எமது யோகமும் இயற்கையும்
நூல் தமிழ்நாட்டின் இசைமேதைகளில் ஒருவரான நாட்டியாச்சார்யா ஸ்ரீ.எஸ்.பாலசந்த்ர
ராஜு ஐயா அவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டு மனமுவந்த ஆசிகள் பெறப்பட்டது!
எல்லோருக்கும் தெரிந்த பிரபலமான
தொலைக்காட்சி நாடகத் தொடரான ருத்ர வீணையின் ஆரம்பத்தில் வரும் வீணை இராகம், அதன்
பயன் பற்றிய தகவல்கள் இவரது இராக ஆராய்ச்சியின் முடிவுகளாகும்.
அவர் 36 இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய
ஆற்றல் உடையவரும் பரத நாட்டியத்தில் பாண்டித்தியம் பெற்ற குருவும் ஆவார். 90
இற்கும் மேற்பட்ட இசை, நாட்டிய நூற்களை எழுதிய அறிஞரும் கூட.
கர்னாடகம், ஹிந்துஸ்தானி,
மேற்கத்தேயம் ஆகிய மூன்று இசைகளினதும் நுணுக்கங்கள் அறிந்தவர்.
இவை எல்லாவற்றிற்கும்
மேலாக மிகப்பெரிய தேவி உபாசகர்!
இதைச் சாத்தியமாக்கிய
கிருஷ்ணாவிற்கு மிகப்பெரிய நன்றிகள்!