ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்ள இலகுவான, அழகான இயற்கையான வழி ஸாதனை எனப்படும். ஒருவன் தன்னை செம்மையுறுத்திக்கொள்வது என்பதன் இலக்கணம் இருவன் தெய்வீகத் தன்மை பற்றி உணர்ந்து தன்னில் அந்த தெய்வீகத் தன்மையை வளர்த்தலாகும்.
எது உடலை, மனதை, ஆன்மாவை
வளர்ச்சியுறச் செய்து பரிணாமத்தில் உயரச் செய்கிறதோ அதை ஸாதனை என்கிறோம்.
உடல் ஆரோக்கியமாகவும்,
உறுதியாகவும், பக்குவமுடையதாகவும் மாறும் போது,
மனம் அறிவும், அன்பும்,
ஆனந்தமும் நிறைந்ததாகும் போது,
இந்தப் பிரபஞ்சத்தின்
படைப்புகளை அனைத்தையும் தெய்வீகமாகக் காணும் ஆற்றல் வாய்க்கும் போது நாம் எல்லோருடைய
நன்மைக்காகவும் பாடுபட ஆரம்பிக்கிறோம்.
இத்தகைய தன்மையை உங்களில்
உருவாக்குவதுதான் ஸாதனை.
இந்த ஸாதனையின் உண்மையான
அர்த்தம் புரியும் போது கடவுளை நம்பமாட்டேன் என்பவர்களும் மனித குலத்திற்கு இப்படியொரு
நன்மையினைத் தரும் ஸாதனை மார்க்கத்தினை ஏற்றுக்கொள்வார்கள்.
எவருக்கு ஆரோக்கியமான
உடலும், ஆனந்தமான மனமும் தேவையில்லை என்று சொல்வார்கள்.
இயற்கையின் தெய்வீக விதிகளைப்
புரிந்துகொண்டு அதன் படி வாழ்வதன் மூலம் எமது வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
இப்படி இயற்கையின் தெய்வீக விதிகலைப் புரிந்து அதன் படி நடப்பதற்கே ஸாதனை மார்க்கம்
வகுக்கப்பட்டுள்ளது.
யார் வாழ்க்கையில் அமைதியும்,
வளர்ச்சியையும் வேண்டுகிறார்களோ அவர்கள் உண்மையில் தம்மையறியாமல் ஸாதனை மார்க்கத்தில்
இருக்கிறார்கள். அவர்கள் விதிகளைச் சரியாகப் புரிந்துகொள்லும் போது இன்னும் வேகமாக
முன்னேறி பேரமைதியையும், இயற்கையின் விதிகளைப் புரிந்த ஞானத்தினையும் அடைவார்கள்.
நாம் சாஸ்திரங்களினதும்,
குருவினதும், தெளிந்த விவேகத்தினதும் உதவி மூலம் கீழ்வரும் கேள்விகளுக்கு பதிலைப் பெற்று
எம்மைச் சாதனை மார்க்கத்தில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்:
எனது வாழ்க்கையின் உண்மை
இலட்ச்சியம் என்ன?
நான் எங்கிருந்து வந்தேன்?
எனது வாழ்க்கையின் மிக
உயர்ந்த இலட்சியம் என்ன?
எப்படி வாழ்க்கையில்
மேன்மையையும், செம்மையையும் அடைந்து அமைதியுடைய வாழ்க்கையை வாழ முடியும்?
விவேகமுள்ளவனுக்கு தனது
ஆராய்ச்சிமூலம் செல்வம், உற்றார் உறவினர்கள், இன்பங்கள், பட்டம், பதவி இவையெல்லம் தற்காலிக
சந்தோஷத்தினை மாத்திரமே தருகீறது என்பதை அறிந்து கொள்வான். இவையெல்லாம் எமது இதயத்தில்
ஆழத்திலிருந்து வரும் அமைதியின் தேடலுக்கு பதிலளிக்க முடியாது.
எமது முனிவர்களும் ரிஷிகளும்
தமது சுய அனுபவத்தின் மூலம் இறைவனை எம்முள் அறிதலே மிக உயர்ந்த இன்பம் என்பதை அனுபவித்து
எமக்கு பகிர்ந்துள்ளனர்.
தன்னை அறிந்து தலைவனாகிய
இறைவனை அறிதலே வாழ்வின் மேலான இலட்சியம்.
இந்த இலட்சியத்திற்கு
எமது உடல், மனம், உயிர் ஆகியவற்றை ஒருங்கிணைத்தலே சாதனை.
நாம் உண்மையறிவுடனும்,
குருவின் துணையுடனும்,
இந்தப் பிரபஞ்சம் இயங்கும்
பரம தத்துவத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அதை அடைவதற்கான வழிகளைக்
கற்க வேண்டும்,
அதை வாழ்வில் கடைப்பிடிக்க
வேண்டும்.
அதன் மூலம் வாழ்வின்
உண்மையான இலட்சியத்தை அடைய வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.