குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 14, 2018

கடுவெளிச் சித்தர் சொல்லும் சாதகர்களுக்கான அறிவுரைகள் - 01

கடுவெளிச் சித்தர் பாடல்களில் மிகவும் பிரபலமானது நந்தவனத்திலோர் ஆண்டி நாலாறுமாதமாய் குயவனை வேண்டி என்பது, இது எழுத்தாளர் ஜெயமோகன் எடுத்தாண்ட ஒரு சித்தர் பாடல்.



இந்தப்பதிவில் வாசகர்கள் பாடலை படிப்பதற்கு முன்னர் சிந்தனையை இக்கால மனத்திற்கு ஏற்றவகையில் வரிசைப்படுத்தி தொகுத்திருக்கிறோம். இதை வாசித்து மனதில் ஏற்றியபின்னர் பாடலை அவரவர் விருப்பத்திற்கேற்ற தாளத்தில் படித்து மகிழலாம்.

இனி பாடலில் பொருள் சுருக்கமாக:
  • மனம் ஒன்றை வைத்துக்கொண்டு அனைத்தையும் செய்கிறோம், அதில் பாவம் என்று சமூகத்திற்கும், எமக்கும் தீமை தரும் செயல்களை விலக்க வேண்டும். 
  • ஏன் பாவத்தை விலக்க வேண்டும் என்றால் எப்போது நாம் இந்த உடலை விடுவோம் என்ற நிச்சயம் எவருக்கும் தெரியாது, ஏனெனில் இதுவரை எவருமே இந்த உடலை நிலையாய் வைத்திருக்க வில்லை. அப்படி நிலையில்லாத உடலில் இருந்து கொண்டு நிலையான பேரொளி நிலையை பெற வேண்டி முயற் சிக்க வேண்டுமே அன்றி மீண்டு மனிதப்பிறவி எடுக்க முடியாத செயல்களை தவிர்க்க வேண்டும். 
  • எமது துன்பங்களுக்கு மற்றவர்களை தூற்றி சாபம் கொடுத்தலும் ஒரு பாபமே, அவரவர் செய்த வினைகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்று எமது மனதை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க பழகவேண்டும். 
  • நாம் எல்லையற்ற பிரபஞ்சத்தில் அணுவிலும் சிறிய புள்ளி, இந்த ஒட்டுமொத்த இயக்கத்தின் விளைவுகளின் ஒரு பாகமே எமது வாழ்க்கை, இதில் நடைபெறும் அனைத்தையும் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடிந்தது எமது எண்ணமும், செயலும் மட்டுமே. ஆகவே விதிப்படி நடக்கும் செயல்களை நாம் தடுக்க முடியும் என்று மனம் புலம்புவதை விடுத்து, நடப்பதை ஏற்று, எதிர்காலத்தை நிகழ்காலத்தில் செயல் புரிவதன் மூலம் கட்டமைக்க வேண்டும். 
  • இப்படி நிலையில்லாத வாழ்க்கையில் மற்றவர்களை கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணத்துடம் கோபம் தொடுத்து, ஆசைகளை ஊட்டி கருத்துக்களை செய்யலாமோ என்று கேட்கிறார். 
  • சூது, பொய், மோசம் இவைகளை செய்தால் எமது சுற்றம் அழிந்து நாசமாகும். இந்த உணர்வுகளை மனதில் கொள்ளாது நல்ல இறை மீது பக்தியும், விசுவாசமும் கொண்டு எல்லா மனிதர்களுக்கும் நன்மை தரும் செயல்களை செய்ய அன்பு பெருகும். 
  • ஒரு நீர்க்குமிழி எப்படி ஒரு கணத்தில் தோன்றி மறைகிறதோ அதுபோன்றதே முழுப்பிரபஞ்ச இயக்கத்துடன் ஒப்பிடும் போது எமது இந்த உடல் வாழ்க்கை. எப்போதும் எமது உடலை விடும் நிலை ஏற்படலாம். 
  • உலகில் வாழும் போது எமது மனதை அன்பால் நிரப்பி, செயல்களில் பற்று இல்லாமல் செய்யும் செயலை எல்லாம் நன்றாக செய்யும் மன நிலையுடன் மனதை வைத்திருந்து செயல் புரிய வேண்டும். 
  • உலகாகிய நந்தவனத்தில் ஒரு ஆண்டி பத்து மாதமாய் ( நாலு + ஆறு =10) குயவனாகிய இறைவனை வேண்டி கொண்டுவந்தான் மண்குடம் போன்ற உடலாகிய தோண்டியை கோண்டுவந்தான், பின்னர் அதை அதன் பயன் தெரியாமலே கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தான். 
  • மற்றவர்களை தூஷணை செய்யும் வார்த்தைகளை சொல்லாதே. சேர்க்கும் சொத்துக்கள் எதுவும் நீ உடலை விட்டு செல்லும்போது நில்லாதே. மண், மக்கள், மனைவி ஆகிய மூன்று ஏடணையும் உன்னை மீண்டும் மீண்டு பற்றில் பிணைக்கும் பொல்லாதவை என்பதை அறி. 
  • ஆனால் சிவத்தின் மீது இச்சை வைத்தால் எமலோகம் உன்னைக் கண்டு அஞ்சும். 
  • எப்போதும் உனது வாழ்க்கையில் நல்ல வழிதனைத் தேடு, பரமனை எப்போதும் ஆனந்த மிதப்பில் தேடு. 
  • சிவத்தை அறியும் முயற்சியில் உள்ள வல்லவர்களாகிய சாதகர்கள் கூட்டத்திலே எப்போதும் நட்பு வைத்திரு. மனதிலே உலகின் வள்ளல் ஆகிய பரமனை வைத்து கொண்டாடு. 
  • எப்போதும் நல்லவர்கள் நட்புக்கிடைத்தால் அதை ஒதுக்கி விடாதே, பன்னிரெண்டு வகையான அறங்களில் உன்னால் கடைப்பிடிக்க கூடிய அறங்கள் எவை உள்ளதோ அவற்றை கட்டாயம் கடைப்பிடி. 
  • எவரையும் பொல்லாங்கு சொல்லாதே, பொய் கோள் சொல்லும் பண்பு கொள்ளாதே. 
  • உண்மையினை அறியும் அறிவினை கூறும் வேதங்களின் வழி நில்லு, இறையை அறியும் நல்லோர்கள் வழியையே பின்பற்று. 
  • பொல்லாத ஒதுக்கப்படவேண்டிய கோபத்தை கொன்று விடு. எவரிடமும் கையேந்தி பிச்சை எடுக்காதே. பெண்ணை அடையவேண்டும் என்று அலைந்து இறக்காதே. அந்த ஆசை உன்னை ஆளாமல் பார்த்துக்கொள். 
  • எப்போதும் உனது முயற்சி மெய் ஞானப்பாதையில் ஏறுவதாக இருக்க வேண்டும். அதன் இலக்கு சுத்த வேதாந்த வெட்ட வெளியாகும். 
  • அஞ் ஞானத்தில் உன்னை ஆழ்த்தும் வழிகளைய் எல்லாம் ஆராய்ந்து தவிர்த்து, உன்னை அண்டி வருபவர்களுக்கெலாம் நீ அறிந்த மெய் ஞான மார்க்கத்தை கூறு. 
  • உனக்கு மெய் ஞானத்தை கூறித்தரும் குருவின் சொல் மீறி எதுவும் செய்யாதே. உன்னால் இயன்ற நன்மைகளை மென் மேலும் செய்துகொண்டிரு.

இனி பாடலில் வரிகளை தாளத்துடன் படித்து மகிழுங்கள்....

பாடல் 

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக் 

கோபஞ்செய் தேயமன் 

கொண்டோடிப் போவான் 

பாபஞ்செய் யாதிரு மனமே. 

சாபங்கொடுத்திட லாமோ - விதி 

தன்னைநம் மாலே தடுத் திடலாமோ 

கோபந் தொடுத்திட லாமோ - இச்சை 

கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ. 

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தாற் 

சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம் 

நல்லபத் திவிசு வாசம் - எந்த 

நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம். 

நீர்மேற் குமிழியிக் காயம் - இது 

நில்லாது போய்விடும் நீயறி மாயம் 

பார்மீதில் மெத்தவும் நேயம் - சற்றும் 

பற்றா திருந்திடப் பண்ணு முபாயம். 

நந்த வனத்திலோ ராண்டி - அவன் 

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி 

கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக் 

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி. 

தூடண மாகச்சொல் லாதே - தேடுஞ் 

சொத்துக்க ளிலொரு தூசும் நில் லாதே 

ஏடணை மூன்றும் பொல்லாதே - சிவத் 

திச்சைவைத் தாலெம லோகம் பொல் லாதே. 

நல்ல வழிதனை நாடு - எந்த 

நாளும் பரமனை நத்தியே தேடு 

வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த 

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு. 

நல்லவர் தம்மைத்தள் ளாதே - அறம் 

நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே 

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே - கெட்ட 

பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 

வேத விதிப்படி நில்லு - நல்லோர் 

மேவும் வழியினை வேண்டியே செல்லு 

சாதக நிலைமையே சொல்லு - பொல்லாச் 

சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 

பிச்சையென் றொன்றுங் கேள்ளாதே - எழில் 

பெண்ணாசை கொண்டு பெருக்கமா ளாதே 

இச்சைய துன்னை யாளாதே - சிவன் 

இச்சைகொண் டவ்வழி யேறிமீ ளாதே. 

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த 

வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு 

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை 

அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 

மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை 

மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே

தொடரும்...

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...