குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, December 17, 2011

அஜபா ஜெபம் பற்றி சில கேள்விகள்

ஆதித்த கரிகாலன் என்பவர் அனைவரும் தினசரிசெய்யக் கூடிய எளிய யோகப்பயிற்சி பதிவின் கீழ் இட்ட கேள்விக்கான பதில், பதிலின் விரிவுகருதி தனிப்பதிவாக இடப்படுகிறது. அவரின் ப்ரொபைலில் வேறு விபரங்கள் எதுவும் காணப்படவில்லை.

கேள்வி வருமாறு:

ஐயா,

அஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் "சம்" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் "ஹம்" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் "சோ-ஹம்" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன். முறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன். இது பற்றி உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

இந்தக் கேள்வியில் மூன்று கூறுகள் காணப்படுவதால் பதிலளிப்பதற்கான  வசதிகருதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன

அஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் "சம்" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் "ஹம்" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் "சோ-ஹம்" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன். 

அஜபா என்பதன் பொருள் "மீண்டும் நடைபெறாதது" என்பதாகும், அதாவது ஒருமுறை நடந்தது திரும்பவும் நடைபெறாது எனபதாகும், மூச்சு அஜபா, இரத்தோட்டம் அஜபா, இதயதுடிப்பு அஜபா, நதியின் நீரோட்டம் அஜபா, இப்படி மீளவும் நடைபெறாத விடயங்கள் எல்லாம் அஜபாதான், விழிப்புணர்வினை அடைவதற்கு அந்தக்கணத்தில் நடைபெறும் விடயத்தினை அவதானித்தல் வேண்டும், சம்பிரதாய ரீதியில் மூச்சினை அவதானித்தல் அஜபா என கொள்ளப்பட்டு வருகிறது, நீங்கள் கூறவரும் கருத்து பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே! விழிப்புணர்வுடன் மீண்டுவராத எந்த ஒன்றையும் அவதானிக்கும் எந்த பயிற்சியினை அஜபா எனலாம் என்பது எமது விளக்கம். உதாரணமாக நதியின் நீரோட்டத்தினை உற்று நோக்கி அவதானிக்கும் பயிற்சி ஜென் தியான முறையில் காணப்படுகிறது, இது கூட ஒரு வித அஜபாதான்.

நாம் அவதானிக்கும் பொழுது மனதாலேயே அவதானிக்கிறோம், மனம் சங்கற்ப விகற்பங்களுக்கு உள்ளாக கூடியதுடன், மற்றைய புலன் வழியும் செல்லக்கூடியது. ஆதலால் ஒலியுடன் தொடர்பு படுத்தும் போது விழிப்புணர்வு இன்னும் அதிகமாகும், ஆதலாம் இயல்பாக நீங்கள் மூச்சினை உள்ளிழுக்கும் போது உருவாகும் ஒலி "ஸோ" என்பதும், வெளிவிடும் போது உருவாகும் ஒலி "ஹம்" என்பதுமாகும். இதனை அவதானிக்கும் செயல் முறையே அஜபா காயத்ரி யாகும்.

மேற்கூறிய நிலையினை அடைவதற்கு உண்மையாக பயிலும் போது படிப்படியான நிலைகள் சிலது உள்ளது, அதாவது நீங்கள் "ஸோ""ஹம்" என உணரும் நிலை இதை பயிலத்தொடங்கியவுடன் வந்துவிடாது, பலர் அஜபா ஜெபம் செய்கிறேன் எனக்கூறி "ஸோ ஹம்" என மனதில் ஜெபித்துவருவார்கள்.

எமது பதிவில் அஜபா ஜெபத்தின் படிமுறைகளை எமது குருநாதர் பயிற்றுவித்த முறைப்படி மிக இலகுவாக்கி வெளியிடுகிறோம், இதனை பயிற்சி செய்யும் போது நீங்கள் எந்த முயற்சியும் இல்லாமலே அடுத்த படியிற்கு செல்வீர்கள். உதாரணமாக மேற்கூறிய பயிற்சியினை செய்ய முயன்றிருந்தால் இயல்பாகவே அடுத்தகட்டமாகிய "ஆழமான தீர்க்க சுவசத்தினை" அடைந்திருப்பீர்கள்.

எமது பதிவுகளை படிக்கும் போது எமது பொருள் கொள்ளல் சற்று பொதுப்பொருளுடன் விலகல் இருப்பதனை நாம் அறிவோம், அதற்கான காரணம் அவை எமது குருபரம்பரையில் பெறப்பட்ட விடயங்கள் என்பதாலாகும். உண்மையினை அறிவதற்கு அகராதி, பொதுப்பொருளினும் மேலாக குழுக்குறி அறிதல் அவசியம் என்பது எமது அனுபவ உண்மையும், கருத்தாகும்.

மற்றைய பதிவுகளை பார்த்தீர்களானால் இதனை புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.

இவற்றையும் பாருங்கள்:
முறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதனை இப்படி இப்படி நான் புரிந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன், 

புத்தகங்களை, பதிவுகளை பார்த்து இதுபோன்ற பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாமா? அது சரியான முறையா?

குருவிடம் கற்றுக்கொள்வது முதன் நிலையானது, ஆனால் குருவென்பது மனிதனாக இருக்கவேண்டும் என்பதில்லை, உங்களுக்கு விழிப்புணர்வினை தரும் எதுவும் குருவாகலாம். அஜபா ஜெபத்தில் உண்மையான குரு எமது மூச்சுத்தான். இங்கு உண்மையான பிரச்சனை எமது மனதிற்கு கற்பிக்கப்பட்ட பயம், பழங்காலத்தில் சித்தர்கள் மாணவன் தவறாக வித்தையினை பிரயோகித்து மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்திவிட‌க்கக்கூடாது என்பதற்காக வரைமுறையாக வைத்திருந்த குருபக்தியும் இவ்வாறான கருத்துக்களும் இன்று ஒரு வியாபார தந்திரமாகிவிட்டது. தன்னிடம் மட்டும்தான் குறித்த வித்தை உள்ளதாகவும், தான் அதில் தேர்ச்சிபெற்றதாகவும் கூறி தன்னைதேடிவரவைக்கும் தந்திரமும ஆகிவிட்டது. குருதத்துவம் பற்றிய எமது கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கவும்;

நீங்கள் உண்மையில் இவற்றை பயிலவேண்டுமானால் மனதில் பயத்தினை உதறிவிட்டு பயிற்சிக்க முயற்சிக்கவேண்டும், பயத்தினை உதறிவிட்டு என்றவுடன் எதனையும் எதிர்கொள்வேன் என அசட்டுத்தனமாக இல்லாமல் நிதானத்துடன் அணுகி பயிற்சிக்க முயற்சித்தால் மெதுமெதுவாக வெற்றியடைவீர்கள், யோகம், தாந்திரீகம் என்பன மனதில் பயத்தினை நீக்காமல் கற்றமுடியாது. முயற்சியுடன் பயிற்சியே உண்மையாக அனுபவம் பெறவழி, அல்லது எத்தனை குருமாரிடம் சென்றாலும் எதுவித பயனும் பெற இயலாது.

எமது பதிவுகளில் இந்த விடயங்களினை வெளியிடுவதன் நோக்கம் நாம் அறிந்த விடயம் மற்றயவரும் அறிந்து பயன்பெறவேண்டும் என்ற‌ உள்ளக்கிடக்கையே ஆகும். இவற்றை புரிந்து முயற்சிக்க இயலும் என மனத்துணிவு, மனத்தெளிவு உங்களுக்கு இருக்குமானால் தைரியமாக முயற்சிக்கலாம். இல்லையெனின் வெறும் தகவலாக மட்டுமே படித்துவிட்டு விடவும்.


அஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன்.

முக்தியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதுபற்றி எனது நோக்கமும் இல்லை, அஜபா ஜெபம் நல்ல ஆரோக்கியத்தையும் தெளிவான மனதையும் தரும் என்பது அனுபவம். 

இந்த பதிவில் நான் இடுபவை நான் விரும்பிக் கற்ற விடயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதே! பயனுள்ளதாக இருந்தால் கற்று பயன்பெற்று, மற்றவருக்கும் தெரிவியுங்கள், இல்லாவிடின் Just Ignore it! :)

தங்களுடைய இந்த பயனுள்ள கேள்விக்கு மிக்க நன்றி!

2 comments:

  1. இந்த பயிற்சிகள் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு நிவர்த்தி பெரும்பாலும் கிடைப்பதில்லை. மேலும் இதனால் சிலருக்கு சிலவிதமான பக்க விளைவுகள் ஆரம்பத்தில் ஏற்படும். இவை பற்றி புத்தகங்கள் முழுமையான தகவல்கள் தருவதில்லை. எனவேதான் குருமுகமாக கற்க எண்ணுகிறார்கள்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அய்யா வணக்கம். நான் இந்த பதிவிற்கு முற்றிலும் புதிய வன். ஞானத்தை அடைய விரும்பும் பலரில் நானும் ஒருவன். வயதானவன்.வயதின் காரணமாக எங்கும்
    சென்று அலைய முடியவில்லை. இருந்தபோதிலும்
    ஞானதாகம் இருக்கிறது . எனக்கு தெரிந்தது ராம நாமம் தான் .அதைத்தான் சொல்லி வருகிறேன். என்னைப் போன்றவற்களுக்கு வழி முறை இருந்தால் வழி காட்டவும்.
    மெயில் --balasri36@gmail .com
    அன்புடன் sv

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...