குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 17, 2021

குருவிடம் வித்தை பயிலும் நான்கு வகை மாணவர்கள்

 

எமது சித்தயோக தீக்ஷை வகுப்பில் ஒரு மாணவர் பைபிளில் இருக்கும் கதையின் இரகசியத்தை சித்த யோகதத்துவத்தில் நாம் தீக்ஷை என்று உரையாடுவதுடன் பொருத்தி விளக்கம் பெறலாமா என்று கேட்டார்;

கதை வருமாறு;

யேசுபிரான் கடவுளின் இராச்சியத்தின் நற்செய்தியைப் பரப்புவதற்காக ஒவ்வொரு நகரமாகவும், கிராமமாகவும் சென்று கொண்டிருந்தார். 12 சீடர்கள் அவருடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அதில் இருவர் பெண்கள்; மேரி மக்டெலினாவும் ஜோஆன்னாவும்.

ஒரு கிராமத்தை அடைந்தவுடன் பெருந்தொகையான மக்கள் அவரை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு உபதேசமாக ஒரு கதையை யேசுபிரான் கூறுகிறார்.

ஒரு கமக்காரன் விதைப்பதற்குச் சென்றான். அவன் விதைக்கும்போது சில விதைகள்;

1) நடக்கும் பாதையில் விழுந்தன; அவை கால்களில் நசிந்துபோயின; பறவைகள் உண்டுவிட்டன.

2) சிலது கற்கள் மேல் விழுந்தன; முளைத்தபோது அது பற்றுவதற்கும், வாழ்வதற்கும் தகுந்த ஈரலிப்பு இல்லாமல் இறந்துபோயின.

3) சிலது முட்கள் நிறைந்த புதரிற்குள் விழுந்தன. ஆனால் அவை முட்களிற்குள் சிக்கிக்கொண்டு மேலும் வளரமுடியாமல் போயின.

4) சிலதோ நல்ல வளமுள்ள மண்ணில் விழுந்தது. அவை நன்கு வளர்ந்தன. விளைச்சலைத் தந்து பயனுள்ளதாகியது. அந்த விளைச்சல் விதைத்ததை விட நூறு மடங்கு அதிகமாகத் தந்தது.

இதை சொல்லிவிட்டு ஒரு வாக்கியம் சொல்கிறார்; "காதுள்ளவன் கேட்கக் கடவன், உடனே அவருடைய சீடர்களும் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க யேசுபிரான் "இந்தக்கதையின் மூலம் இறைவனின் இராச்சியத்தின் இரகசியம் தரப்பட்டுள்ளது, புரியக்கூடியவன் அதைப் புரிந்துகொள்வான்; மற்றவர்கள் அதைக் கதையென்பார்கள்"

இந்தக்கதையை நாம் யோகசாதனையில் குருவிடம் வித்தை பயிலும் மாணவர்களுக்கு நல்ல உவமானம் ஆக்க முடியும்;

குருவிடம் வித்தையைப் பெற வேண்டி வரும் மாணவர்கள் நான்கு வகை;

1) சிரத்தையற்றவர்கள்: குரு கூறும் எதையும் மனதிலோ, எழுத்திலோ சேமித்துக்கொள்ளாமல் கவனயீனமாக பாதையில் கிடைத்த விதையை வீசிவிட்டுச் செல்லும் வகையினர். இவர்கள் வெறும் ஆர்வக்கோளாறுகள்; வகுப்புகள், குருமார்கள் என்று அனேகரிடம் அலைபவர்கள்; குரு கொடுத்தாலும் அதை வெளியே வரும்போது பாதையில் வீசிவிட்டு வருபவர்கள்.

2) ஆணவம் மிகுந்தவர்கள்: ஆர்வமுடன் குருவிடம் வித்தை கற்கச் செல்வார்கள். ஆனால் எதையும் உள்வாங்கிக்கொள்ள முடியாமல் தம்மிடம் ஏற்கனவே இருக்கும் அறிவினால் மனதைக் கல்லாக்கிக் கொண்டு உள்வாங்க முடியாதவர்கள். குருவிடமிருந்து பெறுவது எதுவும் இவர்களுடைய இறுகிய ஆணவம் மிகுந்த மனதினால் உள்வாங்க முடியாமல் கருகிவிடும்.

3) நுண்மையான ஆணவம் மிகுந்தவர்கள்: சிலமாணவர்களுக்கு குருவிடம் உண்மையான உளமார்ந்த பக்தியிருக்காது. ஆனால் வெளித்தோற்றத்தில் வித்தையை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக குருவிடம் மரியாதை செய்வது போல் நடிப்பார்கள். அதன் மூலம் வித்தையைப் பெற்றுக்கொண்டு பயிற்சிக்கும் போது அவர்கள் சித்தத்தில் இருக்கும் ஆணவம், பொறாமை, தந்திரபுத்தி இவை எல்லாம் முட்புதர்களாக விதைக்கப்பட்ட ஞானத்தையும் விட வேகமாக வளர்ந்து ஆன்ம முன்னேற்றத்தைத் தடைப்படுத்திவிடுவார்கள்.

4) வளமான மண்: இவர்களே வித்தைக்குரியவர்கள்; தமது மனதை குருபக்தி, ஞானத்தில் தீராத ஆவல், சமம், தமம், கிட்டாதாயின் வெட்டென மற, சகிப்பு, சிரத்தை ஆகிய யோகம் பயில்வதற்குரிய பண்புகளாகிய உரத்தினால் நிறைந்து மனமாகிய மண்ணை வளப்படுத்தி விதைகளைப் பெற்று வளர்த்து பல நூறுமடங்காக்கக் கூடிய ஆற்றலுள்ள சாதகன்.

ஒவ்வொரு சாதகனும் தான் இந்த நான்கில் எந்த வகை என்பதை அறிந்து வளமான மண்ணாக இருந்தால் மாத்திரம் தான் குருவிடமிருந்து பெறும் தீக்ஷை என்ற சக்தி வளரும் என்பதைப் புரிந்து சாதனை செய்ய வேண்டும்.

இப்படி இறை ஆற்றலைப் பெற்று வளர்க்கக்கூடிய மாணவர்களின் தன்மையையும், குருவாகிய கமக்காரன் விதைகளை வீசும்போது இப்படி நான்கு வகை மாணவர்கள் இருப்பார்கள் என்பதையும் இந்தக் கதை உருவகமாக விளக்கிற்று!

disclaimer: இந்தப்பதிவு எந்தவிதமான மதம் சார்ந்த நோக்கத்துடனும் எழுதப்படவில்லை; குறிப்பிடப்பட்ட கதை யோகத்தத்துவத்தினை விளக்குவதற்குரிய உருவகமாக இருப்பதால் எடுத்தாளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...