குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 02, 2021

பஞ்சபூத பஞ்சீகரணமும் நீர் பற்றிய அறிவியலும்

 

சித்தர் தத்துவத்தில் எப்படி உலகத்தின் பௌதீகப் பொருட்கள் தோற்றம் பெறுகிறது என்பதற்குப் பாவிக்கப்படும் மாதிரியுருவை பஞ்சபூத பஞ்சீகரணம் என்று சொல்லுவார்கள். இது சுருக்கமாக அனைவருக்கும் விளங்கும் மொழியில் கூறுவதானால்;

பிரபஞ்சம் ஆரம்பத்தில் (சிவம் என்ற) ஒரு புள்ளியில் இருந்து அதிரத்தொடங்க (vibration) நாதமும் (Sound) விந்துவும் (ஒளியும் - light) தோற்றம் பெற அவை இணைந்து சதாசிவம் என்ற ஆற்றலினூடாக பஞ்ச பூதங்களாகத் தோற்றம் பெற்றது. பஞ்சபூதங்கள்;

ஆகாயம் - Space

வாயு - Air

அக்கினி - fire

நீர் - water

பிருதிவி - Earth or Solid

ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து அக்னியும், அக்னியிலிருந்து நீரும், நீரிலிருந்து பிருதிவியும் தோன்றியதாக எழுதி வைத்திருக்கிறார்கள்; இது நிற்க!

1783 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இரசாயனவியல் - இயற்பியல் விஞ்ஞானி ஹென்றி கவெண்டிஷ் மின்சாரத்தினை பலவிதமான திரவங்களுக்குள் செலுத்தி என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்கிறார். இதில் அடைக்கப்பட்ட குழாயில் மின்சாரத்தைச் செலுத்தும்போது திடீரென நீர் ஆவியாகி மறைவதைக் காண்கிறார். பலமுறை ஆராய்ந்த பிறகு குழாயினுள் துரிதமாக எரியக்கூடிய வாயுவும், அதைவிட பாரம்கூடிய வாயுக்களும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதை மீண்டும் மீண்டும் ஆராய்ந்து கவெண்டிஷ் கீழ்வரும் முடிவிற்கு வந்தார்;

நீர் என்பது உண்மையில் நீரல்ல! இது மணமற்ற, நிறமற்ற, சுவையற்ற பதார்த்தம் மாத்திரம் அல்ல! இது மூலகமும் அல்ல! இரண்டு சுயாதீன மூலகங்களால் ஆக்கப்பட்ட மூலகங்கள். இதில் ஒரு மூலகம் எரியும் பொருளாகவும், மற்றையது எரிக்கும் பொருளாகவும் இருக்கிறது. இந்த இரண்டும் இணைந்து உருவாகும் பதார்த்தமாகிய நீர் தாகத்தையும், நெருப்பினையும் அணைக்கும் பதார்த்தமாக மாறுகிறது என்று குறிப்பு எழுதி வைத்தார்.

இதை அடிப்படையாக வைத்து லாவோசியர் நீரில் ஹைட்ரஜன், (இதன் அர்த்தம் நீரை உற்பத்தி செய்வது) ஒட்சிசன் ஆகிய இரண்டு மூலகங்கள் இருப்பதாக கண்டுபிடித்து பெயரிட்டார்!

எனினும் ஹென்றி கவெண்டிஷின் ஆய்வு முடிவு விளக்கிய விதம் சுவாரசியமானது; சித்தர்களின் பஞ்சீகரண விளக்கத்தை தொட்டுச் செல்கிறது.

சித்தர் தத்துவத்தில் பிருதிவிக்குள் மற்ற நான்கு பூதங்கள் (Elements) உள்ளன. அதேபோல் நீரில் மற்றைய மூன்றும் - ஆகாயம், வாயு, அக்னி ஆகிய மூன்றும் உள்ளன. நீரிலுள்ள ஒட்சிசன் எரிக்கும் அக்னி தத்துவமாகவும், ஹைட்ரஜன் எரியப்படும் வாயுதத்துவமாகவும் விளங்கப்படுத்தலாம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...