குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, October 05, 2021

வாழ்க்கை எனும் விளையாட்டில் சக்தி தத்துவம்

பலருக்கு வாழ்க்கை என்பது துன்பமும், சங்கடமும் நிறைந்த ஒன்றாக இருப்பதற்கு காரணம் வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு என்பதை புரியாமல் இருப்பது! 

விளையாட்டு என்றால் கட்டாயம் விதிகள் இருக்கும்! விதிகளைப் புரியாமல் விளையாட முடியாது. விதிகளைப் புரிதல் விளையாட்டின் முதல் படி! விதிகள் புரிந்தாலும் விளையாடுவதற்கு உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும்.

ஆக வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அந்த விளையாட்டின் விதிகளைப் புரிந்து கொண்டு, அந்த விதிகளை பிரயோகித்து வாழ்க்கை வெற்றிபெற சக்தி வேண்டும். 

இதற்கு என்ன வழி? சக்தி உபாசனை - சக்திக்கு அருகில் அமர்ந்து சக்தியை கிரகிக்க வேண்டும். உபாசனை என்றால் அருகில் அமர்தல் என்று பொருள்.

இதனை தினசரி செய்ய முடியாதவர்கள் குறைந்தது நவராத்ரியிலாவது செய்ய வேண்டும். 

ஒருவன் வாழ்க்கை எனும் விளையாட்டைப் புரிந்துகொள்ள தேவையான அறிவு என்ன? 

ஆன்மாவை பற்றிய அறிவு: இதனால் ஒருவனுடைய அடிப்படை மரண பயம் அற்று மனம் சம பாவத்தை அடைகிறது. இறப்பு, பிறப்பு இவற்றுக்கிடையிலான வாழ்க்கையை எப்படிச் செம்மையாக வாழ்வது என்ற புரிதலைத் தருகிறது. 

ஆற்றல் வளர்ச்சி: தனிமனிதனின் ஆற்றல்கள் உடல் நலம், கல்வி, செல்வம், சக மனிதர்களுடன் கூட்டுறவாக இயங்குதல் இந்த நான்கும். இவை நான்கும் ஒன்றிணைந்து இருப்பவனே ஆற்றலுள்ளவனாக இருப்பான். 

இலட்சியத்தின் மூலம் தனிச்சிறப்புடையவனாக இருத்தல்: இலட்சியம் என்பது இன்று தனிமனித அடைவுகளாக மாத்திரமே இருக்கிறது. நான் கல்வியில் உயர்வு பெறவேண்டும், நல்ல தொழில் பெறவேண்டும் என்பது மாத்திரமே அனேகரது மனநிலை. இத்தகையவர்கள் உயர்ந்த கல்வியைப் பெற்று ஒரு தொழில் கிடைத்தவுடன் அதற்குப்பிறகு தாம் செய்யவேண்டியது, அடையவேண்டியது எதுவும் இல்லை என்று சிறப்பற்றவர்களாக மாறி விடுகிறார்கள். இத்தகையவர்கள் சமூகத்திற்காக, மற்றவர்களுக்காக தமது அறிவினை ஆற்றலினைப் பயன்படுத்தும் இலட்சியத்தினைப் பெறும்போது அவர்கள் தனிச்சிறப்புடையவர்களாகி விடுகிறார்கள்.

தூய்மை: உடல், மனம், வாக்கு, வசிக்கும் இடம் ஆகியவற்றில் தூய்மை ஒருவருக்கு ஆற்றலினைத் தரும்.

தெய்வீக மனம்: உலகில் உள்ள அனைத்தும் அந்த சக்தியின் வெளிப்பாடுதான் என்ற புரிதலுடன் உயர்வு, தாழ்வு என்ற இருமைகளை மனதில் உருவாக்காமல் உலகில் உள்ள அனைத்தையும் வெறுக்காமல் வாழ்க்கையை உன்னத நோக்கத்திற்கானது என்ற புரிதலுடைய தெய்வீக மனம் ஒருவனிற்கு சக்தியைத் தரும். 

நேர்மை: நற்பண்புகள், பழக்கவழக்கம், நடத்தை, இனிய பேச்சு, அடக்கம், பணிவு, தாராள மனப்பான்மை, தொண்டுள்ளம், கடமையுணர்வு, காலந்தவறாமை, கிடைத்ததில் திருப்தியடைதல், விழிப்புணர்வு, தைரியம், வீரம் ஆகியவை நேர்மையில் இருந்து உதிப்பவை. எவருக்காவது இந்தப்பண்புகள் நிறைந்திருந்தால் அவர் நேர்மை என்ற சக்தியைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.

விவேகம்: எது உண்மை? எது பொய் என்பதைப் பகுத்தறியும் தன்மைக்கு விவேகம் என்று பெயர். விவேகம் என்பது கேட்பவற்றை அப்படியே நம்புவது அல்ல! இடம், காலம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றை சீர்தூக்கி சிந்தித்து ஏற்றுக்கொள்பவனே விவேகம் என்ற ஆற்றல் உடையவன். 

தன்னடக்கம்: தன்னுடைய எண்ணம், செயல், பாலுணர்ச்சி ஆகிய மூன்றையும் தவறான பாதையில் செல்லவிடாமல் ஆளக்கூடிய பண்பே தன்னடக்கம். இவற்றிற்கு பயந்து ஓடுவது தன்னடக்கம் இல்லை. இவற்றை சரியாகப் பயன்படுத்தி ஆற்றலை விழிப்பிக்கக்கூடிய நிலையை அடைவதே தன்னடக்கம்.

தொண்டுள்ளம்: மற்றவர்களுக்கு தனது ஆற்றலுக்கு உட்பட்ட நிலைக்குள் உதவி செய்தல், வழிகாட்டுதல். பிறருக்கு உதவி செய்கிறோம் என்று சோம்பேறிகளாக்குவது மக்கள் தொண்டு அல்ல! மற்றவர்கள் மனதை மேம்படுத்தி ஆற்றல் உள்ளவர்களாக பிரச்சனைகளிலிருந்து மீண்டு வரக்கூடியவர்களாக செய்யப்படும் உதவியே உண்மையான தொண்டு.

இந்த வாழ்க்கை எனும் விளையாட்டின் விதிகளைப் புரிந்துகொள்ளும் அறிவையும், விளையாட்டினை சரியாக விளையாடக்கூடிய ஆற்றலையும், வளத்தினையும் தருபவள் சக்தி! 

அவளை உபாசிப்பவர்கள் இந்த ஆற்றல்களை படிப்படியாக அடைகிறார்கள்! 

சக்தி உபாசனைக்கு மிக உகந்த காலம் நவராத்ரி!


Sunday, October 03, 2021

தலைப்பு இல்லை

As a Visiting Lecturer, Yesterday I started my formal teaching "Career Guidance" course for third-year students at the Faculty of Applied Science, University of Vavuniya. 

Thank you very much to Dean, HoD's, Faculty members, common course coordinator, and council for this opportunity. 

Being I am passionate to teach and build up the younger minds this opportunity is soul-satisfying! 

I am planning to develop a detailed course to guide the younger people to "think" and select their career, life, how to develop their mind, work-life balance, emotional management, etc.


Saturday, October 02, 2021

தலைப்பு இல்லை

Urban environmental Management - Bird eye view

#climathontalks03

Thanking to our Resource Person,

Dr. T. Sumanenthiran, (Environmentalist)

Director, Sri Shakti Sumanan Institute

Series for the Year 2021 - 03

via ZOOM - 2021.09.29

Climathon Talk Recoarding :

https://fb.watch/8km6BRKa5w/


Monday, September 27, 2021

தலைப்பு இல்லை

நகர சூழல் முகாமைத்துவம் - பருந்துப் பார்வை

#climathontalks

29.09.2021 (புதன்கிழமை), இரவு 7.30 மணிக்கு

அதிதிப்பேச்சாளர் :

திரு.த.சுமனேந்திரன்

சூழலியலாளர்

இயக்குநர், ஶ்ரீ சக்தி சுமனன் நிறுவகம்

பதிவுகளை மேற்கொள்வோருக்கு, மின்னியல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பதிவுகளிற்கு :

https://forms.gle/YkaaeYXnbTMabvct7

Zoom ID & Link :

Meeting ID: 881 2294 6974

Passcode: jaffna2021

https://us02web.zoom.us/j/88122946974...


Sunday, September 26, 2021

தலைப்பு இல்லை

வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மக்களுக்கான சூழலியல் நிகழ்வின் இன்றைய உரையின் சுருக்கம் படங்களாக!

பேராசிரியர் ந. சிறீஸ்கந்தராஜா அவர்கள் நவீனகால இயற்கை வழி விவசாயம் பற்றி விரிவான தத்துவ, கோட்பாடுகள், வரலாறு, சாத்தியங்கள், போலி நம்பிக்கைகள் பற்றி ஆழமாக உரையாற்றி இருந்தார். 

சேதன விவசாயம் என்ற பதம் எப்படி குழப்பங்களைத் தோற்றுவிக்கிறது; இயற்கை வழி விவசாயம் தான் சரியான பதம் என்பதையும் விளக்கி இருந்தார்கள்.


Saturday, September 25, 2021

தலைப்பு இல்லை

எனது குருநாதரின் நினைவு நாள் நேற்று! 

அனுதினமும் குருவை நினைக்கையிலே நினைவு நாள் என்ற ஒன்றை பூரித்து போடுதல் என்பது முரணான ஒன்றாகத் தோன்றியது! 

சாமி அடிக்கடி சொல்வது, அவரது குரு சொல்லும் வார்த்தை "என்னுடைய குருநாதர் இவர் என்று குருவைச் சொல்லி நமக்கு மதிப்புத் தேடாமல், மாணவன் தனது சாதனையிலும், அறிவிலும் உயர்ந்து இவரது குரு யார்?" என்று அனைவரும் வியக்கும்படி ஒவ்வொரு மாணவனும் வாழ வேண்டும் என்பது, அருள் முருகேசு அத்தகைய மாணவர்" என்பாராம் ஸ்ரீ கண்ணைய யோகியார். 

இப்படியொரு மாணவனாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா! 

இன்று குருவைத் துதிக்கிறோம், வணங்குகிறோம் என்று அவரவர் உணர்ச்சிகளுக்கு அமைய ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றைச் செய்தாலும் குருகாட்டிய வழியில் தினசரி நடக்கிறோமா என்பதே உண்மையான குருபக்தி! 

********************************************

கீழே பதிவில் குருநாதர் தான் உடல் விட்டு நீங்கப்போவதைப் பற்றிய என்னுடனான உரையாடலைப் பதிவு செய்துள்ளேன்!


காயத்ரி சித்தரின் வழிகாட்டலில் - 11

முற்பகுதிகள்
பகுதி - 10



சாமி காலையில் எழுந்தவுடன் தேனீர் கொடுத்துவிட்டு தண்ணீர் சுடவைக்க ஹீட்டரை குளியல் அறையில் போட்டு தேனீர் குடிக்கும் வரை ஏதாவது சிறு உரையாடல் நடக்கும். பொதுவாக அன்றைய நிகழ்வு, ஆசிரம முரண்பாடுகள் ஏதும் இருந்தால் அதுபற்றியதாக இருக்கும். இல்லை என்றால் சாமி அமைதியாக தேனீர் குடிக்கும் போது ஏதாவது சாதனை பற்றிய கேள்விகளைக் கேட்டால் அதற்கு பதில் அமைதியாகச் சொல்லுவார். அதன் பிறகு சாமி எழுந்து குளிக்கச் செல்ல, நான் தேனிர் கோப்பையை எடுத்துக்கொண்டு கதவை மூடிவிட்டு வந்து விடுவேன். சாமி குளித்த பின்னர் தியனத்திற்கு அமர்வார். தியானம் முடிவதற்குள் நான் குளித்து தயாராகி காத்திருப்பேன். 

வெளியே வந்து அன்றை தோட்ட வேலையாட்களுக்குரிய உணவு, வேலை ஆகியவற்றை திட்டமிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு கோயிலிற்கு போய் கணபதி, ம்ருத்யுஞ்ஜெய தேவன், முருகன், காயத்ரி, அகத்தியர், இராமர், மகாவிஷ்ணு, விஸ்வாமித்திரர், ராதா கிருஷ்ணர் என்று எல்லோரையும் வணங்கி விட்டும், காளி, வெங்கடாஜலபதி சன்னதிக்குச் சென்று விட்டு ஆசிரமத்திற்கு வந்து உணவருந்துவார். உணவருந்தும் போது எமக்கு உணவு போட்டுத்தந்து விட்டு எம்மைச் சாப்பிட உட்காரவைத்துவிட்டுத்தான் தான் அருந்துவார். பொதுவாக ஆசிரமம், ஆன்மீகம் என்றால் உபவாசம் என்று எண்ணுபவர்களுக்கு சாமியிடம் சென்றால் ஏமாற்றம்தான் கிடைக்கும்! மூன்று நேரமும் வயிறாற சாப்பிட வைப்பார். 

உணவு முடிந்தவுடன் கதிரையில் வந்து அமர்ந்தால் உரையாடல் தொடங்கும். இப்படி ஒரு நாள்; சரியாக சாமி சமாதியாகுவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் இப்படி காலை உணவு உண்டபின்னர் அமருந்திருக்கும் போது, சாமி தனக்கே உரிய சிரிப்புடன் "தம்பி, குரு நாதர் விசா கொடுத்துவிட்டார் அப்பா! எல்லா  வேலையும் கெதியா (விரைவாக) முடிக்க வேண்டும் அப்பா" என்றார்.  நான் பதட்டத்துடன் "என்ன சாமி?" என்றேன். 

அதற்கு சுவாமி "இன்று தியானத்தில் குரு நாதர் மூன்று விரல்களைக் காட்டி காலம் முடிந்துவிட்டு தயாராகு என்று சொன்னார் அப்பா" என்று தனது மூன்று விரல்களைக் காட்டி குறும்புச் சிரிப்போடு சொன்னார். 

அதன் அர்த்தம் என்ன சாமி என்றேன்? 

போக வேண்டிய நேரம் வந்தாயிற்று என்றார். 

அப்படியென்றால் மூன்று விரல் காட்டியதன் அர்த்தம் என்ன சாமி என்றேன்.

தெரியவில்லை அப்பா, மூன்று நாளோ, மூன்று மாதமோ, மூன்று வருடமாகவோ இருக்கலாம் என்றார்! 

அப்படிச் சொன்னவுடன் எனக்கு கண்கள் பனித்து அழுகை வந்து விட்டது. எனக்கு பேச்சு நின்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்றவுடன் சாமி ஆறுதலாக "வந்த வேலை முடிந்தால் செல்லவேண்டியதுதானே அப்பா, இந்த உடலில் என்ன பற்று?" என்றார். 

இல்லை, சாமி, உங்களின் ஆயுள் 77 என்று கண்ணைய யோகியார் கணித்திருக்கிறார். நீங்கள் சொல்லும் கணக்குப் படி பார்த்தால் அது பிழையாகிறதே என்றேன். 

தெரியவில்லை அப்பா! குரு நாதருக்கே வெளிச்சம் என்று அந்தப் பேச்சினை முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வேறு பேச்சிற்கு சென்று விட்டார். 

இதற்குப் பிறகு துரிதமாக பல வேலைகள் தந்தார்; பதிப்புக்கு வராத பல யோக நூற்கள் பதிப்பித்தோம். சாதனை செய்யச் சொன்னார். 

இதே போல் இன்னுமொரு நாள் அமைதியாக அமர்ந்திருக்கும் போது கடல் கடந்த தேசத்தில் தான் எனது உயிர் பிரியும்" என்று அமைதியாகச் சொன்னார். 

சரியாக மூன்று வருடங்களுக்குப் பிறகு, சென்னையில் அவரது உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. 

தலைப்பு இல்லை

வவுனியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் சங்கத்தின் "மக்களுக்கான சூழலியல் விஞ்ஞானம் IV" க்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு 2021 புரட்டாசி 26 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை ஜூம் வழியாக நிகழ்நிலையில் நடைபெறும். சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை சமூகத்துடன் அறிவு பகிரும் வகையில் தமிழ் ஊடகத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்.

தலைப்புகள்:

01. "Organic 3.0: காலநிலைச் சிக்கலைக் கையாளும் வாய்ப்பாக?" 

நடராஜா சிறீஸ்கந்தராஜா, தகைநிலைப் பேராசிரியர், சூழல் தொடர்பாடல் துறை, சுவீடன் விவசாயப் பல்கலைக் கழகம், உப்சாலா 

02. "கழிவிலிருந்து வளங்களை உருவாக்குதல்",

கலாநிதி அனந்தினி நந்தகுமாரன், பீடாதிபதி/ சிரேஷ்ட விரிவுரையாளர், பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியாப் பல்கலைக்கழகம்

தலைப்பு: மக்களுக்கான சூழலியல் விஞ்ஞானம் - IV

நேரம்: புரட்டாசி 26, 2021 பிற்பகல் 09:00

இணைய வழி கூட்டத்தில் இணைவதற்கு:

https://learn.zoom.us/j/68333151774...

நுழைவு எண் : 683 3315 1774

கடவுக்குறியீடு : T^yBB.2J


Tuesday, September 21, 2021

தலைப்பு இல்லை

 Velu Varadhan புருஸ் லீயின் இந்தக் கருத்தினை,

“You must be shapeless, formless, like water. When you pour water in a cup, it becomes the cup. When you pour water in a bottle, it becomes the bottle. When you pour water in a teapot, it becomes the teapot. Water can drip and it can crash. Become like water my friend.”

இன்னும் எளிமையாக விளக்கச் சொல்லிக் கேட்டிருந்தார். 

இங்கு கூறப்பட்டிருப்பதை எளிமையாக விளக்குவதாக இருந்தால் பொதுவாக நாம் உடல் ஆரோக்கியம், உடல் பலம் என்பவற்றை நேரடியாக உடலின் தசைகளை வலுப்படுத்துதல் என்று ஆசனங்களாகவோ, உடல் பயிற்சிகளாகவோ ஆரம்பிக்கிறோம். 

இப்படி ஆரம்பிக்கப்படும் பயிற்சிகளால் உடலின் தசைகள் அழகாகும், வனப்பாகும், ஓரளவிற்கு வலிமை பெறும். 

ஆனால் புருஸ்லீயின் ஆராய்ச்சி மனித உடலிற்கு அதியுச்ச ஆற்றலை எப்படிக் கொண்டுவருவது என்பதைப் பற்றியதாக இருந்தது. குறிப்பாக ஆற்றல்களை முஷ்டிக்கு கொண்டுவருவது எப்படி என்பதே அவரது ஆராய்ச்சி; இதனால்தான் தனது பயிற்சி முறைக்கு Jeet Kune Do என பெயரிட்டார். இதன் அர்த்தம் Way of the Intercepting Fist. 

கைகளுக்கு, உடலிற்கு அதீத ஆற்றலைக் கொண்டுவர வேண்டும் என்றால் அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறதோ அங்கிருந்து வரும் பாதைகளில் இறுக்கம், தடைகள் இருக்கக் கூடாது. உடலிற்கு ஆற்றல் அதிகமாக வரவேண்டும் என்றால் மனம் தூய்மையாக, வெறுமையாக இருக்க வேண்டும். 

இதையே புருஸ்லீ மனதை வெறுமையாக்கி நீரைப்போல் பாய்ந்தோடச் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து பிறகு உடல் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார். இப்படிச் செய்யும் போது மனதின் முழுமையான ஆற்றலை உடலிற்கு கொண்டு வரமுடியும் என்று நம்பினார். 

கோபம், பொறாமை, எரிச்சல், குழப்பம், கவலை இவை எல்லாம் மனம் திரவமாக ஓடுவதற்கு எதிரான இறுக்க நிலைகள். இந்த உணர்ச்சிகளை மனதிலிருந்து நீக்குவதன் மூலம் மனதை நாம் நீர்போன்று ஓடச்செய்ய முடியும். அதியாற்றல் உள்ளதாக்க முடியும். இப்படி செம்மைபடுத்தப்பட்ட மனதுடன் உடற்பயிற்சிகளைச் செய்யும்போது உடல் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.


புருஸ் லீயும் யோகாசனப் பயிற்சியும்

எமது ஸ்தூல உடல் மொத்தமாக 60% நீரினால் ஆனது; இதில் மூளையும் இதயமும் 73%, நுரையீரல் 83%, தோல் 64%, தசையும் சிறுநீரகங்களும் 79%, எலும்புகள் 31% நீரையும் கொண்டிருப்பதாக நவீன ஆய்வுகள் சொல்லுகின்றன. 

புருஸ் லீ உடலை வேகமாக இயக்குவதற்கு நாம் ஆபஸ் தத்துவம் - நீர் என்ற பஞ்ச பூத தத்துவ நிலைக்கு மனதைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். 

இப்படி மனதை நீர்தத்துவ நிலைக்கு கொண்டுசென்றால் மாத்திரமே மனமும் உடலும் ஒன்றிணைந்து வேகமாகச் செயற்படும். ஏனென்றால் உடல் ஏற்கனவே நீர்தத்துவத்தால் நிறைந்திருக்கிறது. 

ஆனால் நாம் பொதுவாக மனம் obsession, rigidity, emotions, guilty, arrogance, pride போன்ற இறுக்கங்களிலேயே வைத்திருக்கிறோம். இவற்றை தந்திரசாஸ்திரம் அஷ்டபாசங்கள் என்று சொல்லும். இவற்றிலிருந்து வெளிப்பட்டு பாய்ந்து ஓடும் நீரைப் போல் மாற்றினால் எதையும் மனம் சாதிக்கும். 

இப்படி உருமாற்றம் பெற்ற மனதையே போர்ப்பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே புரூஸ் லீயின் தத்துவம். மனதைச் செம்மைப்படுத்தி நீர் போன்று ஓட விடாமல் எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் நாம் தேர்ச்சி பெறமுடியாது. அல்லது உடல் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தாது. 

புருஸ் லீயின் இந்தக்கூற்று இன்று யோகாசனங்கள் பயில்பவர்களுக்கும் பொருந்தும். மனதை நீர்போன்று இளக்கத்தெரியாமல் முரட்டுத்தனமாக ஆசனம் செய்பவர்கள் ஆசனங்களின் பலனை அனுபவிப்பதில்லை.


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...