சந்தேகத்தைக் கொண்டுவந்தால் அந்த உறவே இல்லாமல் போகும்.
சந்தேகம் பற்றி சந்தேகமில்லாமல் அறிந்துகொள்ள, சந்தேகபுத்தியில் இருந்து எப்படி எமது அறிவினை, விவேகத்தினை வளர்க்கலாம், அறிவின் ஆதாரம் சந்தேகத்திலிருந்து தொடங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள நல்ல அறிமுக நூல்.