குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 31, 2021

ஆற்றல் மிக்க இளையோர் - 01

வாழ்த்துக்கள் Dr Nishānthan Ganeshan

இந்தப் பதிவு நிசாந்தனை ஒரு PhD பட்டம் முடிக்கும் பத்துடன் ஒன்று பதினொன்றாக நினைக்கக் கூடாது என்பதும் நிசாந்தனின் பல்வேறுபட்ட ஆளுமையைப் புரிந்துக் கொள்வதற்காகவும் பகிர்ந்துக் கொள்கிறேன். 

இதன் நோக்கம் நிசாந்தனின் கல்விச் சாதனை மலையக மாணவர்கள் அனைவருக்கும் ஒரு inspiration. அவருடைய பாடசாலை வாழ்க்கை தொடக்கம் PhD வரையிலான பயணத்தை ஒரு நூலாக எழுதச் சொல்லியிருக்கிறேன். அவரை அவரது பாடசாலை வாழ்க்கையில் சூழலியல் பாடம் படிப்பிக்கும் போது (அப்போது நான் பல்கலைக்கழக மாணவன்) நான் inspire பண்ணியிருக்கிறேன் என்பதும் பல ஆண்டுகாலம் கழித்து என்னுடன் வேலை செய்யும் போது அவர் எனக்குச் சொன்ன செய்தி! 

நிசாந்தன் தன்னுடைய PhD இரண்டாவது ஆண்டில் எனது பயணத் தோழனாக இணைந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாத்தளையில் காரில் தொடங்கும் பயணம் யூனியன் ப்ளேஸின் எனது அலுவலகத்திற்கு அருகில் முடியும். அது போல் வெள்ளிக்கிழமை மறுதலை! கிட்டத்தட்ட 08 மணி நேரம் வாரத்திற்கு உரையாடல்! 

இருவருமாக மாத்தளையின் கல்வி வளர்ச்சி, எப்படி அறிவியல் ஆய்வு போன்றவற்றில் இன்னும் பலரை உருவாக்கலாம், கல்விசார் சமூகம், அரசியல், சமூகப்பிரச்சனை, நிர்வாகம், தத்துவம், ஆன்மீகம் என்று பலதும் கலந்து சுவாரசியமாக உரையாடல் செல்லும். 

PhD முடிக்கும் தருவாயில் எனது இயற்கை விவசாய மாதிரித்திட்டத்தின் ஆய்வாளராக இணைந்துகொண்டார். நிசாந்தன் ஒரு நீரியல் வள ஆய்வாளர். எனது திட்டம் முழுமையாக தாவரங்கள், மண், மண்புழு, பூச்சிகள் போன்றவற்றின் அறிவியல் அடிப்படையும் அவற்றைக்கொண்டு உற்பத்திச் செய்து அதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்பதும் பற்றியது! நிசாந்தனிடமிருந்தது செயலூக்கம், அறிவியல் முறைச் சிந்தனை, பொறுமை என்பவை மாத்திரமே! மேலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். யானை, சிறுத்தை, கரடி, விஷப்பாம்பு என்று திட்டத்திற்கு தேர்ந்தெடுத்த இடம் படுவில்லங்கமான இடம்! இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு வேலைசெய்தார். 

மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் நிசாந்தன், தட்சணேஷ் காந் மற்றும் சில அவர்களது நண்பர்களது எண்ணக்கரு! இதனை வழிகாட்டும் பொறுப்பையும் என்னிடம் கேட்டார்கள். இந்த ஒன்றியம் பலருக்கு உத்வேகம் அளித்து நாமும் இதைப்போன்று செய்ய வேண்டும் என்ற ஒன்றாக இன்று மாறியிருக்கிறது. 

மற்றவர்களும் எம்மைப் போன்று இப்படிச் செயல் புரிய தூண்ட வேண்டும் என்ற இந்த உத்தியை நாம் இருவரும் திட்டமிட்டே செய்தோம். எமது சமூகத்தில் கல்வியினது அறிவினையும் முதன்மைப்படுத்த பலரையும் தூண்ட ஒருவழியாக ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைந்தது! இதன் செயற்பாடு ஈ கல்வியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பினை தேடித்தந்தது. 

என்னைப் பொறுத்த வரையில் மிக இளம் வயதில் தனது PhD இனை முடித்து ஒரு ஆய்வறிஞராக, விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கும் நிசாந்தன் தன்னைப் போன்று பலரை உருவாக்குவார் என்பது எனது நம்பிக்கை!


ஆற்றல் மிக்க இளையோர் - 01

வாழ்த்துக்கள் Dr Nishānthan Ganeshan

இந்தப்பதிவு நிசாந்தனை ஒரு PhD பட்டம் முடிக்கும் பத்துடன் ஒன்று பதினொன்றாக நினைக்கக் கூடாது என்பதும் நிசாந்தனின் பல்வேறுபட்ட ஆளுமையைப் புரிந்துகொள்வதற்காகவும் பகிர்ந்துகொள்கிறேன். 

இதன் நோக்கம் நிசாந்தனின் கல்விச் சாதனை மலையக மாணவர்கள் அனைவருக்கும் ஒரு inspiration. அவருடைய பாடசாலை வாழ்க்கை தொடக்கம் PhD வரையிலான பயணத்தை ஒரு நூலாக எழுதச் சொல்லியிருக்கிறேன். அவரை அவரது பாடசாலை வாழ்க்கையில் சூழலியல் பாடம் படிப்பிக்கும்போது (அப்போது நான் பல்கலைக்கழக மாணவன்) நான் inspire பண்ணியிருக்கிறேன் என்பதும் பல ஆண்டுகாலம் கழித்து என்னுடன் வேலை செய்யும்போது அவர் எனக்குச் சொன்ன செய்தி! 

நிசாந்தன் தன்னுடைய PhD இரண்டாவது ஆண்டில் எனது பயணத்தோழனாக இணைந்து கொண்டார். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாத்தளையில் காரில் தொடங்கும் பயணம் யூனியன் ப்ளேஸின் எனது அலுவலகத்திற்கு அருகில் முடியும். அதுபோல் வெள்ளிக்கிழமை மறுதலை! கிட்டத்தட்ட 08 மணி நேரம் வாரத்திற்கு உரையாடல்! 

இருவருமாக மாத்தளையின் கல்வி வளர்ச்சி, எப்படி அறிவியல் ஆய்வு போன்றவற்றில் இன்னும் பலரை உருவாக்கலாம், கல்விசார் சமூகம், அரசியல், சமூகப்பிரச்சனை, நிர்வாகம், தத்துவம், ஆன்மீகம் என்று பலதும் கலந்து சுவாரசியமாக உரையாடல் செல்லும். 

PhD முடிக்கும் தருவாயில் எனது இயற்கை விவசாய மாதிரித்திட்டத்தின் ஆய்வாளராக இணைந்துகொண்டார். நிசாந்தன் ஒரு நீரியல் வள ஆய்வாளர். எனது திட்டம் முழுமையாக தாவரங்கள், மண், மண்புழு, பூச்சிகள் போன்றவற்றின் அறிவியல் அடிப்படையும் அவற்றைக்கொண்டு உற்பத்திச் செய்து அதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்பதும் பற்றியது! நிசாந்தனிடமிருந்தது செயலூக்கம், அறிவியல் முறைச் சிந்தனை, பொறுமை என்பவை மாத்திரமே! மேலும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். யானை, சிறுத்தை, கரடி, விஷப்பாம்பு என்று திட்டத்திற்கு தேர்ந்தெடுத்த இடம் படுவில்லங்கமான இடம்! இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் சவால்களை எதிர்கொண்டு வேலைசெய்தார். 

மாத்தளைத் தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம் நிசாந்தன், தட்சணேஷ் காந் மற்றும் சில அவர்களது நண்பர்களது எண்ணக்கரு! இதனை வழிகாட்டும் பொறுப்பையும் என்னிடம் கேட்டார்கள். இந்த ஒன்றியம் பலருக்கு உத்வேகம் அளித்து நாமும் இதைப்போன்று செய்ய வேண்டும் என்ற ஒன்றாக இன்று மாறியிருக்கிறது. 

மற்றவர்களும் எம்மைப் போன்று இப்படிச் செயல் புரிய தூண்ட வேண்டும் என்ற இந்த உத்தியை நாம் இருவரும் திட்டமிட்டே செய்தோம். எமது சமூகத்தில் கல்வியினது அறிவினையும் முதன்மைப்படுத்த பலரையும் தூண்ட ஒருவழியாக ஒன்றியத்தின் செயற்பாடுகள் அமைந்தது! இதன் செயற்பாடு ஈ கல்வியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பினை தேடித்தந்தது. 

என்னைப் பொறுத்த வரையில் மிக இளம் வயதில் தனது PhD இனை முடித்து ஒரு ஆய்வறிஞராக, விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கும் நிசாந்தன் தன்னைப் போன்று பலரை உருவாக்குவார் என்பது எனது நம்பிக்கை!


Monday, December 27, 2021

தலைப்பு இல்லை

All Life is Yoga 

The secret of success in yoga is to regard it:

Not as one of the aims to be pursued in life, but as the one and only aim, Not as an important part of life but as the whole of life!


தலைப்பு இல்லை

All Life is Yoga 

The secret of success in yoga is to regard it:

Not as one of the aims to be pursued in life, but as the one and only aim, Not as an important part of life but as the whole of life!


தலைப்பு இல்லை

Hatha Yoga Pradipika in the light of Tamil Siddhas - English Classes 2022
if you like to join please comment below to get the details

தலைப்பு இல்லை

Hatha Yoga Pradipika in the light of Tamil Siddhas - English Classes 2022

if you like to join please comment below to get the details


Saturday, December 25, 2021

தலைப்பு இல்லை

Santa is available with white beard for today Christmas party! This is a version of Santa created by my daughter! 

Wish your happy Christmas   and enjoy the world holiday seasons! 

Let's spread the love and harmony


Friday, December 24, 2021

தலைப்பு இல்லை

சாணக்கிய நீதியில் வரும் ஒரு சுலோகம் இப்படிச் சொல்கிறது; ஒருவனது அக உறவினர்களான - மனப் பண்புகள் எப்படி இருக்க வேண்டும். 
சத்தியம் எனது தாய்; 
ஞானம் எனது தந்தை; 
தருமம் எனது சகோதரன்; 
கருணை எனது தோழன்; 
அமைதி எனது மனைவி; 
மன்னித்தல் எனது மகன்; 
இந்த ஆறு நற்பண்புகளே 
எனது உறவுகள்.
நாம் தாயின் வயிற்றிலுருந்து வளர்கிறோம்; தந்தையின் வளர்ப்பில் ஞானத்தைப் பெறுகிறோம்; தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றபடி சகோதரன் இருக்கும் பிணைப்பில் வலிமை பெறுகிறோம். தோள் கொடுக்கும் தோழன் இருந்தால் வாழ்வு சிறக்கிறது. 
இறுதியாக மனதைப் புரிந்துக் கொள்ளும் மனைவி/கணவன் வாய்த்தால் வாழ்க்கை அமைதியாக இன்பமாகிறது. 
இதுப் போல் ஒருவனின் மன ஆளுமை வளர எது உண்மை/ சத்தியம் என அறிதல் அவசியம். இதுபற்றி வள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சத் ஆகிய உண்மை பற்றிய தெளிவு சத்தியம். 
ஞானம் என்பது தான் யார் என்பது பற்றிய தெளிவு. 
தர்மம் என்றால் எம்மை பிணைப்பது என்று பொருள்; தர்மம் என்பதன் அடிச்சொல் த்ர என்ற சமஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் அச்சாணி; எது எம்மை பிணைக்கிறதோ அது தர்மம். 
ஒருவன் உண்மையை அறிந்து, தன்னை அறிந்து, அனைவருக்கும் பயன்பட தன்னை சமூகத்துடன் பிணைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தர்மத்தை சரியாக உணர வேண்டும். 
தர்மம் சரியாகத் தெரியாதவன் தன்னை மற்றவர்களுடன் பிணைத்துக் கொள்ள மாட்டான். 
உதாரணமாக ஆசிரியன் என்ற தர்மத்தை ஏற்றால் மாணவனை ஆசு என்ற மாசு நீக்கி தெளிவுப் பெற வைப்பதே கடமை என்பதை உணர்வது தர்மம். 
தர்மம் தெரிந்தாலும் நான், எனக்கு என்ற சுயநலப் புள்ளியில் இருந்து வெளி வந்து செயலாற்ற கருணை என்ற நண்பன் தேவை. நட்பு என்பது உயர்வு, தாழ்வு என்ற அந்தஸ்து பார்க்காது. அதுப் போல் கருணை என்ற குணம் எதையும் எதிர்பார்க்காது உதவி செய்யும் குணம். 
ஒருவன் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ அவனது வாழ்க்கைத் துணை அமைதியான மனம் படைத்தவராக இருத்தல் அவசியம். குழப்பம் நிறைந்த மனம், வாழ்க்கையை சரியான திசையில் செல்ல விடாது. 
பிரச்சனைகள் எம்மை விட்டு நீங்க வேண்டும் என்றால் குரோதம் கொள்ளாமல் மன்னிக்கும் பண்பு வேண்டும். எப்பேர்பட்ட கோபக்காரனாக இருந்தாலும் பிள்ளைகளுடைய தவறுகளை மன்னிக்கும் மனமுடையவனாக இருப்பது மனிதனின் இயல்பு. மன்னிக்கும் மனம் உடைய மாந்தர்க்கு வாழ்க்கை உளப்பிரச்சனை அற்றதாக இருக்கும். 
ஆக இந்த ஆறு பண்புகளும் மனிதன் தன்னுடைய ஆளுமையை வளர்க்க அவசியமானவை என்பதை இந்த உவமானத்தால் கூறியிருக்கிறார் என்று கொள்ளலாம்.

தலைப்பு இல்லை

சாணக்கிய நீதியில் வரும் ஒரு சுலோகம் இப்படிச் சொல்கிறது; ஒருவனது அக உறவினர்களான - மனப்பண்புகள் எப்படி இருக்க வேண்டும். 

சத்தியம் எனது தாய்; 

ஞானம் எனது தந்தை; 

தருமம் எனது சகோதரன்; 

கருணை எனது தோழன்; 

அமைதி எனது மனைவி; 

மன்னித்தல் எனது மகன்; 

இந்த ஆறு நற்பண்புகளே 

எனது உறவுகள்.

நாம் தாயின் வயிற்றிலுருந்து வளர்கிறோம்; தந்தையின் வளர்ப்பில் ஞானத்தைப் பெறுகிறோம்; தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றபடி சகோதரன் இருக்கும் பிணைப்பில் வலிமை பெறுகிறோம். தோள்கொடுக்கும் தோழன் இருந்தால் வாழ்வு சிறக்கிறது. 

இறுதியாக மனதைப் புரிந்துகொள்ளும் மனைவி/கணவன் வாய்த்தால் வாழ்க்கை அமைதியாக இன்பமாகிறது. 

இதுபோல் ஒருவனின் மன ஆளுமை வளர எது உண்மை/ சத்தியம் என அறிதல் அவசியம். இதுபற்றி வள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சத் ஆகிய உண்மை பற்றிய தெளிவு சத்தியம். 

ஞானம் என்பது தான் யார் என்பது பற்றிய தெளிவு. 

தர்மம் என்றால் எம்மை பிணைப்பது என்று பொருள்; தர்மம் என்பதன் அடிச்சொல் த்ர என்ற சமஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் அச்சாணி; எது எம்மை பிணைக்கிறதோ அது தர்மம். 

ஒருவன் உண்மையை அறிந்து, தன்னை அறிந்து, அனைவருக்கும் பயன்பட தன்னை சமூகத்துடன் பிணைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தர்மத்தை சரியாக உணர வேண்டும். 

தர்மம் சரியாகத் தெரியாதவன் தன்னை மற்றவர்களுடன் பிணைத்துக்கொள்ள மாட்டான். 

உதாரணமாக ஆசிரியன் என்ற தர்மத்தை ஏற்றால் மாணவனை ஆசு என்ற மாசு நீக்கி தெளிவுபெற வைப்பதே கடமை என்பதை உணர்வது தர்மம். 

தர்மம் தெரிந்தாலும் நான், எனக்கு என்ற சுயநலப்புள்ளியில் இருந்து வெளிவந்து செயலாற்ற கருணை என்ற நண்பன் தேவை. நட்பு என்பது உயர்வு, தாழ்வு என்ற அந்தஸ்து பார்க்காது. அதுபோல் கருணை என்ற குணம் எதையும் எதிர்பார்க்காது உதவி செய்யும் குணம். 

ஒருவன் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ அவனது வாழ்க்கைத் துணை அமைதியான மனம் படைத்தவராக இருத்தல் அவசியம். குழப்பம் நிறைந்த மனம், வாழ்க்கையை சரியான திசையில் செல்ல விடாது. 

பிரச்சனைகள் எம்மை விட்டு நீங்கவேண்டும் என்றால் குரோதம் கொள்ளாமல் மன்னிக்கும் பண்பு வேண்டும். எப்பேர்பட்ட கோபக்காரனாக இருந்தாலும் பிள்ளைகளுடைய தவறுகளை மன்னிக்கும் மனமுடையவனாக இருப்பது மனிதனின் இயல்பு. மன்னிக்கும் மனம் உடைய மாந்தர்க்கு வாழ்க்கை உளப்பிரச்சனை அற்றதாக இருக்கும். 

ஆக இந்த ஆறுபண்புகளும் மனிதன் தன்னுடைய ஆளுமையை வளர்க்க அவசியமானவை என்பதை இந்த உவமானத்தால் கூறியிருக்கிறார் என்று கொள்ளலாம்.


Wednesday, December 22, 2021

தலைப்பு இல்லை

I did a small experiment with my students whom I teach, by posting the below quote and ask to tell their opinion; actually, I don't know this statement was said by Elon Musk or not; however, this helped me to open up their view. 

Definition of Intelligence is the ability to learn, emotional knowledge, creativity, and adaptation to meet the demands of the environment effectively.

All the degree holders are actually meet their demands of exams and obtain the degree; so they are intelligent, but the problem is how they do consistently after their degree and contribute to developing the social, economical, political systems of the world. 

here are the comments: 

******************************************************************

Yeah that is true sir if we just do our education just for marks, we can get a good degree but if cant apply relevant points to relevant consequences that act as an educated fool

*****************************************************************

Most people are mistaken in thinking that having a degree makes perfect. But there are many people and entrepreneurs who have done extraordinary things without even having a degree. And also we are all different and each of us must make our own way in life

******************************************************

Education not just fulfills all the things of us. To deal with society in a greater way we need to get many more experiences as well as need to learn simple tricks.

*******************************************************************

Absolutely true sir, Due to the current education system all compete with each other, and as a result, humanity and other human qualities are lost. There are persons who completed Master and can't work in a company successfully without the sense of human. They have no interaction among their co-workers. So my opinion is everyone has to balance their educational and social life.

**************************************************

I agree education and intelligence both are different. To succeed in our life, we must not need a degree. But a person who has a bachelor's degree not be an idiot. There are some qualifications for a degree.

***********************************************************************


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...