குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, July 04, 2023

அரவிந்தரின் குறிப்புகள்

ஸ்ரீ அரவிந்தர் சுவாமி விவேகானந்தரை ஒரு வலிமையான ஆன்மீக சக்தியாகக் கருதினார். மேலும் பாரத அன்னையின் ஆன்மாவிலும் அவரது குழந்தைகளின் ஆன்மாவிலும் "அவரது செல்வாக்கு இன்னும் பிரமாண்டமாக வேலை செய்கிறது" என்பதை உணர்ந்தார். 
உலக மனதை ஆன்மிக திசையில் மாற்றும் மாபெரும் சக்தியாக ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உருவாக்கினார் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 
விவேகானந்தரின் தனது குருவின் ஆணையில் அவர் உடலை விட்டு புறப்பட்டுச் செல்வது’ என்பதை, சூட்சும உடலில் இருந்து கொண்டு உலகுக்குக் காணக்கூடிய முதல் அடையாளமாக, ‘‘பாரதம் தனது உன்னத ரிஷி கலாச்சாரம் உலகில் உயிர் பிழைப்பதற்காக மட்டுமல்ல, வெல்வதற்காகவும் விழித்திருந்தது’’ என்று அரவிந்தர் தனது குறிப்புகளில் கூறியுள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வுகள்

அம்பாளை உபாசிக்கும் எனக்கு பூரணை மிக முக்கியமான நாள்! அன்று முழுவதும் அனுஷ்டானத்தில் கழியும்! 
நேற்று அம்பாள் எனக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைத் தந்திருக்கிறாள்! 
அவுஸ்ரேலியாவில் இருந்து Muralee Muraledaran அண்ணா வந்ததால் அவரது ஆலோசனையுடன் மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale நேற்று மூன்று முக்கிய நிகழ்வுகளை மாத்தளையில் நடத்தியிருக்கிறது. இதை இவர்கள் நடத்தினார்களா அல்லது திருவருள் நடாத்தியதா என்பது இன்னும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம். 
1. காலையில் சிந்தாக்கட்டி குமரப்பெருமான் ஆலயத்தில் digital education center, பாலர் பாடசாலை, கல்வி ஆலோசனை நிலையம் ஆகியவற்றிற்குரிய அடிக்கல் ஆலய தர்ம கர்த்தா பாலா அண்ணாவுடனும் பரிபாலன சபையுடன் நிறுவப்பட்டுள்ளது. இது சிந்தாக்கட்டி கோயிலைச் சுற்றி இருக்கும் 250 குடும்பங்களின் பிள்ளைகளின் ஆரம்ப கல்வி, பாலர் கல்வி, அற நெறிக் கல்வி, பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகிறது. இதற்கு பிரம்மகுமாரி இராஜயோக நிலையத்தின் இணைப்பளர் Muthusamy Sivagnanam ஐயா அவர்களும் பங்குபற்றி பாராட்டுகளை வழங்கியிருந்தார். 
2. மதியம் கல்வித் திணைக்கள அதிகாரிகள் Monica Gomez அம்மையார், அதிபர்கள், ஆசிரியர்களுடன் Dr. Nishānthan Ganeshan - Dr. Nava Navaratnarajah ஆகிய பல்கலைக்கழக சமூக அறிஞர்களுடன் நீண்ட கல்வி சமூக கலாச்சார சமூகப் பணியில் அனுபவம், மேற்குறித்த பணிகளுக்காக அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் உயர் கௌரவம் பெற்ற அன்புக்குரிய Muralee Muraledaran அண்ணா அவர்களுடைய ஆலோசனையுடன் மாத்தளையில் தமிழ் கல்வி நிலை முன்னேற்றத்திற்கு தேவையான செயற்திட்டங்கள், பாடசாலைகளின் வளப்பற்றாக்குறைகள், அவறிற்குரிய தீர்வுகள் பற்றி நீண்டதொரு கலந்துரையாடல் நிகழ்வுபெற்றது. 
3. மூன்றாவது நிகழ்வு மாத்தளை காந்தி சபையின் ஏற்பாட்டில் மாத்தளையின் கல்வி, கலாச்சார வளர்ச்சியில் ஆர்வமூள்ள சமூகப் பெரியவர்களுடன் எப்படி கல்விக்குரிய தலைமத்துவம் வழங்குவது என்பது பற்றி உரையாடப்பட்டது. இதில் ஏற்கனவே மாத்தளையின் கல்வி வளர்ச்சிக்குப் பாடுபடும் சுபீட்சம் நிறுவனம், பல்வேறு ஆர்வலர்கள் கலந்துகொண்டு பெரும் ஒத்துழைப்பைத் தந்திருந்தனர். இந்த நிகழ்விற்கு தலைமையேற்ற மகாத்மா காந்திசபையின் தலைவர் திரு சந்திரசேகன் ஐயா அவர்களின் பிறந்த நாள் அன்று இந்தக்கூட்டம் நடைபெற்றது மிகச் சிறப்பான ஒரு நினைவாக இருக்கப்போகிறது. முரளி அண்ணா தனது கல்வி சமயப் பணியின் நீண்ட வெற்றிகர அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். 
எந்தத் தடைகள் வந்தாலும் எப்படி அதைக் கவனிக்காமல் இலக்கை மாத்திரம் கவனித்து முன்னேறிச் செல்வது என்ற வித்தையை தனது அனுபவத்திலிருந்து முரளி அண்ணா எம் எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டது ஒட்டு மொத்த சமூகத்திற்கு அவர் தந்திருக்கும் பெருஞ்செல்வம்! 
அவர் ஒரு யதார்த்தவாதி என்பதையும், எடுத்ததை சாதிக்கும் விடாக்கண்டன் என்பதையும், உதவி என்பது எவருக்குத் தேவையோ அவர்களுக்கு என்ற உயரிய எண்ணம், வளங்களை வீணாக்கமல் உயர்திறனுடன் பாவிப்பது எப்படி, இருப்பதை வைத்து உயர்ந்த பலனைப் பெறுவது எப்படி என்பதையெல்லாம் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் நேற்றுக் கிடைத்தது. 
எனக்கு மனதிற்குள் ஒரு கவலை பூரணை தினத்தில் இன்னும் கொஞ்சம் அனுஷ்டானத்தினைச் செய்திருக்கலாமே என்ற மனஓட்டத்துடன் வீட்டிற்கு வந்தால் அங்கு குருதேவர் பண்டிட் ஸ்ரீராம்சர்மாச்சார்யாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம் கண்ணில் பட புத்தகத்தைத் திறந்தால் கீழ்வரும் செய்தி கண்ணில் பட்டது; 
1. உண்மையான உபாசனை - தனது இஷ்ட தெய்வத்தை உபாசித்தல்
2. ஆன்ம சாதனை - அறத்திலிருந்து வழுவாத வாழ்க்கை
3. ஆராதனை (மனித குலத்திற்கு தனது அறிவு ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொண்டு செய்தல்)
இன்றைய நாளை நீ வீணாக்கவில்லை உனது சமூக முன்னேற உனது நேரம், அறிவினைப் பயன்படுத்தி ஆராதனை செய்துவிட்டு வந்திருக்கிறாய் நிம்மதியாக நித்திரை கொள் என்றாள்!
இந்த மூன்றும் அமைந்த வாழ்க்கை ஒருவனை தெய்வீக மனிதனாகவோ, ரிஷியாகவோ, தேவதூதனாகவோ மாற்றிவிடும். இத்தகையவர்கள் எப்போதும் மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், உயர்ந்த செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த செய்தியைப் பார்த்த மகிழ்ச்சியில் மனத்திருப்தியுடன் வேலைகள் எல்லாம் முடித்து உறங்கச் செல்லும் போது இரவு ஒன்றரை மணியாகிவிட்டது.

குருதேவர் பண்டிட் ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா

குருதேவர் பண்டிட் ஸ்ரீராம் சர்மா ஆச்சார்யா தனது வாழ்க்கை வரலாற்றில் உண்மையான ஆன்மீக வாழ்க்கை எது என்பதை இப்படிக் குறிப்பிடுகிறார்: 
1. உண்மையான உபாசனை - தனது இஷ்ட தெய்வத்தை உபாசித்தல்
2. ஆன்ம சாதனை - அறத்திலிருந்து வழுவாத வாழ்க்கை
3. ஆராதனை (மனித குலத்திற்கு தனது அறிவு ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொண்டு செய்தல்) 
இந்த மூன்றும் அமைந்த வாழ்க்கை ஒருவனை தெய்வீக மனிதனாகவோ, ரிஷியாகவோ, தேவ தூதனாகவோ மாற்றி விடும். இத்தகையவர்கள் எப்போதும் மக்களால் மதிக்கப்படுபவர்களாகவும், உயர்ந்த செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

Sunday, July 02, 2023

அங்குரார்ப்பண நிகழ்வு

தனி மனித சிந்தனையில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் சமூகத்தில் பெருமாற்றத்தைச் செய்யலாம். 
முரளி அண்ணா Muralee Muraledaran எதை நினைத்தாலும் செய்துமுடிக்க வேண்டும் என்ற செயல் வீரர்! அவரது செயல் முழுவதும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பவற்றை நோக்கியே இருக்கும்! அவர் தமிழ் கலாச்சாரத்தை அவுஸ்ரேலியாவில் பாதுகாத்து வளர்ச்சிக்கு வித்திட்ட அத்திவாரம் என்பதால் அவுஸ்ரேலியா அரசாங்கம் தனது உயர் கௌரவத்தைத் தந்துள்ளது. அவர் சிந்தனை முழுக்க இலங்கையில் பாடசாலையில் கல்வியினை வளர்ச்சக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது! அவுஸ்ரெலியாவின் பெரிய கோயிலின் தர்மகர்த்தாப் பொறுப்பில் இருந்தவர். கோயில்கள் சமூகத்த்தின் முன்னேற்றத்திற்குரிய மையங்கள் என்ற உறுதியான கோட்பாடு உடையவர். உதவி என்று கேட்டால் எப்படிச் செய்யமுடியும் என்று மாத்திரம் யோசிப்பவர்! 
மாத்தளை இலங்கையின் ஆன்மீகத்திற்கு, மலையகத்தின் பாரம்பரியத்தின் மையம். இங்கு முத்துமாரி, ஏழுமுக காளி, பிள்ளையார், கதிரேசனார், சிந்தாக்கட்டி குமரன் என்று அருள் புரியும் தளம். 
நேற்று காலை அம்மனைத் தரிசிக்கும் போது மனதில் தோன்றியதை அவருடன் வந்திருந்த சிந்தக்கட்டி முருகன் கோயில் தர்மகர்த்தா பாலா அண்ணவிடம் சொல்ல சிந்தாக்கட்டியை சூழ இருக்கும் சமூகத்தின் பிள்ளைகளின் பாலர் கல்விக்கு டிஜிட்டல் கல்வித்தளத்தை உடனே செயலாக்கி விட்டார்கள். 
இது ஒரு வித்து - எமது மாத்தளை நகரில் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் கல்விப் புரட்சியைச் செய்யலாம்; இப்படியான சிறு சிறு யோசனைகளை சிறப்பாகச் செய்யலாம். 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale மாத்தளையில் மின்வழிக் கற்கையை சிறப்புடன் இரண்டு பாடசாலைகளில் நடாத்துகிறது. எமது பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த வாய்ப்புகளை உருவாக்க விரும்பும் நிதி வழங்கும் ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றியத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொழில் நிபுணத்துவமும் உடைய நிபுணர்களால் இந்தத் திட்டம் சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது. 
நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது; அனைவரும் வருக!

அங்குரார்ப்பண நிகழ்வு

தனி மனித சிந்தனையில் சிறு மாற்றம் நிகழ்ந்தால் சமூகத்தில் பெருமாற்றத்தைச் செய்யலாம். 
முரளி அண்ணா Muralee Muraledaran எதை நினைத்தாலும் செய்துமுடிக்க வேண்டும் என்ற செயல் வீரர்! அவரது செயல் முழுவதும் வளர்ச்சி, முன்னேற்றம் என்பவற்றை நோக்கியே இருக்கும்! அவர் தமிழ் கலாச்சாரத்தை அவுஸ்ரேலியாவில் பாதுகாத்து வளர்ச்சிக்கு வித்திட்ட அத்திவாரம் என்பதால் அவுஸ்ரேலியா அரசாங்கம் தனது உயர் கௌரவத்தைத் தந்துள்ளது. அவர் சிந்தனை முழுக்க இலங்கையில் பாடசாலையில் கல்வியினை வளர்ச்சக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது! அவுஸ்ரெலியாவின் பெரிய கோயிலின் தர்மகர்த்தாப் பொறுப்பில் இருந்தவர். கோயில்கள் சமூகத்த்தின் முன்னேற்றத்திற்குரிய மையங்கள் என்ற உறுதியான கோட்பாடு உடையவர். உதவி என்று கேட்டால் எப்படிச் செய்யமுடியும் என்று மாத்திரம் யோசிப்பவர்! 
மாத்தளை இலங்கையின் ஆன்மீகத்திற்கு, மலையகத்தின் பாரம்பரியத்தின் மையம். இங்கு முத்துமாரி, ஏழுமுக காளி, பிள்ளையார், கதிரேசனார், சிந்தாக்கட்டி குமரன் என்று அருள் புரியும் தளம். 
நேற்று காலை அம்மனைத் தரிசிக்கும் போது மனதில் தோன்றியதை அவருடன் வந்திருந்த சிந்தக்கட்டி முருகன் கோயில் தர்மகர்த்தா பாலா அண்ணவிடம் சொல்ல சிந்தாக்கட்டியை சூழ இருக்கும் சமூகத்தின் பிள்ளைகளின் பாலர் கல்விக்கு டிஜிட்டல் கல்வித்தளத்தை உடனே செயலாக்கி விட்டார்கள். 
இது ஒரு வித்து - எமது மாத்தளை நகரில் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் கல்விப் புரட்சியைச் செய்யலாம்; இப்படியான சிறு சிறு யோசனைகளை சிறப்பாகச் செய்யலாம். 
மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale மாத்தளையில் மின்வழிக் கற்கையை சிறப்புடன் இரண்டு பாடசாலைகளில் நடாத்துகிறது. எமது பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த வாய்ப்புகளை உருவாக்க விரும்பும் நிதி வழங்கும் ஆற்றல் உள்ளவர்கள் ஒன்றியத்தைத் தொடர்பு கொள்ளலாம். தொழில் நிபுணத்துவமும் உடைய நிபுணர்களால் இந்தத் திட்டம் சிறப்பாக நிர்வாகிக்கப்படுகிறது. 
நாளை அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறுகிறது; அனைவரும் வருக!

கற்றல் மற்றும் கற்பித்தல்

உளவியலில் locus of control என்ற கோட்பாடு உள்ளது. இதன் அர்த்தம் மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் சூழ்நிலைகள் மற்றும் அனுபவங்களின் மீது கட்டுப்பாட்டை தாம் கொண்டிருப்பதாக மக்கள் எவ்வளவு உறுதியாக நம்புகிறார்கள் என்பதைக் குறிக்கும் உளவியல் கருத்து. இதன் படி தமக்கு நடக்கும் வாழ்க்கைச் சம்பவங்களுக்கு புறக்காரணிகள் தான் காரணம் என்றோ அல்லது தன்னுடைய சொந்த பலவீனம் தான் காரணம் என்றோ காரணப்படுத்துவதைக் குறிக்கும் உளவியல் கோட்பாடு இது.
உளவியல் ஆரோக்கியம் என்பது ஒரு பிரச்சனைக்குரிய தீர்வினை தான் வெளிக்காரணிகளில் செல்வாக்குச் செலுத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் எப்படியும் கொண்டு வருவேன் என்ற நிலை. 
யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு எத்தகைய வெளிக்காரணிகளை எம்மால் கட்டுப்படுத்த முடியும், எத்தகைய வெளிக்காரணிகளை எம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றால் எனது அகக்காரணியை மேம்படுத்துவதன் மூலம் சூழ்நிலையை மாற்றலாம் என்று சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும். 
கற்பித்தலில் மாணவர்களிடையே இந்த locus of control எப்படி இருக்கிறது என்ற புரிதல் அவசியம்! எடுத்ததிற்கெல்லாம் வெளியே குறி காணும் மனப்பாங்கு உடையவர்களை உத்வேகப்படுத்தி கற்றலில் ஈடுபடுத்துவது கடினம்.

பாடசாலையில் ஆற்றிய உரையின் தொகுப்பு

30-ஜூன்-2023 - வெள்ளிக்கிழமை - மாத்தளை இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்க செம்மை வடிவம். நிகழ்ச்சி கலந்துரையாடல் வடிவில் உற்சாகமாக அமைந்திருந்தது. பதிவு நான் கூறிய முக்கிய கருத்துக்களின் தொகுப்பாகும். 
நிகழ்ச்சி அழைப்பு மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் - Forum For Tamil Graduates of Matale
ஏற்பாடு பாடசாலை நிர்வாகம்
******************************************
அன்பான மாணவச் செல்வங்களே, 
கற்றல் பற்றி கற்க இங்கு கூடியிருக்கிறோம்; 
கற்றலில் நீங்க பாவிக்கும் உறுப்புகள் என்ன? 
செவி - கண்
செவிகளால் கேட்டு கற்றலை ஆரம்பிக்கிறோம்; ஆசிரியர் வகுப்பில் பாடம் நடாத்தும் போது எமது செவிகள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்;
நாம் எப்போது முறையாகக் கேட்போம்; கவனிக்கும் போது! ஆகவே கவனமாக கேட்டால் மாத்திரமே கற்றல் நிகழும்! 
எனக்கு முன்னர் அதிபர் உரையாற்றினார். அதிபர் கூறிய விடயத்தை கவனமாக கேட்டவர்கள் கையை உயர்த்துங்கள்! பலரும் உயர்த்தினர்! 
யாருக்கு அதிபர் கூறிய விடயத்தைச் மீண்டும் சொல்ல முடியும்! 
உடனே ஒரு மாணவன் எழுந்து அதிபரின் உரையை சுருக்கமாக அழகாகக் கூறினார். 
நல்லது, இப்போது கவனம் எப்படி வரும்?
கவனம் விருப்பம் இருந்தால் வரும்! நாம் விருப்பமுடைய விஷயங்களைக் கவனிக்கிறோம் அல்லவா? இதை நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா? 
ஆகவே கற்றலின் முதல் படி:
ஆசிரியர் கூறுவதைக் கவனமாக கேட்டல்
கவனமாகக் கேட்க வேண்டும் என்றால் நாம் ஒவ்வொரு பாடத்திலும் விருப்பத்தை உண்டு பண்ண வேண்டும். 
எப்படி ஒவ்வொரு பாடத்திலும் எமக்கு விருப்பத்தை உண்டுபண்ணுவது? 
அதற்கு குறித்த பாடத்தை கற்பதால் எனக்கு என்ன நன்மை என்பதை உணர்ந்துகொள்வதால் எமக்கு விருப்பம் உண்டாகும்;
தமிழ் மொழியைப் படித்தால் அதில் ஆயிரக்கணக்கான பழமையான கலாச்சாரம், பண்பாடு இவற்றை நாம் அறிந்துகொண்டு மனதிற்கு மகிழ்ச்சியும் சந்தோஷமும் அறிவும் உண்டாகும். 
சிங்கள மொழியைப் படித்தால் எமது நாட்டில் எம்முடன் வாழும் சிங்கள சகோதரகளுடன் அன்னியோன்யமாக பழக முடியும்; இணைந்து வேலை செய்ய முடியும். 
ஆங்கிலம் படித்தால் உலகில் பெரும்பகுதிக்குச் சென்று உயர்கல்வி கற்க முடியும், தொழில் செய்ய முடியும். 
இதைப் போல் ஒவ்வொரு பாடமும் எம்மை குறித்த துறை சார்ந்த அறிவினைத் தந்து எம்மை இந்த உலகில் முழுமையுள்ளவர்களாக ஆக்கும். 
இப்படி காதால் கேட்டு மனதில் விருப்பத்துடன் கவனமாக கற்றதை மீட்க நாம் பயன் படுத்தும் இன்னுமொரு உறுப்பு கண்கள்! 
கண்களால் நாம் வாசித்து அறிவினைப் பெறுகிறோம்; வாசிப்பது நமது மனதில் நிற்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு முறை இருக்கிறது; 
ஒரு பாடத்தை மூன்று முறை கட்டாயம் வாசிக்க வேண்டும்;
முதலாவது முறை வாசிக்கும் போது அந்தப் பாடம் என்ன சொல்ல வருகிறது என்பதை கவனித்து வாசிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு புரிதலை நாம் பெற்றிருக்க வேண்டும்,
இரண்டாவது முறை நான் புரிந்துகொண்டது சரியா என்பதை அவதானித்து வாசிக்க வேண்டும். இரண்டாவது வாசிப்பில் நான் பாடத்தில் எதையும் விடவில்லை என்பதை உறுதிப்படுத்தி வாசிக்க வேண்டும். 
மூன்றாவது முறை ஞாபகத்தில் ஏற்றிக்கொள்ள வாசிக்க வேண்டும். 
இந்த மூன்று வாசிப்புகளும் முடிந்த பின்னர் குறித்த பாடத்திற்குரிய கேள்விகளைச் செய்து எவ்வளவு பாடத்தை என்னால் கிரக்கிக்க முடிந்திருக்கிறது என்பதை நாமே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 
இப்போது கண்களையும் கற்பதற்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டோம். 
எத்தனை பேரிடம் கணனி இருக்கீறது? கணனியில் நீங்கள் தகுந்த தேடலைச் செய்வதன் மூலம் எதையும் சுயமாக கற்க முடியும். 
சரி நான் இன்று உங்களுடன் உரையாட வந்திருப்பது விஞ் ஞானக் கல்வியில் உங்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவதற்காக? 
அறிவியல் அல்லது விஞ் ஞானம் என்பது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது
உயிரங்கிகளைப் பற்றிய படிப்பு உயிரியல் எனப்படும்
இரசாயனத்தைப் பற்றிய படிப்பு இரசாயனவியல் எனப்படும்
பௌதீக உலகின் சக்திகள், இயக்கம் பற்றிய படிப்பு பௌதீகவியல் எனப்படும். 
இந்த மூன்று துறைகளையும் ஒருங்கே சேர்த்து நாம் விஞ்ஞானம் அல்லது அறிவியல் என்று சொல்லுவோம். 
இந்த மாணவர் குழுவில் ஆசிரியரை, பெற்றோரை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு அடம்பிடிக்கும் மாணவர்கள் கையை உயர்த்துங்கள்? 
சிலர் கையை உயர்த்தாமல் நல்ல பிள்ளைகள் போல் இருக்கிறார்கள்; உண்மையில் கேள்விக்கு மேல் கேள்வி கேட்பவர்களுக்கு விஞ் ஞான கல்வி இலகுவாக வரும். 
யாருக்கு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம், ஊக்கம் கேள்வி இருக்கீறதோ அவர்களுக்கு அறிவிய உகந்த துறை. 
அறிவியல் கல்வி கற்றால் பலவிதமான தொழில்கள் இருக்கிறது; எல்லோருக்கும் தெரிந்த மருத்துவன், பொறியியலாளர் தொடங்கி நீங்கள் விரும்பி விளையாடும் கிரிக்கட், விளையாட்டுகளுக்கு கூட அறிவியல் நன் கு தெரிந்திருக்க வேண்டும். 
வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கினை நிர்ணயித்தல் அவசியம்;
கல்விக்கு இலக்கினை நிர்ணயித்துக்கொண்டு இந்த பாடசாலை வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்!

Saturday, July 01, 2023

விஞ்ஞானப் பாடத்திற்கு மாணவர்களை ஆர்வமுறச் செய்வது தொடர்பான கலந்துரையாடல்

இன்று நான் கற்ற பாடசாலை மாத்தளை இந்துக் கல்லூரியின் விஞ்ஞானப் பாடத்திற்கு மாணவர்களை ஆர்வமுறச் செய்வது தொடர்பான பிரச்சனைகள் தொடர்பான அதிபர், ஆசிரியர்களுடனான ஒரு சிறிய கலந்துரையாடல்.
Dr. Nishānthan Ganeshan நீண்ட காலத்திற்கு பிறகு தனது வேலைப்பளுக்களுக்கு மத்தியில் மாத்தளை வந்திருந்தார். மாத்தளை தமிழ் பட்டதாரி ஒன்றியத்தின் விஞ்ஞானப் பட்டதாரிகளுடைய பங்களிப்புடன் பாடசாலையில் கல்வி வளர்ச்சியில் எப்படி அதிபருக்கும், ஆசிரியர்களுக்கும் உதவமுடியும் என்பதைப் பற்றி உரையாடினார். 
அறிவியல் சிந்தனையுள்ள ஒரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவது என்பது ஒரு தலைமுறை செயற்பாடு! மிகுந்த பொறுமையுடன் நீண்டு உழைக்க வேண்டிய பணி! மாத்தளையைப் பொறுத்த வரையில் விஞ் ஞானப் பட்டதாரிகள் ஆசிரியத் தொழிலிற்கு வருவது மிக மிகக்குறைவு! ஆசிரியப் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்! 
ஆசிரியர்களின் பணிச்சுமையை எப்படி டிஜிட்டல் கல்வி முறை மூலம், பட்டதாரி மாணவர்களின் மீட்டல் பயிற்சி வகுப்புகள் மூலம் உதவி செய்து குறைத்து வினைத்திறனான கற்றல் சூழலை உருவாக்கலாம் என்ற யோசனைகளும் உரையாடப்பட்டது. 

Friday, June 30, 2023

கஞ்சி வைத்தியம்

அண்மையில் ஒரு சம்பவம்
ஒரு மாணவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு!
அண்ணா, சரியான வயிற்றுக்குத்து தாங்க முடியாம ஹொஸ்பிட்டலில் அட்மிட் ஆகிட்டேன்; என்ன செய்வது என்றார்.
தம்பி, இனி வேறென்ன செய்வது, வைத்தியர் தரும் ஆலோசனையைப் பின்பற்றி நடவுங்கள்; எப்போதும் இரட்டைத் தோணியில் கால்வைக்கக் கூடாது! பொறுமையாக எல்லா செக்கப்பும் முடித்த பின்னர் ஆலோசிப்போம் என்றேன். 
தம்பி கொஞ்சம் மெத்தப் படித்தவர்; பெரிய ஆராய்ச்சிப் பதவியில் இருப்பவர்; இந்த கூகுள் தந்த கோதாரி அறிவில் தனக்கு வயிற்றில ஏதோ பெரிய பிரச்சனை என்று மனப்பயம்! 
அடுத்த நாள் மாலை மீண்டும் அழைப்பு கடைசிப் பரிசோதனையும் முடிந்துவிட்டது; அறிக்கைகள் எல்லாம் பார்த்து ஒரு பிரச்சனையும் இல்லை டாக்டர் சொல்லிவிட்டார் வீட்ட போகப்போகிறேன்; ஆனால் வயிற்றில் வலி இருக்கிறது என்றார். 
சரி இனி நமது ஆலோசனையை ஆரம்பிப்போம் என்றேன்! 
இப்போதிருந்து சாப்பாடு கஞ்சி, இஞ்சி, வெள்ளைப்பூடு, பெருஞ்சீரகம், சீரகம், பத்து மிளகு போட்டு அளவா உப்பு போட்டு கஞ்சி மூன்று நேரம்; நல்லா தண்ணி குடிக்கோணும்! 
இவ்வளவுதான் மருந்து! 
அடுத்த நாள் சற்று வலி குறைந்திருக்கிறது; ஒழுங்காக மலம் செல்லத்தொடங்கியிருக்கிறது. 
நல்லது இன்று நாளைக்கும் இதே இதே மாதிரி கஞ்சியே சாப்பிடுங்கோ! 
மருந்தும் விருந்தும் மூன்று நாட்களுக்கு! 
சரி அண்ணா! 
இன்று "அண்ணா, பூரணமாக குணமாகிவிட்டது"
நான் - எனது consultation fee நீங்கள் வைத்தியசாலைக்கு கட்டியதன் இரண்டு மடங்கு அனுப்பி வையுங்கோ!
   
நீதி:
எந்தப் பிரச்சனைக்கும் எடுத்தவுடன் முதலில் பெரிதாக பயப்படக்கூடாது; எளிமையாகச் சிந்தித்து தைரியமாக அணுக வேண்டும். 
உடல் பற்றிய அடிப்படை அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும்; அப்படி இல்லாவிட்டால் நல்லா சம்பாதித்து ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும். 
குறிப்பு: 
மேற்குறித்த வைத்திய ஆலோசனை சொல்வதற்கு நான் தகுதி பெற்ற அனுபவமுள்ள பதிவு பெற்ற சித்தாயுள் வேத மருத்துவன். 
மேற்குறிப்பிட்ட பதிவு கருத்துச் சொல்ல சிலேடை அணியுடன் சொல்லப்பட்டது; இதை வைத்திய ஆலோசனை என்று எடுத்துக்கொண்டு எவரும் உங்கள் வயிற்றுவலிக்கு அதிமேதாவி வேலை பார்த்தால் அதற்கு கொம்பனி பொறுப்பாகாது.

அகத்திய மகரிஷி சௌமிய சாகரம்

அகத்திய மகரிஷி சௌமிய சாகரம் எனும் நூலில் மிக அழகிய முறையில் ஆறாதார சாதனைகளை வகுத்து தந்துள்ளார்.
இவற்றை அனைவரும் பயிற்சி செய்யும் முறைகள் சிருஷ்டி தனது வகுப்பின் மூலம் வழிகாட்டி வருகிறது.
வரும் குருப்பூர்ணிமா அன்று தொடங்கி 10 நாட்கள் நிகர் நிலையாக இந்த தியான சாதனை வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ள விரும்பினால் +94742837401 text message மாத்திரம் அனுப்பவும். அழைக்க வேண்டாம்.
முதலாவது மூலாதார சாதனை:
இதன் பயனாக அகத்திய மகரிஷி கூறுவது
- பிராணகலை சுத்தி எனப்படும் நாடிகள் சுத்தி
- உடல் உறுதி, ஆசன சித்தி
- உடல் ஆரோக்கியம்
03ம் திகதி ஜூலை தொடங்கி 13ம் திகதி 10 நாட்கள் அதிகாலை 04:30 - 05:00 IST மணி வரையுள்ள பிரம்ம முகூர்ந்த நேரம் சாதனை நடைபெறும்.
ஆர்வமுள்ளவர்கள் இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும். 
https://chat.whatsapp.com/KCr4exvTsxsLA2B7Ls8gw0

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...