(The Philosophy of Money) இந்தப்புத்தகம் நீண்டகாலமாக சரசவி புத்தகசாலை செல்லும்போது கண்களில் படும். புத்தகம் பெரிதாக இருக்கிறது; விலை பெரிதாக இருக்கும் என்ற எண்ணம், ஆனால் தலைப்போ, எனது வாசிப்பு பசிக்கு அருகில் இருக்கிறது என்ற அடிப்படையில் எடுத்து விலையைப் பார்க்காமல் சில பக்கங்கள் வாசித்துவிட்டு வந்துவிடுவது வழக்கம்! ஆர்வம் தாளாமல் இந்தமுறை விலையைப் பார்த்தால் வெறும் 1250/= தான். வாங்கியாயிற்று! தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய நூல்!
நூலாசிரியர் Simmel ஒரு 19ம் நூற்றாண்டு ஜேர்மானிய மெய்யியலாளர். சமூக இயக்கம் எப்படிப் பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ந்தவர்.
பணம் பற்றிய தனது
ஆய்வினை தொகுத்த நூல். The Philosophy of Money.
Simmel இனது
கோட்பாடுகளின் சுருக்கம் வருமாறு;
1) மனிதர்கள் இலக்கினை
(objects) நிர்ணயித்து அதற்கு ஒரு பொருளாதார பெறுமானத்தை (value)
உருவாக்குகிறார்கள்.
2) பிறகு அந்த இலக்கினை
தமக்குத் தூரமாக்கிக்கொண்டு அந்த தூரத்தை குறைத்து இலக்கை அடைவதாக முயற்சியினை
மேற்கொள்கிறார்கள்.
3) இலகுவாக அடையக்கூடிய
இலக்குகளும், அடையமுடியாத தூரத்தில் இருக்கக்கூடிய இலக்குகளும் பெறுமதி
அற்றதாகிறது.
4) ஒரு பொருளின்
பெறுமதி (value) என்பதைத் தீர்மானிப்பது அது இலகுவில் அனைவருக்கும் கிட்டாத தன்மை,
நேரம், அதை அடைவதற்கான தனிப்பட்ட தியாகம், அதை அடைவதற்கான கஷ்டங்கள் ஆகியவை.
Simmel தான் வாழ்ந்த காலத்தில்
இருந்த அடிமை முறையை நீக்குவதற்கு பணத்தினுடைய மெய்யியல் புரிந்துகொள்ளப்பட
வேண்டிய ஒன்றாகக் கருதினார். பணம் என்பது தனிமனித சுதந்திரத்திற்கான அடிப்படை
என்பதே இந்த நூலின் மூலக்கருத்து.
Simmel தனது காலத்து சமூகத்தில்
அடிமைகள், peasant எனப்படும் சிறிதளவு நிலம் உடைய விவசாயிகளின் தனிமனித
சுதந்திரத்தினைப் பற்றி உரையாடுகிறார். அடிமையை விட விவசாயி தான் விரும்பியதைச்
செய்யும் பொருளாதாரச் சுதந்திரம் உடையவனாக இருக்கிறான்.
மேலும் பணம் என்பது ஒருவனிற்கு
தான் சுதந்திரமானவன், தன்னிறைவு உடையவன் என்ற எண்ணத்தை உருவாக்கும் கருவியாகக்
குறிப்பிடுகிறார்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.