குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, August 15, 2019

தலைப்பு இல்லை

இன்று பழைய கோப்புக்களைக் கிளறியபோது கிடைத்த எனது பல்கலைக்கழக குறிப்புகள்! சூழலியல் விஞ்ஞானம்! - Environmental Science

தலைப்பு இல்லை

இன்று ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த நாள்! 
அவர் கூறிய யோக சாதகனுக்குத் தேவையான நான்கு பண்புகள்!
1) தெளிந்த அறிவுடன் கூடிய அகப்பார்வை
2) ஆணவத்தினை அடக்கிய மனம்
3) அன்பு
4) குற்றமற்ற, தன்னலமற்று செயல் புரியும் பண்பு 
இந்த நான்குமே யோகத்தேரின் நான்கு சக்கரங்கள்! 
இந்த நான்கு சக்கரங்களையும் கொண்ட சாதகன் யோகப்பாதையில் ஆபத்தின்றி பயணிப்பான்! 
(09/09/1947)
ஸ்ரீ அரவிந்தரின் இந்திய தேசம் என்பதன் கனவு உலக மக்களின் நன்மை சார்ந்ததாக இருந்தது! உலகத்தின் பலம்மிக்க நாடுகளின் கலாச்சாரம் உலக கலாச்சாரமாக மாறுவதே உலகின் இயல்பு! உலகை ஆண்ட பிரித்தானியர்களின் கலாச்சாரம் இப்போது உலக கலாச்சாரமாக இருக்கிறது. அதுபோல் பாரத தேசம் தனது பழம்பெரும் பெருமையான ரிஷிகளின் ஆன்ம ஞானத்தில் மீண்டும் மறுமலர்ச்சியடைந்து உலகின் பலமிக்க நாடாக மாறும்போது மனிதகுலம் முழுவதும் அந்த ஞானத்தை நோக்கிப் பயணிக்கும் பக்குவத்தைப் பெறும் என்று அகப்பார்வையால் உணர்ந்து, அந்த இலட்சியத்திற்காக தனது யோக சாதனையையும் செய்தார்! யோகஸாதனையின் இரகசியங்கள் முழுவதும் இந்திய மொழிகளில் இருந்தால் அது உலகமக்கள் அனைவருக்கும் பயன்படாது என்பதால் தனது அனுபவத்தை ஸாவித்ரி காவியமாக உலகப் பொதுமொழியான ஆங்கிலத்தில் எழுதி வைத்தார்! 
இத்தகைய உயரிய இலட்சியம் கொண்ட யோகியின் பிறந்த நாளிலேயே ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது!
இன்று இந்தியாவின் 73வது சுதந்திர தினமும் கூட..

Wednesday, August 14, 2019

தலைப்பு இல்லை

நான் கருடன்

எனது எல்லையை எவரும் அடைய முடியாத உயரம் பறப்பவன்

என்னைவிட பலமானதிடமும் போரிட்டு வெல்லும் வல்லமை உள்ளவன்

பயமற்றவன்! 

நான் கருடன்

இலக்கு எங்கிருந்தாலும் நோக்கும் ஆழப்பார்வை உள்ளவன்!

இலக்குவைத்தால் அதை அடையாமல் என் பயணம் முடியாதவன்!

உயரக்கூடு கட்டுவேன்! என் எதிரி நெருங்கமுன்னர் அறியும் தூரப்பார்வை உள்ளவன்!

அமர்ந்து ஓய்ந்தாலும் கழுத்தை ஆட்டி என்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதை அறியும் விழிப்புணர்வு உள்ளவன் 

நான் கருடன் 

இலட்சியமுள்ளவனிடன் தங்கும் மகாலக்ஷ்மி நாராயணனின் வாகனன்!

இலட்சியமுள்ளவனுக்கு ஆற்றல் தரும் பிராணனின் குறியீடு நான்!

விஷத்தை முறித்து அம்ருத கலசம் தாங்கும் அம்ருதீகரணன்!


தலைப்பு இல்லை

நான் கருடன்!

நான் அற்பர்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை, எப்போதும் உயரப் பறக்கவே விரும்புகிறேன்

எனது விழிகள் அதிக தூரத்தை தெளிவாகப் பார்க்கும் ஆற்றல் உள்ளது!

நான் குப்பைகளை எக்காரணம் கொண்டும் உண்பதில்லை!

புயலை அதிகம் விரும்புபவன், புயலின் அதீத காற்றழுத்தத்தை எனக்குச் சாதகமாக்கி எனது சக்தியை செலவழிக்காமல் சிறகுகளை உயர்த்திப் பறக்கும் வல்லமை உள்ளவன்! 

நான் உன்னை நம்புவதற்கு முன்னர் பரிசோதிப்பேன்!

எனது பிள்ளைகளை சிறுவயதிலேயே வாழ்வதற்கு தகுதியுள்ள பயிற்சி தருவேன்!

எனது சிறகுகள் விழுந்தால் அவை முளைக்கும்வரை, புதுச்சக்தி கிடைக்கும் வரை ஓய்வெடுப்பேன்!

நான் கருடன்!


Tuesday, August 13, 2019

தலைப்பு இல்லை

எமது தோட்டத்து மரக்கறிகளுக்குரிய Brand name ஆக "இயற்கையின் சுவை" என்ற பெயரை பதிவு செய்துள்ளோம். இந்த பெயரிற்குரிய குணத்தை கடந்த நான்கு வார உற்பத்தியில் பெற்றுக் கொண்ட அடிப்படையில் இயற்கை வேளாண்மையில் உற்பத்தி செய்யும் மரக்கறிகளுக்கு தனிச்சுவையும், மணமும் இருக்கும் என்பதை உறுதிபடுத்தியுள்ளோம். 

நாம் பெரிய அளவில் உற்பத்தி செய்ய ஆரம்பிக்கவில்லை என்பதுடன் இது ஒரு ஆய்வு முயற்சி என்பதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவு உற்பத்தியே எம்மிடம் உள்ளது. 

தற்போது நாம் இரண்டு நகர்களுக்கு மாத்திரம் எம்மிடம் உள்ள சுவை மிகுந்த ஊதா கத்தரி வர்க்கம் தருகிறோம். கீழ்வரும் நகரில் வசிப்பவர்கள் எமது hotline இற்கு வாட்ஸப் செய்வதன் மூலம் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

விநியோக நகர்:

யாழ்ப்பாணம்

கொழும்பில் - பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை மாத்திரம், free home delivery உண்டு.

Hotline: +94 76 732 7070

எமது "இயற்கையின் சுவை" மரக்கறிகள் உங்கள் ஆரோக்கிய வாழ்வின் ஆரம்பம்!


Monday, August 12, 2019

தலைப்பு இல்லை

இன்று எமது மலை நாட்டின் பெருந்தோட்ட கிராமம் ஒன்றிற்கு தம்பி நிசாந்தனுடன் மாலை நேர விஜயம்! 

இருவருமாக பெருந்தோட்டக் கிராமங்களில் விவசாயம் சார்ந்த தற்சார்ப்பு பொருளாதாரத்தை எப்படி உருவாக்கலாம் என்ற ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதற்குரிய வழியாக இயற்கை விவசாயம் இருக்கும் என நம்புகிறோம். உழைப்பாளிகளை சிறந்த தற்சார்புள்ள விவசாயிகளாக ஆக்குவது இலகுவாக இருக்கும்.

இன்று நாம் சந்தித்த இளைஞன் A/L மூன்று பாடங்களும் சித்தியடைந்து விட்டு தானாகவே தொழில் செய்ய வேண்டும் என்று விவசாயம் செய்யத்தொடங்கி பீடை கொல்லியின் விலையாலும், உரத்தின் விலையாலும் விவசாயம் கையைச் சுட்டுக்கொள்ள, நட்டமடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் ஏதாவது கூலி வேலை செய்யலாமா என்று எண்ணிக்கொண்டு இருப்பதாகக் கூறினார். இயற்கை விவசாயம் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறோம்! எமது ஆய்வுப்பண்ணைக்கு வந்து பயிற்சி பெற்றுக்கொண்டு அதற்குரிய செலவுகளையும் நாமே ஏற்றுக்கொள்ளலாம் என்றும், செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைச் செய்ய ஆலோசனை கூறியிருக்கிறோம்.


Sunday, August 11, 2019

தலைப்பு இல்லை

இந்த வாரம் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினம்! 

அவரது இறுதிக் கவிதைகளில் ஒன்று Golden light எனப்படும் பொன்மய ஒளியைப் பற்றியது! இதை அகத்திய மகரிஷி தனது சௌமியசாகரத்தில் உடலில் இறைசக்தி ஜோதியாக எப்படி, எங்கே இருக்கிறது என்பது பற்றியும் அது எப்படி உடல் முழுவதும் பரவுகிறது என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். உடலை, மனதை பொன்மய பேரொளியால் நிரப்பி மகாகாரண சரீரம் ஆக்கி செயல் கொள்ளும் நிலை அறிந்தவர்கள் தமிழ் சித்தர்கள்! 

இதை யோகமாக பகுத்து ஆராய்ந்து தெளிவாக ஸாவித்ரி காவியமாக உலகமக்கள் அனைவரும் அறிந்து கொள்வதற்கு ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தர் எழுதி வைத்துள்ளார்! இதை தானும் சாதித்து மனித குலம் முழுவதற்கு கிடைத்தால் மனித குலம் தெய்வ குணத்தாலும் பண்பாலும் மாறும் என்று முயற்சித்தார். அதில் வெற்றியும் பெற்றார்! 

இந்தப் பொன்னிற ஒளி உடலில், மனதில் பிரதிபலித்தால் அவனது ஆன்ம பரிணாமம் உயரும் என்பதே சித்தர்களில் யோகம்! 

இந்தக் கவிதையை 8-8-1938 திகதி எழுதி மீண்டும் 22-3-1944 திருத்தியதாக பதிப்புக் குறிப்பு சொல்கிறது. 

இந்தக் கவிதையை தமிழில் என். வி. பாலு என்பவர் ஸ்ரீ அரவிந்தரின் அக்னிப் பறவை எனும் நூலில் மொழிபெயர்ப்புத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள். 

பொன்மய ஒளி

********************

பொன்மயமாக உள்ள உன் ஒளி எந்தன் மூளை

தன்னுள்ளே கீழிறங்கித் தகவுடன் புகுந்ததாலே

அரையிருள் அறைகளாக இருந்திரும் என்மனந்தான்

நிறை சுடர் கதிவவன் தான் நீள்கரத் தீண்டலாலே

ஒளிமிக உற்றதே போல் உயர் அறிவான சித்தின் 

தளமாக ஒளிரும் வண்ணம் தந்திடும் விடைதான் என்றும்

அமைதியாய் விளக்கிக் கூறும் ஆன்றதோர் ஞானம் பெற்றே

குமைதலில்லாத வண்ணம் குறைகள் தீர்த்திருக்குமன்றே

என்னுடைய குரல் வளைக்குள் எங்கணும் இறங்கிற்றன்றே

உன்னுடைய பொன்மயத்தோர் உயர் ஒளிவறியதே யான

என்சொலும் தேவப் பண்ணாய் இலங்கிடும் என்னென்பேன் நான்!

என்சொலே தெய்வ மாதுவைக் குடித்திட்ட தாலெ நானே

பாடிடும் பாடல் எல்லாம் பரமனின் புகழ் பரப்பும் நாடிடும் நன்றி கீதம் ஆகவே ஒலித்திருக்கும்.

எந்தன் இதயந்தன்னில் இறங்கிய உன்பொன் ஒளியே

உந்தன் நித்தியத்தால் உற்றதோர் தாக்கத்தாலே

வாழ்வதே அமரத் தன்மை வாய்ந்ததாய் ஆயிற்றன்றே!

தாழ்விலாது என்றும் நானே தகுதிறன் பெற்றிப் பாரில் 

நீயுந்தான் அகலாது என்றும் நித்தியமாக நிற்பது ஆயதோர் ஆலயம்மாய் அஃதுரு மாறிற்றன்றே

அதனுடை உணர்வுகள் தாம் அழுத்தமாய் உன்னைச் சுட்டும்

விதமாக வேறொன்றைத்தான் வியக்காமல் இருக்குமன்றே!

எந்தனின் பாதந் தன்னில் பொன்மயமாயிருக்கும் உந்தனின் ஒளியிறந்த அக்கணம் எந்தன் பூமி 

நத்தி நீ விளையாடத்தான் நன் கமை களமாய் நீதான் நித்திய கொலுவீற்றிருக்கும் இருக்கையாய் ஆயிற்றன்றே!


Saturday, August 10, 2019

தலைப்பு இல்லை

நண்பர்களே, 

எமக்கு அனேக நண்பர்கள் நிஜ உலகில் இருப்பதை விட அதிகமாக இந்த கணனி வலைப் பின்னல் உலகில் இருக்கிறார்கள். சிலரை சந்திக்கிறோம், சிலருடன் தொலைபேசியில் உரையாடுகிறோம். சிலருடன் messenger இல் உரையாடுகிறோம். சிலருடன் எந்த உரையாடலும் செய்யாமல் மௌனமாக நட்பு வட்டத்தில் மாத்திரம் இருக்கிறோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பது தெரியாது, ஆகவே புரிதலுக்காக எம்மைப் பற்றிய உங்களுடைய அபிப்பிராயத்தை கீழே Comment ஆக பதிவிடுங்கள். மேலும் என்னிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு நேர்மையான பதிலை தரவிரும்புகிறேன். 

இந்தப் பதிவை நீங்கள் பிரதி செய்து உங்கள் சுவற்றில் பதிவு செய்து கொண்டு அதற்கு கிடைக்கும் பதில்களின் மூலம் உங்களில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றத்தினை மற்றவர்கள் பார்வையிலிருந்து அறிந்து கொள்ள முடியும். எவராவது குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் வரவேற்கப்படுகிறது. இது புரிதலை மேலும் அதிகரிக்கும்! 

எம்மைப் பற்றிய உங்கள் புரிதல் அபிப்பிராயத்தையும், கேட்க விரும்பும் கேள்வியினையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். 

copied and translated via Sai Ramji Thank you!


Friday, August 09, 2019

தலைப்பு இல்லை

நல்லூர் கந்தசுவாமி கோயில்! 

இன்று மாலை ஆராத்தி தரிசனம் முடித்து வெளியே வந்த போது!


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...