Work completed...
ஓம் யந்திர ராஜாய
வித்மஹே
மகா யந்திராய தீமஹி
தன்னோ யந்திர
ப்ரசோதயாத்!
ஓம் யந்திரங்களின்
அரசனை (அரசனாகிய ஸ்ரீ யந்திரத்தை) புரிந்துகொண்டு,
அதனை புத்தியில் இருத்தி
தியானிக்க
அந்த யந்திர சக்தி
எம்மை சரியாக வழியில் செலுத்தட்டும்!
எனது குரு நாதர்
ஸ்ரீ அம்ருதானந்த நாத
சரஸ்வதி கூறுவார்;
எமது பௌதீக உடல் ஒளியால்
ஆக்கப்பட்டதல்ல, ஆனால் மானச உடல் ஒளியால் ஆக்கப்பட்டது. இதனால்தான் மனதில்
உருவகித்து தாரணை செய்வதன் மூலம் மனதில் உருவகிப்பதை அடைய முடிகிறது. இந்த
அடிப்படையில்தான் குறியீடுகளும், யந்திரங்களும் முக்கியத்துவம் பெறுகிறது! இவை
எமது மன உருவகத்திற்குரிய (visualizations) சாதனங்கள். இவற்றினூடாக பிரபஞ்ச
சக்திகள் செயற்படுகின்றன. எல்லாவிதமான உருவங்களும் ஒருவகை யந்திரங்களே. இவை இடம்,
காலம் மற்றும் சடப்பொருள் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் சாதனம்.