குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, July 15, 2019

தலைப்பு இல்லை

நாம் எமது சக விவசாயிகளுடன் உரையாடிய போது கத்தரியில் காய்துளைப்பான் (fruit borer) தண்டு துளைப்பானுக்கும் (Stem Borer) எந்த பூச்சி மருந்தும் (Pesticide) தற்போது பலனளிப்பதில்லை என்று கவலைப்பட்டார்! 

ஆனால் ஆச்சரியம் பூச்சி மருந்து தெளிக்காத எமது இயற்கை வேளாண்மையில் விளைந்த கத்தரி காய்துளைப்பான் எதுவும் இல்லை என்பதே! இதன் அர்த்தம் இயற்கை வேளாண்மையில் காய்துளைப்பான் வராது என்ற உயர்வு நவிற்சி அல்ல! ஆராய வேண்டிய ஒரு காரணி இருக்கிறது என்பதே! 

பூச்சியைக் கொல்லத் தெளிக்கும் போது அந்த இரசாயனம் செடியையும் பலவீனப்படுத்தும். ஆனால் இயற்கையாக செடியை வலிமைப்படுத்தும் உதவியை மட்டும் செடிக்கு நாம் செய்தால் செடி தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும்! 

ஏனென்றால் இயற்கை எல்லோருக்கும் இயல்பாகவே தீமையை எதிர்த்து வெல்லும் சக்தியைக் கொடுத்துள்ளது! அதை எப்படி விழிப்படையச் செய்வது என்பது மட்டுமே மனிதனதும் மற்றைய உயிரினங்களினதும் செயலாக இருக்கும்! இதை விவசாயத்தில் சாதித்தால் அது இயற்கை விவசாயம்!

கீழே வீட்டுக்கார அம்மாவின் கத்தரிக்காய் புளிக்குழம்பு! சுவை அபாரம்! சுவையின் காரணம் கைப்பக்குவம் என்றாலும் நாம் விளைவித்த இயற்கை கத்தரி என்பது எமது விவாதம்!   

கத்தரி விஷேசம் என்பது அதை வாங்கிய மற்றவர்களும் கூறியதால் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று தான்!

 

Friday, July 12, 2019

தலைப்பு இல்லை

தாவரங்களை எவரும் வளர்க்க முடியாது! அது இயற்கையில் தனக்குத் தேவையானதை பெற்று வளர்ந்து கொள்ளும்! அப்படி அது தனக்குத் தேவையானதைப் பெறுவதற்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்வதற்கு பெயர் தான் இயற்கை விவசாயம்! 

எமது இயற்கை விவசாய நிலத்திலிருந்து விளைந்த கத்தரி!


தலைப்பு இல்லை

தாவரங்களை எவரும் வளர்க்க முடியாது! அது இயற்கையில் தனக்குத் தேவையானதை பெற்று வளர்ந்து கொள்ளும்! அப்படி அது தனக்குத் தேவையானதைப் பெறுவதற்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்வதற்கு பெயர் தான் இயற்கை விவசாயம்! 
எமது இயற்கை விவசாய நிலத்திலிருந்து விளைந்த கத்தரி!

சமூகமும் ஆன்மீகமும்

ஆன்மீகம் என்பதன் பொருள் எமக்குள் இருந்து இயக்கும் ஆன்மாவின் கருவிகளை மீகித்தல் - உயர்த்துதல் என்று பொருள்படுகிறது. அதாவது தனிமனித மேம்பாட்டின் மூலம் சமூக மேம்பாடு. 

இன்று ஆன்மாவை உயர்த்துதல் இல்லாமல் வெளிப்பகட்டு ஆன்மீகமாகி மக்களை அலைக்கழித்துக்கொண்டு இருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் ஆடம்பரமாக்கப்படும் பணம் ஏழைமக்களில் வாழ்வினை உயர்த்தப் பயன்படலாம்! அவனை விட அதிகமாக கோயிலிற்கு செய்து பெரும் புகழ் பெறலாம் என்ற எண்ணம் மாறி என்னிடம் இருக்கும் அதிக பணம் மற்றவனை உயர்த்தப் பயன்படுத்தலாம்! இப்படியான சிந்தனை எமது கோயில் வழிபாடுகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். 

அண்ணன் மல்லியப்புச்சந்தி திலகர் எழுதிய "மாரியம்மனுக்கோர் மனு" என்ற கவிதை மலையக தோட்டப்புற மக்களின் களங்கமற்ற பக்தியைப் படம்பிடித்துக்காட்டி, அந்த பக்திக்கு அர்ப்பணிக்கும் மன நிலையை சுட்டிக்காட்டுகிறார். 

இந்தக் கவிதை விவரிக்கும் சம்பவம் எனக்கு நடந்தது. பெருந்தோட்ட இளைஞர் குழு ஒன்று ஒரு முறை என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். என்ன நோக்கம் என்றால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நிதி கேட்பதற்காக? அவர்களை அமரவைத்து உரையாடினால் அதில் இருக்கும் 90% ஆனவர்களுக்கு நிரந்தர வருமானம் இல்லை. சரி கும்பாபிஷேகத்திற்கு எவ்வளவு செலவு என்றால் 30 இலட்சம் என்றார்கள்! இந்த முப்பது இலட்சத்திற்கு எல்லோரும் சேர்ந்து தொழில் தொடங்கி அதில் வரும் இலாபத்தை எடுத்து கும்பாபிஷேகம் செய்யலாமே தம்பி! என்றால் மௌனம். 

ஆனால் யதார்த்தத்தில் கும்பாபிஷேகத்திற்கும் பணம் கொடுக்கும் எல்லோரும் அந்த இளைஞர்கள் நாம் தொழில் தொடங்கப்போகிறோம் என்றால் எவரும் பணம் தரமாட்டார்கள் என்பதுதான் சமூகத்தின் மன நிலை! 

ஆக கோயில் கட்டி பாவம் போக்கலாம் என்ற சிந்தனை மாறி இன்னொருவன் உயர்ந்தால் நாமும் உயர்வோம், சமூகமும் உயரும் என்ற சிந்தனையுள்ள சமூகம் உருவாகவேண்டும்! 

இதன் அர்த்தம் கோயில்கள் தேவையில்லை என்பதல்ல, அவை சமூக கலாச்சாரத்தின் அத்திவாரம்! ஆனால் அந்த அத்திவாரத்தின் மீது எழுப்பப்படும் கட்டிடம் அழகாகவும், சிறப்பாகவும் இருக்க சரியான மூட நம்பிக்கை அற்ற சிந்தனை இருக்க வேண்டும். 

கோயிலின் அநாவசிய செலவுகளைக் குறைத்து மக்களின் கலாச்சார வாழ்வதார மேம்பாட்டினை முன்னெடுக்கும் திட்டங்கள் உருவாக வேண்டும்.


Tuesday, July 09, 2019

5G தொழில் நுட்பமும் மௌன வசந்தமும் (Silent Spring)

யாழ்ப்பாணத்தில் 5G தொழில் நுட்பத்தினை டயலொக் நிறுவனம் பரீட்சிக்க ஆரம்பித்துள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன! 

இதன் பாதிப்புகள் சரியா பிழையா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்! மனிதவாழ்க்கையின் தத்துவமும், நோக்கமும் தெரியாத அறிவியல் மேதாவிகளின் கண்டுபிடிப்புகள் மனித குலத்திற்கு நன்மையானவையாக இருப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க அவற்றின் விளைவுகளின் அறிய நீண்டகாலமாகும் என்பது உண்மை. 

அண்மையில் நானும் எனது விலங்கு நடத்தையியல் (Animal behavior) ஆராய்ச்சி ஆசிரியரும் உரையாடும் போது 2009 இற்கு முன்னர் வவுனியா, வன்னிப் பகுதிகளில் இருந்த Migratory birds களின் வருகை படிப்படியாகக் குறைந்து முற்றாக இல்லாமல் போய் உள்ளது, இது பற்றி முறையான ஆய்வு ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 2009 இற்கு பிறகு இந்தப்பகுதியில் தொலைபேசிக் கோபுரங்களின் பெருக்கம் அதிகம் என்பது இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆம் சங்கரின் 2.0 படத்தின் கருதுகோள் இங்கு பொருந்தி வருகிறது. 

செயற்கைப் பீடைகொல்லிகளின் (synthetic pesticide) விளைவு 1962 இல் Rachel Carson இன் Silent Spring (மௌனவசந்தம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது) நூலின் பின்னர்தான் உலகம் அறிந்துகொண்டது. ஆரம்பத்தில் DDT ஐ மண்ணெண்ணெயில் கலந்து அடித்து நுளம்புகளைக் கட்டுப்படுத்தவும் விவசாயப் பீடைகளை கட்டுப்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. இதன் விளைவுகள் 1945 இல் அமெரிக்காவில் அறியப்பட்டு அதைத் தடுக்க வழியில்லாமல் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் 1962 இல் மேற்குறித்த நூல் மூலம் பெரும் விழிப்புணர்வு உண்டாகி, 1973 இல் தடைசெய்யப்பட்டது. ஏறத்தாள முப்பது வருடங்களுக்குப் பின்னர்! இதற்கு முன்னர் 1970 களில் WHO பாவனையைத் தடைசெய்த போது இலங்கை உடனடியாக 1976 இல் கொள்கை அளவில் (Regulatory) தடைசெய்தது. முற்றுமுழுதான தடை 25 வருடங்களுக்குப் பின்னர் 2001 இலேயே நடைமுறைக்கு வந்தது! இத்தனை வருட DDT பாவனையின் பாதிப்பு இலங்கையில் எத்தகையது என்பது பற்றி எந்த முறையான ஆய்வும் முன்னெடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை! 

5G தொழில் நுட்பம் அல்லது கைபேசி தொழில் நுட்பம் ஆபத்தானதா இல்லையா என்று அறிய இன்னும் பல ஆண்டுகள் தேவை! ஆனால் இந்த 5G தொழில் நுட்பம் எமக்குத் தேவையா இல்லையா என்பதுதான் இப்போதைய கேள்வி? அதீத தொழில் நுட்பங்களைப் பாவித்துக்கொண்டு மனித மூளையினையும், உழைப்பினை மழுங்கடித்து மனிதனின் தேவையை இல்லாமல் ஆக்கப்போகிறோமா என்ற கேள்வி உருவாகிறது. 

5G தொழில் நுட்பம் வந்தால் சாரதி அற்ற Car பயன்பாட்டிற்கு வரும் என்றால் ஒரு சாரதியின் வேலை போகிறது. அவனுக்குரிய மாற்றுத்தொழில் என்ன?

10 நிமிடங்களில் தரவிறங்கும் HD திரைப்படங்கள் இரண்டு செக்கனில் தரவிறங்கி என்ன நன்மை வாய்க்கப்போகிறது. 

யோகத்திலும் ஆயுர்வேதத்திலும் அடிப்படை அவசரமாக மூச்சு விட்டால் ஆயுள் குறையும் என்பது! ஆக ஒட்டுமொத்தமாக இந்த தொழில் நுட்ப வசதியால் சமூகமாக அவசர மூச்சு விட்டு அழியப்போகிறோமா? 

ஏனென்றால் எல்லையற்ற தேவைகளை உருவாக்கி வளர்ந்துகொண்டிருக்கிறோம் என்ற ஒரு மாயையில் மனித சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதும் ஒருபக்கத்தில் உண்மையாகத்தான் இருக்கிறது.


Monday, July 08, 2019

தலைப்பு இல்லை

நாம் ஒரு செயலில் வெற்றி பெறவேண்டும் என்றால் அர்ப்பணிப்பு அவசியம், அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம்! 

"அர்ப்பணிப்பு”, இதன் அர்த்தம் முழுமையான பக்தி அல்லது வலிமையான இச்சா சக்தி! பொதுவாகப் பார்த்தால் புதிய புதிய சிந்தனைகளுக்கு எப்போதும் பற்றாக்குறை இருப்பதில்லை! ஆனால் அவற்றை செயலாக்குவதற்குரிய அர்ப்பணிப்பு இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆரம்பத்தில் மிக உற்சாகத்துடன் செயலைத் தொடங்கி பின்னர் இடையில் மனக்குழப்பம் அடைந்து பின்னர் அந்த செயலைத் தவறவிடுவதுதான் இக்காலத்தில் அனேகரின் நிலை. 

ஸ்ரீ அம்ருதானந்த நாத சரஸ்வதி

(Dr. Prahaladha Sasthry, Nuclear Physicist and Former Scientist of Tata Institute of Fundamental Research)


அகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை

அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்- நூல் கருத்துரை
கருத்துரை வழங்கியவர்: அரவிந்த் சுவாமிநாதன் (பா. சு. ரமணன்)

இலங்கை வாழ் யோக சாதகர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் எழுதியிருக்கும் இந்த நூல் என் கைக்கு வந்ததும் நான் முதலில் நினைத்தது, ‘இலங்கை வாழ்த் தமிழர் எழுதியதாயிற்றே. நிறைய அவர்கள் வட்டார வழக்குச் சொற்கள் இருக்குமே; நமக்கு அவ்வளவு எளிதில் புரியுமா’ என்பதுதான். இப்படி நினைத்ததற்குக் காரணம், இலங்கை வாழ் எழுத்தாளர்கள் பலரது நூலை முன்னமே படித்திருந்ததுதான். ஆனால், எனது அந்த நினைப்பைப் பொய்யாக்கி விட்டது இந்தத் திறவுகோல்.
பொதுவாக, எனக்கு அறிமுகமாகும் புதிய நூல்களுக்கு அது எந்தத் துறை சார்ந்த புத்தகமாக இருந்தாலும் முதலில் முன்னும் பின்னுமாகப் புரட்டிப் பார்த்துவிட்டு நடுவில் ஏதேனும் ஒரு பக்கத்தை அல்லது சிலபக்கங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வாசிப்பது என் வழக்கம். அது எந்த அளவுக்கு என்னை ஈர்க்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதனைத் தொடர்ந்து வாசிக்கலாமா அல்லது பிந்தைய வாசிப்பிற்காகத் தள்ளி வைத்து விடலாமா என்பதை முடிவு செய்வேன். (இது எல்லாப் புத்தகங்களுக்கும் அல்ல; எனக்கு அறிமுகமாகாத புதியவர்களின் நூல்களுக்கு மட்டுமே இந்த முறை) அது போலவே இந்த நூலையும் வாசிக்க ஆரம்பித்தேன்.
ஆனால், நான் எடுத்துப் பிரித்த பக்கத்தில் இருந்த செய்தி எனக்கு வியப்பைத் தந்தது. காரணம், சமீபத்தில் அதற்கு முன்பாக நான் வாசித்திருந்த ரமண மஹரிஷியின் நூல் ஒன்றுக்கும் இந்த நூலில் இருந்த செய்திக்குமான தொடர்பு தான். பக்தர் ஒருவர், ரமணரை அணுகி, தனக்குத் தொடர்ந்து தியானம் செய்வதால் இறைவனின் காட்சி உள்பட பல்வேறு காட்சிகள் கிடைப்பதாகவும், சில ஒலிகள் கேட்பதாகவும் தான் அநுபூதி பெற்றுவிட்டதாகத் தோன்றுகிறது என்றும் கூறி, பகவான் ரமணரிடம் அது குறித்து விளக்கம் கேட்கிறார். அதற்கு ரமணர், “அதெல்லாம் மாயத் தோற்றங்கள். தியான வேளைகளில் சிலருக்கு அம்மாதிரித் தோன்றக் கூடும். ஆனால், அதெல்லாம் நிலையில்லாதவை. அகங்கார மனதின் செய்கையே இதெல்லாம். ஆன்மானுபூதியை விரும்பும் ஒருவன் இம்மாதிரிக் காட்சிகளில் மயங்கிவிடாமல், கவனத்தைச் சிதறவிடாமல் தொடர்ந்து தனது சாதனையைச் செய்து வரவேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.
”அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்” நூலில், நான் வாசிக்கத் திறந்த பக்கத்தில் (பக்கம்:95) இருந்ததை அப்படியே கீழே தந்திருக்கிறேன்.
“சதாசிவ தளம் எனப்படும் புருவமத்தியில் உனது பார்வையினைச் செலுத்தி, மனதின் துணை கொண்டு உணர்வினையும் செலுத்தி வந்தால், சித்தத்தின் விருத்திகள் குறைந்து, மனம் அடங்கி சுழுமுனையில் பிராணன் பாய ஆரம்பிக்கும். கண்களை மூடிய நிலையில் உனது அகக்கண்ணில் ஒளி தோன்ற ஆரம்பிக்கும். இந்த ஒளி உனது பிராண சக்தி அளவிற்கு ஏற்ற அளவில் ஒரு சிறு பொறியாகவோ, கற்றைகளாகவோ காணப்படும்.
இங்கு ஒரு விடயத்தினைத் தெளிவாக கவனித்து கொள்ள வேண்டும். சித்தத்தின் விருத்திகளை கட்டுப்படுத்தி அக மௌனத்தினை அடைவதற்கு, திருமூலர் முதலான சித்தர்கள் கூறிய இயம, நியம நிலைகளை நன்கு கடைப்பிடித்து, பிரத்தியாகார, தாரணையில் மனதை நன்கு பயிற்றுவிக்க வேண்டும். இப்படியான நிலையினை அடையாமல் வெறுமனே புருவமத்தியில் உணர்வைச் செலுத்த ஆரம்பித்தால் உனது மனம் சித்த விருத்திகளின் மூலம் பலவித மாயத்தோற்றங்களை உருவாக்கி, உனக்கு பலவித காட்சிகளை காட்டி மயக்குவிக்கும். இப்படியான நிலையில் நீ கடவுளை பத்து தலைகளுடன் கண்டேன், பேசினேன் என்று மாயா உணர்வு தோற்றங்களில் சிக்கி விடுவாய். ஆகவே, இதனை எச்சரிக்கையாக குருவின் வழிகாட்டலில் பயிலவேண்டும்.”
- இதனைப் படித்ததும், ரமண மஹரிஷி பக்தர் ஒருவருக்குச் சொன்னதற்கும், இந்த நூலில் இருக்கும் தகவலுக்குமான உள்ள தொடர்பை நினைத்து வியந்தேன். தொடர்ந்து நூலை ஆர்வமுடன் வாசிக்க ஆரம்பித்தேன். அதே சமயம் ஒரே மூச்சில் வாசிக்கவில்லை. அப்படி இந்த நூலை வாசிக்கவும் கூடாது. மெல்ல மெல்ல அசை போட்டு, நூலின் கருத்துக்களை உள்வாங்கி, வினா எழுப்பி, தனக்குள் சிந்தித்தே வாசிப்பைத் தொடர வேண்டும். அப்படிப்பட்ட நூலே இது. நான் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழில் இருக்குமோ என்று ஐயப்பட்டதற்கு மாறாக மிக எளிய தமிழில், அனைத்துத் தமிழர்களுக்குப் புரியும் வகையில் மிக மிகச் சிறப்பாக இந்த நூலை எழுதியிருக்கிறார் யோக ஸாதகர் ஸ்ரீஸக்தி சுமனன் அவர்கள்.
நூலைப் பற்றி முகவுரையில் சொல்லும் Sri Sakthi Sumananசுமனன், “இந்த நூல் வெறுமனே சொற்களின் அகராதி அர்த்தங்களை வைத்துக் கொண்டு எழுதப்படவில்லை. எமது குடும்ப, வைத்திய யோக பாரம்பரிய அறிவினையும், எமது குருமார்கள் காட்டிய வழியில் யோக சாதனையில் ஈடுபட்ட அனுபவத்தையும் கொண்டு, தியான சாதனை மூலம் உணர்வினால் அறிந்த விடயங்களையும் தந்துள்ளோம்” என்கிறார். நூலை வாசிக்கும் ஒருவர் வாசிக்க வாசிக்க இந்த உண்மையை, இதன் மேன்மையை உணர்ந்து கொள்ளலாம்.
“அகத்தியர் ஞானம் -30” என்னும் அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் 30 பாடல்களின் விளக்க நூலாக மட்டுமல்லாமல், யோக, ஞான, தியான, சாதனா மார்க்க நெறிமுறைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. நூலின் சிறப்புக்களைப் பலவாறாகச் சொல்லலாம். ஆனால், நான் யோகம் அறிந்தவனோ, ஆசிரியனோ, ஏன் பயிற்சி செய்பவனோ கூடக் கிடையாது. ஆகவே, சாதரண வாசகனான என்னைக் கவர்ந்த இந்த நூலின் சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாகச் சொல்ல முற்படுகிறேன்.
(தொடரும்)



அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் - நூல் கருத்துரை : பகுதி 2
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

- என்கிறது திருமந்திரம். யோக, ஞான சாதகர்களுக்கு குரு என்பவர் அவசியம் தேவை. இருளை நீக்கி அருளப் பெருகச்செய்வது மட்டுமல்ல குருவின் வேலை. நல்லதை மட்டுமல்லாமல் அல்லாததையும் சுட்டிக்காட்டி அவ்வழிப் போகாதே என எச்சரிப்பதும் அவர் பணியே. சிங்கத்தின் கண் பட்ட இரை தப்பாதது போல் குருவின் அருட்கடாட்சம் பெற்ற சீடன் ஒருபோதும் வழி தவறுவதில்லை. குரு காட்டிய வழிப்படி நடப்பவர்களே குருவிற்குகந்த சீடர்களாக விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட சீடனுக்கு குருவின் அருள் என்றும் துணையாக இருக்கும். “தாழ்ந்த நிலத்திலேயே நீர் பாய்வது போல், அழுத்தம் குறைந்த இடத்திற்கே சக்தி பாய்வதை போல், பணிவும் தாகமும் இருக்கும் பக்குவப்பட்ட ஆன்மாவிற்கே குருவின் அருளும் பாயும்.” - என்கிறார் சுமனன்.
குருவின் அவசியம், தேவை என்பதற்கான பாடல்களின் விளக்கங்கள் குருவின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாய் மட்டுமல்லாமல், “குரு இல்லா வித்தை பாழ்” என்ற உண்மையையும் உறுதிப்படுத்துகின்றன. அகத்திய குரு வழிபாடு, அந்த வழிபாட்டிற்கான மூலகுரு மந்திரம், இந்த நூலை வாசிக்கும் முறைகள் பற்றி ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார். அது நூலைத் தொடர்ந்து அம்முறையில் வாசிப்பதற்கு வழிகோலுகிறது.
நூலின் முக்கியமான சில செய்திகளைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.
1) பரிபாஷை, பரிபாஷை என்று சொல்கிறார்களே, அதன் பொருள் என்னவென்று தெரியுமா? நான் கூட அதை சித்தர்கள் தங்களுக்குள் ‘பரிமாறி’க் கொள்ளும் ரகசிய மொழி என்பதாகவே இதுநாள் வரை அறிந்திருந்தேன். ஆனால், ‘பரி’ என்பதன் பொருள் என்ன, அது அதைக் குறிக்கிறது என்பதற்கான விளக்கங்கள் வியப்பைத் தருகின்றன.
2) பன்னிரண்டு வருட குருகுல வாசம் ஏன் அவசியம் என்பதுபற்றிக் கூறப்பட்டுள்ள விளக்கம் சிந்திக்கத் தகுந்த ஒன்று.
3) சித்தர்கள் குறிக்கும் ‘கலை’ என்பதன் உண்மைப் பொருள், ‘விந்து’ என்று அவர்கள் எதனைக் குறித்துள்ளார்கள், ‘விந்து கட்டுதல்’ என்றால் என்ன என்பதெல்லாம் மிகச் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்தில் குறிப்பிடப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும், யோக மார்க்கத்தில் கூறப்படும் ‘விந்தைக் கட்டுதல்’ என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார் ஸ்ரீ சுமனன்.
4) வாசி, வாலை, ஓரெழுத்து, எட்டெழுத்து, இரண்டெழுத்து மந்திரங்கள், அவற்றின் தாத்பரியம், யோகத்தில் அவை பயின்று வரும் விதம், நாடி பற்றிய விளக்கக் குறிப்புகள் யோக சாதகர்களுக்கு நல்லதோர் திறப்பு
5) உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ‘தீர்க்க சுவாசம்’ பற்றிய விளக்கம் சிறப்பு. (இதை மட்டுமே நான் -அதுவும்- எப்போதாவது செய்வேன்)
6) ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் விளக்கமும், அவற்றுடன் பூமி சுழற்சிக்கான தொடர்பும், அதனால் பிராணனை ஈர்க்கும் விதமும், மகா பிராணன் உடலிலும் சித்தத்திலும் செயல்படும் விதமும் விளக்கமாகச் சுட்டப்பட்டுள்ள விதம் பிரமிப்பைத் தருகிறது.
7) முறையாகப் பிராண சாதனை செய்வது எப்படி, அதனால் கிடைக்கும் சித்தியான ‘வகார மாறல்’ என்பதின் பயன் என்ன என்பது யோகத்தில் அனுபவம் பெற்றார்கள் மட்டுமே விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
8) வாமபூசை என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்கு உண்மையாகவே ஒரு திறப்புத் தான்.
9) நமது மனது, அது செயல்படும் விதம், அதற்கும் சூரிய, சந்திரர்களுக்குமான தொடர்பு, அதனோடு இயைந்து நாடிகள் செயல்படும் விதம், எண்ணம் தோன்றும், ஒடுங்கும் செயல்பாடுகள் என்பது பற்றி இருக்கும் விளக்கங்கள் புதுமை.
10) ஞான யோக வழியில் செல்லும் சாதகனுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள், அவன் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை எல்லாம் தெளிவாக, விளக்கமாகப் பல பாடல்கள் மூலம் சொல்லியிருக்கிறார் சுமனன்.
சுருக்கமாகச் சொன்னால் சிந்தர்களின் சூட்சும மந்திரங்கள், (நங், மங், சிங், வங், யங் போன்றன) அவற்றின் சூட்சுமப் பொருள், அவற்றைத் தன்னுடலில் ஈர்க்கும் விதம், ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களின் இயல்புகள், போகாப்புனல், சாகாக்கால், வேகாத்தலை என்பதன் விளக்கம், ஆயிரம் இதழ் தாமரைப்பூ, நாத ஒலி, அமிர்தத்தை கிரகித்துக் கொள்ளும் வழிமுறைகள் என்று யோகக் கலையின் சூட்சும அம்சங்களை மிகத் தெளிவாக, எளிமையாக விளக்கியிருக்கிறார் சுமனன்.
“மனதில் எழும் சந்தேகத்தை சித்தத்தில் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு, பெறப்படும் ஞானத்தை உள்வாங்கிக் கொள்வதில் தான் ஒருவனின் புரிதல் வளர்ச்சி உள்ளது. இப்படி சித்தத்தையும் கட்டுப்படுத்தி மனதையும் கட்டுப்படுத்தி புத்தியை வலுப்படுத்த தகுந்த பிராண பலம் வேண்டும். இப்படிச் செய்ய முடியாதவர்கள் எப்போதும் கேள்வி கேட்பவர்களாகவும், அதற்கான தகுந்த விடைகளைப் புரிய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்” - என்கிறார் சுமனன் நூலின் முன்னுரையில். இக்கருத்து அனைவரும் சிந்திக்கத் தகுந்த ஒன்று.
யோக சித்தியில் ஆர்வமுள்ள ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் “அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்.” ஏற்கனவே யோகத்தில் தேர்ந்தவர்களுக்கும் கூட இந்நூல் புதிய வெளிச்சம் பாய்ச்சும் தன்மையில் உள்ளது என்று சொன்னால் மிகையில்லை.
பல்வேறு குருமார்களின் அருள் பெற்று, குருமார்கள் வழி நின்று சாதனைகள் செய்து அனுபவம் பெற்று இந்நூலைத் தந்திருக்கிறார் Sri Sakthi Sumanan. இந்த நூலை உருவாக்க அவர் கடுமையாக உழைத்திருக்க வேண்டும்; சிந்தித்திருக்க வேண்டும். சொல்லப்போனால் ஒரு வித தியான, தெய்வீக நிலையிலேயே பல சமயங்களில் இருந்திருத்தல் வேண்டும். அப்போதுதான் இவ்வளவு செறிவான, தெளிவான விளக்கங்கள் உடைய, எளிமையான நூல் என்பது சாத்தியம். நூலாசிரியர் டாக்டர் ஸ்ரீ ஸக்தி சுமனன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், அகத்தியர் யோகம் பற்றிய நல்லதொரு நூலைத் தந்தமைக்காக எனது வணக்கங்களும்.
அன்புடன்
அரவிந்த் சுவாமிநாதன்

Sunday, July 07, 2019

தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானதிறவுகோல் நூல் பற்றி Arvind Swaminathan அவர்களின் கருத்துரை!

தலைப்பு இல்லை

நான் ஒரு சூழலியல் ஆய்வாளனாகவே (Environmental Science Researcher) எனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினேன்! எதையும் நுணுக்கி ஆராய்வதை விட (Reductionist approach) ஒரு பிரச்சனையின் குழப்பத்தையும் (Chaos) அதன் பெரும் படத்தையும் (Big picture), அதன் தொகுதி இயக்கத்தையும் (System Dynamics), அவற்றின் இடைத் தொடர்புகளையும் (Interrelationships), ஒன்றுக் கொன்று இடைச் சார்புநிலை (Interdependence) என்பவற்றை ஆராய்வதே எனக்குப் பிடித்த ஆய்வு முறை! 

இதற்கேற்றால் போல் எனது சிந்தனைக்கு சுதந்திரம் தரும் மேற்பார்வையாளர் அமைந்தார்! 

இந்த ஒளிப்படம் அரிஸ்டாடலின் Synergy concept - Whole is grater than Sum என்ற அடிப்படையில் என்னுடைய ஆய்வினையும் இன்னும் இருசக மாணவர்களது ஆய்வினை இணைத்து உருவாக்கபட்டது! 

https://www.youtube.com/watch?v=YCHseZYzASI&t=1s 

குரல் தந்தது எனது சகோதரன் Thava Sajitharan

Zero Budget இல் இருக்கும் வசதிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு உருவாக்கியது! 

நிர்மலகாந்தன், சுஜி, விஷ்ணுவரதன் ஆகிய எனது இளைய அணி நண்பர்கள் களப் பணியில் உதவினார்கள்!


தலைப்பு இல்லை

அகத்தியர் யோக ஞானத் திறவுகோலிற்கு கிடைத்த ஆசியுரை! தகுதி வாய்ந்த கற்றறிந்த பெரியவர்கள் நூலிற்கு ஆசி தருவது அன்னையினதும் குருவினது அருள்! 

எனது குருவின் நண்பரும், ஸ்ரீ வித்யா உபாசனையில் சிரேஷ்டரும், சாதனா மார்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும், புதுடெல்லி ருதம்பர ஞான சபா ஸ்தாபகர், சிதானந்த அலை, மஹாசக்தி ரகசியம், ஸ்ரீ பாலாம்பிகா, ஸ்ரீ குருப்ரகாச மலர், ஸ்ரீ வித்யா உபாசக தர்மம் ஆகிய ஸ்ரீ வித்யா உபாசனை நூற்களை எழுதியவருமான ஸ்ரீ அருட்சக்தி நாகராஜன் (Arutsakthi Nagarajan) ஐயாவின் ஆசியுரை! 

மிக்க மகிழ்ச்சியான தருணம்!


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...