குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, September 02, 2025

கந்தரனுபூதி மந்திரப் பிரயோகம் -18

*****************

கர்ப்பம் அழியாதிருக்க - குழந்தைப் பேறு பெற

*******************************



இந்தப்பாடலிற்கு சித்தர் பிரான் இட்ட பிரயோகத் தலைப்பு "கர்ப்பம் அழியாதிருக்க" 

தற்காலத்தில் திருமணமான தம்பதிகளுக்கு கர்ப்பம் தரிப்பது, தரித்த கர்ப்பம் அழியாது தங்குவதும் மிக அரிய ஒரு விஷயமாக இருக்கிறது. முற்காலத்தில் பெண்கள் எட்டு, பத்துக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய உடல் வலுவுடன் இருந்தாலும் தற்காலத்தில் ஒரு பிள்ளை பெறுவதற்கே பெரும் பிராயத்தனப் படவேண்டி இருப்பதைக் காண்கிறோம். 

கர்ப்பம் தரித்தல் என்பது வெறுமனே உடலியல் சார்ந்த ஒரு செயல் அல்ல! உண்மையில் ஒரு  ஆணும் பெண்ணும் இன்பம் காணும் போது அவர்களுடைய கர்ம வினைக்கு அமைய அலைக்கழிந்துகொண்டிருக்கும் ஆன்மா தனது உடலைத் தேர்ந்தெடுத்து கர்ப்பத்தை உண்டாக்குகிறது. 

ஆணும் பெண்ணும் இன்பம் தூய்ப்பது என்பதும், சந்ததியை உருவாக்குவதற்கு உடலுறவு கொள்வது என்பது வெவ்வேறானது. சந்ததியை உருவாக்க விரும்பும் தம்பதியினர் கர்ப்பக்கிரியை என்று வழிபாடு போன்று தகுந்த சங்கல்பம், உபாசனையுடன் செய்யும் போது மாத்திரமே குறைபாடு அற்ற குழந்தை பிறக்கும். வெறுமனே எந்த சங்கல்பமும், தம்மைத் தயார்படுத்தாமல் இன்பம் தூய்க்கும் நோக்கில் விபத்தாகப் பிறக்கு குழந்தைகளின் சூக்ஷ்ம உடல் தாயின் உடலுடன் சரியாகப் பொருந்தாததால் குழந்தைகள் மன, உடல் ஊனத்துடன் பிறக்கும் சாத்தியம் அதிகரிக்கிறது.  

ஆகவே நற்சந்ததி வேண்டுபவர்கள் முறையாக கர்ப்பக்கிரியையைச் செய்து தமது உபாஸனை தெய்வத்திடம் வேண்டிப் பிறக்கும் குழந்தைகள் கல்வி, கேள்வி, ஞானம், தர்ம, ஆயுள், ஆரோக்கியம், செல்வத்துடன் வாழும் வகையில் பிறக்கும். இப்படி எந்த சங்கல்பமும் இல்லாமல் ஏதேச்சையான ஆண் பெண் இன்பம் தூய்ப்பில் பிறப்பவை வலுவற்ற குழந்தைகளாக இருக்கும். 

இந்தப்பாடல் இப்படியான சற்புத்திரப் பேற்றினைத் தருவதற்கான பிரயோகமாகச் சொல்லப்படுகிறது.  எந்தத் தம்பதியினருக்காவது கர்ப்பம் தரிக்காமை, தரித்த கர்ப்பம் இல்லாமல் போதல் போன்ற பிரச்சனைகள் இருந்தாலோ, அல்லது நல்ல ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் அறிவும், ஞானமும் உள்ள குழந்தைகள் வேண்டின் இந்தப் பிரயோகத்தினைச் செய்யலாம்! 

தெய்வானை அம்மன் சஷ்டி தேவி என்று சொல்லப்படுகிறாள். பிறந்த குழந்தையை ஆறாவது நாள் தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்தின் முன்னால் தாயும் தந்தையும் அமர்ந்து தேவியின் கரங்களில் பிள்ளையைக் கொடுத்து பாதுகாப்பு வேண்டிக்கொண்டால் 12 வயது வரை அந்தக் குழந்தையை அன்னை தெய்வானை - சஷ்டி தேவி எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக்கொள்வாள் என்பது முருக உபாசனையின் இரகசியங்களில் ஒன்றாகும். 

இந்தப்பாடலின் மந்திர யந்திரப் பிரயோகம் இந்தப் பலன் கள் அனைத்தையும் தரக்கூடியது:

உதியா, மரியா, உணரா, மறவா,
விதி மால் அறியா விமலன் புதல்வா,
அதிகா, அநகா, அபயா, அமரா
பதி காவல, சூர பயங் கரனே

பிறப்பில்லாதவனே, இறப்பில்லாதவனே, உணரமுடியாதவனே, மறதி அற்றவனே, பிரம்மனும் திருமாலும் தேடி அடிமுடி காணமுடியாத மலங்கள் அற்ற சிவபெருமானின் புதல்வா, எல்லாவற்றிற்கும் மேலானவனே, பாபம் அற்றவனே, பயம் அற்றவனே,  தேவ லோகத்தின் காவலனே, அசுரர்களுக்கு அச்சத்தை விளைவிப்பவனே! 

இந்தப்பாடல் முருகனுடைய அனைத்து ஆற்றல்களையும் ஆவாகனம் செய்து அழைக்கிறது. இந்தப்பாடலிப் பிரயோகம் செய்து தம்பதிகள் வேண்டும் போது அசுரர்களின் தாக்கம் இல்லாத, தெய்வ குணங்களுடன் கூடிய கூடிய முருகன் அருள் பெற்ற குழந்தையைப் பேறாகப் பெறுவார்கள்

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

"உதவி கேட்காதவரே பலவீனமானவர்"

  "உதவி கேட்காதவரே பலவீனமானவர்" முதலில் பார்க்கும்போது, உதவி கேட்பது பலவீனம் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இதற்கு நே...