குருவருளால் தினகரன்
சைவமஞ்சரியில் ஜனவரி முதல் வாரம் முதல் நாதப்பிரம்ம சாதனை என்ற தொடர் எழுத
ஆரம்பித்து அதற்கு அடுத்து இராஜசியாமளை நவராத்திரியும் முடிய நேற்று இரவு இளையராஜா
அவர்களின் பாடல்களை இராக ரீதியாகத் தொகுத்துத் தரமுடியுமா என்று பெரும் இசை
இரசிகரான Krishna Kumar இற்கு செய்தி அனுப்பிவிட்டு காலையில் பாடல்களை எப்படித் தொகுப்பது
என்று நீண்ட உரையாடலிற்கு பிறகு கிருஷ்ணா இப்படியொரு செய்தியை அனுப்பி வைத்தார்!
இளையராஜாவின் இசையால் ஒருவர்
நோயிலிருந்து மீண்டார் என்று!
உடலை இயக்கும் உயிர் தத்துவத்தை
பிராணன் என்று சித்தர்கள் கூறுவார்கள். இந்தப்பிராணன் நாதமும் ஒளியும் கலந்தது.
யோகத்தின் ஒருபகுதி நாத யோகம்;
இதன் அடிப்படை ஓம் என்ற மூல நாதத்திலிருந்து, ஸப்த சுரங்கள் உதித்தது. இந்த ஸப்த
சுரங்கள் மனிதனின் காரண சரீரத்தில் மூலாதாரம் தொடக்கம் பிரம்மரந்திரம் (தலை உச்சி)
வரை சூக்ஷ்சுமமாக வியாபித்திருக்கிறது. இப்படி வியாபித்த ஸப்த சுர நாதங்களுக்குள்
வாக்கு எனும் சொற்களையும், இசையையும் அடக்கினால் காரண சரீரத்தையும், அதில் ஓடும்
பிராணனையும் நெறிப்படுத்த முடியும். இப்படிப் பிராணனை நெறிப்படுத்தினால் உடலில்
நல்ல உணர்ச்சிகளை, ஆரோக்கியத்தைப் பெறமுடியும். இதன் மூலம் இறையுணர்வையும்
பெறமுடியும் என்பது இதன் விளக்கம்!
இசையை பொழுதுபோக்கும்
ஒன்றாக மாத்திரம் பார்க்காமல் அதன் ஆழமான பிராண தத்துவ ஞானத்தையும் அது எமது
ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்களில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் நாம் அறிய
வேண்டும்!
கிருஷ்ணாவிடம் இளையராஜா பாடல்களை
இராக ரீதியாகத் தொகுத்து ஒவ்வொரு பாட்டும் மனதிற்கு, உணர்ச்சிக்கு என்ன
மாற்றத்தைத் தருகிறது என்ற ஒரு தொகுப்பைச் செய்யவிருக்கிறோம். ஆர்வமுள்ளவர்கள்
உதவலாம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.