குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 11, 2011

குரு தத்துவம்




குருவென்பது ஒரு தத்துவம், இருளை அகற்றி ஞானத்தினை அடைய உபயோகிக்கும் உத்தியின் பெயரே! அது எப்போதும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் நிரந்தரமான வியாபகம்! பசுவின் இரத்தமே மடிவழியாக பாலாக வருவது போல் பிரபஞ்சத்தின் உண்மை யார் மூலம் நாம் உணர்கிறோமோ அந்த வஸ்து (மனிதன், கல், எந்த உயிரினமாக இருக்கலாம்) குருவாகிறது. தத்தாத்திரேயர் இவ்வாறான ஞானத்தினை இருபத்தி நாலு சந்தர்ப்பத்தில் பெற்றார். அந்த 24 குருமார் யார் என்றால் பூமி, வானம், நீர், காற்று, நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, சமுத்திரம், நெருப்பு சுடர், தேனி, யானை, தேன் சேகரிப்போர், மான், மீன், காதலனுக்காக காத்திருந்த பிங்கலை என்ற பெண், சிட்டுக்குருவி, குழந்தை, இளம் பெண், வில்லு, பாம்பு, சிலந்தி, வண்டு ஆகியன. 

சீடனுக்கு குரு சீட உறவு முக்கியமானது, அது உணர்ச்சிகளாலோ, அல்லது அறிவு, வாதத்தினால் அறிய முடியாதது, அது ஒருவகை விழிப்புணர்வு, எப்பெடியெனில் காலையில் மலரும் மலருக்கு ஒப்பானது, அதனை எப்போது மலர்கின்றது என்பதனை கணிக்க முடியாது, மொட்டு தகுந்த பருவத்தினை அடைந்தவுடன் சூரிய ஒளி பரவும் போது விரிகின்றது, சூரியன் இந்த மொட்டுக்குத்தான் ஒளியை கொடுத்து விரிய செய்வேன் என்று கொடுப்பதில்லை, பூமி முழுவதும் பரப்புகிறது, வளர்ந்து நிலையடைந்த மொட்டுக்கள் மலர்கின்றன. பூ மலரும் போது சூரியனும் மலரும் ஒன்றாக சந்திதுக் கொள்கின்றன. 

தத்தாத்ரேயரது குரு சீட உறவு நேரடி உபதேசங்களையோ, அறிவு சார் வாதங்களையோ, நூற்கள் எதையுமே கொண்டிருக்கவில்லை, அவை களங்கமற்ற மனதில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண்ணிய ஞானம், அவரது சீடர் என்ற பெற்றுக்கொள்ளும் தன்மையிலிருந்தார் (receiver) அவர் கண்ட  பூமி, வானம், நீர், காற்று, நெருப்பு, சந்திரன், சூரியன் என்ற அனைத்திலுமே குரு தத்துவத்தினைக் கண்டு ஞானத்தினை பெற்றார். குரு சீட உறவு முறை என்பது உடல் சார்ந்த ஒன்றோ, மனம் சார்ந்த ஒன்றோ, உணர்ச்சி சார்ந்த ஒன்றோ இல்லை, அது முழுவதுமே விழிப்புணர்வு சார்ந்த ஒன்றாகும். 

தற்போது உள்ள மிகப்பெரிய பிரச்சனை குரு சீட உறவுகள் தவறாக்கப்படுகின்றமை, இது ஏன் ஏற்படுகிறது? ஒரு சீடன் ஞானத்தினை அடைய முற்படும் போது மனதினை திறந்து, தனக்குள் ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்கிறான், இது சீடனின் ஆர்வத்தினால் எற்படுவது.  விழிப்புணர்வற்று இந்த மன நிலையில் உள்ள ஒரு சீடன் தன்னில் பதிக்கப்படும் எதையும் ஏற்றுக்கொள்ளும் ஒருவித வசிய நிலையிற்கு ஆளாகிறான். பெரும்பாலான போலி ஆசாமிகள் இந்த சந்தர்ப்பத்தினை தமது சுய நலனிற்காக உபயோகித்துக் கொள்கின்றனர். அதாவது குரு சீட உணர்வு உடல், மனம், உணர்ச்சி சார்ந்த ஒன்றாக்கபடுகிறது. இந்த நிலையில் சீடனாக்கப்படவன் உறிஞ்சப்படுகிறான். உண்மையில் குரு என்பது பாரபட்சமின்றி வெளிப்படுத்துவது அல்லது கொடுப்பவராகவே இருக்க வேண்டும் (transmit) சீடன் என்பவர் பெறுபவர் (receiver). இது ஒரு நிலையே அன்றி நிரந்தரமான பிணைப்பு அன்று! ஏனெனில் அகங்கார பிணைப்பு அறுவதற்குதான் குரு சிஷ்ய உறவே! இதனையே முருகன் சிவனிற்கு உபதேசித்தார், புலிப்பாணியார் தன் குரு போக நாதரிற்கு உபதேசித்தார், கோரக்க நாதர் தன் குரு மச்சேந்திரருக்கு உபதேசித்தார் என்பதெல்லாம். உண்மையில் அளிப்பவர் குருவாகிறார், பெறுபவர் சீடராகிறார், அவ்வளவுதான்! இந்த உறவில் அகங்காரமான நான் என்பது அறவே இல்லை. நான் மட்டும்தான் ஞானத்தினை கூறுவேன் நீ எப்போதும் கேட்கவேண்டும் என்ற ஒருவழிபாதை எப்போதும் குரு சீட உறவில்லை என்பதுதான் புலிப்பாணி-போக நாதர், கோரக்க நாதர் - மச்சேந்திரர், முருகன் - சிவன் கதைகள் கூறும் தத்துவம்! 

சரி குரு சீட வணக்கம் ஏன்? அகங்காரமான நான் என்ற ஆணவ அழிவுக்குத்தான் அன்றி, ஆணவ அதிகரிப்புக்கன்றி! இது கிட்டட்தட்ட கண்ணாடி பார்ப்பதற்கு ஒப்பானது, நான் என்ற உண்மை எனக்குள்ளேயே இருந்தது, அது எனக்கு தெரியாமல் இருந்தது! அதை எனக்குள் காட்டியருளிய உங்களில் என்னை காண்கிறேன் என்பதே வணங்குவதன் தத்துவமேயன்றி, அவர் பெரியவர் நான் சிறியவர் என்ற எண்ணத்தில் இல்லை. உண்மையில் என்னையே குருவில் காண முனைகின்றேன். அந்த நிலையில் குருவும் சீடனை வணங்குவார். 

மனித மனம் அகங்காரத்தின் அடுக்குகளால் எப்போது ஒருவித வியாபார உத்தியினை கொண்டிருக்கிறது, அதனால் வியாபாரமாக்கப்பட்ட விடயங்களில் குரு சிஷ்ய உறவும் ஒன்று என்பது மறுக்க முடியாத ஒன்றுதான்! 

2 comments:

  1. குருவின் தத்துவ விளக்கம் மிக அருமை.

    குரு என்பதை ஒரு சீடன் சரியாக புரிந்துகொண்டாலே ஏமாற்றங்களை தவிர்க்க முடியும். அதுபோல் ஒரு குரு எப்போதுமே குருவாகவே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அருமை நண்பரே, முழுக்கட்டுரையினையும் சுருக்கமாக விளக்கிவிட்டீர்கள்!
    மிக்க நன்றி,
    அன்புடன்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...