குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 02, 2019

தலைப்பு இல்லை

Driving...

I like to Drive! Not only Car but also life...

Driving mean you are flowing..

Driving mean you are following the path & signal

Driving teach to obey the rules..

Driving show the curves and barriers of paths..

Driving reach destination...

Driving needs concentration...

Driving needs balance...

Driving needs awareness...

Driving shows you the new areas...

Driving will give you the satisfaction...

Life is driving...

Breath is driving..

Mind is driving...

Who is Driving the whole life is a riddle!


Thursday, October 31, 2019

தலைப்பு இல்லை

நான் இங்கு கருத்துப் பகிர்வது எவருக்கும் சார்பாகவோ, எவரையும் மாற்றவோ, உபதேசிக்கவோ வழி நடத்தவோ அல்ல! 

என்னளவில் நான் இந்த உலகின் ஒவ்வொரு அமிசத்தை இரசித்துக் கொண்டு புரிந்து கொண்டு தெளிந்த அறிவைப் பெற வேண்டும் என்ற பேராவல் கொண்டு பயணிக்கும் பயணி அவ்வளவே! இந்தப் பயணத்தில் என்னால் எவ்வளவு மற்றவர்களுக்கு உதவமுடியுமோ அவ்வளவு உதவலாம் என்ற எண்ணம் உள்ளவன்! பிரபஞ்சத்தின் அளவுடன் ஒப்பிடும் போது எமது இருப்பு என்பதே உண்மையில்லை எனும் நிலையிலேயே நாம் வாழ்கிறோம்! 

நான் பகிரும் கருத்துக்கள் பலருக்குத் தெளிவு தருவதால் அவர்கள் தரும் மரியாதையைக் கண்டு பலரும் என்னைப் பலவாறாக தமது கற்பனைக்கு ஏற்றவாறு கற்பித்து உரையாடத் தொடங்குவது உண்டு. 

நான் மனிதர்களை எண்ணங்களாகப் பார்க்கப் பழகியவன். எண்ணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய சிந்தனை உடையவன். எண்ணங்கள் மாறக் கூடியவை, ஆகவே மனிதர்களும் மாறுபவர்கள்! இந்த மாற்றத்தைப் புரியாமல் உலகை இறுக்கமாகப் பார்ப்பவர்களே துன்பமடைகிறார்கள். எமக்கு துன்பம் இழைத்தவனும் தனது சிந்தனை மாறி நன்மை செய்யலாம் என்பதை ஏற்க மறுத்து பலர் தமது வாழ்வை வீணடிக்கலாம். 

பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணை போல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் 

என்ற பூங்குன்றனார் வாக்கின் படி மாறும் எண்ணங்களில் ஓட்டத்தில் வாழ்வினை செலுத்தி வாழ்வினைக் கடக்க வேண்டும். 

உத்வேகமும், எண்ணமும் எப்படி செயலாற்றுகிறது என்பது பற்றிய அடிப்படைப் புரிதல் அற்றவர்களுடன் நான் முரண்படுவது போன்று தோன்றலாம். 

எனது உரையாடல்கள் உணர்ச்சிகளைத் தாண்டிய சிந்தனைத் தெளிவை அடைய விரும்பும் நோக்கம் உடையவை! உணர்ச்சி வசப்பட்டு கொதிக்கும் மனதிற்கு சங்கடம் தரலாம்! ஆனால் இறுதியில் தெளிவினைத் தரும் என்பதே உண்மை! 

இன்று பகல் ஒரு பதிவினை நான் இட்ட பின்னர் எனது புத்தகக் கடலில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்த எனது தம்பி, அண்ணா உங்களைப் பற்றிய சரியான விமர்சனம் இதோ என்று தந்த வசனம் கீழே  


தலைப்பு இல்லை

இதுவும் கடந்து போகும்! 

தவறுகளை அளவுக்கு மீறி பெரிதாக்கி எமது உணர்ச்சிகளைக் காட்டும் போது அந்தத் தவறு செய்பவன் சிந்தித்து திருந்தும் ஆற்றலையும் இழக்க வைத்து, சுட்டிக் காட்டுபவனின் சரியும் பிழையாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது. 

ஒரு உணவு விடுதி தமிழ் மொழியில் உரையாடக் கூடாது என்று அறிவுறுத்தல் செய்த விஷயத்தை சுட்டிக்காட்டி சரியான புரிந்துணர்வு வந்தவுடன் ஒரு சம நிலைக்கு கொண்டு வந்து ஒத்திசைவை ஏற்படுத்தி விட்டு நாம் எமது வேலையைப் பார்க்க வேண்டும். 

உணர்ச்சிவசப்பட்டு அளவுக்கு அதிகமாக தாக்கி அதளபாதாளத்திற்கு உன்னைத் தள்ளுவோம் என்று புத்தியில்லாமல் கூவிக் கொண்டு குழிவெட்டினால் தவறு செய்தவனுக்கு பாதிக்கப்படுகிறான், அவன் நம்மாள், அவனுக்கு உதவுகிறோம் என்று பெரிய கூட்டம் கிளம்பி தவறையே சரி என்று நிறுவி எம்மைக் குழிக்குள் வீழ்த்தும். அதன் பிறகு அவனை வீழ்த்துகிறோம் நாம் என்று இந்த சுழற்சி தொடரும். பிணைத்த மாடுகள் இரண்டு செக்கைச் சுற்றும் நிலைதான் இறுதியில். முன்னேற மாட்டோம். 

மக்களை உசுப்பேத்தி உணர்ச்சிக்குள் வைத்திருந்தால் தான் காரியம் சாதிக்கலாம் என்ற நுண்மை தெரிந்தவர்கள் இப்படி புத்தித் தெளிவிற்குள் மக்கள் வருவதை விரும்புவதில்லை! 

தவறு, தவறைச் சுட்டிக் காட்டுதல், தவறைத் திருத்துதல், அனைவருமாக ஒன்றிணைந்து முன்னேறுதல் என்று இருக்கும் சிந்தனைப் பண்பு சமூகத்திற்கு ஆரோக்கியம். 

தவறு, தவறைச் சுட்டிக்காட்டுகிறோம், மன்னிப்புக் கேட்கிறான், மன்னிப்பை நாம் ஏற்கமாட்டோம், அவனைப் பழி வாங்குவோம், அழிப்போம் என்று நாம், சரி நீ அழிக்க முனைந்தால் அதை நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று அவனும் சவால், அதற்கு ஆதரவாக சில முட்டாள் கூட்டங்கள், கருத்து மோதல்கள், நேர விரயம், இறுதியில் இதன் பெருவடிவம் கலவரம், வன்முறை, இன முரண்பாடு! 

மனிதனுக்குள் இருக்கும் பரிணாமத்தின் பிந்திய வளர்ச்சியடையாத உணர்ச்சிவசப்பட்ட மூளையின் செயற்பாட்டில் இருந்து வெளி வந்து மேல் மூளையின் மூலம் புத்துருவாக்க சிந்தனையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி மனிதன் பழக்கப்பட வேண்டும்.


Wednesday, October 30, 2019

தலைப்பு இல்லை

இயற்கை வேளாண்மையின் நோக்கம் தாவரங்களை வளர்ப்பதல்ல, மனிதனைச் செம்மைப்படுத்துவது என்ற Masanobu Fukuoka இனது கூற்று ஆழமானது! 

மனித வாழ்க்கை பிரபஞ்ச ஒழுங்குக்கமைய இருக்க வேண்டும் என்ற அடிப்படையை அது கூறுகிறது. தாவரங்களை நாம் வளர்க்கிறோம் என்பது மனிதனது அகங்காரமைய அறிவீனம். 

மனிதன் தன்னை எப்படி பிரபஞ்ச இயக்கத்துடன் ஒத்திசையச் செய்துகொள்வது என்ற உத்தியை இயற்கை விவசாயத்திலிருந்து கற்றுக் கொள்ளலாம். 

Masanobu Fukuoka இயற்கை விவசாயத்தின் நான்கு அடிப்படைகளைக் கூறுகிறார். 

1) மண் தன்னைத் தானே தயார்படுத்திக்கொள்ளும், உழுதல், மண்பிரட்டல் போன்ற மனிதத் தலையீடுகளே களைகளை அதிகமாக்கி நிலத்தை மேலும் சிக்கலாக்குகிறது. 

2) மாசற்ற இயற்கை நிலத்தில் மண்ணின் வளம் அதிலுள்ள தாவர விலங்குகளின் வாழ்க்கையால் சம நிலைப்படுத்தப்படுகிறது. மண்ணின் வளம் அதீத ஒரு பயிரிடல் முறையாலோ, விலங்குகளின் மேய்ச்சலினாலோ இல்லாமலாக்கப்படுகிறது. மண்ணிற்கு இரசாயன உரம் இட்டால் தாவரம் வளரும், மண் உயிரிழந்து விடும். காலப்போக்கில் அந்த மண்ணில் எதுவும் வளர்க்க முடியாமல் உவர் நிலமாகிவிடும். 

3) களைகளைக் கட்டுப்படுத்த உழுதல், மண்ணைப் பிரட்டிப்போடுதல் என்பன களையை மேலும் உயிர்ப்பூட்டும் செயல். களையை மூடாக்கு கொண்டு மூடி மண்வளத்தை அதிகரிக்க வேண்டும். இரசாயன களைகொல்லியோ, உழுது மடித்தலோ செய்யக்கூடாது. 

4) பூச்சிகள் பீடைகளை கொல்வதற்கு இரசாயன பீடைகொல்லிகள் பயன்படுத்தக்கூடாது. தோட்டத்தில் தாவரத்தை அழிக்கும் பீடைகளுக்குரிய இரைகௌவிகளுக்குரிய சூழலை உருவாக்க வேண்டும். 

ஆக இயற்கை வேளாண்மை என்பது கஷ்டப்படுவது அல்ல இயற்கையின் இயங்கியலைப் புரிந்து கொண்டு அதுனுடன் இயைந்து வாழுதல்!


Sunday, October 27, 2019

தலைப்பு இல்லை

ஸ்ரீ மகாலக்ஷ்மி பற்றி ஸ்ரீ அரவிந்தர்.... 

உடல் கொண்ட ஆன்மாக்களின் இதயத்திற்கு இவளை விட வசீகரமான தெய்வ சக்தி வடிவம் வேறு இல்லை. மகாலக்ஷ்மியை அனைவரும் மகிழ்ந்து விரும்பி நாடுகின்றனர். ஏனெனில் அவள் இறைவனின் இனிமையை, போதை தரும் அந்த ஜாலத்தை வீசுகிறாள். அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும். அவளை இதயத்தில் உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப் பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும். வனப்பும் வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவது போல் அவளிடமிருந்து பெருகி வருகின்றன. அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம் எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு அளவில்லா ஆனந்தத்தின் ஆழங்களில் அமிழ்த்தப்படுகிறது. அவள் கரங்களின் ஸ்பரிஸம் காந்தம் போன்றது. அவற்றின் இரகசிய நுண்ணிய பிரபாவம் மனத்தையும், பிராணனையும், உடலையும் மாசு நீக்கி நயமாக்குகிறது. அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.


தலைப்பு இல்லை

அன்னம் பஹுகுர்வீத| தத் வ்ரதம்

Annam bahu kurveet tad vratam

உணவை ஏராளமாக உற்பத்தி செய்யுங்கள். இது உங்கள் கடமை...

தைத்திரீய உபநிஷத் 3.9

இதுவே எமது இயற்கை வேளாண்மை முயற்சிக்குரிய உத்வேகம்! மந்திரம்! குறித்த மந்திரம் உணவு உற்பத்திக்குரிய இரகசியத்தையும் சொல்லித் தருகிறது. 

உணவினது இரகசியம் அறிந்தவன் உணவுச் செல்வமும் உடையவனாகி புனிதப் பேரொளி மிக்கவனாக மகிமை மிக்கவனாக ஆகிறான்!


அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

தீபாவளி மகாலக்ஷ்மி உபாசனைக்கு உகந்த நாள்! அன்னையின் ஆற்றல் பற்றிக் கூறும் ஸ்ரீ அரவிந்தர் கீழ்வருமாறு மகாலக்ஷ்மி பற்றிக் கூறுகிறார். 

ஞானமும் சக்தியும் மட்டுமே பராசக்தி அன்னையின் வெளிப்பாடுகளல்ல. அதி நுண்ணிய இரகசியம் ஒன்று அவளது இயல்பில் உளது. அஃது இன்றேல் ஞானமும் சக்தியும் முழுமை பெறா, பூரணம் பரிபூரணமாயிராது. அவற்றிற்கு மேல் என்றுமுள்ள எழிலின் அற்புதம், தெய்வீக இசைவுகளின் பற்ற முடியாத இரகசியம், தடுக்க முடியாத மோகன வசீகரத்தின் பரந்த மாயாஜாலம் உள்ளது. அது உலகளாவிய பொருட்களையும், சக்திகளையும் ஈர்த்துப் பிடித்து அவற்றை கூட்டி இணைத்து, மறைவிலுள்ள ஓர் ஆனந்தம் திரைக்குப் பின்னின்று தன் லீலைகளை நடத்தவும், அவற்றைத் தனது சந்தங்களாக்கவும் தனது வடிவங்களை ஆக்கவும் உதவுகிறது. இதுவே மகாலக்ஷ்மியின் மாட்சி. 


ஸ்ரீ அரவிந்தர்


Saturday, October 26, 2019

இயற்கையின் யோகம்

கத்தரியில் 0.01 கிராம் விதை இறுதியின் மொத்தம் 10,000 கிராம் உள்ள செடியாகவும் விளைச்சலாகவும் மாறுகிறது. 

இயற்கையின் வினைத்திறன் பத்து லட்சம் மடங்கு! 

இயற்கைக்கு எப்படி இந்த ஆற்றல் என்பதைப் புரிந்து கொள்ள மனிதன் அறிவியலூடாக முயற்சிக்கிறான். 

Nitrogen, Phosphorous, Potassium என்கிறான். 

நீர் என்கிறான்!

Micro nutrient என்கிறான். 

ஆனால் மனிதனுக்குப் புரியாத ஏதோ ஒரு "சக்தி" இவற்றையெல்லாம் "ஒழுங்குபடுத்தி" நடாத்திக் கொண்டு தானே இருக்கிறது? 

எப்படி சிறு விதை தன்னை விட பத்து லட்சம் மடங்கு உடைய செடியை மரத்தைப் படைக்கிறது? 

தன்னை சூழ உள்ள வளியிலும், மண்ணிலும், நீரிலுமிருந்து ஆற்றலைப் பெற்றுக் கொண்டு தன்னுள் இருக்கும் அக்னியால் தன்னை ஒழுங்குபடுத்திக் கொண்டு மண்ணிலிருந்து ஆகாயத்தில் சூரியனை நோக்கி எழுகிறது. 

ஒளிமிகுந்த அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் உணவாக மாற்றி தான் வளர வேண்டும் என்பதே செடியின் யோகம். 

இதையே ரிஷிகளும் சித்தர்களும் உடலாகிய மண்ணிலிருந்து, மூச்சாகிய வளியின் வழி சுவாசத்தை இயக்கி, நீரையும் உணவையும் பெற்று அந்தக்கரணங்களில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியை இருத்தி தியானிக்கச் சொன்னார்கள். தாவரத்திற்கு சூரியன் எப்படி உத்வேகமோ, மனிதனுக்கு உத்வேகம் சூரியனிற்கு ஒளிதரும் அந்தப்பரம்பொருளின் பேரொளி! மனிதன் தாவரத்திற்கும் மேம்பட்டவன். தாவரத்தை விட மேம்பட்ட செயலை தனது அந்தக் கரணத்தினால் செய்யும் ஆற்றல் உள்ளவன் மனிதன். ஆகவே அந்தக் கரணத்தில் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரொளியைப் பெற்று வளர்த்தல் மனிதன் செய்யும் யோகம், சூரியனின் பேரொளியை பெற்று உணவாகி வளர்த்தல் தாவரத்தின் யோகம்.


தலைப்பு இல்லை

Snake Okra    
பாம்பு வெண்டிக்காய்!    

மந்திர ஜெபத்திற்கு எந்த மாலையைப் பயன்படுத்தினால் அதிக நன்மை?

இன்று பலரும் மந்திர சாதனைக்கு எந்தமாலையைப் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை, அவ்வளவு நன்மை என்று புலம்புவதைக் காண்கிறோம்.  இது அடிப்படையில் மந்திர சாதனையின் நோக்கம் தன்மை புரியாதவர்கள் கூறும் கூற்று. 

மாலைகளை மாற்றியவுடன் அதிக சக்தி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிப்பது தவறு. 

மந்திரம் என்றால் மனதைத் திடப்படுத்துவது என்று பொருள். மனம் என்ற சொல்லை விரித்துச் சொல்வதானால் மேல்மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான் காக்கி அந்தக்கரணங்கள் என்று சொல்லுவார்கள் சித்தர்கள். 

மந்திர சாதனையின் முதல் சித்தி மேல் மனதின் சலனிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தி எண்ணங்கள் குறைந்து சாதனைக்கு எடுத்துக்கொண்ட மந்திரத்தில் மேல் மனம் லயமாகுவது. இப்படி நடந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒரு மடங்கு. 

மந்திர சாதனையின் அடுத்த சித்தி புத்தி தெளிவடைதல், புத்தி தெளிவடைந்தால் சித்தத்தில் ஏற்படும்  விருத்திகளை கட்டுப்படுத்தலாம். இப்படி புத்தி தெளிந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒன்றுக்கு பத்து மடங்கு. 

மூன்றாவது சித்தி சித்த விருத்தி நிரோதமாதல், எண்ணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளிருந்து எழுந்து எம்மைக் குழப்பாமல் சித்தம் புத்தியால் கட்டுப்படுத்தக்கூடிய அளவு ஆற்றலைப் பெறுதல். இப்படி ஜெபிக்கப்படும் மந்திரத்திற்கு ஒன்று 100 மடங்கு பலன். 

 நான் காவது எமது ஆங்காரம் நான் பணக்காரன், நான் அறிவாளி என்ற சிறு ஆங்காரம் ஒழிந்து நான் ஜெபிக்கும் மந்திர தெய்வத்தின் தன்மையுடையவன் என்று உணர்தல். இது நடந்தால் மந்திரத்திற்கு 1000 மடங்கு பலன். 

ஐந்தாவது எமது மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கும்  நாம் உபாசிக்கும் தெய்வத்தின் தன்மை பெறுதல், இதற்கு பலன் லட்சம், கோடி என்று உங்கள் மனத்திருப்திக்குத் தேவையான எண்ணிக்கையைச் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். 

இதை விட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் குறித்த மாலைகள், குறித்த மந்திரங்களுக்கு என்ற விதிகள் அவை சாதனைக்கு மேற்கூடியபடி அந்தக்கரணங்கள் ஒழுங்காகினால் பிரபஞ்சத்தில் இருந்து குறித்த தெய்வ சக்தியை எம்மில் ஈர்த்து சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதே. 

ஆகவே ஒரு சாதகன் ஆரம்ப காலத்தில் தனது சாதனையை அந்தக்கரணங்கள் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கான எளிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விடுத்து தங்கமணி மாலையில் ஜெபம் செய்தால் ஒரு லட்சம் பலன் என்று கூறியிருப்பதைக் கேட்டு தங்கமணி மாலை செய்ய பணமில்லையே, இருந்தால் விரைவாக முன்னேறலாமே என்று மயங்கி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. இவை எல்லாம் முற்காலத்தில் சாதனையைச் சாதாரணமானவர்கள், தகுதியற்றவர்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காக நுட்பமாகத் தடைகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட விதிகள். உண்மை சாதனை சித்தியின் நுட்பம் அந்தக்கரணங்களைச் சீர்படுத்துவதில் இருக்கிறது. 

தற்காலத்தில் சாதனை செய்யும் ஆர்வம் அதிகரித்து வருவதால் அதை வியாபாரமாக்க ஜெபமாலை வியாபாரம் நல்ல வழியாகிப் போவதால் இப்படியான சாதனையில் முக்கியத்துவம் குறைந்த விஷயங்கள் அதிகம் பிரபலப்படுத்தப்படுகிறது. 

ஆகவே உண்மையில் சாதனை செய்யும் ஆர்வமிருந்தால் உங்கள் கைகளில் எண்ணிக்கையினை எண்ணும் முறையினைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிக அளவு ஜெபம் செய்யும் சாதகர்களாக இருந்தால் குறித்த தெய்வ மந்திரங்களுக்கு சாஸ்திரம் கூறும் எளிய மாலைகளைப் பயன்படுத்துங்கள். அதை விடுத்து கிடைத்ததற்கரிய, விலைகூடிய மாலைகளைத் தேடி சாதனையைச் செய்யாமல் விடாதீர்கள். 

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...