குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, July 12, 2023

Sri Agasthiya Maharishi’s Yogic Wisdom From Siddha Lineage Book - 1

தயாராகிறது.................. மெய்ப்பு வாசித்தலுக்கான பிரதி.. சென்னையிலிருந்து வருகிறது!

மூலாதார கணபதி தியானம்

தினசரி அதிகாலை 04:30 இற்கு Zoom வழியாக மூலாதார கணபதி தியானம் நடைபெறுகிறது. 
யோக தந்திர சாஸ்திரப் பிரகாரம் எமது உடலில் குறித்த புள்ளிகளில் எமது மனதின் வடுக்கள், உணர்ச்சிகள் கர்மங்கள் பதிந்துகொள்வதால் எமது பிராண ஓட்டம் தடை பட்டு வாழ்வில் சிக்கல்கள் உருவாகிறது. 
மனதையும், உடலையும், பிராண சக்தியையும் இணைத்துப் பயிற்சிப்பதன் மூலம் எம்மை நாம் உருமாற்றல் செய்துகொள்ள முடியும். 
இவை அனைத்திற்குமான வழிமுறைகள் அகத்திய மகரிஷி தனது நூல்களில் அருளியுள்ளார்; இந்த வழிகாட்டலின் படி ஒவ்வொரு நாளும் தியான சாதனை நடைபெறுகிறது. 
அகத்தியர் சௌமிய சாகர நூலை குருமுகமாக பிரதி சனிக்கிழமைகளும் அதிகாலை 0530 இற்கு வகுப்புகள் நடைபெறுகிறது. 
ஆர்வமுள்ளோர் கீழ்வரும் வாட்ஸப் இலக்கத்திற்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி +94742837401 பங்குபற்றி பயன் பெறுங்கள். 
-----------------------------------------------------------
மூலாதார சங்கல்பம், 
என்னை பிருதிவி தத்துவத்துடன் பிணைக்கும் அனைத்து தளைகளையும் நீக்க வேண்டி வல்லபை கணபதியை மூலாதாரத்தில் எழுந்தருளச் செய்கிறேன். 
பயம் சார்ந்த சகல எண்ணங்களும்
சந்தேகங்கள் சார்ந்த சகல எண்ணங்களும்
தகுதியற்ற எண்ணங்கள்
குற்ற உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள் 
வெட்க உணர்வு சார்ந்த எண்ணங்கள்
அனைத்தும் எனது சித்தத்திலிருந்து இப்பொழுதே கரைந்துவிடுகிறது. 
இந்த உணர்வுகள் அனைத்தும் வல்லபை கணபதியின் அருளால் தெய்வீக அன்பாக மாறி தெய்வ உருமாற்றம் பெறுகிறேன். 
நான் எல்லாத்தளைகளிலிருந்தும் விடுபட்டு இப்போது சுதந்திரனாகவும், இறைவனின் அன்பையும் ஆற்றலையும் உள்வாங்கக் கூடிய திறந்த மனதுடையவனாகவும் ஆகிறேன். 
என்னுடைய வாழ்க்கை முழுவது தெய்வ சக்தியால் வழி நடாத்தப்படும் நிலையை நான் அடைகிறேன்! 
இந்த சாதனையால் எனது மூலாதாரம் பலமடைந்து, சுத்தியடைகிறது.

Tuesday, July 11, 2023

எமது கலைஞர்கள் வளர முதலிடுவீர்களா?

இளையராஜா ஒரு ஞானி என்பதை ஏற்றுக்கொள்கிறேன்! 
இலங்கையில் உங்கள் இளைஞர்கள் ஒரு முழு நீளத் திரைப்படத்தினை எடுக்க செலவழிக்கும் ஒட்டுமொத்த பஜட்டினை மூன்று மணி நேர நிகழ்ச்சிக்கு எனக்கு கொடுக்கும் முட்டாள் பெருந்தகைகளை ஏனடா இப்படி வீண் வேலை பார்க்கிறீர்கள், உங்கள் ஊரில் உள்ள பிள்ளைகள் உருப்பட செலவு செய்யலாமே என்பதைத் தான் பிழைக்க வந்துவிட்டு இப்படி வீண்வேலை செய்கிறீர்கள் என்று திட்டியிருக்கிறார். 
இனியாவது இங்குள்ள எமது கலைஞர்கள் வளர முதலிடுவீர்களா?
    
குறிப்பு: இந்தப் பதிவு ஒரு அணியிலக்கண சிலேடைப் பதிவு; யாரும் தலை சூடாக வேண்டாம். இதில் உள்ள உண்மையை மாத்திரம் சிந்திக்கவும்.

சர்வதேச யோகா தின சிறப்பு நேர்காணல்

சர்வதேச யோகா தின சிறப்பு நேர்காணல் - சக்தி டிவி Good morning Sri Lanka நிகழ்ச்சியில்! 
அருமையான உரையாடலுக்கு நன்றி ராஜ்குமார் 
பார்த்துவிட்டு கீழே உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்! 
காணொளி முதல் கொமெண்டில்

Monday, July 10, 2023

அமானுஷ்ய அமெரிக்கா - மிகச் சுவாரசியமான புத்தகம்!

அமானுஷ்ய அமெரிக்கா - மிகச் சுவாரசியமான புத்தகம்! 
இந்தப் புத்தகத்திற்கும் இலங்கைக்கும் - சென்னைக்கும் தொடர்பு இருக்கிறது. 
அமானுஷ்ய அமெரிக்காவின் பிதாமகர்களான ஹென்றி ஆல்கட்டே இலங்கையின் நவீன பௌத்த மறுமலர்ச்சியின் பிதாமகர். 
இவரே பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தமான தாமஸ் எடிசனின் வழிகாட்டியும் கூட. 
ஹென்றி ஆல்கட்டும் - மேடம் பிளாவஸ்கியிம் சேர்ந்து சென்னை அடையாறில் தியோசபிக்கல் சொசைட்டி அமைத்தனர். 
உலகம் அறியப்படாதவர்களால் ஆளப்படுகிறது!

ஒரு வழிகாட்டியாக இருப்பது பெரும் பொறுப்பு!

குறைகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்! அதேவேளை அவர்களுடைய Ego வினை கிளப்பிவிட்டு கோபத்தைத் தூண்டக்கூடாது. காயப்படுத்தி தாழ்வு மனப்பான்மை உண்டாக்கக்கூடாது! ஆர்வத்துடன் செயல் புரியும் உத்வேகத்தை உருவாக்க வேண்டும்; அதற்கு நிதானமும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் உரையாட வேண்டும்! எனது மாணவர் ஒருவர் ஒரு முறை கூறினார் “ஐயா உங்களிடம் கேள்வியைக் கொண்டுவந்தால் பதிலை நாம் தேடி உணரும் வகையில் அழகாக எமக்குள்ளே திருப்பி விடுவீர்கள்” என்று! 
ஆம் கற்பித்தலின் முதல் நியதி “எவருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, அவர்கள் ஏற்பு நிலையில் இல்லாமல்” என்பதே!
ஒரு மாணவர் பல வருடங்களுக்கு நொந்து நொடிந்து வந்தபோது ஆலோசனை கூறி உளத்தை மீளமைத்து வாழ்க்கைப் போராட்டத்தில் சண்டை பிடிக்க வீரனாக்கினால் சிலமாதங்களில் தனது பழைய பழக்க வழங்கள், சிந்தனை முறைகளுக்குள் போய் ஒளிந்து கொண்டு அண்ணா பயமாக இருக்கிறது என்று வெருண்டு கொண்டு வருவார்! 
இப்போது அவருக்கு நிதிப்பிரச்சனையாம்! அதற்கு அனுப்பிய வழிகாட்டல் இங்கும் சிலருக்கு பொருந்தும்! உபயோகமாக இருக்கலாம். 
*******************************************
அன்பின் மாணவரே, 
உங்களுடைய நிதிப்பிரச்சனைக்கு உங்களுடைய பேராசைகள், நிதி ஒழுக்கமே காரணம். 
இங்கு பேராசை என்பது உயர்ந்ததை அடையவேண்டும் என்ற ஆசை இருக்கக் கூடாது என்பதல்ல! உயர்ந்த விஷயத்தை குறுக்கு வழியில் அதற்குரிய உழைப்பை, விலையைக் கொடுக்காமல் ஏமாற்றி இலாபம் பெற நினைக்கும் எண்ணம்! 
நீங்கள் உழைக்கும் பணத்தைக் கணக்குச் செய்தால் சாதாரணமாக ஒரு பட்டதாரி உழைப்பதை விட அதிகமாக உழைக்கிறீர்கள்.
நீங்கள் செலவு செய்வதை ஆராய்ந்து பாருங்கள்; அவற்றில் போலிப்பகட்டு இருப்பின் திருத்திக்கொள்ளுங்கள். 
தர்ம காரியங்களுக்கு பணம் செலவழிக்கும் போது உங்களிடம் பணம் இல்லை என்று மனதில் சூழ் நிலையை உருவாக்கி அகத்தில் தரித்திரம் உருவாக்குவது பின்னர் எதிர்வினையாக பேராசைப்பட்டு ஏமாறுவது என்ற நிலை உங்களில் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். 
நான் எல்லோராலும் விரும்பப்பட வேண்டும், மதிக்கப்பட வேண்டும் என்ற உளத்தாழ்வு நிலை இருந்தால் அதை ஈடுகட்ட எனது நிதி வலிமையை விட பகட்டாக மற்றவர்களுக்கு உதவுகிறேன் என்று சென்று மாட்டிக்கொள்கிறீர்களா என்பதை கவனியுங்கள்.
தினசரி உங்கள் தொழிலில் உழைப்பைச் செலுத்தாமல் பணம் கிடைத்தவுடன் ஓய்வாக இருப்பது, உல்லாச மன நிலை வருவது, பிறகு பணம் முடிந்தவுடன் பயம், கவலை கொள்வது போன்ற தவறுகளைச் செய்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள்! 
இப்படி தகுந்த ஒழுக்கத்தினைப் உங்களில் உருவாக்காமல் உங்களைச் சுற்றி உலகமே சூழ்ச்சியால் இயங்குவது போல கற்பனைப் பயத்தை உருவாக்கி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். 
மீண்டும் மீண்டும் இதைப் படித்து உங்களில் இந்த அகக்காரணி இருக்கிறதா என்பதை கவனித்து திருத்திக்கொள்ளுங்கள்! 
திருத்த வேண்டும் என்றால் விழிப்புணர்வுடன் சுய பச்சாதாபம் காட்டாமல் உங்கள் எண்ணங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்!

எனது மகள்

எனது மகள் ஒருமுறை கேட்டாள்; அப்பா நான் டாக்டர் ஆவதா? இஞ்சினியர் ஆவதா? என்று! 
நான் சொன்னேன் இப்படியெல்லாம் உங்களது வாழ்க்கை இலக்கை வைக்க வேண்டாம்! இந்த உலகம் மூன்று வித நியதியால் இயங்குகிறது. 
1. அறிவு - Knowledge
2. ஆற்றல் - Power
3. இவற்றை வழி நடத்தும் செல்வம் அல்லது பணம் - Money
இந்த மூன்று ஆற்றல்களும் பல்வேறு அகப்பிரிவுகளைக் கொண்டுள்ளது; நாம் இதன் வரைபடத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பின்னர் இந்த மூன்றையும் இயக்கும் துறைகளில் உங்களது மனவிருப்பமும், ஆற்றலும் இயல்பாக எதில் நாட்டமுறுகிறதோ அதில் அடிப்படைக் கல்வியும், (Education) அனுபவமும் (Experience), நிபுணத்துவம் (Mastery) பெறவேண்டும். இப்படி ஒன்றில் நிபுணத்துவம் பெற்ற பின்னர் மற்றைய துறையில் நிபுணத்துவம் பெற வேண்டும்! இப்படி நாம் இந்த உலகின் இயக்கத்தில் ஒரு பங்காளியாக, மேம்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னேன்!
இது எனது சிந்தனை!

Saturday, July 08, 2023

சமயம்

நிறுவனமயப்படுத்தப்பட்ட சமயங்கள் மக்களை ஏமாற்றுவதற்கு மனித இயல்புகளின் அடிப்படைகள் இல்லாத தேவபுருஷர்கள் மனிதர்களிடையே இருப்பதைப் போல் காட்ட வேண்டி நடிக்கும் நாடங்களின் ஒன்று காமம் இல்லாத அதியுத்தம தலைவர்களை தாம் சமயத் தலைவர்களாகக் கொண்டிருப்பதாக மக்களை நம்ப வைப்பது! 
இயல்பான மனித உளவியலுக்கு மாறான ஒரு விகார சிந்தனை இது! 
வஜ்ரயான திபேத்திய பௌத்தம் இந்த விடயத்தை மிக அழகாகக் கையாளுகிறது. இதற்கு மூலம் எமது தந்திர சாஸ்திரம்; இது பற்றி பிறகு ஆர்வமுடையோருடன் உரையாடுவோம். 
திபேத்திய மதகுருவாக – லாமாவாக தேர்ந்தெடுக்கப்படும் துறவி கர்மமுத்ரா என்ற பயிற்சிக்கூடாக தனது காம உணர்ச்சிகள், எண்ணங்கள், ஆற்றல்களை உயர் உணர்வுகளாக மாற்றவேண்டும். 
கர்மமுத்ரா என்றால் கர்மங்களை முத்திரையிடல் என்று அர்த்தம். இதன் படி குறித்த பயிற்சியாளர் இந்த பயிற்சியில் தேர்ந்த பெண்ணுடன் – இவர் யோகினி என்று தந்திர சாஸ்திரத்தில் அழைக்கப்படுவார்கள் - தனது பயிற்சியினை மேற்கொண்டு கர்மமுத்ரை நிலையில் சித்தி பெறுவார். 
கர்ம முத்ரா என்பது வஜ்யான யோகிக்கு தனது பயிற்சியில் துணைபுரியும் பெண் துணையையும் குறிக்கும். இதன் அர்த்தம் பெண் தகுந்த தந்திர சாதனை மூலம் ஒருவனின் கர்மத்தை நீக்கவும் முடியும் என்கிறது தந்திர சாஸ்திரம். 
தாந்த்ரீக பௌத்தம் ஞானத்தைப் பெற துறவற தனிமையான நுட்பங்களுக்கு மாற்றான முறையாக இதை வழங்கியது, இந்த முறை மூலம் ஒருவர் வாழ்வை வெறுத்தொதுக்காமல் பெண் துணையுடனும் உயர் ஞானத்தைப் பெறலாம் என்கிறது.
எனினும் பல பிறப்புகளால் தமது காமத்தினை முத்திரையிட்டு கட்டுப்படுத்தியவர்களுக்கு மாத்திரமே நேரடித் துறவறம் என்றே சாத்திரங்கள் சொல்கிறது. அத்தகைய அகப்பக்குவம் இல்லாதவர்கள் தகுந்த துணையுடன் காமமுத்திரை நிலை பெற தந்திர சாஸ்திரம் சொல்கிறது. 
திபேத்திய வஜ்ராயன பௌத்த மகாசித்தர்கள் தமது யோகினிகளுடன் கர்ம முத்திரை பயிற்சி செய்யும் புராதன படம் ஒன்று கீழே!

காமத்திலிருந்து தெய்வ உணர்விற்கு என்றார் ஓஷோ

காமத்திலிருந்து தெய்வ உணர்விற்கு என்றார் ஓஷோ
துறவிகளுக்கு காமம் உண்டா என்றால் மனிதர்கள் எல்லோருக்கும் உண்டு! 
இருக்கும் காமத்தை உயர் உணர்வாய் மாற்றி வெற்றி கண்டவரும் உளர்! 
காமத்தை மறைத்து தம்மை அதி உன்னதமானவர்கள் என்று மற்றவர்களை தாழ்வு மனப்பான்மைக்கு உருவாக்கி இரகசியமான தமது காம உணர்வைத் தணித்துக்கொண்டவர்களும் உளர்! 
காமம் மனிதனின் அடிப்படை சக்தி; தம்மை உயர்வாக காட்டி மற்றவர்களை விட மேம்பட்டவர்களாக காட்ட காமம் இல்லாதது போல் நடித்தாலும் எல்லோரிலும் காமம் மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது. 
சக்தியை கையாளும் முறை அதை வெறொன்றாக உருமாற்றல்; அடக்கினால் அழுத்தம் அதிகமாகும்! அழுத்தம் அதிகரித்தால் ஒரு நாள் உடைத்துக்கொண்டு பீறிட்டு உங்களை அழிக்கும்! 
காம இரகசியம் என்று கிட்டத்தட்ட இந்த தலைப்பில் பதினைந்திற்கு மேற்பட்ட பதிவுகள் இருக்கிறது; படித்துப் பாருங்கள். 
இணைப்பு முதல் கொமெண்டில்.............

Thursday, July 06, 2023

மாத்தளையின் கல்வி முன்னேற்றம்

பாடசாலை மாணவர்களுக்கான "கற்பது எப்படி - How to Study" என்ற குறுகிய பாடவிதானத்தை மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale இன் வேண்டுகோளிற்கு இணங்க மாத்தளையின் கல்வி முன்னேற்றத்திற்கான தொடங்குகிறேன். 

கற்றல் என்பது கீழ்வரும் ஏழு திறன் களைக் கொண்டது. இந்த ஏழு திறன்களையும் சரியாக வளர்க்காமல் எவரும் எந்தவொரு விடயத்தையும் சிறப்பாக கற்று பயன்படுத்த முடியாது. 

1. வாசிப்பும் கிரகித்தல்

2. ஞாபசக்தி வளர்ச்சி

3. நேர முகாமைத்துவம் 

4. பாடக்குறிப்புகளை தெளிவாகவும் வினைத்திறனாகவும் எழுதுதல்

5. வகுப்பறையில் ஆர்வத்துடன் பங்குபற்றல்

6. கட்டுரைக் கேள்விகளுக்கும் வாய்மொழி பதில் அளிக்கும் திறனை விருத்தி செய்தல்

7. பரீட்சைக்கு தயார்படுத்தல்

இந்தக் கற்கை நெறி இந்த எட்டு அமிசங்களையும் மாணவர்களுக்கு பயிற்றுவித்து கற்றலில் திறமையுடைய கல்விமான்களை உருவாக்க எண்ணம் பூண்டுள்ளது. 

உங்கள் பிள்ளைகளுக்கு இந்தக் கற்கை நெறியை பிரத்தியேகமாக பயிற்றுவிக்க வேண்டின் தொடர்பு கொள்ளுங்கள்.


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...