குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 31, 2021

அநீதிகளைக் கண்டு பொங்குதல்

சில நாட்களாக ஒரு பிரபல அரசியல்வாதியின் வீட்டில் ஒரு ஏழைச்சிறுமிக்கு நேர்ந்த அவலத்திற்கு பொங்கும் இளைஞர்களைப் பார்க்கிறோம்! 

ஆத்திரம் ஒரு அரிய ஆற்றல்! அதை பால் சட்டியில் பொங்கி வழிந்து அடங்கி கருகுவது போல் பாவிக்கக்கூடாது! எமது சமூகத்தில் ஒரு சிறுமிக்கு அப்படியொரு நிலை ஏன் ஏற்பட்டது என்று சிந்திக்க வேண்டும்! 

மேலும் கிளப் ஹவுஸில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று அரட்டை அடிப்பதில் பயன் எதுவுமில்லை. செயல் வேண்டும்!

எதிர்காலத்தில் எமது சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் இருக்க வேண்டும். 

நாம் பெருந்தோட்டத்தில் வாழும் எமது உறவுகள் மேம்பட எமது தகுதிக்குள் என்ன உதவி செய்கிறோம் என்று பார்க்க வேண்டும்! 

எங்கள் மனம் எப்படி இயங்குகிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்! தோட்டத்திலிருந்து படித்து வந்தபின்னர் மீண்டும் எமது சமூகத்தின் கல்வி, பொருளாதாரத்தினை முன்னேற்ற நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். 

சிறு மாத வருமானத்தை ஈட்டக்கூடிய சிறிய தொழில்கள் உருவாக்கப்படவேண்டும். பணமுள்ள பணக்காரர்கள் முதலிட வேண்டும். 

ஆலயங்களில் சேரும் பெருந்தொகையான பணத்தினை வீண் ஆடம்பரத்திற்கு சேர்க்காமல் சமூகத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு பாவிக்க வேண்டும்! 

தனது தேவையற்ற தேவைகளை அகற்றி பணத்தை சமூக முன்னேற்றத்திற்குப் செலவிட வேண்டும். 

கற்றறிந்தவர்கள் தமது நேரத்தை சமூகம் முன்னேறத் தரவேண்டும். 

1) கல்வி முன்னேற்றம்

2) பொருளாதார முன்னேற்றம்

3) அடிப்படை உட்கட்டமைப்பு வசதி

இந்த மூன்று தளங்களிலும் எல்லா வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும்படி திட்டம் வகுக்க வேண்டும்! 

இவற்றை மேம்பட அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு பிச்சைக்கார அரசியல் செய்யாமல் எம்மிடம் இருக்கும் தொழிலதிபர்கள், பணவசதி படைத்தவர்களின் ஆற்றல் ஒன்றிணைக்கப்பட்டு சமூகத்திற்குச் செலுத்தப்பட வேண்டும். 

internet coverage இல்லை, மாணவர்கள் படிக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்று facebook இல் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அதைத் தீர்க்க டயலோக், SLT இன் சிரேஷ்ட பொறியலாளருடன் ஆலோசனை செய்து பிரச்சனையைத் தீர்வு செய்யவேண்டும்! coverage இல்லாத ஊரிற்கு coverage கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்குரிய மாற்று யோசனை என்னெவென்று செயற்பட வேண்டும்!

தலைவன் வருவான், எம்மைக் காப்பாற்றுவான் என்று பொன்னியின்செல்வன் மனப்பாங்கில் இருக்காமல் பிரச்சனைக்குத் தீர்வு தர ஒவ்வொரு இளைஞனாலும் முடியும்; அதற்குரிய அடிப்படை அறிவும் திறனும் என்னவென்று பயிற்றுவிக்கப்பட வேண்டும்! 

நாம் ஒவ்வொரு முறை அநீதி நடக்கும் போதும், அழிவு நடக்கும் போதும் அதை இட்டுப் புலம்புவதையே வாடிக்கையாக்குகிறோம்! தூர நோக்குடன் அந்த சந்தர்ப்பம் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையானதை செய்யாமலிருக்கிறோம்!


Wednesday, July 28, 2021

ஊர்கூடி தேர் இழுத்தலும் மனித சக்தியும்

எனக்கு மாத்தளையில் மாரியம்மன் கோவில் தேரைப் பார்கும் போதும், நல்லூர் தேர் எனும் போதும், 07 அடுக்கு 400 தொன் எடையுள்ள திருவாரூர் ஆழித்தேர் எனும் போதும் எப்போதும் கேள்வி வரும்? 

இவ்வளவு பெரிய தேர் எதற்காக என்று? 

சூழலியல் படித்த பின்னர்தான் விளங்கியது நாம் தனியாக இயங்கவில்லை, எப்போதும் ஒரு தொகுதியாகத்தான் இயங்குகிறோம் என்று! சமூகம் ஒன்று கூடி ஒத்திசைந்து இயங்கத்தான் தேரிழுப்பது என்று! 

சூழலில் சூரியனிலிருந்து வரும் ஆற்றலை தாவரம் கவர்ந்து கொள்ள தாவரத்திலிருந்து தாவர உண்ணி கவர்ந்துகொள்ள, தாவ உண்ணியை ஊனுண்ணி கவர்ந்துகொள்ள, இறுதியாக இவை எல்லாம் மண்ணிற்குள் சென்று சக்தி சேமிப்பாக மாறி இந்த பூமியை இயக்கிக்கொண்டிருக்கிறது. 

ஒவ்வொன்றும் மற்றையதில் தங்கியிருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றயது இல்லை! 

ஒரு சூழற்றொகுதி ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றுக்கொன்று உதவியாக ஒத்திசைந்தே சூழற்றொகுதிகள் உருவாகின்றன! 

மனிதன் வித்தியாசமானவன்! மனம் என்ற கருவியும் இது விரிவடைந்து புத்தி என்ற கருவியும், விகாரமடைந்து "நான்" என்ற அகங்காரத்தையும் உடையவன். மனிதன் தன்னையே சூழற்றொகுதியின் மையமாக நினைப்பவன்! தான் நடப்பதற்கு, வாழ்வதற்கு மரங்கள் இடையூறாக இருக்கிறது என்று காடழிப்பவன்! தான் தொழிற்புரட்சி, தொழில்நுட்ப புரட்சி செய்கிறேன் என்று 300 மில்லியன் வருடங்களாக உருவாகிய நிலத்தடி எண்ணெயை தோண்டி எடுப்பவன். வானமும், பூமியையும் அறிந்து இயற்கைக்கு போட்டியாக அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும், அதை அடக்க வேண்டும் என்று உத்வேகம் கொண்டவன். 

இந்த நான் என்ற இயல்பு இயற்கைக்கு முரணானது! செயற்கையானது! மனிதன் தனது ஆற்றலிற்குள் தன்னை உச்சமாக செயற்படுத்திக்கொள்ள உருவாக்கிக்கொண்ட மையப்புள்ளி இது! எப்போதும் நான் செய்கிறேன், நான் தான் சிறப்பானவன்! நாம் மட்டும்தான்! என்ற உத்வேகத்தால் ஆர்வமாகச் செயற்படத்தொடங்கும் அவன் சிறிதுகாலத்தில் நான் மட்டும்தான் அறிவானவன், நான் மட்டும்தான் சிறப்பானவன் என்ற எண்ணம் உருவாகத்தொடங்க அவன் உருவாக்கிய வலையிலேயே மாட்டிக்கொள்கிறான். 

இந்த ஆணவத்தை உருவாக்கத்தொடங்கும் மனித குழுக்கள் ஒன்றுக்குள் ஒன்று ஒத்திசைந்து வலிமை பெறும் மார்க்கத்தினை இழந்து விடுகிறது! பிரச்சனைகளைத் தீர்க்க நான் என்ற சிந்தனை நாம் என்று குழுவாக மாறி மைய நாட்ட விசையை உண்டாக்க வேண்டும்! பிரச்சனையின் ஒருபகுதி எனக்குப் புரிகிறது; மறுபகுதியைப் புரிந்தவரை இணைத்தால்தான் என்னால் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்ற பரந்த பார்வை வேண்டும்! 

இப்படி ஒருவருக்கு ஒருவர் ஒத்திசைந்து, உதவி செய்து குழுவாக வலிமை பெறும் ஆற்றலை விட நான் பெரியவன், எனக்குத்தான் மற்றவர்களை விட அறிவு இருக்கிறது என்ற எண்ணத்தை வளர்க்கும் சமூகத்தில் மைய நீக்க விசை அதிகமாகி அந்த சமூகம் சிதறிப்போகிறது. நீர்த்துப் போகிறது. 

ஏக தலைவன் கொண்ட குழுக்கள் அழிந்து போவதற்குரிய காரணம் இயற்கையில் ஆற்றல் ஒரு மையத்தில் குவிக்க முடியாது என்பதுதான்! சூழலியலில் சக்திப் பாய்ச்சலைப் புரிந்துகொண்டால் சக்தி ஒவ்வொரு தளமாக கீழிறங்கி, சூழற்றொகுதி ஒன்றுடன் ஒன்று ஒத்திசைந்து வாழ்வதைப் புரிந்துகொள்வதால்தான்! 

ஏன் தேரை பெரிதாகச் செய்து தேரிழுக்க வேண்டும்? ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற முடிவிற்கு முற்காலத்தில் வந்திருப்பார்கள் என்பதை இப்படி விளங்கிக்கொள்ளலாம். 

இயற்கை சூழற்றொகுதியைப் பார்த்த புத்திசாலித் தமிழன் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் பலம்! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரிந்துகொண்டான்! 

ஆனால் " நான்" "எனது சாதி" "எனது ஊர்" என்ற வலிமையான அகங்காரம் எண்ணம் கொண்டவனை ஒன்று சேர்க்க ஒரு வழிமுறை தேவை! அனைவரையும் இழுக்க வைக்க வேண்டுமென்றால் தேர் மிகப்பெரிதாக இருக்க வேண்டும்! ஊரே கூடி தேரிழுக்க வேண்டும். ஒற்றுமையும் ஒத்திசைவும் வேண்டும்!


Tuesday, July 27, 2021

சூழலியற் பிரச்சனைகளும் யானை தடவிய அந்தகர்களும்

இன்று அனைவருக்கும் சூழலியல் பிரச்சனைகளில் ஆர்வம் இருக்கிறது. அதேபோல் தமது பிரதேசம் அபிவிருத்தி அடைய வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது. 

மனிதன் பரிணாமத்தில் எப்போது சூழலைக் கட்டுப்படுத்தி விவசாயத்தைச் செய்ய ஆரம்பித்தானோ (அண்ணளவாக பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) அப்போதே இயற்கையில் ஒத்திசைந்து வாழ்வதை விடுத்து இயற்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டான். 

இதிலிருந்து தொழில்புரட்சி, அறிவியல் புரட்சி, தொழில்நுட்ப புரட்சி என்று இயற்கையை மீறி கட்டுப்படுத்தும் சக்தியை வலுப்படுத்திக்கொண்டு வருகிறான். 

இப்படி தனது இயல்பே இயற்கைக்கு எதிராக இருக்கும் மனிதன் இயற்கையைப் பாதுக்காக்கிறோம் என்று செய்ய முயலும் விஷயங்கள் யானை தடவிய அந்தகன் போன்ற நிலை! 

யானையின் காதைத் தடவிய அந்தகன் யானை சுளகு போன்றது என்பான்,

யானையின் காலைத்தடவிய அந்தகன் யானை உரல் போன்றது என்பான், 

யானையின் துதிக்கையை தடவிய அந்தகன் யானையும் பாம்பு போன்றதென்பான்!

இப்படித்தான் சூழலியல் பிரச்சனைகளை பகுதியாக ஆராய்பவர்களது நிலை. 

ஒரு குளம் என்பது மனிதன் மேலதிகமான மழை நீரை சேமித்து நிலத்தடி நீரிற்கும் பாய்ச்சி தனது விவசாய, இதர தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட செயற்கையான அமைப்பு! 

இந்த செயற்கையான அமைப்பை சரியாக மனிதன் முகாமைத்துவம் - மேலாண்மை செய்யாவிட்டால் இயற்கை தனக்கு உகந்த வகையில் அந்த இடத்தை நிரப்புவதற்குரிய சூழலியல் இயக்கத்தை ஆரம்பிக்கும். 

அதாவது மண்ணை வெட்டி ஆழமாக்கப்பட்ட நிலத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர இயற்கை தனது மீள்கட்டமைப்பு பொறிமுறையை உருவாக்கும். 

குளத்தினுள் நீர்க்களைகள் எனப்படும் சல்வேனிய, தாமரை, அல்லி இவை எல்லாம் பெருகி குளத்தின் ஆழத்தினைக் குறைத்து மெதுவாக குளத்தை நிலமாக்கும் சூழலியல் இயக்கத்தை ஆரம்பிக்கும். 

இந்த நிலை ஆரம்பித்தவுடன் மனிதன் தனது நோக்கமாகிய நீரை நிரப்புவது தடைபட்டுவிடாமல் இருக்கச் சரியான காலத்தில் அவற்றை கட்டுப்படுத்தி, தாவரங்களை அகற்றி முகாமைத்துவம் செய்து கொண்டு வர வேண்டும். 

இனி யானை தடவிய அந்தகன் கதைக்கு வருவோம்;

குளத்தின் முக்கியத்துவத்தை விவசாயி நீரின் அடிப்படையில் பார்ப்பார்!

அழகிய பறவைகளின் வாழிடமாக குளம் சிலருக்குத் தெரியும்.

மீன்பிடிப்பவருக்கு மீன்களின் வாழிடமாகத் தெரியும்!

முகாமைத்துவம் செய்யும் நகரசபைக்கு பொழுதுபோக்கு தலமாக்கி எப்படி வருமானம் ஈட்டலாம் என திட்டமிடுவர்.

நுளம்புகளின் தேக்கமாக சுகாதார உத்தியோகத்தர்களுக்குத் தெரியும்.

அறிவற்றவர்களுக்கு குப்பை கொட்டும் இடமாகத் தெரியும். 

அரசியல் பார்வை கொண்டவர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் ஏதோ அரசியல் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகிறது என்று சந்தேகப்படுவார்கள்! 

இவையெல்லாம் அந்தப்பிரச்சனை என்ற யானையின் துதிக்கை, கால், காது, வால் போன்றவை! 

இவை எல்லாவற்றையும் பொருத்தி அதில் எமது உயிர்பல்வகைமை பாதிக்காமல், சாக்கடையாகாமல், அரசியல் பகடையாகாமல், மக்களின் நீர் ஆதாரம் பாதிக்கப்படாமல், பொருளாதார ரீதியில் சிறப்பான திட்டம் வகுப்பது என்பது இயற்கைக்கு முரணான மனதைக் கொண்ட மனிதனிற்கு கடினமானது! 

இப்படிப்பட்ட முரணான மனதை வைத்துக்கொண்டு மனிதன் காட்டும் சூழலியல் அக்கறை என்பது தனது சொந்த நலம் சார்ந்த ஒன்றுதான்!


Sunday, July 25, 2021

தலைப்பு இல்லை

ஸ்ரீ ராதையைத் துதிக்காதவன் கிருஷ்ணரை வழிபட அருகதையற்றவன். ஸ்ரீ ராதை கிருஷ்ணனின் பிராண சக்தி! 

ஸ்ரீ தேவிபாகவதம்    

அறியாமையில், துன்பத்தில் உழலும் ஜீவனை பக்குவப்படுத்தி அவித்தை - இந்த ப்ரக்ருதி உலகத்தின் மீதான பற்றினை - தனது ஆற்றல்களால் நீக்கி கோலோகப் ப்ருந்தாவனத்தில் அந்த ராதா ராணியின் பாதங்களை அடைவிக்கும் பொறுப்பை ஸ்ரீ கிருஷ்ணன் ஏற்றுக்கொள்கிறான். 

தேவியானவள் தனது ஹ்லாதினி சக்தியால் ஒற்றைப் பார்வையால் ஜீவனின் மனதை தெய்வீக உணர்வு பெறச் செய்விக்கிறாள்!


தலைப்பு இல்லை

Very important useful morning to listen system ecologist view on eco system!

Understanding the nature's dynamics is the key for the wisdom!

Analog forestry is the knowledge Sri Lankan ecologist Dr. Ranil Senanayake developed through his long years of experience!

His message is simple - learn how the ecosystem Is functioning. Copy it!

Saturday, July 24, 2021

தலைப்பு இல்லை

கடந்த வாரத்துடன் 102 வாரங்கள் தினகரன் சைவமஞ்சரியில் வாராந்தம் 01 பக்க கட்டுரையாக 102 அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன! 

ரிஷி சிந்தனை என்ற தலைப்பில் 72 வாரங்கள்

ஹம்ஸ யோகம் என்ற தலைப்பில் 30 வாரங்கள்

மொத்தம் 102 வாரங்கள்

சாதனைக்குரிய மனப்பக்குவத்தைப் பற்றி இந்த வாரத் தொடர் உரையாடுகிறது!


தலைப்பு இல்லை

அண்மையில் ஒரு திரைப்படத்தில் ஒரு கிராமப்புற மாணவி ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியரின் வழிகாட்டலில் IIT நுழைவுத் தேர்விற்கு தோற்றி வெற்றிபெற்று வாழ்க்கையில் இலட்சியத்தை சாதிப்பதை படமாக்கியிருந்தார்கள்! 

அதில் ஓய்வு பெற்ற பேராசிரியர் மாணவிக்கு கூறும் அறிவுரை தேர்வில் சித்தி பெற உன்னிடம் CUP இருக்க வேண்டும்! 

C - Concentration 

U - Understanding 

P - Practice 

படிக்கும் பாடத்தில் மனதை ஒருமைப்படுத்தி ஒவ்வொரு பாடத்தையும் புரிந்த பின்னர் அந்தப் பாடங்களில் எப்படி கேள்விகள் வரும் என்பதை மீண்டும் மீண்டும் செய்து பார்க்கும்போது பரீட்சையில் வெற்றி நிச்சயம்! 

இப்படி மீண்டும் மீண்டும் பயிற்சித்து பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் விஞ்ஞானத்துறைக்கு ஒரு திட்டத்தை முன்னெடுக்கிறது. 

பரீட்சைக் களம்

குறித்த பாட அலகுகளைக் குறிப்பிட்டு அதை மன ஒருமையுடன் படித்து புரிந்துவிட்டு இந்த பரீட்சைக் களத்தில் வந்து பயிற்சி செய்ய வேண்டும்! 

மலையகம், வடக்கு, கிழக்கு, மேலும் தமிழில் உயிரியல் பாடம் எடுக்கும் அனைத்து மாணவர்களும் இந்த மாதிரிப்பரீட்சையில் பங்குபற்ற பெற்றோர்களே, ஆசிரியர்களே உங்கள் ஒத்துழைப்பை வழங்குங்கள்!

இதை நடாத்துபவர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அனுபவமுடைய ஆசிரியர்கள்! 

இது மாத்தளையில் கல்விகற்று பட்டதாரிகளான பிரஜைகளின் சமூகப் பங்களிப்பு!


Friday, July 23, 2021

தலைப்பு இல்லை

இவ்வளவு காலமும் தமிழில் மாத்திரம் எழுதிக்கொண்டிருந்தவனை இந்தக் குருப்பூர்ணிமாவுடன் ஆங்கிலத்திலும் பகிர்ந்து கொள் என்று குரு ஆணை தந்திருக்கிறார். 

இன்று ஆங்கில மாணவர்களுடன் சாதனா நூல் வெளியீடு!


தலைப்பு இல்லை

இன்று மாலை அனைவருமாகச் சேர்ந்து குருகீதை கற்போம்! 

குரு தத்துவம் புரிந்து கொள்வோம்! 

ஆர்வமுள்ள அனைவரும் இணையலாம்! 

குரு கீதை ஒரு உயர்ந்த மந்திர சாஸ்திர நூல், 

குரு யோகம் எனும் தந்திர சாஸ்திர நூல்!

இந்த நூலை குருவருள் நிறையும் இந்நன்னாளில் புரிந்துகொள்ளும் முயற்சியே இந்தக்கலந்துரையாடல்!

இன்றைய உரையின் உள்ளடக்கம்

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/85340140939...

Meeting ID: 853 4014 0939

Passcode: 064413

இன்று மாலை 7.00 pm


Thursday, July 22, 2021

தலைப்பு இல்லை

குருப்பூர்ணிமா தினத்தில் குரு கீதையினை படிக்கத் தொடங்க ஒரு உரையாடல்! ஆர்வமுள்ள சாதகர்கள் இணையலாம்! 

Topic: குருகீதை

Time: Jul 23, 2021 07:00 PM India

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/85340140939...


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...