அண்மைக்காலமாக சமூக
திட்டங்களை கவனித்ததில் அவை சரியான இலக்கினை அடைய முடியாமல் இருப்பதற்கு அதை வழி
நடாத்தும் நபர்களின் மனநிலை மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஒரு சிலர் குழுவாக இணைந்தவுடன்
அந்தக்குழுவைத் தவிர்ந்தவர்கள் அனைவரும் எதிரிகளாகவும், தமக்கு
அன்னியமானவர்களாகவும் கருதத்தொடங்கும் மன நிலையை உருவாக்கியவுடன் மற்றவர்களுடன்
இணைந்து செயலாற்றும் ஆற்றலை இழந்து தனித்து விடுகிறார்கள்.
குழுவாக இணைவது தனி ஒரு மனிதன்
எந்த ஒன்றையும் சாதிக்கும் வல்லமை உடையவன் அல்ல! ஆகவே கூட்டாகச் சேரும்போது
ஒருவரின் பலவீனத்திற்கு இன்னொருவர் பலமாக அமையும் தன்மையை உருவாக்கி பலமுடையதாக்குகிறது.
ஒவ்வொரு குழுவும் மற்றைய
குழுவுடன் ஒத்திசைந்து ஒன்றுக்கொன்று மிகை நிரப்பியாக செயற்படும் வகையில் இருக்க
வேண்டும்.
ஒரு கல்வித்திட்டத்தை
சமூகத்திற்காக முன்னெடுக்கிறோம் என்றால் வியாபார சமூக குழு அதற்குரிய நிதியை
ஒருங்கிணைப்பதில் உதவ வேண்டும். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை கல்விச்
சமூகத்திடம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் நாம் பணம் கொடுக்கிறோம், நான்
சொல்லும்படி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு வந்தால் செயல் கெட்டு குட்டிச்
சுவராகி விடும்.
இதைப் போல் அரசியல்வாதி
பாடசாலைகளுக்கு வளங்களைக் கொண்டுவருவதில் தனது வாக்கு வங்கியை பிரதானமாகக்
கணக்கிட்டு யாரிற்கு வளங்கள் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தாலும் ஓரளவிற்கு மேல்
கல்விச் சமூகத்தின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தக் கூடாது.
அதிகாரமும், பணமும் அறிவையும்,
பண்பாட்டினை வளர்க்கும் சக்திகளாகச் செயற்படவேண்டும். இப்படி சிந்திக்கும் ஒரு
சமூகமே உயர்வினைப் பெறும்.
இதற்கு எண்ணத்தில்,
மனதில் மாற்றம் முதலில் உருவாக வேண்டும்!
உரையாடுவோம்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.