குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 27, 2011

முரண்பாடுகளை, குதர்க்கங்களை எப்படி சமாளிப்பது?- புத்தரின் ஞானம்


உலகில் பலவகையான மனிதர்களுடன் பழகுகிறோம், வாழ்கிறோம். குறிப்பாக சமூக அமைப்பில் பலதரப்பட்ட மனிதர்கள், பல்வேறு குணாதிசயங்களுடன் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் ஒருதளத்தில் இருந்து சிந்திப்பதில்லை. அவர்கள் சிந்திக்கும் முறை அவர்கள் வாழ்ந்த சூழல், சமூக அமைப்பு, குடும்பம், கல்வி, சிந்தனைத்திறன் என்பவற்றிற்கேற்ப வேறுபடுகிறது. வேறு பட்ட எண்ணங்களுடையவர்கள் ஒரு தளத்தில் சந்திக்கும் போது தளம் ஒன்றாகவும், ஒரு பொருள் பற்றிய பார்வை வேறுவேறாகவும் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் முரண்பாடு தோன்றுகிறது, இந்த முரண்பாடு சாதாரண வாக்கு வாதத்திலிருந்து, சமூகச் சண்டைகள் வரை நீண்டு சென்று அந்த தளத்தின் சமனிலையை, ஒத்திசைவினைக் குலைக்கிறது. இப்படி சமனிலை குலைவது அந்த தளத்தின் ஆக்கபூர்வ நிலையினை சீர்குலைக்கிறது, இதனால் இறுதியில் பயன் எதுவும் இருப்பதில்லை.

இதன் அடுத்த நிலை கர்ம விதிப்படி செயற்படுகிறது, அதாவது வினை விதைத்தவன் வினையறுப்பான் என்ற விதி. சமனிலையினை குலைப்பவனே இறுதியில் பலமடங்காக அந்த நிலையினை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

ஆக அகச் சமநிலை பெறுவது, கர்மாவினை எப்படி சமப்படுத்துவதும் என்ற உத்தியினை மனதின் செயற்பாடுகளை முற்றும் உணர்ந்த விஞ்ஞானியான புத்தபெருமானின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்றின் மூலம் அறிந்து கொள்வோம்.

உலகில் உதித்த ஞானிகளில் தனது புத்திமயகோசத்தினை அதி உச்ச நிலையில் விழிப்படைய வைத்த மனிதன் புத்தர் என்பது அறிஞர்கள் பலரின் கருத்து. அவரது வாழ்க்கைச் சம்பவங்களும் எமக்கு பயன்படக்கூடியவை. இங்கு மேற்குறிப்பிட்ட நிலையிற்கு அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்றினைப் பார்ப்போம்.

ஒரு நாள் புத்தர் தனது உபதேசத்தினை நிறைவு செய்துவிட்டு ஒரு கிராமத்தினூடாக சென்று கொண்டிருக்கிறார், அப்போது ஒரு  வயதில் இளமையான, நன்கு (தர்க்க சாஸ்திரம் கற்றிருப்பான் என நினைக்கிறேன்) கற்ற இளைஞன் புத்தரை இடைமறித்து வாதத்திற்கு அழைத்தான்.

வாதம் என்றால் நேர்மையான வாதமில்லை,அவனது நோக்கம் அவரை எப்படியாவது தூற்றி பலர் முன்னிலையில் அவமானப்படுத்திவிடவேண்டும் என்பதே! கண்டபடி தூற்றினான்.

உமக்கு யாருக்கும் தியானம் கற்பிப்பதற்கு எதுவித தகுதி இல்லை, ஏதோ பொய்யான ஒன்றை கற்பிக்கிறீர்! உமது குரு யார்? உமக்கு யார் புத்தர் என பட்டம் தந்தது? எந்தப்புத்தகத்தில் உமது தியானப்பயிற்சிகள் உள்ளது? நீர் ஒரு போலி ஆசாமி என கண்டவாறு திட்டித்தீர்த்தான்.

இவ்வளவற்றையும் கேட்ட புத்தர் அமைதியாக, சமனிலை மாறாத மனதுடன், புன்னகைத்தவண்ணம் தன் கருணைமிகுந்த கண்களால் அவனை ஆழமாக பார்த்தவண்ணம் அவனிடம் கெட்டார்; " அன்பனே சரி நீ சொல்வதெல்லாம் சரியாகவே இருக்கட்டும், இப்பொழுது நான் கேட்ட்கும் கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்வாயா?" என்றார்.

அந்த இளைஞனிற்கு பலத்த ஏமாற்றமாகிவிட்டது, அட நாம் இவ்வளவு அவமானப்படுத்தியும் இந்த மனிதன் திருப்பியும் என்னுடன் பேசுகிறானே என்று எண்ணிய வண்ணம் "சரி" என்றான்.

அதன்பின்பு புத்தர் "அன்பனே நீ ஒருவருக்காக பரிசுப்பொருளை வாங்குகிறாய், அவரிடம் கொடுக்கும் போது அவர் அதை வாங்கிகொள்ள மறுத்துவிடுகிறார், அப்படியாயின் அந்தப்பரிசுப்பொருள் யாருக்குச் சேரும்?" என்றார்.

அந்த இளைஞன் சற்று வியப்புடன் "அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் தானே பணம் கொடுத்து வாங்கினேன், ஆதலால் என்னையே அவை சாரும்" என்றான்.

புத்தர் புன்னகைத்த வண்ணம் "மிகச்சரி,இதே விதி உன்னுடைய கோவம்,பழிச் சொல், ஆணவம், அன்பு, கருணை உட்பட எந்த மன உணர்ச்சிக்கும் பொருந்தும், நீ என்னை அவமானப்படுத்த முனையும் போது உன்னையே அவமானப்படுத்துகிறாய், நீயே இறுதியில் அவமானப்படுகிறாய். நீ செய்து கொண்டவை அனைத்தும் உனக்கே திருப்பி வரும், அவற்றை நீ மறுக்க முடியாது என்பதே கர்மாவின் விதி, அவற்றில் இருந்து மீளவிரும்பினால் நீ உருவாக்கும் தீய உணர்ச்சிக்கு எதிரான நல்ல உணர்ச்சிகளை உருவாக்கு, உனது மனம் அமைதியுறும் ஆனந்தமடையும், மகிழ்ச்சியாக இருப்பாய்" என்று கூறிவிட்டும் மௌனமாக புத்தர் தன் பாதையில் நடக்கத்தொடங்கி விட்டார், அந்த இளைஞன் அதைக்கேட்டு திருந்தினானோ அல்லது வாதிடுவதற்கு இன்னொருவர் வரும் வரை காத்திருந்தானோ தெரியவில்லை. அதைப் பற்றி எமக்கு என்ன கவலை? அவனால் எமக்கு கிடைக்கவேண்டிய ஞானம் கிடைத்திருக்கிறது என்று அகம் மகிழ்வோம்.

இதில் பெறவேண்டிய நீதி:
புத்தரைப் போன்ற பெரிய ஞானியையே கேள்வி கேட்டு குதர்க்கம் புரிந்த சமூகம், எம்மைப் போன்ற சாமானியர்கள் ஒரு காரியம் செய்யும் போது தூற்றாது என்பது என்ன நிச்சயம், அப்படியான சந்தர்ப்பத்தில் அவர்கள் கூறுவதை அவர்களிடமே வைத்துக்கொள்ளச் சொல்லி, அவர்கள் பால் மனதைச் செலுத்தாமல் எமது பாதையில் நாம் பயணிக்கவேண்டியதுதான்!   இப்படிச் செய்யும் போது நாம் எமது சமநிலை இழக்காத நிலையுண்டாகும். அவர்கள் தாம் செலுத்தும் மன அலைகளுக்குரிய பலனைப் பெற்றுக்கொள்வார்கள். சமூக வழக்கில் சொல்வதானால் "சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்கள்"

8 comments:

  1. அவர் அவர்கள் தாம் செலுத்தும் மன அலைகளுக்குரிய பலனைப் பெற்றுக்கொள்வார்கள். சமூக வழக்கில் சொல்வதானால் "சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்கள்"

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

    ReplyDelete
  2. வினை விதைத்தவன் வினை அறுப்பான்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. "அப்படியான சந்தர்ப்பத்தில் அவர்கள் கூறுவதை அவர்களிடமே வைத்துக்கொள்ளச் சொல்லி, அவர்கள் பால் மனதைச் செலுத்தாமல் எமது பாதையில் நாம் பயணிக்கவேண்டியதுதான்! இப்படிச் செய்யும் போது நாம் எமது சமநிலை இழக்காத நிலையுண்டாகும்"

    இவ்வாறாக நாம் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சமனிலையைவேண்டி நம் பாதையிலேயே சென்றுகொண்டிருந்தால் நாம் தனிமரமாகிவிடமாட்டோமா? நாம் சமனிலையற்றசமுதாயத்திலல்லவா வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
    காய்த்தமரம் கல்லடிபடும் என்றொரு பழமொழி கேள்விப்பட்டுள்ளேன், அப்படியென்றால் காயம் மரத்திற்குமட்டும்தானா? எறிந்தவன் புத்திசாலியா?

    ஆதி

    ReplyDelete
  4. @ Nathimoolam

    இதன் உண்மையான அர்த்தம் அவ்வாறில்லை என நினைக்கிறேன், இந்த உபதேசம்/உத்தி வாக்கு வாதங்களுக்கும் எண்ணத்தாக்குதல்களை சமாளிக்க ஒரு உத்தியாக மட்டுமே இருக்கலாம்.

    மற்றையவிதமான தாக்குதல்களுக்கு மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே பிரயோகம் வேறாக இருக்கலாம்.

    உதாரணமாக பௌத்தத்தினை அடிப்படையாக கொண்ட போர்க்கலைகளில் உடல் தாக்குதல்களில் கூட இந்த உபதேசத்தினை தற்பாதுகாப்பு உத்தியாக‌ பாவித்து எதிராளியின் சக்தியினையே அவனுக்கு எதிராக பிரயோகிக்கும் நிலை உண்டு.

    நீங்கள் சமனிலை அடையும் போது என்பதன் உண்மையான அர்த்தம் எதிராளியின் சக்தியினையும் உபயோகிக்கத்தொடங்குகிறீர்கள் என்பதுதான்.

    நல்ல கேள்வி, இதன் பிரயோக இரகசியத்திற்கு சில மனவியற் கோட்பாடுகள் தெரியவேண்டும்தான்!

    ReplyDelete
  5. வணக்கம்! ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் எம்போன்றவர்க்கு பாலைவனத்தில் கிடைத்த தண்ணீராக பதிவுகள் உள்ளன.சித்தர் எல்லாம் ஒரற்றர் என சூழ்ந்து தெளிவான செய்திகள் நமக்கு தருவார்கள்.தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete
  6. அருமையான இந்த பதிவு வலைச்சரத்தில்.

    ReplyDelete
  7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_24.html

    ReplyDelete
  8. வணக்கம்
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...