Friends from Chennai!
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Wednesday, August 07, 2019
Tuesday, August 06, 2019
தலைப்பு இல்லை
ஆச்சரியம் ஆனால் உண்மை, இந்தியா பாக்கிஸ்தான் பிரிவின் போது மகா யோகி ஸ்ரீ அரவிந்தரிடம் இந்தியா மீண்டும் எப்போது ஒன்றிணையும்? (When do you expect India to be united?”) என்று அன்பர் ஒருவர் கேட்க, அதற்கு ஸ்ரீ அரவிந்தர் கொடுத்த பதில் “India will be reunited. I see it clearly.” { நூல் ஆதாரம்: Kittu Reddy, A Vision Of United India, Pp 167-68}
ஸ்ரீ அரவிந்தரின் கூற்றுப்படி பிரபஞ்சம் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒன்றிணையும் திசையை நோக்கி செலுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே எவரும் தம்மை குறுகிய வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓடமுடியாது! தமது சிறிய வட்டங்களிலிருந்து, அடையாளங்களிலிருந்து வெளிவந்து விரிந்து ஒன்றிணையும் போக்கினையே பிரபஞ்சம் கடைப்பிடிக்கத்தொடங்குகிறது. ஒன்றிணைக்கும் சக்தி பிரபஞ்சத்தில் வேகமாகச் செயற்படுகிறது. இதற்கு எதிரான பிரிவினைவாத சக்திகளின் ஆற்றல் குன்றுகிறது!
இதையே தற்போதைய உலக நடப்புகள் சுட்டிக் காட்டுகிறது! நேற்றைய இந்திய அரசியல் சம்பவம் இதற்கு ஒரு உதாரணம்!
இது தொடர்பான முழுமையான ஆங்கிலக் கட்டுரை முதல் Comment இல்..
தலைப்பு இல்லை
எல்லையற்ற பகராசூர அறிவுப் பசியால் தினம் தினம் குவியும் புத்தகங்கள்!
என்று இந்த போதையிலிருந்து வெளிவரப் போகிறேன் என்று தெரியவில்லை!
வாசிக்கத் தெரியாத இரண்டு வயதில் புத்தகக் கடைக்குள் கூட்டிச் சென்ற போது அம்மாவிற்கு 100/= செலவு வைத்த இந்த புத்தகம் வாங்கும் கெட்ட பழக்கம் இன்று மாதம் பல்லாயிரமாகத் தொடர்கிறது!
குறிப்பு: நான் புத்தகங்கள் எவருக்கும் இரவல் தருவதில்லை, ஆகவே என்னிடம் புத்தகம் பெறும் நோக்கில் எவரும் அணுக வேண்டாம்!
Sunday, August 04, 2019
சித்தர்களின் குணபாடமும் இயற்கை விவசாயமும்
Saturday, August 03, 2019
தலைப்பு இல்லை
இன்று ஆடி பதினெட்டு! கடந்த இரண்டு வாரங்களாக தடைபட்டிருந்த தேவிபுரம் கட்டுரை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது!
இன்றைய வீரகேசரியில் அணுப் பௌதீகவியல் விஞ்ஞானியான Dr. பிரஹலாத சாஸ்திரி எனப்படும் எனது குருநாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதரின் உரைகளை தமிழில் மொழிபெயர்க்கும் பணி!
Friday, August 02, 2019
தலைப்பு இல்லை
Meet our Our Brand Ambassador Mr. Red Rabbit !
Here we are on test market!
who is all ears for your feedback!
இதோ எங்கள் தூதுவர் திருவாளர், சிவப்பு முயலண்ணா!
பொதியிடல் தொடர்பான உங்கள் கருத்துக்களுக்கு செவிமடுக்க பெரிய காதுகளுடன் காத்திருக்கிறார்!
தலைப்பு இல்லை
நேர்காணல் கீழே Nishānthan Ganeshan அவர்கள் தரவேற்றியுள்ளார்.
நன்றி தம்பி Nishānthan Ganeshan, இத்தனை வேலைப்பளுவிற்கு மத்தியிலும் இதை பதிவு செய்து பகிர்ந்தமைக்கு!
Wednesday, July 31, 2019
தலைப்பு இல்லை
அமைச்சரே, தீர்வு நம்மிடம் இருக்கிறது, கேட்பீர்களா?
இந்த காரணத்தினால் தான் இயற்கை வேளாண்மை தகுந்த மாற்றாகிறது.
தலைப்பு இல்லை
நமது இயற்கை விவசாயக் கத்தரியின் சுவை, மணம், தரம் பற்றி கருத்தினை அறிவதற்காக ஒரு சிலருக்கு கொடுத்து வருகிறோம். நல்ல feedback கிடைத்து வருகிறது!
Organic என்பதற்கும் இயற்கை விவசாயம் என்பதற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. Organic என்பது இரசாயன விவசாயம் போன்றே தாவரத்தை மனிதன் இடுபொருள் இட்டு இயற்கைப் பொருட்களால் செயற்கையாக வளர்க்கும் முறை.
இயற்கை விவசாயத்தில் காட்டில் ஒரு இயற்கைச் சூழலில் எப்படி தாவரம் தானே வளர்வதற்கு எம்மால் இயன்ற உதவியைச் செய்வது மட்டும்தான்! ஆகவே செடி தனக்குத்தேவையானதை எடுப்பதற்கு உதவி செய்வது மட்டும் தான் எமது பணி! ஆகவே இப்படி விளைவிக்கப்படும் தாவர உணவுகள் அதிக மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்! இது எமது கத்தரிகளில் நிருபணமாகிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஆடி அமாவசையில் கத்தரிச் சமையல் பற்றி Lavanya Satheeshwaran அக்காவின் கருத்து! நன்றி அக்கா!
***********************************************************************
//என் அருமை தம்பி ஸக்தி சுமன் ஓர் "அறிவியல் விவசாயி".(அது மட்டுமல்ல பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றவர்). அவரது இன்னொரு ஆராய்ச்சியின் வெற்றி தான் நான் இன்று சமைத்த கத்தரிக்காய் புளிக்குழம்பு. எவ்வித இரசாயனப் பொருளையும் பயன்படுத்தாமல் இயற்கை பசளைகளை மட்டும் பயன்படுத்தி பயிர் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன் நான் வெட்டும் ஐந்து கத்தரிக்காயில் மூன்று பூச்சாகவே காணப்படும். இதன் தோற்றத்தை நீங்களே பார்த்திருப்பீர்கள்.
இன்று ஆடி அமாவசை விரதம். என் கணவருக்கு ஆரோக்கியமான, சுவையான கத்தரிக்காய் குழம்பு சமர்பணம். தம்பி ஸக்தி சுமணனுக்கு நன்றிகள்... //
சிஷ்ய அதிகார மதிப்பீடு
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...
-
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...