குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 27, 2019

தலைப்பு இல்லை

இயற்கையாக நுண்ணுயிர்கள் மண்புழு நிறைந்த மண்ணிற்கும் (வலது), உரம்போட்டு மலடாக்கப்பட்ட மண்ணிற்கும் (இடது) உள்ள வித்தியாசத்தைக் கீழே உள்ள படம் காட்டுகிறது. 

படத்தின் வலதுபக்கத்திலுள்ள ஆழமான நார் வேர்த் தொகுதி மண்ணை ஊடுருவி ஒரு பஞ்சு போல் ஆக்கி நீரைத் தேக்கி வைக்கும். இப்படி இருக்கும் நிலத்தின் கிணறு வற்றாது. இப்படி பஞ்சு மெத்தை போல் ஆக்குவதற்கு மண்ணை நுண்ணங்கிகள் பதமாக்க, மண்புழு உழுது கொடுக்க வேண்டும். 

உப்புக்களாகிய உரம் கொட்டிய நிலத்தில் இந்த செயல்முறை எதுவும் நடக்காது! மண் மலடாவதுடன் நிலம் நீரைத்தேக்கும் ஆற்றலையும் இழந்து விடும். 

ஆக பயிரும் வளராது, நிலத்தடி நீரும் கிடைக்காது!


Friday, July 26, 2019

தலைப்பு இல்லை

பயிர்த் தொழில் ஒரு போர்த் தொழில்! 

செடிகள் எமது குடிகள்! 

குடிகளை எதிரிகளான புழு பூச்சிகளிடமிருந்து காத்தல் மன்னனாகிய விவசாயியின் கடமையன்றோ! 

குடிகளைக் காத்தால் மன்னனிற்கு வரி சரியாகும்!

செடிகளைக் காத்தால் விளைச்சல் வரியாகும்! 

இந்த விவசாயி செய்யும் போர்த் தொழில் எதிரியை அழிக்கும் இரசாயன ஆயுதங்களால் அல்ல! 

தன் குடிகளை வலிமையுள்ள நன்மக்களாக ஆக்கி எதிரிகள் ஊடுருவமுடியாத அரணை எழுப்புதல்! வலிமையான ஆரோக்கியமான குடிகளுள்ள நாட்டில் எதிரி ஊடுருவ முடியாது!

அது போல் செடிகள் வலிமையாக இருக்கும் தோட்டத்தில் பூச்சிகளுக்கும் நோய்க் கிருமிகளுக்கும் இடமில்லை! 

கீழே நாமும் எம் குடிகளைக் காக்கும் எமது தளபதியுடன் இந்த வார திறையை எமது குடிகளான கத்தரிச் செடிகளிடமிருந்து பெறும் காட்சி!


Thursday, July 25, 2019

தலைப்பு இல்லை

எமது தோட்டத்தின் அடுத்த விளைபொருள்! 

கௌபீ... 

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது!


தலைப்பு இல்லை

On the way from Pondicherry!
Learning a book is learning the experience of author!
Savitri is a epic poem of yogic experience of Sri Aurobindo, Savtribhavan in Aurovil recommended these books for deep learning of Savitri!

Tuesday, July 23, 2019

சித்தர் தத்துவங்களும் யோகசாதனையும்

கடந்த 2014ம் ஆண்டு முதல் கொழும்பில் அஷ்டாங்க யோக மந்திரில் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் சித்தர் பாடல்கள் குழுவாகச் சேர்ந்து படித்து கலந்துரையாடல் நிகழ்த்தினோம். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு எனது விவசாயத் திட்டங்களுக்காக கொழும்பை விட்டு வெளியேறிய பின்னர் பல மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் ஒரு ஒன்று கூடல். 
அகத்தியர் சௌமியசாகரம் என்ற நூலில் அடிப்படையில் தத்துவங்கள் 96 பற்றிய அறிமுகம், 96 தத்துவங்கள் எப்படி யோக சாதனையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒரு சிறு கலந்துரையாடல்!

Sunday, July 21, 2019

செயல் வேண்டும்!

என்ன நடக்கும், இது நடந்துவிட்டால், அது நடந்துவிட்டால் என்று அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எதுவும் சாத்தியமாவதில்லை!
என்ன நடந்தாலும் சரி எடுத்த காலை பின் வைப்பதில்லை என்ற ஆண்மை உள்ளவனிற்கு எல்லா பணியும்! 
செயலில் பற்று விளைவை மெருகேற்றும்!
விளைவில் பற்று செயலைக் குழப்பும்! 
செயலிற்குரிய உத்வேகம் அகத்திலிருந்து பிறத்தல் வேண்டும்!
எவருக்குமாக நாம் செயல் என்ற நிலை இறுதியில் ஏமாற்றமும் விரக்தியும் தரும்!
செயல் வேண்டும்!

Saturday, July 20, 2019

சித்த மருத்துவ கத்தரிக்காய் மான்மியம்

சித்தர்கள் கூறும் கத்தரி மான்மியம் கீழே, 

சித்த மருத்துவத்தில் தேரையர் கத்தரிக் காயைப் பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். 

தேரையர் கரிசல் 

பண்டு மாண்ட கிரந்தியைப் பாலிக்கும்

உண்ட கைக்குந் தினவை உண்டாக்கிடும்

நண்டுகிட்டுங்க் குரங்கென நாமாளுங்

கண்டு விட்டது கத்தரிக் காயதே

எக்கால மும்பழகி யில்லாத மானிடர்க்கு

முக்கால முண்டாலும் மோசமிரா - பக்குவமா

யங்கந் தணிய வமாபத்தி யக்கறியாம்

வங்கக்கா யுண்டறிகு வாய்

வழுதலை யாகிய வங்கக் காய்தினப்

பழுதிலை யஃது நற் பத்தியமாகுமே. 

கத்தரிகாய் கரப்பான், சொறி சிரங்கைத் தூண்டும், 

எக்காலமும் பழகிய மனிதர்க்கு, அதாவது வழமையாக கத்தரி உண்டு உடல் ஏற்கும் பக்குவம் உள்ளவர்களுக்கு மூன்று நேரமும் உண்டாலும் எந்த துன்பமும் வராது. பத்தியத்திற்கு உகந்தது. 

கத்தரியில் பழுக்க விட்டு உண்டால் அது நோயை உண்டாக்கும். பிஞ்சும் காயும் (விதை உருவாக முன்னர் இருக்கும் காய், இதுவே பறிக்கும் பருவம்) முக்குற்றத்தைத் தணிக்கும். உடலிற்கு நலம் தருவது.


ஆயுர்வேத கத்தரிக்காய் மான்மியம்

கத்தரி இயற்கையாக விளைவித்தால் அதன் பலனை ஆயுர்வேத அடிப்படையில் கூற வேண்டுமல்லவா, 

கத்தரியை சம்ஸ்க்ருதத்தில் வ்ரிந்தக அல்லது வர்துக (மலையாளத்தில் வழுதலங்காய் என்பதற்கு அடிச் சொல்லாக இருக்கும்) என்று கூறுவார்கள். கத்தரி எப்படி செயல் புரியும் என்பதைப் பற்றி பாவ ப்ரகாச நிக்ஹந்து சகவர்கம் என்ற ஆயுர் வேதநூல் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது. 

சுவை - மதுரம் எனும் இனிப்பு

குணம் - தீக்ஷணம் (எல்லா தாதுக்களையும் வலிமையாக ஊடுருவிச் செல்லக்கூடியது, அதனால் உஷ்ண குணமும், இலகுவானதும்)

விபாகம் என்றால் சமிபாடடைந்த பின்னர் என்ன செய்யும் என்பது, கத்தரி சமிபாடடைந்த பின்னர் காரச் சுவையாக செயற்படும்.

திரிதோஷத்தில் பித்தத்தை அதிகரித்து கபத்தைக் கூட்டி வாதத்தைக் குறைக்கும் 

அதனால் ஈரலைப் பலப்படுத்தும், சமிபாட்டுக்கு உதவும், சுக்கில தாதுவைக் கூட்டி விந்து உற்பத்தியைக் கூட்டும்!   

ஆயுர்வேதத்தில் கத்தரி ஆமணக்கெண்ணை தைலம் ஆமவாத (Rheumatoid Arthritis) சிகிச்சைக்குப் பயன்படுகிறது. 

நவீன ஆய்வுகளில் கத்தரியில் இருக்கும் Chlorogenic acid என்ற பதார்த்தம் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கும் என்று அறியப்பட்டுள்ளது. அத்துடன் கத்தரியில் Histamines அதிகளவு காணப்படுவதும் சிலரிற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு காரணம். ஆயுர்வேதத்தில் தோல் நோய் உள்ளவர்கள் கத்தரி தவிர்க்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

கத்தரி மான்மியம் தொடரும்....


நாங்கள் அறிவியல் இயற்கை விவசாயிகள்!

விவசாயம் செய்கிறோம் என்றால் தோட்டத்தில் மண்வெட்டி பிடித்துக் கொத்திக் கொண்டு இருப்பது மாத்திரம் அல்ல! அது அடிப்படை! 

சூழலைப் புரிந்து கொள்வது! 

பயிரின் வளர்ச்சிக்கு எது தேவை?

எது தடையாக இருக்கிறது?

நீர்ப்பாசனம் என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

காற்று என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

வெப்பம் என்ன விளைவை ஏற்படுத்துகிறது?

என்ன பூச்சிகள் வருகிறது?

எப்போது வருகிறது?

இலை எப்படி இருக்கிறது?

தண்டு எப்படி இருக்கிறது?

நிலம் எப்படி இருக்கிறது?

இறுதியாக வரும் விளைச்சலில் அளவு எப்படி இருக்கிறது? 

இவற்றிற்கு எல்லாம் சரியான புரிதல் இருந்தால் மட்டும் தான் நாம் விவசாயம் செய்ய முடியும். 

இப்போது உள்ள விவசாயம் நோய் வந்தால் ஏன் வந்தது? எப்படி வந்தது என்று சிந்தியாமல் நேரே மருந்துக்கடைக்குச் சென்று பூச்சி மருந்து வாங்கி ஒரு அடி அடித்தால் போதும் என்ற அளவில் தான் விவசாயிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்கள்!

ஆனால் நாங்கள் அப்படி இல்லை! ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கும் இளைஞர்கள்! 

கீழே எமது இயற்கை விவசாயக் கத்தரியின் ஒவ்வொரு காயும் நீளமும், சுற்றளவும், எந்த மரத்தில் எத்தனையாவது காய்? எவ்வளவு நிறை என்ற அனைத்து விபரமும் பதிகிறோம்!

யாராவது இயற்கை விவசாயம் விளைச்சல் குறைவு? பூச்சி தாக்கும் என்று கதை விட்டால் அறிவியல் புள்ளி விபரத்துடன் (Scientific Statistical parameters) பதில் கிடைக்கும்!   


Thursday, July 18, 2019

நானும் தாடியும்

சிறு வயதில் எனது அப்பப்பாவை பார்க்கச் செல்லும் போது வைத்தியரான அவர் முனிவர் போல் தாடி வைத்திருப்பார்!

அப்பாவும் தாடி தான்!

எனக்கு வாய்த்த குருமார் இருவரும் வெண் தாடி வேந்தர்கள் தான்! 

இப்படி இருக்க, 

நான் தாடி வைக்கத் தொடங்கிதற்கான காரணம் சுவாரசியமானது! பட்டம் பெற்ற பின்னர் சூழலியலில் ஆலோசகனாக வேண்டும் என்ற இலட்சியத்துடன் ஒரு ஆலோசனைக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது மீசையைக் குறைத்து தாடி இல்லாமல் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பற்றுவேன். 

ஒரு முறை மிக வயதான அரச அதிபர் (இந்தியாவின் கலெக்டெர்) சந்தித்து உரையாடச் சென்றிருந்தோம். அந்த மாவட்டம் தொடர்பாக சூழலியல் மேம்பாடு தொடர்பாக, நான் கருத்துச் சொல்லும் போது சற்று கவனமில்லாமல் கேட்பதுடன் இடைக்கிடை இந்த சிறுவன் யார் என்ற போக்கில் அடிக்கடி எனக்கு அனுபவம் போதாது என்ற தொனியில் உரையாடுவார். இது எனக்குப் பெருத்த மனச் சங்கடம்! 

இது போல் என்னை எவரும் சிறுவனாக எண்ணி விடக்கூடாது என்பதற்காக தொடங்கிய தாடி இப்போது ஆன்மீகம் பேசுவதால் அதனுடன் தொடர்பு படுத்துவது தவிர்க்க முடியாமல் வந்து நிற்கிறது! 

எப்படி இருப்பினும் எல்லாக் கலாச்சாரத்திலும் தாடி அறிவின் முதிர்ச்சியின் குறியீடாகத் தான் இருக்கிறது.


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...