உடன் மனம் உயிரினை ஒத்திசைவாய் ஒருங்கிணைத்தால் அது ஆயுள் என்றும், இதைச் சாதிக்கும் ஞானம், அறிவு ஆயுர்வேதம் என்றும், ஏன் எமக்கு ஆயுள் வேண்டும் என்றால் வாழ்வில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்புருடார்த்தங்களை அனுபவிப்பதற்காகவும் என்று பார்த்தோம். ஆயுள் வேதத்தினைக் கற்பதன் பலன் உடலை ஆக்கும் தாதுக்களின் சம நிலை உடலில் எப்படிச் செயற்படுகிறது என்பதை அறிந்து கொள்வதன் மூலமே உடலை, உடலுக்கு ஆதாரமான மனதை, மனதிற்கு ஆதாரமான உயிரை ஒருங்கிணைக்க முடியும்,
ஆகவே உடலின் தாதுக்களை சம நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒருவன் மனதை சம நிலைப் படுத்தலாம். மனம் சம நிலையில் இருப்பதன் மூலம் உயிருடன் தொடர்பினை ஒருங்கிணைக்கலாம்.
நோய்கள் என்பவை தாதுக்களின் சம நிலையின்மையினை ஏற்படுத்தி இந்த உடல் மன உயிர் ஒருங்கிணைப்பினைக் குழப்புபவை. ஆகவே உடல் பாதிக்கப்பட்டால் அகவலிமை குன்றும். உடலில் நோய் இருந்தால் நாம் எமது வாழ்வில் சாதிக்க வேண்டியவை சாதிக்கப்படமால் உடல் அழிவை நோக்கிச் செல்லும்.
ஆகவே மனிதனின் முதல் இலட்சியம் தனது மனதையும், உடலையும் நோயற்று சம நிலையில் வைத்திருத்தல். இதைச் சாதிக்கும் போதே அவன் உயிரை அறியும் பக்குவம் பெறுகிறான்.
மனம் உயிரின் ஆற்றலை அறிய வேண்டும் என்றால் அதன் விருத்திகளைக் குறைக்க வேண்டும். சித்த விருத்திகள் அற்ற மனமே தூய்மையான ஆரோக்கியமான மனம். மனதின் விருத்திகளைக் குறைக்க தியானம் அவசியம்.
ஆகவே ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியம் என்பது தாதுக்கள் சம நிலையான ஸ்தூல உடலும், விருத்திகள் குறைந்த/விருத்திகள் அற்ற சித்தமும் ஆகும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.